என் மலர்
செங்கல்பட்டு
- அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தினர் வீட்டுமனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தனர்.
- அரசுக்கு சொந்தமான இடம் என்று புகார் எழுந்ததால் காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால், பால்நல்லூர் போன்ற கிராமங்களில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தினர் வீட்டுமனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தனர்.
அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று புகார் எழுந்ததால் காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மோசடியில் ஈடுபட்ட நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசு நிலத்தை ஏமாற்றி வீட்டு மனை பிரிவுகளாக விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் ராஜதுரை (வயது 40), இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் (54), அலுவலக உதவியாளர் பெனடின் (54), காஞ்சிபுரம் நில எடுப்பு தாசில்தார் எழில் வளவன் (50), ஸ்ரீபெரும்புதூர் ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் பார்த்தசாரதி (33) ஆகியோரை காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி வரும் 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து போலீசார் அவர்களை செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். நில மோசடி வழக்கில் 5 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயில் தண்டவாளத்தை இணைக்கும் பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் சென்ற போது தண்டவாள பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடுபோன தண்டவாள பொருட்களின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த திருமணி- ஒத்திவாக்கம் இடையே ரெயில் தண்டவாளத்தை இணைக்க பயன்படுத்தும் சுமார் 11 ஆயிரம் கிளிப்பர்களை தண்டவாளத்தின் அருகே ஊழியர்கள் வைத்து இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அந்த கிளிப்பர்களை அள்ளி சென்று விட்டனர்.
இந்த நிலையில் பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் சென்ற போது தண்டவாள பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடுபோன தண்டவாள பொருட்களின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உலக அனுபவம் பெறும் வகையில் விமான பயணம் அழைத்து செல்வது வழக்கம்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ஆண்டுதோறும் 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவிகளை பள்ளியின் சார்பில் இலவசமாக உலக அனுபவம் பெறும் வகையில் விமான பயணம் அழைத்து செல்வது வழக்கம், இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 இடங்களை பெற்ற அமுதன், தாவூத் மார்வா, மோகனபிரியா ஆகிய 3 மாணவ- மாணவிகளை பள்ளியின் சார்பில் இலவசமாக விமானம் மூலம் ஐதராபாத்திற்கு அழைத்து சென்று அங்கு உள்ள சார்மினார், மெக்கா மசூதி, சாலர்ஜங் மியூசியம், பிர்லா பாலாஜி கோயில், ஹசைன் சாகர் ஏரி, கோல்கொண்டா கோட்டை, உஸ்மானியா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி காண்பித்து, பின்னர் விமானம் மூலம் மாணவிகள் சென்னை திரும்பினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நடேசன் பள்ளி நிர்வாகம் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திரவ கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திரவ கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கூடுவாஞ்சேரி அருகே திரவ கஞ்சா விற்று கொண்டிருந்த கோவூர் பகுதியை சேர்ந்த மனோ (வயது 30), மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜீவ் சர்மா (29), கொரட்டூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (20), அயனாவரம் பகுதியை சேர்ந்த பாபு (37), ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 850 கிராம் திரவ கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்கள் 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
- மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது.
- மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெறுவதால் இதனை காண பொதுமக்கள் மத்தியில் ஆர்வம்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் 187 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை காண இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பார்வையாளர்கள் பிரதான நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக போட்டி நடைபெறும் 2-வது அரங்கில் மட்டுமே ஆன்லைனில் நுழைவு சீட்டு பதிவு செய்துவிட்டு வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 200 செஸ் போர்டுகள் அமைத்து செஸ் போட்டி நடைபெறும் முதல் அரங்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அங்கு கேலரி அமைக்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள் மட்டுமே முதலாவது அரங்கில் செஸ் போட்டியை காண சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக முதன் முதலாக இந்திய அளவில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெறுவதால் இதனை காண பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் பிரதான நுழைவு வாயில் அருகில் கவுண்ட்டர்களில் நுழைவு சீட்டு வழங்குவார்கள் என இங்கு வந்து பார்த்துவிட்டு வழங்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது.
பிரதான நுழைவு வாயில் பகுதியில் நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் ஆன்லைன் பதிவு மற்றும் சிறப்பு அனுமதி அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதித்தனர்.
- வண்டலூர் பூங்காவில் உள்ள 6 வயதான நகுலன் என்ற ஆண்புலி கடந்த மாதம் 25-ந்தேதி முதல் சரியாக உணவு உண்ணாமல் இருந்தது.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட புலியை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வண்டலூர் பூங்காவில் உள்ள 6 வயதான நகுலன் என்ற ஆண்புலி கடந்த மாதம் 25-ந்தேதி முதல் சரியாக உணவு உண்ணாமல் இருந்தது. இதனால் சோர்வடைந்த புலிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. புரோட்டோ சோவான்கள் மற்றும் பிற நோய்களுக்கான கிருமிகள் எதுவும் இல்லை என்று தெரிந்தது. பசியின்மை காரணமாக புலி தொடர்ந்து உணவு உண்ணாமல் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை பரிசோதனைக்காக பூங்கா நிர்வாகம் அழைத்து உள்ளது. பாதிக்கப்பட்ட புலியை மருத்துவ குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளிக்க உள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட புலியை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மாமல்லபுரம் தனியார் கல்லூரி ஒன்றில் விளையாட்டு மைதானம் தயாராக உள்ளது.
- சுற்றுலாத்துறை சார்பில் நாட்டுப்புற கலைவிழா நடத்தவும் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அன்று போட்டிகள் நடைபெறாது. இதையடுத்து வீரர்கள் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு சுற்றுலா மற்றும் விளையாட செல்கிறார்கள். இதற்காக மாமல்லபுரம் தனியார் கல்லூரி ஒன்றில் விளையாட்டு மைதானம் தயாராக உள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் நாட்டுப்புற கலைவிழா நடத்தவும் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், கடற்கரை பகுதி, (அலைச் சறுக்கு) உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளின் பாதுகாப்பு குறித்து ஏ.டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். கடற்கரையை தூய்மையாக வைக்கவும், இரவு நேரம் கூடுதல் மின் விளக்கு அமைக்கவும், கடற்கரை ஹோட்டல், ரிசார்ட்களின் சி.சி.டி.வி கேமராக்களை சரியான முறையில் பயன்படுத்தி கடலோரத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் துலுக்காணம்.
- கைதான டார்ஜன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் துலுக்காணம் (வயது50). இவரது மனைவி சம்பூர்ணம் (50). இவர்களது மகள் ஜெயந்தி (25).
அதே ஊரைச் சேர்ந்த டார்ஜன் (35) என்பவருக்கும், ஜெயந்திக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
நேற்று இரவு டார்ஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இரவு 11 மணியளவில் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது மாமனார் துலுக்காணம், டார்ஜனை தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த டார்ஜன் மாமனாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது. உடனே மாமியார் சம்பூர்ணம் தடுக்க வந்தார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த துலுக்காணம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பூர்ணம் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டார்ஜனை கைது செய்தார்.
கைதான டார்ஜன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தார். கஞ்சா மற்றும் மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்து வந்தார்.
- தாமோதரனின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- என்ஜினீயர் சஜேஷ் குமார் என்பவரது வீட்டில் 13 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் உள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த அனுமந்த புத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஆண்டாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தனர். தாமோதரன் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தங்கி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தாமோதரனின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தாமோதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
மற்றொரு சம்பவம்...
தாம்பரம் சி.டி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினீயர் சஜேஷ் குமார் என்பவரது வீட்டில் 13 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் உள்ளது.
இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடுவாஞ்சேரி அருகே கணேஷ் மற்றும் உடன் வந்த ஆறுமுகம் ஆகியோர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
- தாம்பரம் ரெயில்வே போலீசா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் கணேஷ் (வயது 58). நாட்டுப்புற கலைஞர் இவர் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் நடந்த கோவில் திருவிழாவில் தனது குழுவினருடன் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு அவர்கள் திரும்பி வந்தனர். கூடுவாஞ்சேரி அருகே கணேஷ் மற்றும் உடன் வந்த ஆறுமுகம் ஆகியோர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். அவர் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே காரில் வரும்போது அங்குள்ள பாலாற்றில் குளிக்க முடிவு செய்தனர்.
- தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ மற்றும் சிவசங்கரி ஆகியோரை பிணமாக மீட்டனர்.
செங்கல்பட்டு:
சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது சசோதரர் குமரேசன். இவர்களது நண்பர் சீனிவாசன் (வயது 44). இவர்கள் ஆடி ஞாயிற்றுக்கிழமையான நேற்று உறவினர்களுடன் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தங்கள் வீட்டுக்கு காரில் திரும்பியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே வரும்போது அங்கு உள்ள பாலாற்றில் குளிக்க முடிவு செய்தனர்.
அப்போது 6-ம் வகுப்பு மாணவியான வேதஸ்ரீ (10), 10-ம் வகுப்பு மாணவியான சிவசங்கரி (15) ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்தனர். எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினரான சீனிவாசன் அவர்களை காப்பாற்ற பாலாற்றில் இறங்கினார். இதில் சீனிவாசனும் நீரில் மூழ்கினார்.
உடன் வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ மற்றும் சிவசங்கரி ஆகியோரை பிணமாக மீட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு சீனிவாசனை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலாற்றில் மூழ்கி இறந்த அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.






