என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வண்டலூர் பூங்காவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட புலிக்கு வேப்பேரி மருத்துவ குழுவினர் சிகிச்சை
    X

    வண்டலூர் பூங்காவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட புலிக்கு வேப்பேரி மருத்துவ குழுவினர் சிகிச்சை

    • வண்டலூர் பூங்காவில் உள்ள 6 வயதான நகுலன் என்ற ஆண்புலி கடந்த மாதம் 25-ந்தேதி முதல் சரியாக உணவு உண்ணாமல் இருந்தது.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட புலியை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    வண்டலூர் பூங்காவில் உள்ள 6 வயதான நகுலன் என்ற ஆண்புலி கடந்த மாதம் 25-ந்தேதி முதல் சரியாக உணவு உண்ணாமல் இருந்தது. இதனால் சோர்வடைந்த புலிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. புரோட்டோ சோவான்கள் மற்றும் பிற நோய்களுக்கான கிருமிகள் எதுவும் இல்லை என்று தெரிந்தது. பசியின்மை காரணமாக புலி தொடர்ந்து உணவு உண்ணாமல் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை பரிசோதனைக்காக பூங்கா நிர்வாகம் அழைத்து உள்ளது. பாதிக்கப்பட்ட புலியை மருத்துவ குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளிக்க உள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட புலியை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×