search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chengalpattu theft"

    • கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, 11 கிலோ எடை கொண்ட காமாட்சி அம்மன் பித்தளை விளக்கு ஆகியவை திருடு போயிருந்தது.
    • புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மறைமலைநகர்:

    மறைமலைநகர் அடுத்துள்ள மகிந்திரா சிட்டியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூஜைகள் முடிந்து இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை 5 மணியளவில் கோவில் பணியாளரான சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி பகத்சிங் நகரைச் சேர்ந்த செல்வா (வயது28) கோவிலை சுத்தம் செய்ய வந்தார்.

    அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, 11 கிலோ எடை கொண்ட காமாட்சி அம்மன் பித்தளை விளக்கு ஆகியவை திருடு போயிருந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • ரெயில் தண்டவாளத்தை இணைக்கும் பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் சென்ற போது தண்டவாள பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடுபோன தண்டவாள பொருட்களின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த திருமணி- ஒத்திவாக்கம் இடையே ரெயில் தண்டவாளத்தை இணைக்க பயன்படுத்தும் சுமார் 11 ஆயிரம் கிளிப்பர்களை தண்டவாளத்தின் அருகே ஊழியர்கள் வைத்து இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அந்த கிளிப்பர்களை அள்ளி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் சென்ற போது தண்டவாள பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடுபோன தண்டவாள பொருட்களின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
    • பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    செங்கல்பட்டு:

    வந்தவாசியை அடுத்த கீழ்னாமம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (33). இவர் உறவினர் செல்வத்துடன் வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது சென்னை, மந்தைவெளி, மயிலாப்பூரை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என்பது தெரிந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    ×