செங்கல்பட்டு அருகே வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள் பறிப்பு- 3 சிறுவர்கள் கைது

செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.
செங்கல்பட்டு அருகே வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள் பறிப்பு- 3 சிறுவர்கள் கைது
Published on

செங்கல்பட்டு:

வந்தவாசியை அடுத்த கீழ்னாமம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (33). இவர் உறவினர் செல்வத்துடன் வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது சென்னை, மந்தைவெளி, மயிலாப்பூரை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என்பது தெரிந்தது.

அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com