என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி- மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
- மாமல்லபுரம் தனியார் கல்லூரி ஒன்றில் விளையாட்டு மைதானம் தயாராக உள்ளது.
- சுற்றுலாத்துறை சார்பில் நாட்டுப்புற கலைவிழா நடத்தவும் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அன்று போட்டிகள் நடைபெறாது. இதையடுத்து வீரர்கள் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு சுற்றுலா மற்றும் விளையாட செல்கிறார்கள். இதற்காக மாமல்லபுரம் தனியார் கல்லூரி ஒன்றில் விளையாட்டு மைதானம் தயாராக உள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் நாட்டுப்புற கலைவிழா நடத்தவும் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், கடற்கரை பகுதி, (அலைச் சறுக்கு) உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளின் பாதுகாப்பு குறித்து ஏ.டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். கடற்கரையை தூய்மையாக வைக்கவும், இரவு நேரம் கூடுதல் மின் விளக்கு அமைக்கவும், கடற்கரை ஹோட்டல், ரிசார்ட்களின் சி.சி.டி.வி கேமராக்களை சரியான முறையில் பயன்படுத்தி கடலோரத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






