என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • புள்ளி வாத்து, தரை குருவி, கூழைக்கடா, சாம்பல் நாரை உள்ளிட்ட பலவகையான வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன.
    • வேடந்தாங்கல் ஏரிக்கரையில் மூங்கில் மரம், கடப்ப மரம் போன்றவை அதிகமாக உள்ளதால் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கும் கூடு கட்டி குஞ்சு பொரிக்கவும் ஏதுவாக உள்ளது.

    மதுராந்தகம்:

    தமிழகத்தில் மிக முக்கியமான பறவைகள் சரணாலயத்தில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு மலேசியா, பாகிஸ்தான், மியான்மர், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, கனடா, நேபாளம், அந்தமான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல வகை பறவைகள் வர்ணநாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற கூழாகடா, தண்டை வாயான், பாம்பு புத்திரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி வாத்து, தரை குருவி, கூழைக்கடா, சாம்பல் நாரை உள்ளிட்ட பலவகையான வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன.

    வேடந்தாங்கல் ஏரிக்கரையில் மூங்கில் மரம், கடப்ப மரம் போன்றவை அதிகமாக உள்ளதால் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கும் கூடு கட்டி குஞ்சு பொரிக்கவும் ஏதுவாக உள்ளது.

    இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளின் வருகையையடுத்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, கேமரா வாடகை ரூ.50 என வசூலிக்கப்படுகிறது.

    மேலும் வனத்துறைக்கு வனத்துறை சார்பில் ஏரிக்கரை மேல் தொலைதூர பறவைகளை பார்ப்பதற்கு கேமரா வசதி, கழிவறை வசதிகள் குடிநீர் வசதிகள் வனத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வனசரக அலுவலர் ரூபஸ் லெஸ்லி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து பாவினி என்ற பெயரில் கட்டப்பட்டு வந்தது.
    • மின் உற்பத்தி செய்ய அணுசக்தி துறையின் அனுமதிக்காக தயாராக உள்ளது.

    கல்பாக்கத்தில் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து "பாவினி" என்ற பெயரில் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிந்து மின் உற்பத்தி செய்ய அணுசக்தி துறையின் அனுமதிக்காக தயாராக உள்ளது.

    இந்தநிலையில் "பாவினி" புதிய அணுமின் நிலையத்திற்கு தலைவர் மற்றும் இயக்குனராக, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின், அதிவேக அணு உலை ஆராய்ச்சியாளராக இருந்த கே.வி.சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது பொறுப் பேற்றுள்ளார்.

    • குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தாய் ஆனந்தி மற்றும் அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்து இருந்ததாக தெரிகிறது.
    • குழந்தை இறந்து விட்டதாக தாய் ஆனந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரனுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

    தாம்பரம்:

    திருநீர்மலை, இரட்டை மலை சீனிவாசன் தெருவில் வசிப்பவர் மகேந்திரன்.இவரது மனைவி ஆனந்தி என்கின்ற ஆஷா. இவர்களுக்கு பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆனந்தி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரச வத்துக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை காலை சேர்த்தனர். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை காலை ஆனந்திக்கு அறுவை சிகிச்சை முலம் ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் கண்காணிப்புக்காக குழந்தையை இங்குபேட்டரில் டாக்டர்கள் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தாய் ஆனந்தி மற்றும் அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்து இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே இன்று அதிகாலை குழந்தை இறந்து விட்டதாக தாய் ஆனந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரனுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியில் கதறி துடித்தனர். இதுபற்றி அறிந்ததும் ஆனந்தி மற்றும் மகேந்திரனின் உறவினர்கள் ஏராளமானோர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    அவர்கள் டாக்டர்களின் கவன குறைவால் குழந்தை இறந்து போனதாக குற்றம் சாட்டி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மேலும் தாம்பரம்-பல்லாவாரம் ஜி.எஸ்.டி சாலையில் மறியல் செய்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்ததை நடத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பிறக்கும் போது குழந்தை நல்ல நிலையில் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். நேற்று இரவும் குழந்தை நன்றாக இருந்து உள்ளது. இந்த நிலையில் குழந்தை திடீரென இறந்து விட்டதாக கூறுகிறார்கள். டாக்டர்களின் அலட்சியம், மற்றும் உரிய கண்காணிப்பு இல்லாததால் பிறந்த 2 நாளில் குழந்தையை பறிகொடுத்து உள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தால் தாம்பரம்-பல்லாவாரம் ஜி.எஸ்.டி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

    • வட்டாட்சியர் போல் கையெழுத்திட்டு போலியாக சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
    • தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் வட்டாட்சியர் புகார் செய்தார். தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்போரூர்:

    நாவலூரை அடுத்த தாழம்பூர் மெயின் ரோட்டில் கீதாதேவி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    இந்த நிலத்திற்கு வங்கியில் கடன் வாங்க கீதா தேவி தன்னுடைய ஆவணத்தை சமர்ப்பித்தார்.

    அப்போது வங்கியில், வட்டாட்சியரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கி வருமாறு கூறி உள்ளனர்.

    இதையடுத்து அவர் வட்டாட்சியர் வழங்கியதைப் போன்று சான்றிதழ் ஒன்றை வங்கியில் சமர்ப்பித்தார். இதில் சந்தேகமடைந்த வங்கி நிர்வாகம் வட்டாட்சியர் வழங்கிய சான்றினை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்த்தனர்.

    வட்டாட்சியர் போல் கையெழுத்திட்டு போலியாக சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது குறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் வட்டாட்சியர் புகார் செய்தார். தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தூர்வாரும் பணி மேற்கொண்டபோது கால்வாய் மீது ஆக்கிரமிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கால்வாய் ஆக்கிரமிப்பை உடனடியாக தாங்களே முன்வந்து அகற்றிவிடும்படி நோட்டீஸ்

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் பேரூராட்சி மேட்டு தெரு பகுதியில், பொதுப்பணித்துறை கால்வாய் அடைத்து மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையும் உருவானது.

    இதனால் பேரூராட்சி தலைவர் யுவராஜ், செயல் அலுவலர் ஜெயக்குமார், துணைத்தலைவர் அருள்மணி உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று, பொக்லைன் வைத்து தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 15 அடி கால்வாய் மீது ஆக்கிரமிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கால்வாய் ஆக்கிரமிப்பை உடனடியாக தாங்களே முன்வந்து அகற்றிவிடும்படி, ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்களுக்கு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மீதி இடங்களில் இருந்த குப்பை மற்றும் அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றினர்.

    • திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து நடந்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள அணுஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் ரமேஷ் (வயது55). இவர் கல்பாக்கம் அடுத்த அனுபுரத்தில் உள்ள அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று காலை அவர் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் அனுபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அப்போது திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஞ்ஞானி ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கல்பாக்கம் நகரியத்தில் உள்ள அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனையை முழுவதும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்லாவரம் ரேடியல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டபொம்மன் நகர், கணேஷ் அவன்யூவில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்த்த பிரகாஷ், விருத்தாசலத்தை சேர்ந்த நசீர்பாஷா என்பது தெரிந்தது. கல்லூரி மாணவர்களான இவர்களில் பிரகாஷ் பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு சட்டப்படிப்பு (எல்.எல்.பி) படித்து வருவதும் நசீர்பாஷா பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது.

    நண்பர்களாக இருக்கும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவர்கள் பிரகாஷ், நசீர்பாஷா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது அங்கு 12 கிலோ கஞ்சா சிக்கியது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல் 25 பேர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

    • வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, கேமராவுக்கு ரூ.25 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் சிறப்பு வாய்ந்தது. விலங்குகள் இயற்கை சூழலில் வாழ்வதற்கு ஏற்றார்போல் இந்த பூங்கா இயற்கையாகவே அமைந்து உள்ளது. இங்கு ஆண்டுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. வண்டலூர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளப்பாதைகள், ஓய்வு அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும் கூட்டத்தின்போது வண்டலூர் பூங்கா பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனவே பார்வையாளர்கள் கட்டணம் உயர்வு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

    தற்போது வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, கேமராவுக்கு ரூ.25 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான கட்டண வித்தியாசத்தை நீக்க உயிரியல் பூங்காவுக்கு அனுமதி கிடைத்து உள்ளது. கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான வரவு, செலவு திட்ட முன்மொழிவும் அங்கீகரிக்கப்பட்டது. இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மாற்றுத்திறனாளிகள் பூங்காவை சுற்றி பார்க்க சாய் தளங்கள், பிரத்யேக வாகனங்கள் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் பூங்காவை மாற்றுத்திறனாளிகளும் எளிதாக சுற்றி பார்க்க முடியும்' என்றார்.

    • தற்போது பருவமழை பெய்த போது மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
    • 250 கே.வி. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு கிராமம், கல்பாக்கம் அணுமின் நிலைய முக்கிய அதிகாரிகளின் நுழைவு வாயில் பகுதியில் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின்வெட்டு நிலவி வந்தது. இதனால் குழந்தைகள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். தொடர் மின்வெட்டு குறித்தும், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும் மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறப்படுகிறது.

    தற்போது வடகிழக்கு பருவமழை பெய்த போதும் மின்சாரம் இல்லாமல் அப்பகுதியினர் மக்கள் அவதிப்பட்டனர். மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, மாமல்லபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ப.ஐயப்பன் தனது சொந்த பணத்தை மாமல்லபுரம் மின் வாரிய அலுவலகத்துக்கு செலுத்தி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தினார்.

    இதையடுத்து, 250 கே.வி. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை மின் வாரிய அதிகாரிகள் அமைத்தனர். புதிய டிரான்ஸ்பார்மரின் இயக்கத்தை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி துவக்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் வி.சி.க ஒன்றிய செயலாளர் இ.சி.ஆர் அன்பு, எடையூர் ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி நடராஜன், வி.சி.க நிர்வாகி சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மறைமலைநகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (வியாழக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறைமலைநகர் என்.எச்.1, என்.எச்.2, காட்டூர், ரெயில் நகர், காந்தி நகர், விஷ்ணுபிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், காவனூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என்., இந்திரா நகர், நின்னக்கரை, கோனாதி, கூடலூர், கடம்பூர், பேரமனூர், சட்டமங்கலம், திருக்கச்சூர், தெல்லிமேடு, செங்குன்றம், மல்ரோசபுரம், கீழக்கரணை, மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கடல் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க இன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
    • கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, உள்ளூர் போலீசார் இணைந்து சீ விஜில் என்ற ஒத்திகையை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு கடலோர மாவட்ட கடல் பகுதிகளில் கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தின் பாதுகாப்பு ஒத்திகை ஆபரேஷன் சீ விஜில் என்ற பெயரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ஆபரேஷன் நாளை மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதில் தீவிரவாதிகள் வேடத்தில் கடல் வழியாக வந்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களுக்குள் நுழையும், மத்திய கடலோர பாதுகாப்பு படை வீரர்களை எப்படி அடையாளம் கண்டு கைது தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்கிறார்கள், அவர்களிடம் விசாரிக்கும் விதம் எப்படி இருக்கிறது, கடல்பகுதி தகவல் தொடர்பு கருவிகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கண்டறியவே இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மாமல்லபுரம் வருவதால் அவர்களைத் தாக்கவும், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வழியாக நுழையலாம். ஆபத்தான அணு உலை கல்பாக்கத்தில் உள்ளதால் அதை தகர்த்து எரிய சட்ராஸ் பகுதி கடலோரம் வழியாக நுழையலாம் என்பது போன்ற ஒத்திகையில் கடலோர காவல் படையினர், போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கோவளம் கடலில் சந்தேகத்திற்கு இடமான படகில் வந்த நபர்கள் 8 பேரை கடலோர காவல்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒத்திகைக்காக தீவிரவாதிகள் வேடத்தில் வந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டு, துப்பாக்கி, வாக்கி டாக்கி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடலோர காவல் படைவீரர்கள் அவசர அவசரமாக கடலுக்குள் படகை இறக்கி, வேகமாக எடுத்துச் செல்வதைப் பார்த்த மீனவர்கள் இடையே பதட்டம் ஏற்பட்டது. அதன்பின் அது ஒத்திகை என தெரிய வந்ததும் இயல்பு நிலை திரும்பியது.

    • சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தில்லைநாயகம்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    ஓட்டேரி:

    சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தில்லைநாயகம் (வயது 67). வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையோரம் தள்ளு வண்டியில் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வருவது வழக்கம், இந்த நிலையில் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்த பிறகு வழக்கம்போல் தள்ளுவண்டி சக்கரங்களில் இரும்பு சங்கிலி மூலம் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    மறுநாள் வந்து பார்த்தபோது தள்ளுவண்டி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஒட்டேரி போலீசில் தில்லைநாயகம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் தள்ளுவண்டியை திருடிய வழக்கில் பழைய வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய ஓட்டேரி பகுதியை சேர்ந்த டில்லி பாபு (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×