என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 2 நாளில் பச்சிளங்குழந்தை திடீர் மரணம்
    X

    குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 2 நாளில் பச்சிளங்குழந்தை திடீர் மரணம்

    • குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தாய் ஆனந்தி மற்றும் அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்து இருந்ததாக தெரிகிறது.
    • குழந்தை இறந்து விட்டதாக தாய் ஆனந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரனுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

    தாம்பரம்:

    திருநீர்மலை, இரட்டை மலை சீனிவாசன் தெருவில் வசிப்பவர் மகேந்திரன்.இவரது மனைவி ஆனந்தி என்கின்ற ஆஷா. இவர்களுக்கு பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆனந்தி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரச வத்துக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை காலை சேர்த்தனர். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை காலை ஆனந்திக்கு அறுவை சிகிச்சை முலம் ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் கண்காணிப்புக்காக குழந்தையை இங்குபேட்டரில் டாக்டர்கள் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தாய் ஆனந்தி மற்றும் அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்து இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே இன்று அதிகாலை குழந்தை இறந்து விட்டதாக தாய் ஆனந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரனுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியில் கதறி துடித்தனர். இதுபற்றி அறிந்ததும் ஆனந்தி மற்றும் மகேந்திரனின் உறவினர்கள் ஏராளமானோர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    அவர்கள் டாக்டர்களின் கவன குறைவால் குழந்தை இறந்து போனதாக குற்றம் சாட்டி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மேலும் தாம்பரம்-பல்லாவாரம் ஜி.எஸ்.டி சாலையில் மறியல் செய்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்ததை நடத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பிறக்கும் போது குழந்தை நல்ல நிலையில் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். நேற்று இரவும் குழந்தை நன்றாக இருந்து உள்ளது. இந்த நிலையில் குழந்தை திடீரென இறந்து விட்டதாக கூறுகிறார்கள். டாக்டர்களின் அலட்சியம், மற்றும் உரிய கண்காணிப்பு இல்லாததால் பிறந்த 2 நாளில் குழந்தையை பறிகொடுத்து உள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தால் தாம்பரம்-பல்லாவாரம் ஜி.எஸ்.டி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

    Next Story
    ×