என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் வட்டாட்சியர் பெயரில் போலி சான்றிதழ்- போலீசில் புகார்
- வட்டாட்சியர் போல் கையெழுத்திட்டு போலியாக சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
- தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் வட்டாட்சியர் புகார் செய்தார். தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்போரூர்:
நாவலூரை அடுத்த தாழம்பூர் மெயின் ரோட்டில் கீதாதேவி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலத்திற்கு வங்கியில் கடன் வாங்க கீதா தேவி தன்னுடைய ஆவணத்தை சமர்ப்பித்தார்.
அப்போது வங்கியில், வட்டாட்சியரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கி வருமாறு கூறி உள்ளனர்.
இதையடுத்து அவர் வட்டாட்சியர் வழங்கியதைப் போன்று சான்றிதழ் ஒன்றை வங்கியில் சமர்ப்பித்தார். இதில் சந்தேகமடைந்த வங்கி நிர்வாகம் வட்டாட்சியர் வழங்கிய சான்றினை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்த்தனர்.
வட்டாட்சியர் போல் கையெழுத்திட்டு போலியாக சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது குறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் வட்டாட்சியர் புகார் செய்தார். தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






