என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் 3 சக்கர தள்ளுவண்டியை திருடியவர் கைது
- சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தில்லைநாயகம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
ஓட்டேரி:
சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தில்லைநாயகம் (வயது 67). வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையோரம் தள்ளு வண்டியில் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வருவது வழக்கம், இந்த நிலையில் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்த பிறகு வழக்கம்போல் தள்ளுவண்டி சக்கரங்களில் இரும்பு சங்கிலி மூலம் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மறுநாள் வந்து பார்த்தபோது தள்ளுவண்டி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஒட்டேரி போலீசில் தில்லைநாயகம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் தள்ளுவண்டியை திருடிய வழக்கில் பழைய வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய ஓட்டேரி பகுதியை சேர்ந்த டில்லி பாபு (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






