என் மலர்
அரியலூர்
கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவுவதால் அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவுவதால் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வித பிரச்சினைகள் இன்றி தங்குவதற்கும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்ரமணியன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலராக தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) விமலாவும், குழு உறுப்பினர்களாக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குருநாதன், முத்திரை ஆய்வாளர் ராஜா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து கண்காணிப்பு அலுவலரை 9942832724 என்ற செல்போன் எண்ணிலும், குழு உறுப்பினர்களை 9629494492, 7904250037 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கால் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடின.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவிப்பின்படி 2-வது ஞாயிற்றுக்கிழமையாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அரியலூரில் உள்ள அனைத்து வீதிகளும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானபோதும், ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது. போலீசார் நகரின் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கீழப்பழுவூர், திருமானூர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், உணவு விடுதிகள், பால் விற்பனை நிலையங்கள் திறந்து இருந்தன. துப்புரவு பணியாளர்கள் தங்களது பணிகளை வழக்கம்போல் செய்தனர். அரியலூரில் ஆட்டோக்கள் ஓடவில்லை. அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வழக்கம்போல் பல்லவன், வைகை, குருவாயூர், சேது, மலைக்கோட்டை விரைவு ரெயில்கள் வந்து சென்றன. அரியலூர் ரெயில் நிலையத்தில் மிகக்குறைந்த அளவிலேயே பயணிகள் வந்து சென்றனர். மதியம் 3 மணி அளவில் 10 நிமிடம் லேசான மழை பெய்தது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் நகரில் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. தள்ளுவண்டிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருந்துக்கடைகள், பால் பொருட்கள் விற்பனை கடைகள், மாலைகள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நான்கு சாலை சந்திப்பு, துறைமங்கலம் மூன்று சாலை, பாலக்கரை, வெங்கடேசபுரம் பிரதான சாலை, மதனகோபாலபுரம் பிரதான சாலை, வாகன நெரிசல் மிக்க காமராஜர் வளைவு சிக்னல், துறையூர் சாலை, எளம்பலூர் சாலை, உழவர்சந்தை சாலை, தபால்நிலையத்தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததால், சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
ஓரிரு ஓட்டல்களில் பார்சலில் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது. புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. ஆனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும், உணவு வாங்கி சாப்பிட ஆட்கள் வராததாலும் சமைக்கப்பட்ட உணவுகள் குறைந்த அளவே விற்பனை ஆகின. மருத்துவ சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், வழிப்போக்கர்கள் என சிலர் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு சென்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
இந்த போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஆன்லைன் பணமோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்களை புகாராக அளிக்கலாம். மேலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து புகாரை பெற்றார். அந்த புகார் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, சேகர், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், தனி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் அதிமுக 1 தொகுதியிலும், மீதமுள்ள 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:
ஜெயங்கொண்டம் | கடும் போட்டி |
அரியலூர் | அதிமுக |
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 62 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 62 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,485 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 52 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 5,105 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 328 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,558 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,401 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 133 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒன்றிய அலுவலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆண்டிமடம் சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல் மற்றும் கிராம செவிலியர்கள் ஈடுபட்டனர்.
விளந்தையில் தந்தை- மகள் உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, தடுப்புகள் அமைக்கப்பட்டது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை பாப்பாத்தி கொள்ளை தெருவை சேர்ந்த தந்தை, மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த தெருவுக்கு வெளியில் இருந்து வரும் பொதுமக்கள் செல்ல முடியாதவாறும், அந்த தெருவில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியில் செல்லாதவாறும் தெருவின் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
மேலும் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அங்கு சென்று அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, அனைத்து வீடுகளுக்கும் சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் வசிக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதையடுத்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத், தடை செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் யாரேனும் சென்று வருகிறார்களா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும், தெருவில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றும் கூறினார்.
இதில் தாசில்தார் முத்துகிருஷ்ணன், விளந்தை ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், ஆண்டிமடம் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை பாப்பாத்தி கொள்ளை தெருவை சேர்ந்த தந்தை, மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த தெருவுக்கு வெளியில் இருந்து வரும் பொதுமக்கள் செல்ல முடியாதவாறும், அந்த தெருவில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியில் செல்லாதவாறும் தெருவின் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
மேலும் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அங்கு சென்று அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, அனைத்து வீடுகளுக்கும் சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் வசிக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதையடுத்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத், தடை செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் யாரேனும் சென்று வருகிறார்களா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும், தெருவில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றும் கூறினார்.
இதில் தாசில்தார் முத்துகிருஷ்ணன், விளந்தை ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், ஆண்டிமடம் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிதா? என்பது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிதா? என்பது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 4 ரோடு, பஸ் நிறுத்தம் ரோடு, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து தலா ரூ.500 முதல் ரூ.1,000 வரை என 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.11 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. ஆய்வின்போது தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குடும்ப பிரச்சினையில் புதுப்பெண் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி கலைவாணி (வயது 23). இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலைவாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைவாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 49 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,357 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 5,019 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 287 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,484 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,371 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 90 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 180 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 57 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 49 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,357 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 5,019 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 287 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,484 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,371 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 90 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 180 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 57 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கோவிந்தபுத்தூரில் இருந்து முத்துவாஞ்சேரி நோக்கி வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 2 பேர், வண்டிகளை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார், மாட்டு வண்டிகளை சோதனையிட்டபோது, அவற்றில் கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.
பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.
அரியலூர்:
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகரன், துப்புரவு ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், பயணிகள் முககவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பஸ் நிலையங்களிலும், சாலைகளிலும் ஆய்வு செய்யப்படும்போது பொதுமக்கள் முககவசம் அணிகின்றனர். பின்னர் அவற்றை கழற்றி தங்கள் பையில் வைத்து செல்கின்றனர். அவ்வாறு செய்வதால் தொற்று பரவும் என்பதை அவர்கள் உணர்ந்தால் மட்டுமே, கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்த வர வேண்டும், என்றனர்.
கல்லங்குறிச்சி அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமம் தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் ராஜூ(வயது 56). இவர் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஊழியராக (பட்சகர்) வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜேஷ்(23). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் உள்ள பழுதுபார்க்கும் பட்டறையில் இருந்து தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு, கல்லங்குறிச்சி நோக்கி ராஜூ வந்து கொண்டிருந்தார்.
அப்போது கல்லங்குறிச்சியில் இருந்து அரியலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் சென்றார். கல்லங்குறிச்சி- அரியலூர் இடையே உள்ள குறைதீர்க்கும் குமரன் ஆலயம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






