என் மலர்tooltip icon

    அரியலூர்

    அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்ததாவது.

    தொழிலாளர் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். பட்டா நிலம் இருந்து வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அமைப்புசார தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.  


    நல வாரியங்களில் தொழிலாளர்கள் தலைக்கவசம், முழு பாதுகாப்பு கவசம், ஒளிரும் உடை, கையுறை, முகக்கவசம், பை உள்ளிட்ட 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும். கல்வி உதவித்தொகை, திருமண உதவி தொகை, இயற்கை மரண உதவி தொகை மற்றும் ஓய்வூதிய தொகை என மொத்தம் 1574 பயனாளிகளுக்கு ரூ.31,55,833-மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
    தலைநிமிரும் தமிழகம் என்ற தலைமைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    அரியலூர்:

    தமிழ்நாடு அரசுமாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தலைநிமிரும் தமிழகம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது.

    இப்பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.     இதில்  வெற்றி பெற்ற மாணவி ஆர்.சுவாதிகாவிற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    மேலும் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.    வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் கல்லூரியின் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன், கல்லூரியின் செயலாளர் எம்.ஆர்.கமல் பாபு, கல்லூரி முதல்வர் ஜோ. ஜெயா மற்றும் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியைகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
    அரியலூரில் 201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கலந்து கொண்டு ஆய்வு செய்தார். அரியலூர் ஒன்றியம் எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.
    துணைத் தலைவர் செல்வராஜ் வார்டு உறுப்பினர்கள் அர்ஜுனன், தனம், மகேஸ்வரி, தேவிகா, வெங்கடேசன், அறிவழகன், உஷாதேவி, சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  தாமரைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் கவிதா வார்டு, உறுப்பினர்கள் இளங்கோவன், நீலமேகம், சுமதி இளங்கோவன், சர்மிளா, இளையராசா, செல்லம் வைத்தியநாதன், ஊராட்சி செயலாளர் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.   ஓட்டக்கோவில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்கமலை தலைமையில் நடைபெற்றது .துணைத்தலைவர் செந்தில், வார்டு உறுப்பினர்கள் நிஷாந்தி, வசந்தா, ராமலிங்கம், முத்துசாமி, கொளஞ்சி, மணி, அப்பு, அஞ்சலை, சரிதா, ஊராட்சி செயலாளர் சத்தியசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
    சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான கிராமம், குழந்தை பாதுகாப்பு கிராமம், தண்ணீர் நிறைவு பெற்ற கிராமம், தூய்மை மற்றும் பசுமையான கிராமம், சமூகப்பாதுகாப்பு கிராமம், நல்லாட்சி கிராமம், வளர்ச்சியை ஏற்படுத்தும் கிராமம் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
    மாவட்ட அளவிலான நெட்பால் போட்டி நடைபெற்றது.
    அரியலூர் :

     அரியலூர் மாவட்ட நெட்பால் கழகத்தின் சார்பில் நடைபெற்ற போட்டியில் சீனியர் நெட்பால் மகளிர் போட்டியும், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நெட்பால்  போட்டியும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு அணிகள் சார்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு கொண்டார்கள்.

    14 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில், முதலிடம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி, இரண்டாமிடம் தளவாய் டிஎஸ்என் மெட்ரிக் பள்ளி தளவாய், மூன்றாமிடம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மற்றும் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் ஆகியவை பெற்றனர்.

    14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் தளவாய் டிஎஸ்என் மெட்ரிக் பள்ளி, இரண்டாம் இடம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி,  மூன்றாமிடத்தை பாத்திமா மெட்ரிக் மேல்நிலை ஜெயங்கொண்டம் மற்றும் என் ஆர் பப்ளிக் பள்ளி உடையார்பாளையம் பெற்றனர். சீனியர் பெண்கள் பிரிவில் முதலிடத்தை பரப்ரம்மம் ஸ்போர்ட்ஸ் கிளப், இரண்டாவது  இடத்தை மதர் ஞானம்மாள்  மகளிர் கல்லூரியும், மூன்றாம் இடத்தை மதர் ஞானம்மாள் நெட்பால் கிளப் பிடித்தனர்,

    நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட நெட்பால் கழகச் செயலாளர் பாண்டியன் கொடி ஏற்றினார். அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி போட்டிகளை  துவக்கி வைத்தார்.

    பரப்ரஹ்மம் கிளப் ஸ் இண்டர்நேஷனல்  ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பரப்ரஹ்மம் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமரன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை  நெட்பால் தேசிய நடுவர்கள் கார்த்திக் ராஜன், ராஜேஷ், அமுதி, பாலகுரு ஆகியோர் செய்திருந்தனர்.முன்னதாக அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதல்வர் வரவேற்புரையாற்றினார்.அரியலூர்மாவட்ட நெட்பால் கழக செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.
    அரியலூர் அருகே அரசு சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பாக பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    இதில் கல்லூரி தாளாளரும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான எம்.ஆர்.ரகுநாதன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எம்.ஆர்.சி. கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.கே.சீனிவாசன் வரவேற்றார்.

    தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சிறப்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் தி ரைசிங்சன் ஆங்கில இதழின் ஆசிரியர் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார். அரியலூர் மாவட்ட பேச்சுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த பல கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பாக செய்தி ருந்தனர்.
    அரியலூர் அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மங்கள அன்னை ஆலய தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தூய மங்கள அன்னை ஆலயம் 87ம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 16ந்தேதி திருமழபாடி பள்ளிவாசல் மஜித் சாதிக் மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் கண்ணியர் கீதா முன்னிலையில் காரியகார வயரா பிரான்சிஸ் தலையில் கொடியேற்றப்பட்டது.

    17ந்தேதி புதுக்கோட்டை மரியாயின் சேனையினர் தலைமையில் அய்யம்பேட்டை பங்குதந்தை அந்துவான் தலைமையிலும், 18ந்தேதி கரும்பு வெட்டும் குழுவினர் தலைமையில் குடந்தை அருண் சபரிராஜ் தலைமையிலும்,  

    19ந்தேதி பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை வின்சன்ட் தே பவுல் சபை சார்பாக பங்குதந்தை குழந்தை விட்டார் லாரன்ஸ் தலைமையிலும் திருப்பலி நடத்தப்பட்டது.

    இதேபோல் ஜான்போஸ்கோ, அமலதாஸ், தென் போஸ்கோ, புஷ்பராஜ், ஜெயராஜ், அமர்சிங் திருப்பலிகளை நடத்தினர். நேற்று (23-ந்தேதி) அனைத்து பங்கு மக்கள் முன்னிலையில் குடந்தை மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சிறப்பு திருவிழா திருப்பலி நடத்திவைத்தார்.

    நாளை திருவிழாவின் நிறைவாக புதுக்கோட்டை பங்குதந்தை ரெஜிஸ் தலைமையில் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது. திருவிழாவில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மாற்று மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
    திருமானூரில் குற்றவாளிகளுக்கு துணை போவதாக கூறி காவல் துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையத்தில், அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், காமரசவல்லி கிராமத்தில், ஏப்ரல் 14-ந்தேதி, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, வைக்கப்பட்டிருந்த, அம்பேத்கர் உருவப்படம் அகற்றப்பட்டது.

    இங்கு அம்பேத்கர் படத்தை வைக்க விடமாட்டேன் என  பேசியதாக புகார் கூறப்பட்ட தூத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மீது துறை ரீதியக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்தி நகரில வசிக்கும், சின்னசாமி, அவரது மனைவி தேவகி ஆகியோரை வீடு புகுந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு துணை போகும் திருமானூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,

    கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடன் கைது செய்யக்கோரியும்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணை செயலாளர் அன்பானந்தம், மாநில பொறுப்பாளர் கருப்புசாமி, மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் எசனை கண்ணன் (மேற்கு), சுள்ளங்குடி கண்ணன் (கிழக்கு), அரியலூர் தொகுதி செயலாளர் பாலமுருகன், தொகுதி துணை செயலாளர் பாலமுருகன், நகர செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் காமரசவல்லி, திருமானூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
    அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த பட்டளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார்.
    அரியலூர்:

    அரசு கலைக்கல்லூரியில் 54வது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. துறை தலைவர்கள் தமிழ் துறை இளையராஜா, ஆங்கிலத் துறை டோமினிக் அமுல்ராஜ், கணிதத்துறை கதிரவன், பொறியியல்துறை ரவி, சுற்றுச்சூழல் துறை ராஜசேகர், வரலாற்றுத்துறை ரவி, கணினி அறிவியல் துறை விஜயலட்சுமி, வணிகவியல் தாமஸ்,

    வேதியியல் பாலசுப்பிரமணியன், இயற்பியல் கந்தசாமி, விலங்கியல்துறை காமராஜ், தாவரவியல் துறை நெல்சன், விளையாட்டுத்துறை முத்துக்குமாரசாமி, நூலகத்துறை சரவணன், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை, மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டமளிப்பு விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டு 854 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:

    அரியலூர் அரசு கலைக்கல்லூரி 1965 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பாரம்பரியமான கல்லூரியாகும். இக்கல்லூரியில் தற்பொழுது 13 துறைகளில் இளநிலை பாடப்பிரிவுகளும், 12 துறைகளில் முதுநிலை பாடப்பிரிவுகளும், 5 துறைகளில் ஆய்வியல் நிறைஞர் பாடப்பிரிவுகளும், 9 துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு பாடப்பிரிவுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இக்கல்லூரியில் 3,508 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் இக்கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியர்களில் இளநிலைப் பிரிவில் 522 நபர்களும், முதுநிலைப் பிரிவில் 319 நபர்களும், ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 13 நபர்களும் பட்டம் பெறுகின்றனர். பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கல்வி ஒரு மனிதனுக்கு அறிவைத் தருகிறது. வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவிகிறது. ஒவ்வொருவரும் அறிவை பெருக்கிக்கொள்ள கல்வி பயில வேண்டும். இன்றைய தினம் பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து மேற்படிப்பும் பயில வேண்டும். கல்வி கற்பவர்கள் இலக்கை நிர்ணயித்து திட்டமிட்டு கல்வி கற்க வேண்டும். கல்வி கற்ற ஒவ்வொருவரும் தங்களது படிப்பிற்கேற்ப வேலைகளை தேட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    புனித அந்தோணியார் ஆலய பொங்கலை முன்னிட்டு ஜெயங்கொண்டம் சிங்கராயபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு களம் கண்டனர்.  

    இதில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சுழற்சிமுறையில் களம் இறக்கப்பட்டனர்.  

    காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த புனித அந்தோணியார் ஆலய ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார்.

    ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
    அரியலூர் அருகே இன்று காலை அரசு பஸ் மோதியதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 65). இவரது மகன் வெங்கடேஷ் (45). இருவரும் நுங்கு வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தந்தை, மகன் இருவரும் விற்பனை செய்வதற்காக நுங்குகளை வெட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு கீழப்பழுவூர் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    பின்னர் அவர்கள் தனியார் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்த சாலையை கடக்க முயன்றனர். அப்போது தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தந்தையும், மகனும் பலத்த காயங்களுடன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

    தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் விரைந்து சென்று தியாகராஜன், வெங்கடேசன் உடல்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சாலை விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்-பட்டது இதை கொண்டாடும் வகையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயல-லிதா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி புதிய நிர்வாகிகள் கொண்டாடினர்.       

    நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கீழப்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து கொண்டாடினர். புதிதாக நியமிக்கப்-பட்ட நிர்வாகிகள் மேற்கு ஒன்றியம் ஒன்றிய அவைத்தலைவர் விளாகம் எஸ்.சக்திவேல். மேற்கு ஒன்றிய செயலாளர் பளிங்காநத்தம் ச.சாமிநாதன்.

    இணை செயலாளர் வெங்கனூர் எஸ். ஆனந்தி.-துணை செயலாளர்கள் சன்னாவூர் யு.சித்ரா.பரதூர் கெ.மணிவேல். ஒன்றிய பொருலாளர் பூண்டி எஸ்.பன்னீர்-செல்வம் மாவட்ட பிரதிநிதிகள் கீழப்பவூர் மலர்விழி.திருமழபாடி அன்புகணேசன்.கீழையூர் ரெங்கராஜ்  கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் திருமானூர் பஸ்நிலையத்தின் அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு வடிவழகன் தலைமையில் மாலை-அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    அரியலூரில் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் ஜெயங்-கொண்டம் சாலையில் திமுக ஆட்சியில் உழவர் சந்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் 50 கடைகளை கொண்டு அமைக்கப்பட்டது.

    திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் மிக உன்னதமான திட்டமாகும். பொது மக்கள் விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். 23.9.2000 ம் ஆண்டு உழவர் சந்தையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

     50 கடைகள் இருக்கும் வாடகை கிடையாது, மின்விளக்கு, கழிப்பிட வசதி, தேனீர் வசதி, குடிநீர் வசதியுடன், இலவசமாக தராசு, படிக்கற்கள் வழங்கப்பட்டது.

    காய்கறி, பழவகைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். திமுக ஆட்சி காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் உழவர் சந்தையை மூடிவிட்டனர். பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய பொலிவுடன் உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    அரியலூர் நகரங்களில் சாலை ஓரங்களில் ஏலம் எடுக்காமல், முன்வைப்பு தொகை செலுத்தாமல், வாடகை, மின்சார பில் செலுத்தாமல், சாலைகளில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி உழவர் சந்தைக்கு அனுப்ப வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×