என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
காவல் துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
திருமானூரில் குற்றவாளிகளுக்கு துணை போவதாக கூறி காவல் துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையத்தில், அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், காமரசவல்லி கிராமத்தில், ஏப்ரல் 14-ந்தேதி, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, வைக்கப்பட்டிருந்த, அம்பேத்கர் உருவப்படம் அகற்றப்பட்டது.
இங்கு அம்பேத்கர் படத்தை வைக்க விடமாட்டேன் என பேசியதாக புகார் கூறப்பட்ட தூத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மீது துறை ரீதியக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்தி நகரில வசிக்கும், சின்னசாமி, அவரது மனைவி தேவகி ஆகியோரை வீடு புகுந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு துணை போகும் திருமானூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடன் கைது செய்யக்கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணை செயலாளர் அன்பானந்தம், மாநில பொறுப்பாளர் கருப்புசாமி, மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் எசனை கண்ணன் (மேற்கு), சுள்ளங்குடி கண்ணன் (கிழக்கு), அரியலூர் தொகுதி செயலாளர் பாலமுருகன், தொகுதி துணை செயலாளர் பாலமுருகன், நகர செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் காமரசவல்லி, திருமானூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Next Story