என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பரிசு வழங்கிய போத
    X
    பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பரிசு வழங்கிய போத

    மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

    அரியலூர் அருகே அரசு சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பாக பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    இதில் கல்லூரி தாளாளரும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான எம்.ஆர்.ரகுநாதன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எம்.ஆர்.சி. கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.கே.சீனிவாசன் வரவேற்றார்.

    தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சிறப்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் தி ரைசிங்சன் ஆங்கில இதழின் ஆசிரியர் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார். அரியலூர் மாவட்ட பேச்சுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த பல கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பாக செய்தி ருந்தனர்.
    Next Story
    ×