என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மாணவிக்கு பட்டம் வழங்க
    X
    அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மாணவிக்கு பட்டம் வழங்க

    அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த பட்டளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார்.
    அரியலூர்:

    அரசு கலைக்கல்லூரியில் 54வது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. துறை தலைவர்கள் தமிழ் துறை இளையராஜா, ஆங்கிலத் துறை டோமினிக் அமுல்ராஜ், கணிதத்துறை கதிரவன், பொறியியல்துறை ரவி, சுற்றுச்சூழல் துறை ராஜசேகர், வரலாற்றுத்துறை ரவி, கணினி அறிவியல் துறை விஜயலட்சுமி, வணிகவியல் தாமஸ்,

    வேதியியல் பாலசுப்பிரமணியன், இயற்பியல் கந்தசாமி, விலங்கியல்துறை காமராஜ், தாவரவியல் துறை நெல்சன், விளையாட்டுத்துறை முத்துக்குமாரசாமி, நூலகத்துறை சரவணன், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை, மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டமளிப்பு விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டு 854 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:

    அரியலூர் அரசு கலைக்கல்லூரி 1965 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பாரம்பரியமான கல்லூரியாகும். இக்கல்லூரியில் தற்பொழுது 13 துறைகளில் இளநிலை பாடப்பிரிவுகளும், 12 துறைகளில் முதுநிலை பாடப்பிரிவுகளும், 5 துறைகளில் ஆய்வியல் நிறைஞர் பாடப்பிரிவுகளும், 9 துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு பாடப்பிரிவுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இக்கல்லூரியில் 3,508 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் இக்கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியர்களில் இளநிலைப் பிரிவில் 522 நபர்களும், முதுநிலைப் பிரிவில் 319 நபர்களும், ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 13 நபர்களும் பட்டம் பெறுகின்றனர். பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கல்வி ஒரு மனிதனுக்கு அறிவைத் தருகிறது. வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவிகிறது. ஒவ்வொருவரும் அறிவை பெருக்கிக்கொள்ள கல்வி பயில வேண்டும். இன்றைய தினம் பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து மேற்படிப்பும் பயில வேண்டும். கல்வி கற்பவர்கள் இலக்கை நிர்ணயித்து திட்டமிட்டு கல்வி கற்க வேண்டும். கல்வி கற்ற ஒவ்வொருவரும் தங்களது படிப்பிற்கேற்ப வேலைகளை தேட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×