என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்ததாவது.
தொழிலாளர் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். பட்டா நிலம் இருந்து வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அமைப்புசார தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
நல வாரியங்களில் தொழிலாளர்கள் தலைக்கவசம், முழு பாதுகாப்பு கவசம், ஒளிரும் உடை, கையுறை, முகக்கவசம், பை உள்ளிட்ட 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும். கல்வி உதவித்தொகை, திருமண உதவி தொகை, இயற்கை மரண உதவி தொகை மற்றும் ஓய்வூதிய தொகை என மொத்தம் 1574 பயனாளிகளுக்கு ரூ.31,55,833-மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Next Story