என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
அரியலூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
அரியலூரில் 201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கலந்து கொண்டு ஆய்வு செய்தார். அரியலூர் ஒன்றியம் எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் செல்வராஜ் வார்டு உறுப்பினர்கள் அர்ஜுனன், தனம், மகேஸ்வரி, தேவிகா, வெங்கடேசன், அறிவழகன், உஷாதேவி, சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தாமரைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் கவிதா வார்டு, உறுப்பினர்கள் இளங்கோவன், நீலமேகம், சுமதி இளங்கோவன், சர்மிளா, இளையராசா, செல்லம் வைத்தியநாதன், ஊராட்சி செயலாளர் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓட்டக்கோவில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்கமலை தலைமையில் நடைபெற்றது .துணைத்தலைவர் செந்தில், வார்டு உறுப்பினர்கள் நிஷாந்தி, வசந்தா, ராமலிங்கம், முத்துசாமி, கொளஞ்சி, மணி, அப்பு, அஞ்சலை, சரிதா, ஊராட்சி செயலாளர் சத்தியசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான கிராமம், குழந்தை பாதுகாப்பு கிராமம், தண்ணீர் நிறைவு பெற்ற கிராமம், தூய்மை மற்றும் பசுமையான கிராமம், சமூகப்பாதுகாப்பு கிராமம், நல்லாட்சி கிராமம், வளர்ச்சியை ஏற்படுத்தும் கிராமம் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
Next Story






