என் மலர்
அரியலூர்
- ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது
- நான் முதல்வன் என்ற தலைப்பில் நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் நான் முதல்வன் என்ற தலைப்பில் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், வேலைவாய்ப்பை எப்படி பெறுவது? என்ற தலைப்பில் 100 முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கீழப்பழுவூர் மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், உடையார்பாளையம் கல்வி மாவட்ட ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார், உடற்கல்வி அலுவலர் ராஜேந்திரன், முதுகலை ஆசிரியர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளர்களாக முதுகலை ஆசிரியர் இளஞ்செழியன், உதவி வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
ஜெயங்கொண்டம் தா.பழூர், ஆண்டிமடம் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற தலைப்பில் அடுத்து என்ன படிக்கலாம் வேலை வாய்ப்பைப் பெறுவது எப்படி என எடுத்துரைத்தார்கள்.
- அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த அணுக்கள் பகுப்புக்கருவி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- சட்டப் பேரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
அரியலூர்:
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்கமும், ரத்த வங்கியில் புதிதாக ரத்த அணுக்கள் பகுப்பு கருவி இயக்கி வைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விழாவில் பங்கேற்று, ரூ.29 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த அணுக்கள் பகுப்புக் கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன், மானிட்டர், வென்டிலேட்டர் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டார்.
முழு உடல் பரிசோதனையில் அனைத்து இரத்தம், இ.சி.ஜி, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை தொகுப்பாக பரிசோதனை செய்யப்படும். இதனை தனியார் மருத்துவமனைகளில்; பரிசோதனை செய்தால் ரூ.3750/- வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.250/- மட்டும் செலுத்தி பொதுமக்கள் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு பயன்பெறலாம்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் குழந்தைவேலு, நகர்மன்ற உறுப்பினர்கள்கண்ணன், மலர்மன்னன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் துரோகிகளை ஜெ.ஆன்மா மன்னிக்காது என்று வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
- கட்சி பிரச்சனையில் கோர்ட் தலையிடுவது புதிதல்ல
அரியலூர்:
அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,
அ.தி.மு.க. பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து சட்டத்திற்கு உட்பட்டதில்லை. தேர்தல் ஆணையத்ைதயும், சுப்ரீம் கோர்ட்டையும் நாட வேண்டிய சூழ்நிலை இதுவரை ஏற்படவில்லை. இன்னும் 3 நாட்களுக்குள் கட்சியை எப்படி வழிநடத்திச் செல்வது என ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். கட்சி பிரச்சனையில் கோர்ட் தலையிடுவது புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற வழக்குள் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திடமும் கொண்டுசெல்லப்பட்டு அதற்கான தீர்வும் பெறப்பட்டுள்ளது.
கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது நம்பிக்கைக்குரியவரான ஒபிஎஸ்யை முதல்வராக்கினார். இப்போது கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் துரோகிகளை ஜெ.ஆன்மா மன்னிக்காது. சட்டத்திற்குட்பட்டு கட்சி விரைவில் மீட்கப்படும். சசிகலாவை சந்திப்பது குறித்து கேட்டபோது இந்த கேள்விக்கு தற்போது பதில் இல்லை என்றார்.
- அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- அப்போது உரிய அனுமதியின்றி 52 மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
அரியலூர்
அரியலூர் பகுதியில் அனுமதியின்றி நடை பெறும் மதுபான விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கீரை குடிகாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நிகோலஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது உரிய அனுமதியின்றி 52 மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த துளசிராமன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் மூலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் சமூக நீதிப் பேரவை தலைவர் பா.ம.க. வழக்கறிஞர் பாலு முன்னிலையில் நடைபெற்றது.
- இதில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நபர்களை அழைத்து மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் மூலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் சமூக நீதிப் பேரவை தலைவர் பா.ம.க. வழக்கறிஞர் பாலு முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த மாநில தேர்தல் பணிக் குழு இணை செயலாளர் இசக்கி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பேராசிரியர் செல்வகுமார், தர்மபுரி மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், சென்னை ராயபுரம் பசுமைத்தாயக அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகிகளை நேர்முக தேர்வு நடத்தினர்.
இதில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நபர்களை அழைத்து மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர். மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் நன்றி கூறினார்.
- பாண்டியன், மணிமொழியை விவாகரத்து செய்த நிலையில் நஷ்ட ஈடாக மணிமொழிக்கு கொடுத்த பணம், நகை ஆகியவற்றை கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார்.
- தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தன்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமொழி (வயது 44). கும்பகோணத்தை சேர்ந்த இவருக்கும், நகைக்கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரது கணவர் பாண்டியன், மணிமொழியை விவாகரத்து செய்த நிலையில் நஷ்ட ஈடாக மணிமொழிக்கு கொடுத்த பணம், நகை ஆகியவற்றை கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே மணிகண்டனுக்கு மற்றொரு இடத்தில் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
இந்த செய்தியை அறிந்த மணிமொழி மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தன்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் பேசி கலந்து ஆலோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறியதன் பேரில் மணிமொழி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே அவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மணிமொழிக்கு தண்ணீர் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மேல குடியிருப்பு கிராமம் பரபரப்பாக காணப்பட்டது. மணிமொழிக்கு முன் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
2022-23 ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000, 6-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4000, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4000, இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6000, முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.
மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு 9 முதல் 12ம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3000 மற்றும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.5000 மற்றும் முதுகலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.6000 வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2022-23 ம் நிதியாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியர்கள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மாணவ மாணவியர் பிறத்துறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் சான்றிதழ், மாணவ, மாணவியர்களின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிலம்பூர் ஊராட்சி வார்டு}1,தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தம்பாடி ஊராட்சி வார்டு 7,தென்கச்சிபெருமாள் நத்தம் வார்டு4 ஆகிய உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறுகிறது.
- ஜூலை 12 -ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி வார்டு6, செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நாகல்குழி ஊராட்சி வார்டு1, துளார் ஊராட்சி வார்டு6,
ெஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கழுவந்தோண்டி ஊராட்சி வார்டு6, மேலணிக்குழி ஊராட்சி வார்டு7, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் இடையக்குறிச்சி வார்டு7, சிலம்பூர் ஊராட்சி வார்டு}1,தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தம்பாடி ஊராட்சி வார்டு 7,
தென்கச்சிபெருமாள் நத்தம் வார்டு4 ஆகிய உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறுகிறது.ஜூலை 12-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
எனவே, அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பா ட்டு அறையிலுள்ள 04329-228902 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கூறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் தனது உதவியாளருடன் வேணாநல்லூர் பெரிய ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
- அருள்மொழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 45) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் தனது உதவியாளருடன் வேணாநல்லூர் பெரிய ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அருள்மொழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 45) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை கைப்பற்றி தா.பழூர் போலீசில் ஒப்படைத்தார். மணல் கடத்தி வந்த கொளஞ்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- அரியலூரில், விவசாயிகளுக்கு ஜூன் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
- கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜூன் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.
மேலும், கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். மேலும் கூட்டத்தில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரியலூர் அருகே பள்ளி மாணவர் ஏரியில் மிதந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
- ஏரி, குளம், ஆறுகள் போன்றவற்றில் நீச்சல் தெரியாமல் சிறுவர்கள் இறப்பை தடுக்கும் வகையில் யோகாசனம் செய்ததாக தகவல்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாளைப்பாடி கிராமத்தை சேர்ந்த வீரமாமுனீஷ்வரன் (வயது16).
இவர் இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே இவர் முறையாக யோகாசனம் கற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது ஊரில் உள்ள ஏரியில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஏரி, குளம், ஆறுகள் போன்றவற்றில் நீச்சல் தெரியாமல் சிறுவர்கள் நீர் மூழ்கி இறந்து விடுகின்றனர்.
அவ்வாறு விபத்து ஏற்படாமல் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச யோகா தினத்தன்று மாணவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் முனிஸ்வரன் தந்தை மாரியப்பன், பள்ளி ஓவிய ஆசிரியர், யோகாஆசியர் செந்தில்வேலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- அரியலூர் அருகே அரசு கையப்படுத்திய இரண்டு கிராமங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
- உச்ச நீதிமன்றம் 11 கிராமங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்காமல் பொதுமக்களிடம் அவர்களுடைய நிலத்தின் பட்டாவை ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள 13 கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் நிலங்களை கையகப்படுத்தி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ளது. இதனால் முழுமையாக விவசாயம் செய்ய முடியவில்லை, புதிதாக வீடு கட்ட முடியவில்லை.
கடனுதவி வாங்க மற்றும் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் 11 கிராமங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்காமல் பொதுமக்களிடம் அவர்களுடைய நிலத்தின் பட்டாவை ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
அதனடிப்படையில் 11 கிராம பொதுமக்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் மேலூர் இலையூர் கிராம பொதுமக்கள் தலைவர் வைரம் அறிவழகன் தலைமையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் அவர்களிடம் எங்கள் இரண்டு கிராமத்தையும் எங்களுக்கு திருப்பித்தர வேண்டும்.
எந்த இழப்பீடும் வேண்டாம். எங்கள் நிலம் மட்டுமே போதும் என மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.






