மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்தியவர் கைது-52 மதுபாட்டில்கள் பறிமுதல்

அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது உரிய அனுமதியின்றி 52 மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்தியவர் கைது-52 மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

அரியலூர்

அரியலூர் பகுதியில் அனுமதியின்றி நடை பெறும் மதுபான விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கீரை குடிகாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நிகோலஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது உரிய அனுமதியின்றி 52 மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த துளசிராமன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com