என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஏரியில் பள்ளி மாணவர் யோகாசனம் செய்து அசத்தல்
  X

  ஏரியில் பள்ளி மாணவர் யோகாசனம் செய்து அசத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரியலூர் அருகே பள்ளி மாணவர் ஏரியில் மிதந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
  • ஏரி, குளம், ஆறுகள் போன்றவற்றில் நீச்சல் தெரியாமல் சிறுவர்கள் இறப்பை தடுக்கும் வகையில் யோகாசனம் செய்ததாக தகவல்

  அரியலூர்:

  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாளைப்பாடி கிராமத்தை சேர்ந்த வீரமாமுனீஷ்வரன் (வயது16).

  இவர் இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே இவர் முறையாக யோகாசனம் கற்றுக்கொண்டார்.

  இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது ஊரில் உள்ள ஏரியில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  ஏரி, குளம், ஆறுகள் போன்றவற்றில் நீச்சல் தெரியாமல் சிறுவர்கள் நீர் மூழ்கி இறந்து விடுகின்றனர்.

  அவ்வாறு விபத்து ஏற்படாமல் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச யோகா தினத்தன்று மாணவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  நிகழ்ச்சியில் முனிஸ்வரன் தந்தை மாரியப்பன், பள்ளி ஓவிய ஆசிரியர், யோகாஆசியர் செந்தில்வேலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×