என் மலர்
செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிபோடுகிறது: பாரதிராஜா- சீமான் குற்றச்சாட்டு
கர்நாடகா தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிபோடுகிறது என்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளனர். #CauveryIssue #CentralGovt #seeman #BharathiRaja
கடலூர்:
கடலூரில் இன்று இயக்குனர் பாரதிராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரிமேலாண்மை வாரியத்தை தாமதப்படுத்தாமல் உடனே அமைக்க வேண்டும். காவிரிமேலாண்மை வாரியத்தில் ஸ்கீம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, பா.ஜ.க. ஸ்கீமாக தான் தெரிகிறது. காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் அதற்கு அனுமதி இல்லை.
ஆனால் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கர்நாடகா சட்டசபை தேர்தலில்தான் மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்த தேர்தலுக்காகத்தான் காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளி போடுகிறார்கள். ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அதனை புறக்கணித்துவிட்டு கர்நாடகா தேர்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. இதனை பார்க்கும்போது, தமிழக மக்களின் உணர்வோடு பா.ஜ.க. விளையாடுகிறது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். ஒரு இயக்குனராக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழ் குடிமகனாகத் தான் இதை தெரிவிக்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளுக்கு நாள் போராட்டம் நடைபெறும். இதனை மத்திய அரசு எப்படி எதிர்கொள்கிறது என பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது கர்நாடகா தேர்தலுக்காத்தான். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரைவு திட்டம் வகுக்கப்படும். அந்த திட்டத்தில் எந்த அரசு உயர் அதிகாரியும் நியமிக்கப்படமாட்டார்கள். இதனை பார்க்கும்போது தமிழகத்தை திட்டவட்டமாக மத்திய அரசு வஞ்சித்து புறக்கணித்து வருகிறது. முதல்- அமைச்சரும் புறக்கணித்து வருகிறார். பிரதமருக்கும் கவலை இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை புறக்கணித்து வரும் கட்சிகள் வருகிற தேர்தலில் கண்டிப்பாக புறக்கணித்து நிராகரிக்கப்படுவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனைக்காக தினந்தோறும் கத்திக் கொண்டு இருக்கமுடியுமா? இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். உச்சநீதிமன்றத் தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது என்பது முன்பே தெரிந்தவிஷயமாகும்.
இதற்கு காரணம் பிரதமரும், அமைச்சர்களும், கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ளார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கர்நாடக தேர்தலை காரணம் காட்டக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு அதை பற்றி கவலையில்லை.
இதுமட்டுமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அப்போது நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தி செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
மேலும் அங்கு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் காவிரி தண்ணீரை திறந்துவிடமாட்டார்கள். ஏன் என்றால் ஒரு சொட்டு காவிரிநீர் திறந்து விட்டாலும் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அங்கு ஜெயிக்காது. காவிரி நீர் திறக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம். இது தேசத்துரோகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருணாஸ் நிருபர்களிடம் கூறும்போது, கடலூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டம் தமிழக மக்களின் பிரச்சனையை வலியுறுத்தி நடத்த ஆர்ப்பாட்டமாகும். இதனால் தான் தமிழன் என்கிற முறையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளேன். நீர் ஆதாரம் இல்லாமல் பயிர் முதல் மனிதர்கள்வரை யாரும் உயிர் வாழமுடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வுகாண வேண்டும். இது தொடர்பாக மக்களை சந்திக்கவும் தயாராக உள்ளோம் என்றார். #CauveryIssue #CentralGovt #seeman

Next Story