என் மலர்
செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக தேர்தல் அறிக்கை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு உரிமை கிடையாது- ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்று அதன் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவனியாபுரம்:
மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செயல்படுத்தக்கூடியது என்றும், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செயல்படுத்த முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் செயல்படுத்துவோம். எங்களின் தேர்தல் அறிக்கையை பற்றி மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.
அ.தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story