என் மலர்

  செய்திகள்

  ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் ஜெயலலிதாவுக்கு எதிரானது: அமைச்சர் ஜெயக்குமார்
  X

  ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் ஜெயலலிதாவுக்கு எதிரானது: அமைச்சர் ஜெயக்குமார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓ.பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்து நடத்துவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகும் என்று நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
  சென்னை:

  தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டனத்துக்கு உரியது. அவர்களை விடுவிக்க பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுத உள்ளார்.

  பிரதமர் ஆழ்கடல் மீன் பிடிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2000 படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன் பிடிக்கலாம். இதற்கு ஒரு படகிற்கு ரூ. 80 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு இடையூறு வந்தபோதிலும் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். வருகிற 15-ந்தேதி அவர் கோட்டையில் கொடியேற்றுகிறார். இந்த ஆண்டு மட்டுமல்ல வருகிற ஆண்டுகளிலும் ஜெயலலிதா அரசுதான் கொடியேற்றும்.

  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நியமனம், கட்சி, கொடி பிரச்சனை போன்றவை தொடர்பாக கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.

  செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் குறித்து எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் போது நாங்கள் யாரையும் புதிதாக நியமிக்கவில்லை.

  அ.தி.மு.க. கட்சி இமயமலை போன்ற இரும்பு கோட்டையாகும். அது மண் சட்டி அல்ல, கவிழ்க்க முடியாது. சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கான வேலை நடந்து வருகிறது.


  எடப்பாடி பழனிசாமியுடன் துரைமுருகன் கூட்டு சேர்ந்து இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருக்கிறார். அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.

  ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ். அவர் இந்த அரசு மீது குற்றச்சாட்டு கூறுவது வேதனைக்குரிய செயல். இந்த ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்து நடத்துவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகும்.

  இப்போது ஜெயலலிதா அரசை எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி செல்கிறார். இந்த அரசை யாரும் எள்ளிநகையாட இடம் தரக்கூடாது என்பதே எனது தாழ்மையான விண்ணப்பமாகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×