என் மலர்tooltip icon

    ஒடிசா

    • நாட்டையே உலுக்கிய ரெயில் விபத்தின் தற்போதைய நிலை குறித்து தலைமை செயலர் விளக்கம்.
    • விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஒடிசா தலைமை செயலாளர் ஜெனா பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது..,

    "ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. ரயில் விபத்தில் காயம் அடைந்த பயணிகளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது."

    "விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்தில் இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.

    • இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
    • சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

    ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து பயங்கர ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-

    விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன.

    • ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.
    • 18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    • உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என ஒடிசா தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • விபத்தில் காயமடைந்த 800க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
    • சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்றன.

    காயமடைந்த 800க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன.

    30 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    சுமார் 700 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    • ஒடிசாவின் பாலசோர் அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
    • இதில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது. இதில் 15 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 2 பெட்டிகள் தடம்புரண்டன. மேலும் அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலும் விபத்தில் சிக்கியது.

    இந்த கோர விபத்தில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்றன.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து எதிரொலியாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7 ரெயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஹவுரா-பூரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை மெயில் உள்ளிட்ட 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், 7 ரெயில்கள் டாடா நகர் ரெயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.
    • தடம் புரண்ட விரைவு ரெயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா ரெயில் மோதியது.

    புவனேஷ்வர்:

    கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    ஒடிசாவின் பாலசோர் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் கோரமண்டல் ரெயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.

    தடம் புரண்ட விரைவு ரெயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா ரெயில் மோதியது. இதில் ஹவுரா ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.

    மேலும், சரக்கு ரெயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

    • கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசாவின் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
    • இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    புவனேஷ்வர்:

    கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு செல்ல உள்ளேன். ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    • ஒடிசாவின் பலாஷோர் அருகே கோரமண்டல் விரைவு ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
    • கோரமண்டல் ரெயில் விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர்:

    கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் 300 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த ரெயில் விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

    • இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டன.
    • ஒடிசா மாநிலம் பஹானாகா அருகே இந்த விபத்து நடந்துள்ளது

    கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில் இன்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துள்ளானது.

    இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரெயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    உள்ளூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள் தயார் நிலையில் இருக்கும் வகையில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநில தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த கோர விபத்தில் இதுவரை 120க்கு மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்தார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்து விட்டனர்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    கோவை மாவட்ட மொத்த அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகிறோம். இதன் மூலம் வியாபாரிகள் அவரது குடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெணி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகளவில் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்து விட்டனர்.

    தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனைகள் நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியில் பிரதான கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும், கள்ளச்சாராயம் விற்பவர்களைகுண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும், தமிழக விவசாயிகளின் நலம் காத்திடும் வகையில் பனை மற்றும் தென்னை கள் விற்பனையை அனுமதி அளிக்க வேண்டும்.மேலும் தமிழக அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளித்தும், அதை தமிழகஅரசே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பயனடைவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கோவை அருகே உள்ள ஊத்துப்பாளையம் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்ட ம் சூலூர் வட்டம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்துப்பாளையம் பகுதியில் உள்ள நீர்நிலையில் உள்ள குட்டை மற்றும் வாய்க்கால் பகுதியில் தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நீர் நிலைக்கு வரும் தண்ணீர் தடைபடும். எனவே நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    ×