என் மலர்
ஒடிசா
- விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.
- சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு கோர மண்டல் மற்றும் பெங்களூரு ரெயில்களின் பெட்டிகள் அருகில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதி நொறுங்கின. இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.
மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ கோபால்பூர் மற்றும் காந்தா படா பகுதிகளில் அமைந்து உள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரம் செல்ல செல்ல காயம் அடைந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று காலை ரெயில்கள் விபத்தில் 238 பயணிகள் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணியளவில் தென்கிழக்கு ரெயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், '3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது' என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 650 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தென்கிழக்கு ரெயில்வே செய்தி தொடர்பாளர் ஆதித்ய சவுத்ரி தெரிவித்தார்.
2-வது நாளாக இன்று காலை மீட்பு பணி தீவிரமாக நடந்தது. 11 மணிக்கு அது நிறைவு பெற்றது. அதன்பிறகு அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலையில் தான் கடைசி ரெயில் பெட்டி துண்டிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- மீட்பு பணியில் ஒடிசா அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என ஏற்கனவே மம்தா அறிவிப்பு
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்
மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று பார்வையிட்டார் மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
இந்த நூற்றாண்டின் இந்தியாவில் மிகப்பெரிய ரெயில் விபத்து இது. பலியானோர் எண்ணிக்கை உயரலாம். ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது.
நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம். வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்'' எனத் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இரண்டு ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
- கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது.
- விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது. அதோடு பயணிகள் எழுப்பிய கூக்குரலம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது.
இதனை கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஓடிவந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாலசோர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்க இடம் கொடுத்ததோடு, அவர்களுக்கு உணவும் வழங்கினர். குழந்தைகளுடன் வந்த பயணிகள் பாலசோர் பகுதி மக்களின் அன்பில் நெகிழ்ந்தனர்.
- 17 பெட்டிகள் தடம் புரண்டதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்று தகவல்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 17 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா அறிவித்துள்ளார்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும், ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்றும் ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் தடுப்பதே கவாச் திட்டம் ஆகும்.
- ரெயில் விபத்து நடந்தபோது 4 பேரில் ஒருவர் ரெயிலின் ஒருபுறம் உள்ள வாசல் வழியாக வெளியே குதித்தார்.
- ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர்.
பாலாசோர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வாலிபர்கள் ரகு, கிரண், வைசாக், விஜிஷ் ஆகியோர் பயணம் செய்தனர். அவர்கள் சென்னை வந்து கேரளா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக ரெயில் விபத்தில் சிக்கி கொண்டனர். இதில் 4 பேரும் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.
ரெயில் விபத்து நடந்தபோது 4 பேரில் ஒருவர் ரெயிலின் ஒருபுறம் உள்ள வாசல் வழியாக வெளியே குதித்தார். மற்ற 3 பேரும் மறுபுறம் உள்ள வாசல் வழியாக தப்பினர்.
பின்னர் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து விபத்துக்குள்ளான ரெயிலில் சிக்கிகொண்ட பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர். அவர்களுக்கு அந்த பகுதி மக்களும் உதவி செய்தனர். விபத்தில் சிக்கிய பயணிகள் படுகாயம் அடைந்து வலியால் அலறிய சத்தம் நெஞ்சை உலுக்குவதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
- கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோரில் கோர விபத்தில் சிக்கியது.
- விபத்து நடந்த பகுதிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசு சார்பில் குழுவை அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோரில் கோர விபத்தில் சிக்கியது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசு சார்பில் குழுவை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு இன்று பிற்பகலில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
- ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.
- விபத்து நடந்தபோது இரண்டு ரெயில்களும் அதிவேகத்தில் சென்றதால் பாதிப்பு அதிகம் என தகவல்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மாலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ரெயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.
ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.
சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளன.
அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் சென்றன.
மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
- இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஒடிஷா ரெயில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணி அனுபவ தாஸ் என்பவர் தான் எதிர்கொண்ட திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பான பதிவில் அவர், "ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று மாலை ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு, பக்கத்தில் லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் மீது மோதியது. பின்னர், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
ஹவுராவில் இருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்த நான், காயமின்றி தப்பியதற்கு கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது மிகப்பெரிய ரெயில் விபத்து.
பெங்களூரு-ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பொது பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உட்பட கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்கு நூறாக நொறுங்கின. எங்கேயும் கைகால்கள் இல்லாத சிதைந்த உடல்கள் சிதறிக்கிடந்தன. ரெயில் தண்டவாளங்கள் எங்கும் ரத்தக்களமாக காட்சியளித்தன. இது என்னால் மறக்க முடியாத ஒரு காட்சி. விபத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு கடவுள் உதவுவார். அவர்களுக்கு எனது இரங்கல்" என்று குறிப்பிட்டிருந்தார்.
As a passenger on the Coromandel Express from Howrah to Chennai, I am extremely thankful to have escaped unscathed. It probably is the biggest train accident related incident. Thread of how the incident unfolded 1/n
— Anubhav Das (@anubhav2das) June 2, 2023
- ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு.
- விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் கோரமான ரெயில் விபத்தாக இது மாறி இருக்கிறது.
மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மத்திய மந்திரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது..,

"ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில், ரயில்வே, மத்திய, மாநில பேரிடர் படைகள் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3 ரெயில்கள் விபத்து தொடர்பாக விசாரணை செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. ரெயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும்."
"ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், காயமுற்ற பயணிகளுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இறந்தவர்கள் விவரம் கண்டறியப்பட்டதும், அவர்களது குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.
- நாட்டையே உலுக்கிய ரெயில் விபத்தின் தற்போதைய நிலை குறித்து தலைமை செயலர் விளக்கம்.
- விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஒடிசா தலைமை செயலாளர் ஜெனா பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது..,
"ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. ரயில் விபத்தில் காயம் அடைந்த பயணிகளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது."
"விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்தில் இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.
- இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
- சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து பயங்கர ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன.
- ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






