என் மலர்
ஒடிசா
- பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர்.
- பிரகாஷ் ராம் என்ற சிறுவன் ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
பாலசோர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
பீகாரை சேர்ந்த பிரகாஷ் ராம் என்ற 17 வயது சிறுவன் இந்த ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, பாலசோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி 290 ஆக உயர்ந்தது.
- கோவிலில் உள்ள அறையில் அவர்களை பணியாளர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 18 வயதுக்கு பிறகுதான் கோவிலில் அவர்கள் சேவை செய்ய முடியும்.
பூரி ஜெகநாதர் கோவிலில் 1 வயதுக்குள் உள்ள 3 குழந்தைகள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அங்குள்ள பாரம்பரியத்தின்படி 10 மாத குழந்தையான பலதேப் தாஸ்மொகபத்ரா, 1 வயது குழந்தையான எகான்சு தாஸ்மொகபத்ரா மற்றும் அதே வயதுடைய மற்றொரு குழந்தை ஆகிய 3 குழந்தைகளும் பூரி ஜெகநாதர் கோவிலின் அதிகாரப்பூர்வ அர்ச்சகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ரத யாத்திரையின்போது முக்கிய சடங்குகளை செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும். கோவிலில் உள்ள அறையில் அவர்களை பணியாளர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக பூரி ஜெகநாதர் கோவிலின் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-
தைதாபதி சேவகரின் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு எந்த நாளிலும் அவர்கள் இறைவனின் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது பாரம்பரியமாக நடைமுறையில் உள்ளது. 21 நாட்கள் நிரம்பிய குழந்தைகள் பணியாளர்களாக சேர தகுதி உடையவர்கள் ஆவர்.
ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தைகள் பணியில் நியமிக்கப்பட்டாலும், 18 வயதுக்கு பிறகுதான் கோவிலில் அவர்கள் சேவை செய்ய முடியும். அதுவரை அவர்கள் ரத யாத்திரை சேவையில் மட்டுமே ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் 288 பேர் பலியாகினர்.
- ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந் தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் பலத்த காயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த பிஜய் பஸ்வான் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது.
- வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது.
- ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில் இருக்கும்.
புவனேஸ்வர் :
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஜெகநாதர் கோவில் அருகே டிரோன்களை பறக்க விடுவதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர். ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில் இருக்கும்.
கோவில், தேர்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இதுபோல், தடையை மீறி டிரோன் பறக்க விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். டிரோன்கள் மூலம் ஏற்படும் பொருட்சேதம் மற்றும் காயத்துக்கு அதை இயக்கியவர்களே பொறுப்பு என்றும் கூறினார்.
தேரோட்டத்தின்போது, போக்குவரத்தையும், மக்கள் கூட்டத்தையும் கண்காணிக்க பூரி மாவட்ட போலீசார் மட்டும் டிரோன்களை பயன்படுத்துவார்கள் என்று போலீசார் தொிவித்தனர்.
- ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள்.
- இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், பஹானகா பகுதியில் கடந்த 2-ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் உள்பட 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோரவிபத்து நடந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்கள், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
ரெயில் தண்டவாளத்தில் இறந்தவர்கள் உடல்கள் சிதறி கிடந்த காட்சியும், படுகாயம் அடைந்தவர்களின் அலறல் ஓசையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என ஊர் மக்கள் கூறிவந்தனர்.
ரெயில் விபத்து நடந்து 10 நாள் ஆகிவிட்ட நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு கிராம மக்கள் 10-ம் நாள் ஈமச்சடங்குகள் செய்தனர். இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ, அந்த சடங்குகள் அனைத்தையும் விபத்து நடந்த பகுதி கிராம மக்களே செய்தனர். இதுபற்றி அந்த பகுதியின் பஞ்சாயத்து சமிதி தலைவர் சரத்ராஜ் கூறியதாவது:-
ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை நாங்கள் தான் அகற்றினோம். இதனால் அவர்களின் ஆன்மா அமைதியடைய ஈமச்சடங்குகளை நாங்களே செய்ய முடிவு செய்தோம்.
அதன்படி விபத்து நடந்த பகுதியில் உள்ள கிராம குளத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தோம். அதன்படி எங்கள் கிராமத்தை சேர்ந்த 116 பேர் மொட்டை அடித்து கொண்டோம், அன்று மாலையில் இறந்தவர்கள் நினைவாக அன்னதானமும் வழங்கினோம்.
இதுபோல விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலமடைய சர்வசமய பிரார்த்தனையும் நடத்த உள்ளோம். இன்றும், நாளையும் இந்த கூட்டு பிரார்த்தனை நடக்க உள்ளது, என்றார்.
ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள். மேலும் இங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
- சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காது
புவனேஷ்வர்:
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை முடிந்து உண்மையை கண்டறியும் வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காதவாறு சமிக்ஞை கட்டுப்பாடு மூடப்பட்டு விட்டது.
பஹனாகா பஜார் ரெயில் நிலையம் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் ரிலே இண்டர்லாக்கிங் பேனல்களில் ஒளிரூட்டப்பட்ட சிக்னல் குறியீடுகள், பாயிண்டுகள், ட்ராக் சர்க்யூட்ஸ், க்ராங்க் ஹேண்டில்கள், எல். சி.கேட், சைடிங்க்ஸ் இத்யாதிகள் அவற்றின் புவியியல் நிலைக்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தை சீலிட்டு பதிவுப் புத்தகத்தையும் சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளதால் இங்கு ரெயில்கள் நிற்காது என தென்கிழக்கு ரெயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறியுள்ளார்.
சி.பி.ஐ. அமைப்பினர், ரிலே இண்டர்லாக்கிங் பேனல் அமைப்பிற்கு சீல் வைத்துவிட்டனர். இது ரெயில் சமிக்ஞை கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். இதை தடை செய்ததால் பயணிகள் ரெயிலோ, சரக்கு ரெயிலோ இங்கு நிற்காது எனவும் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் அனைத்து இருப்பு பாதைகளும் சரி செய்யப்பட்டிருந்தாலும், சில கோளாறுகள் சரிசெய்ய வேண்டி உள்ளதால் சுமார் 24 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாலையை கடக்க முயன்றவர் மீது மினி லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் கீழே கிடந்தார்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல்-கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூரில் சாலையை கடக்க முயன்றவர் மீது மினி லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் கீழே கிடந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கருப்பு நிறத்தில் சட்டை அறிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக வந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2-ந்தேதி நடந்த ஒடிசாவில் ரெயில் விபத்தில் 288 பேர் பலியாகினர்.
- ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.
புவனேசுவரம் :
ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அடையாளம் காண முடியாமல் சிதைந்து போன உடல்கள், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அங்கு விட்டுச்செல்லப்பட்டுள்ள யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயிலின் பெட்டியில் இருந்து பிண வாடை வீசுவதாகவும், இன்னும் அதனுள் உடல்கள் கிடப்பதாகவும் சம்பவம் நடந்த பாகாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய புகார் எழுந்து, ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.
அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறும்போது, "அந்த ரெயில் பெட்டியில் மனித உடல்கள் இல்லை. அழுகிய முட்டைகளைத்தான் பார்த்தோம். அந்த ரெயிலில் பார்சல் பெட்டியில் 3 டன் முட்டைகள் எடுத்து வரப்பட்டன. எல்லா முட்டைகளும் அழுகிப்போய் விட்டன.
அந்த நாற்றம்தான் வந்துள்ளது. அந்த முட்டைகளை 3 டிராக்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டோம்" என குறிப்பிட்டார்.
- ஒடிசாவின் பாலசோரில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
- விபத்தில் சிக்கியிருந்த உடல்கள் பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டன.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்புப் படையினர் அகற்றியதும், அந்த உடல்கள் விசாரணைக்காக பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளியின் 3 அறைகளில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பள்ளி அறை ஒன்றிலேயே பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் 2 நாட்கள் அங்கேயே இருந்தன. பிறகுதான் அவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பல உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அந்தப் பள்ளியில் சிறப்பு பரிகார பூஜை கள் நடந்து வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட உடல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அறை களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புனித குளங்களில் இருந்து நீர் எடுத்து வந்து தெளிக்கப்பட்டது.
இதற்கிடையே, வரும் 16-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் அவர்களது கெட்ட ஆவி சுற்றுமோ என்று பயப்படுகிறார்கள். இது மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. பெரும்பாலான பெற்றோர்கள் கூறுகையில், ரெயில் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் கொண்ட கட்டிடத்தையே இடித்து விடலாம் என தெரிவித்தனர். பள்ளி நிர்வாகக் குழுவும் அதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானம் பாலசோர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் உயரதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் வழங்கினர்.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கின. முதல் கட்டமாக மேற்கூரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- ஒடிசாவின் பாலசோர் எனும் இடத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்டன.
- இந்த கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் பாலசோர் எனும் இடத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்ட மிக கோரமான விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்னாயக் ரூ.5 லட்சமும், பிரதம மந்திரி ரூ.2 லட்சமும், ரெயில்வே அமைச்சகம் ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளனர். விபத்திற்கான காரணத்தை கண்டறிய சி.பி.ஐ. ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் விபத்தில் இறந்தவர்களின் பெயரில் போலியாக வரும் நிவாரண கோரிக்கைகளை கண்டறிந்து அவற்றை கோருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசா தலைமை செயலாளர் பி.கே.ஜெனா இந்திய ரெயில்வே, ஒடிசா போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இந்த நிவாரணத்தை பெறுவதற்காக தன் கணவர் என வேறு ஒருவரின் சடலத்தை அடையாளம் காட்டிய பெண், போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியாபந்தா எனும் இடத்தைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவரது கணவர் பிஜய் தத்தா.
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் கீதாஞ்சலி தத்தா, தன் கணவரான பிஜய் தத்தா உயிரிழந்ததாக கூறி, இறந்தவர்களின் சடலங்களில் கணவரது உடல் என ஒரு சடலத்தை அடையாளம் காட்டினார். அவர் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கடந்த 13 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த பெண்மணியின் கணவர் பிஜய் தத்தா, தன் மனைவியின் மீது போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் பொது பணத்தை அபகரிக்க முயற்சி செய்ததற்காகவும், உயிரோடு உள்ள தன்னை ரெயில் விபத்தில் மரணம் அடைந்ததாக கூறியதற்காகவும் கீதாஞ்சலி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார். காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து கீதாஞ்சலி தலைமறைவாகியுள்ளார்.
- சரக்கு ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
- முதல் மந்திரி நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ரெயில் என்ஜின் இல்லை.
இதற்கிடையே, ஜஜ்பூர் கியோஞ்சர் சாலை பகுதியருகே ரெயில்வே பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் சில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இடி இடிக்கிறது என்பதற்காக சரக்கு ரெயில் பெட்டியருகே சென்று தொழிலாளர்கள் ஒதுங்கினர்.
இந்நிலையில் மழையின்போது காற்று பலமாக வீசியதில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் அவர்கள் மீது உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக, ரெயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஜஜ்பூர் கியோஞ்சர் சாலையருகே பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, என்ஜின் இல்லாத சரக்கு ரெயிலின் பெட்டிகள் வேகமான காற்று வீசியதால் உருண்டன என தெரிவித்தது.
விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி நவீன் பட்நாயக், சரக்கு ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதில் 278 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் 288 பேரை பலி கொண்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தது. அந்த வகையில், உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணியின் போது ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள பள்ளி ஒன்றில் தான், உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளி கிழமை இரவு நடந்த கோர விபத்தில், மறுநாளான சனிக்கிழமை மாலை வரை மீட்பு பணிகள் நடைபெற்றன. பின் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் துவங்கின. இதனிடையே உயிரிழந்தோர் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வந்தன.
அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றும் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பாலசோரில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த உடல்களை மீட்பு படையினர் ஆய்வுக்காக எடுக்க சென்றனர். உடல்கள் வைக்கப்பட்ட அறையில், வேறு யாரும் இல்லை. இந்த நிலையில், உடலை எடுக்க வந்த மீட்பு படையினர் காலை திடீரென யாரோ பிடித்துள்ளனர்.
சடலங்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் அடைக்கப்பட்டிருந்துள்ளார். உயிர்பிழைத்த நபர் 35 வயதான ராபின் என்று விசாரணையில் தெரியவந்தது. சடலங்கள் மட்டுமே வைக்கப்பட்ட அறையில் மீட்பு படையினர் காலை உயிர்பிழைந்தவர் பிடித்ததால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மெல்ல விழித்து எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ந்த மீட்பு படையினர், மெல்ல உயிர்பிழைத்த நபர் அங்கிருந்து நகர முடியாமல் இருப்பதை பார்த்து அவருக்கு உதவினார். பிறகு மீட்பு படையினர் உயிர்பிழைத்த ராபினை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் சர்னேகாளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். விபத்தில் கால்களை இழந்த ராபின் உயிர்பிழைத்துள்ளார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






