என் மலர்
உள்ளூர் செய்திகள்

மினி லாரி மோதி வாலிபர் சாவு
- சாலையை கடக்க முயன்றவர் மீது மினி லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் கீழே கிடந்தார்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல்-கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூரில் சாலையை கடக்க முயன்றவர் மீது மினி லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் கீழே கிடந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கருப்பு நிறத்தில் சட்டை அறிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக வந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






