ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது

லேசான காயம் அடைந்த பயணிகள் பஸ்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.ரெயில் விபத்தில் காயங்களுடன் தப்பியவர்கள், மீண்டும் பஸ் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது
Published on

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்த பயணிகள் பஸ்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு கொல்கத்தாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென்று விபத்தில் சிக்கியது.

கொல்கத்தாவில் உள்ள மேதினிபூருக்கு சென்ற அந்த பஸ் மதியம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ரெயில் விபத்தில் காயங்களுடன் தப்பியவர்கள், மீண்டும் பஸ் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com