என் மலர்tooltip icon

    மணிப்பூர்

    • ஆயுதங்களுடன் வந்த கும்பல் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு
    • முதலில் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய வீரர்கள் பின்னர் எதிர்தாக்குதல்

    மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். ஆனால், ஆயுதம் வைத்திருந்த அந்த கும்பல் வீரர்களை நோக்கி சுடத்தொடங்கினர்.

    இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் கொள்ளையடிக்க வந்த கும்பலில் 27 வயது நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அதேவேளையில் அசாம் ரைபிள் வீரர் ஒருவரும் குண்டு காயத்திற்கு உள்ளானார்.

    அந்த கும்பல் மற்ற பகுதிகளில் இருந்து வீரர்களை உள்ளே விரமுடியாத அளவிற்கு சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர். இருந்தாலும் வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று ஆயுத கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

    அந்த கும்பல் அசாம் ரைபிள் வீரர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனத்தையும் தீ வைத்து எரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர் பெயர் ரொனால்டோ எனவும், மேலும் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மே மாதம் 3-ந்தேதியில் இருந்து இரு பிரிவனருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த வன்முறையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமலில் தஞ்சம் அடைந்த நிலையில் உள்ளனர்.

    • கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.
    • ராகுல் காந்தி ஜூன் 29, 30-ம் தேதிகளில் அங்கு பயணம் மேற்கொண்டார்.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டும்.

    வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    • மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட கலவரத்தில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • குகி பழங்குடியினரின் 2 கிளை அமைப்புகள் என்.எச். 2-ல் நடத்திய சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக கடந்த மாதம் 3-ம் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, குகி பழங்குடியினரின் 2 கிளை அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலை 2-ல் நடத்திய சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என நேற்று கூறியது. உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டுக்கொண்டதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இன்று காலை முதல் மாலை வரை தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் கொய்ஜுமந்தபி கிராமத்தில் புதிதாக வன்முறை பரவியது. இதில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியை பாதுகாப்பதற்காக கிராமவாசிகளால் நியமிக்கப்பட்டவர்களுக்கும், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

    • சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதை தடுக்க இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
    • கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3- தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஜூலை 5-ம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மணிப்பூரில் ஜூலை 8-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நீடித்து வரும் கலவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

    • முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள்.
    • ராஜினாமா முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவை அவர் திரும்பிப் பெற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    • ராஜினாமா தொடர்பாக முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலான வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இன்று காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் இம்பாலில் இருந்து மொய்ரங் சென்றடைந்தார்.
    • பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை சந்தித்து, அவர்களின் துயரம் குறித்து கேட்டறிந்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். அப்போது அவரை மணிப்பூர் போலீசார் நிவாரண முகாம் செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.

    தன்னை தடுத்து நிறுத்தியது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தடுத்தி நிறுத்தினோம் என போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மணிப்பூர் பிஷ்னுபுர் மாவட்டம் மொய்ரங் என்ற பகுதியில் உள்ள இரண்டு நிவாரண முகாமிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இன்று காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் இம்பாலில் இருந்து மொய்ரங் சென்றடைந்தார்.

    அங்கு பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை சந்தித்து, அவர்களின் துயரம் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    மணிப்பூரில் வன்முறையால் அன்புக்குரியவர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பது மற்றும் அவர்களின் அழுக்குரல் கேட்பது மனவேதனை அளிக்கிறது. இதயம் நொறுங்கிவிட்டது. நான் சந்தித்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி மற்றும் குழந்தைகளின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் உள்ளது.

    நமது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மணிப்பூருக்கு இப்போது மிக முக்கியமாக அமைதி தேவை . நம் முயற்சிகள் அனைத்தும் அந்த இலக்கை நோக்கி ஒன்றுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்
    • இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் முகாம் இருக்கும் இடத்திற்கு சென்றார்

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். அப்போது அவரை மணிப்பூர் போலீசார் நிவாரண முகாம் செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.

    தன்னை தடுத்து நிறுத்தியது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தடுத்தி நிறுத்தினோம் என போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார.

    இந்த நிலையில் மணிப்பூர் பிஷ்னுபுர் மாவட்டம் மொய்ரங் என்ற பகுதியில் உள்ள இரண்டு நிவாரண முகாமிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இன்று காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் இம்பாலில் இருந்து மொய்ரங் சென்றடைந்தார். அங்கு பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை சந்தித்து, அவர்களின் துயரம் குறித்து கேட்டறிந்தார்.

    இரண்டு முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தகவலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    ராகுல் காந்தியுடன் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் ஒக்ரம் இபோபி சிங், பொதுச் செயலாளர் (ஒருங்கிணைப்பு) கே.சி. வேனுகோபால், முன்னாள் எம்.பி. அஜய் குமார் மற்றும் கெய்ஷம் மேகசந்திரா சிங் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் சென்றிருந்தனர்.

    • மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • இம்பாலில் பா.ஜ.க. அலுவலகம் கூடியிருந்த கூட்டத்தினை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள பா.ஜ.க.வின் பிராந்திய அலுவலகம் அருகே இன்று மாலை ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க போலீசார் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் கலைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டம்.
    • விஷ்ணுபூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்த நிறுத்தப்பட்டது.

    மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.

    100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

    இதைதொடர்ந்து, இன்று மற்றும் நாளை மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று நேற்று கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

    அதன்படி, ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் ராகுல்காந்தியின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

    • ராகுல் காந்தி அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்கிறார்.
    • சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார்.

    மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.

    100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

    இதைதொடர்ந்து, இன்று மற்றும் நாளை மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று நேற்று கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூரில் உள்ள இம்பால் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்கிறார்.

    தொடர்ந்து, நாளை இம்பாலில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்கிறார். பின்னர், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார்.

    • வன்முறையை காரணமாக வைத்து அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • அரசு அலுவலர்கள் பணிக்கு வராத பட்சத்தில் சம்பளம் வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கடந்த ஒரு மாதமாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்

    வன்முறையை காரணமாக வைத்து பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கியுள்ளன.

    மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதல் மந்திரி பிரேன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பணிக்கு வராத பட்சத்தில் சம்பளம் வழங்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தவிர்த்து, வேலைக்கு வராதவர்களுக்கு 'நோ ஒர்க் நோ பே' விதி பின்பற்றப்பட்டு சம்பளம் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

    ×