என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மணிப்பூரில் பாதுகாப்புப்படை வீரர்கள் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்
- ஆயுத கடத்தல் முயற்சி தோல்வியால் வீடுகளுக்கு தீ வைப்பு
- பதுங்கு குழி உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் திடீரென கும்பலாக சென்று தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
நேற்று தவுபால் மாவட்டத்தில் ராணுவ முகாமில் புகுந்து ஆயுதங்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சி செய்தது. இதை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சண்டையில் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அசாம் ரைபிள் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
ஆயுத கடத்தல் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த கும்பல் இந்திய ராணுவ வீரர்கள் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். மேலும், இம்பால் மேற்கு மற்றும் சுரசந்த்புரில் உள்ள பதுங்கு குழிகளையும் அழித்துள்ளனர்.
இம்பால் மேற்கு மற்றும் கங்போக்பி மாவட்ட எல்லையில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.