என் மலர்tooltip icon

    மணிப்பூர்

    • தடையை மீறி ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார்.
    • அப்போது பேசிய அவர், இங்கு அரசியல் செய்ய விரும்பவில்லை என தெரிவித்தார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை குறித்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

    இதற்கிடையே, டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் மணிப்பூருக்கு சென்று வரும் 30-ம் தேதி வரை அங்கேயே தங்கி இருந்து பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்துப் பேசப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஸ்வாதி மாலிவாலுக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்திருந்தது.

    இந்நிலையில், தடையை மீறி ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங்கை நேரில் சந்திக்க உள்ளேன். வன்கொடுமைக்கு ஆளான பெண்களைச் சந்தித்து அவர்களுக்கு சட்ட உதவி மற்றும் நிவாரணம் கிடைக்கப் பெற்றதா என்பது குறித்து அறிய உள்ளேன்.

    இங்கு அரசியல் செய்ய விரும்பவில்லை. பிரதமர் மோடி மற்றும் மத்திய பெண்கள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோர் மணிப்பூர் வர வேண்டும் என தெரிவித்தார்.

    • சுதந்திர போராட்ட வீரரின் மனைவியை கொலை செய்த சம்பவம் மே மாதம் 28-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
    • பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன் பிறகு அங்கு வன்முறை நீடித்து வருகிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் 4-ந்தேதி மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே அதே தினத்தில் மேலும் 2 பழங்குடியின பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தின்போது சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.

    மணிப்பூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் செரோ என்ற கிராமம் உள்ளது. கலவரத்தில் இந்த கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்த கிராமத்தில், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் சுராசந்த்சிங் மனைவியான 80 வயதான இபெடோம்பி வசித்து வந்தார். 80 வயதான அவரை வீட்டுக்குள் வைத்து ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து எரித்ததகாவும், இந்த சம்பவம் மே மாதம் 28-ந்தேதி அதிகாலையில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவரது பேரன் பிரேம்காந்தா அதிர்ஷ்டவசமாக தப்பினார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குகி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    • மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரை போலீசார் மணிப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

    இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக்கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 160-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    மறுநாள் (அதாவது மே 4-ந் தேதி) குகி இனத்தவர்கள் வாழும் கிராமங்களுக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர். குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

    அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

    2 பெண்கள் மீதான பாலியல் கொடூரம் பற்றிய வீடியோ காட்சிகள் கடந்த புதன்கிழமை திடீரென வெளியானது. 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் 2 பெண்கள் ஆடைகள் இன்றி கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் மனதை நொறுக்குவதாக இருந்தது. நாடு முழுவதும் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் குகி சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு அவரது வீட்டு வேலியில் சொருகி வைக்கப்பட்டுள்ள கொடூர சம்பவமும் அங்கு நடைபெற்று உள்ளது.

    இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த டேவிட்தீக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் கடந்த 2-ந்தேதி நடைபெற்று இருப்பது தெரியவந்தது. அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஒரு கும்பல் டேவிட்தீக்கை கொலை செய்து தலையை துண்டித்து அவரது வீட்டு வாசலில் உள்ள தடுப்பு வேலியில் சொருகி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி அப்பகுதியில் பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.

    இதற்கிடையில் குகி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எங்கள் சமூகத்தை சேர்ந்த 114 பேர் இதுவரை வன்முறையால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

    அதோடு இம்பால் நகரில் கடந்த மே 4-ந்தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது லாங்கோ மற்றும் நகாரியன் மலைப்பகுதிகளில் உள்ள நர்சிங் மாணவிகள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இது தவிர மே 7-ந்தேதி அன்று 45 வயதான 2 குழந்தைகளின் தாய் ஒருவரையும் கும்பல் படுகொலை செய்தது உள்பட 4 சம்பவங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதோடு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதற்கிடைய மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரையும் போலீசார் மணிப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை 11 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்துள்ளது. இந்த விசாரணையின்போது யார்?யார்? இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரியவரும். அதன் பேரில் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் நுங்சி தோய் மேட்டேய் (வயது 19 ) இவரையும் சேர்த்து இதுவரை போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    மணிப்பூரில் சற்று கலவரம் ஓய்ந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் சூழ்நிலை உருவாகிய நிலையில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தபட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி மேலும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. மீண்டும் மணிப்பூரில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சம்பத்தில் கைதான முக்கிய குற்றவாளி குய்ராம் ஹெராதாஸ் உள்ளிட்ட 2 பேரின் வீடுகளை கிராம பெண்கள் சூறையாடினார்கள். அந்த வீடுகளை தீ வைத்தும் எரித்தனர். இதன் தொடர்ச்சியாக தலைநகர் இம்பாலில் உள்ள காரி பகுதியில் இன்று பெண்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுபற்றி அறிந்ததும் மணிப்பூர் ஆயுதபடை போலீசார், ராணுவ வீரர்கள், அதிவிரைவு படை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தீயில் எரிந்து கொண்டிருந்த டயர்களில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் மணிப்பூரின் முக்கிய நகரங்களில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, சகோதரனையும் அந்த கும்பல் கொலை செய்துள்ளது
    • வீடுகள் எரிக்கப்பட்டு கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

    மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் எம்.டி. டி.வி.க்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அதில் எனது கணவர் மற்றும் இளைய மகனையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டனர். தற்போது உதவியற்றவளாக நிற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    பேச்சு வராத நிலையில், ஆங்கில செய்தி சேனலுக்கு கண்ணீருடன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மகளை நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்துச் செல்வதற்கு முன், என்னுடைய கணவர் மற்றும் இளைய மகனை அந்த கும்பல் கொலை செய்தது. ஒட்டுமொத்தமாக என்னுடைய நம்பிக்கையாக இருந்த எனது இளைய மகனை இழந்து விட்டேன். அவன் 12 ஆம் வகுப்பை முடித்தவுடன், கஷ்டப்பட்டாவது அவனை மேற்கொண்டு நல்லபடியாக படிக்க வைக்க நினைத்தேன். தற்போது அவனுடைய தந்தையும் இல்லை. என்னுடைய மூத்த மகனுக்கு வேலை இல்லை. ஆகவே, என்னுடைய குடும்பம் பற்றி நினைக்கும்போது, எந்த நம்பிக்கையும் இல்லாததுபோன்று உணர்கிறேன். நான் நம்பிக்கையற்றவளாக, உதவியற்றவளாக உணர்கிறேன் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

    என்னுடைய கிராமத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த எண்ணம் எனது மனதில் தோன்றவில்லை. திரும்பி செல்ல விரும்பவில்லை. எங்களுடைய வீடு எரிக்கப்பட்டுள்ளது. வயல்வெளி அழிக்கப்பட்டுள்ளது. நான் எதற்காக திரும்பிச் செல்வேன். எனது கிராமம் சூறையாடப்பட்டு விட்டது. என்னுடைய மற்றும் என்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், அங்கு திரும்பி செல்ல முடியாது.

    அரசை நினைக்கும்போது கோபமாக வருகிறது. எனது கணவர் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவளுக்கு எதிராக அவகரமான செயலை செய்துள்ளனர். நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். மணிப்பூர் அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியாவின் தாய், தந்தையர்களே, நாங்கள் அனைத்தையும் இழந்து, ஒரு சமூகமாக என்ன செய்ய போகிறோம் என்று சிந்திக்க முடியாமல் இருக்கிறோம்.

    கடவுளின் ஆசியால், நான் உடல் ரீதியாக நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் இரவும் பகலும் அதைப்பற்றி சிந்திக்கிறேன். சமீப காலமாக நான் மிகவும் பலவீனமாக இருந்ததால் மருத்துவரை அணுகினேன்.

    இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    • மைதேயி இன மக்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
    • கார்கில் போர் களத்தில் நின்றதை விட சொந்த மண்ணில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை இப்போதுதான் நான் உணர்ந்தேன்.

    மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் கொண்ட கும்பல் குகி இனத்தவர்களின் பைனோம் கிராமத்துக்குள் புகுந்து 64 நாட்களுக்கு முன்பு நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அந்த கும்பலில் இருந்தவர்கள் ஈவு, இரக்கம் இல்லாமல் 3 பெண்களின் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள்.

    அதில் ஒரு பெண் கை குழந்தையுடன் இருந்ததால் அவரை மட்டும் விட்டு விட்டனர். மற்ற 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலம் நடத்தினார்கள். அந்த 2 பெண்களில் 21 வயது இளம்பெண்ணும் ஒருவர் ஆவார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரரை ஈவு, இரக்கமின்றி அடித்து கொன்றனர்.

    வெறிப்பிடித்த அந்த கும்பலிடம் சிக்கிய 2 பெண்கள் தான் வீடியோ காட்சிகளில் இடம்பெற்று இருந்தனர். கைக்குழந்தையுடன் சிக்கிய 3-வது பெண்ணை ஆடைகளை கலைந்துவிட்டு விட்டுவிட்டதால் அவர் வீடியோ காட்சியில் இடம் பெறவில்லை.

    அந்த 3-வது பெண்ணின் கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். கார்கில் போரில் முன்களத்தில் நின்று போராடிய வீரர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சூரச்சந்துபூர் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் அவர் மே 4-ந் தேதி நடந்த காட்டுமிராண்டிதனமான வன்முறை பற்றி கூறியதாவது:-

    மைதேயி இன மக்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பயங்கரமான ஆயுதங்களுடன் வந்து அவர்கள் தாக்கினார்கள். எங்களது வீடு, உடமைகள், கவுரவம் அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டன.

    வீடுகளை தீ வைத்து எரித்தனர். கால்நடைகள் அனைத்தையும் கொன்று குவித்தனர். அவர்களது வெறியாட்டத்தால் 9 கிராமங்களில் இருந்த மக்கள் அனைத்தையும் இழந்து அகதிகள் போல மாறிவிட்டனர்.

    பயத்தில் அருகில் உள்ள காடுகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். அதன்பிறகும் மைதேயி இன மக்கள் விடவில்லை. துரத்தி துரத்தி வேட்டையாடினார்கள். துப்பாக்கி முனையில் மிரட்டிதான் பெண்களின் ஆடைகளை கலைந்தனர்.

    சில பெண்களை பிடித்து சென்று வயல்வெளியில் நிற்க வைத்து நடனமாட சொன்னார்கள். பெண்களை அடித்து கை தட்டி சிரித்தனர். எதற்காக இவ்வளவு கொடூர மனதுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியாமல் இருந்தது.

    கார்கில் போர் களத்தில் நின்றதை விட சொந்த மண்ணில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை இப்போதுதான் நான் உணர்ந்தேன். வன்முறை நடந்தபோது எப்படியோ என் மனைவி என்னிடம் இருந்து தனியாக பிரிய நேரிட்டது. அதனால் தான் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டது.

    அவள் இன்னமும் தனக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவில்லை. மிக மிக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்.

    பட்டப்பகலில் கும்பலாக வந்து நடத்திய வெறியாட்டம் இன்னமும் மனதுக்குள் வந்துகொண்டே இருக்கிறது. மனிதாபிமானமே இல்லாமல் பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆறாத வடுவாக மாறிவிட்டது.

    தற்போது எங்களது 9 கிராமங்களிலும் யாரும் இல்லை. பல்வேறு திசைகளில் சிதறிவிட்டனர். நாங்களும் உடைமைகளை இழந்துதான் பல மணி நேரம் நடந்து முகாமுக்கு வந்து சேர்ந்துள்ளோம்.

    எனது வீடு முழுமையாக தீ வைத்து எரிக்கப்பட்டு விட்டது. அந்த வீடு எனது மனைவி கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணத்தில் இருந்து கட்டியதாகும். இப்போது நிவாரண முகாம் மட்டுமே எங்களுக்கு தஞ்சம் தந்துள்ளது.

    இவ்வாறு அந்த கார்கில் வீரர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

    • இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிப்பதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது.
    • பிடிபட்டவர்கள்தான் கும்பலாக சென்று குகி இனத்தவர்கள் கிராமத்தை சூறையாடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

    இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக்கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    மறுநாள் (அதாவது மே 4-ந் தேதி) குகி இனத்தவர்கள் வாழும் ஒரு கிராமத்துக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர். குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

    அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

    2 பெண்கள் மீதான பாலியல் கொடூரம் பற்றிய வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் திடீரென வெளியானது. 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் 2 பெண்கள் ஆடைகள் இன்றி கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் மனதை நொறுக்குவதாக இருந்தது. நாடு முழுவதும் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    சுப்ரீம் கோர்ட்டு இதுதொடர்பாக தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாடும் பணியில் மணிப்பூர் போலீசார் ஈடுபட்டனர். வீடியோ காட்சியை வைத்து விசாரணை நடந்தது.

    பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அழைத்து செல்லும் முக்கிய நபரான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங் கைது செய்யப்பட்டார். நேற்று மதியம் மேலும் 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க பரிந்துரைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பைரேன்சிங் இதற்கான பரிந்துரையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மணிப்பூரில் மைதேயி இனத்தவர்களின் பாலியல் கொடூரத்தை கண்டித்து குகி இனத்தவர்கள் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் குகி இன மக்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவும் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடந்தது.

    சில இடங்களில் விடிய விடிய குகி இன மக்கள் போராட்டம் செய்தனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிப்பதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. நேற்று இரவு அவனது வீட்டை சூழ்ந்த மர்ம மனிதர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

    வீடியோவில் இடம் பெற்றுள்ள கும்பலில் உள்ளவர்களில் பலர் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை வரை 657 பேரை பிடித்து விசாரித்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பிடிபட்டவர்கள்தான் கும்பலாக சென்று குகி இனத்தவர்கள் கிராமத்தை சூறையாடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது வீடுகள் மற்றும் உடமைகள் மர்ம மனிதர்களால் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இது மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கும் இடையேயான மனக்கசப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

    • இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு சமூகத்தில் இடமில்லை.

    மணிப்பூரில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் 2 மாதத்துக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹேராதாஸ் (32), உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் மேலும் கூறியதாவது:-

    நேற்று வெளிவந்த துன்பகரமான வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, ஆழ்ந்த அவமரியாதை மற்றும் மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆளான இரண்டு பெண்களுக்காக என் இதயம் துடிக்கிறது.

    வீடியோ வெளியான உடனேயே, இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து அறிந்து, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு சமூகத்தில் இடமில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக சாத்தியமான மரண தண்டனை உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இணையதள முடக்கம் காரணமாக மக்களில் பெரும் பகுதியினர் வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
    • குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

    மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் மணிப்பூரில் பரவிய வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வீடியோவின் தாக்கம் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இன்று தீவிரமாக வெடித்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். வீதி வீதியாக மக்கள் அணிவகுத்துச் சென்று இந்த சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர். 

    • மணிப்பூரில் வன்முறை வெடித்த மே3-ந்தேதிக்கு அடுத்த நாள் இது நடைபெற்றுள்ளது
    • அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்

    மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து கற்பழித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது.

    மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஸ்மிரிதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ''குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது'' எனத் தெரிவித்துள்ளார்.

    ''மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது'' என தனது ஆதங்கத்தை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.

    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
    • நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழம் வரை உணரப்பட்டுள்ளது.

    மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டம் அருகே 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் அருகே இன்று நள்ளிரவு சுமார் 12:14 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழம் வரை இருந்தது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை.

    முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை, அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நாளில், லடாக்கில் 4.7 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    கார்கிலுக்கு வடக்கே 401 கிமீ தொலைவில் 150 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆயுத கடத்தல் முயற்சி தோல்வியால் வீடுகளுக்கு தீ வைப்பு
    • பதுங்கு குழி உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் திடீரென கும்பலாக சென்று தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

    நேற்று தவுபால் மாவட்டத்தில் ராணுவ முகாமில் புகுந்து ஆயுதங்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சி செய்தது. இதை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சண்டையில் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அசாம் ரைபிள் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    ஆயுத கடத்தல் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த கும்பல் இந்திய ராணுவ வீரர்கள் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். மேலும், இம்பால் மேற்கு மற்றும் சுரசந்த்புரில் உள்ள பதுங்கு குழிகளையும் அழித்துள்ளனர்.

    இம்பால் மேற்கு மற்றும் கங்போக்பி மாவட்ட எல்லையில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    • ராகுல் காந்தி ஜூன் 29, 30-ம் தேதிகளில் மணிப்பூரில் பயணம் மேற்கொண்டார்.
    • கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள்.

    மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 2 மாத காலத்துக்கு பிறகு மணிப்பூரில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவான அளவே இருந்தது.

    மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×