என் மலர்
மணிப்பூர்
- கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல்
- குகி-சோ பரிவினர் அதிக அளவில் வசித்து வரும் கிராமம்
மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குசி-சோ பிரிவினரை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இம்பால், கங்போப்கி மாவட்டங்களின் எல்லையான ஐரேங்- கரன் பகுதிகளில் வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற கிராமம், பழங்குடியினர் அதிக அளவில் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் வன்முறையால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- ஜூலை 21ம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.1 மணியளவில் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ, பொருட் சேதமோ இதுவரை ஏற்படவில்லை.
இதேதேபால், கடந்த ஜூலை 21ம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளிக்கிழமை பாதுகாப்புப்படை வீரர்கள்- கும்பல் இடையே சண்டை
- 3 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயம் அடைந்தனர்
மணிப்பூரில் முற்றிலும் அமைதி திரும்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஆங்காங்கே சில இடங்களில் வன்முறை நடைபெற்ற வண்ணம் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை மத்திய பாதுகாப்புப்படைக்கும் ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று மணிப்பூர் மாநில மந்திரி சபை கூட்டம், அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது வெள்ளிக்கிழமை சம்பவத்தில் மத்திய பாதுகாப்புப்படையின் தேவையற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விசயத்தை மத்திய அரசிடம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பதற்றம் அதிகமாக இடங்களில் சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தின்படி, ஆயுதப்படைக்கான அதிகாரத்தை விரிவு படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதியில் வீரர்களுக்கான அதிகாரம் மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வன்முறையின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு நான்கு மாதத்திற்குள் நிரந்தரமான வீடுகள் அமைத்துக் கொடுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 75 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரேன் சிங் தலைமையிலான பா.ஜனதா அரசு, முதன்முறையாக பாதுகாப்புப்படை மீது விமர்சனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- ஜி20 மாநாட்டுக்கு பின்னர் இன்னும் கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மணிப்பூர் மாநிலத்தில் 2 பிரிவினரிடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதை தொடர்ந்து பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சோ இகாய் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே வன்முறையால் இடம்பெயர்ந்த இரு பிரிவை சேர்ந்த 50 ஆயிரம் பேரை மீண்டும் குடியேற வைக்க அந்த மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 ஆயிரம் எல்லை பாதுகாப்பு மற்றும் துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஜி20 மாநாட்டுக்கு பின்னர் இன்னும் கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- ராணுவ தடுப்புகளை அகற்ற ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் திரண்டனர்
- ஏற்கனவே ராணுவ முகாமில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அமைதி நிலவி வருவதாகவும், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை டெங்நவுபால் மாவட்டத்தில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், ஆயுதமேந்திய கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டை இன்னும் நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சண்டையில் காயம் குறித்த எந்த தகவலும் வெளியாகவிலலை. சூழ்நிலையை கவனித்து வருவதாக பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பௌகாக்சாயோவில் ராணுவ தடுப்புகளை அகற்ற ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த நிலையில் இன்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் வன்முறை வெடித்தபோது, ராணுவ முகாமில் உள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றுதான் ஐந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
- நேற்று முன்தினம் ஊரடங்கு பிறப்பித்த நிலையில், 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
- பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரின் படிப்படியாக வன்முறை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த 5 மாவட்டங்களிலும் இன்று மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காக்சிங், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் சாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. தவுபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு தளர்வு அதிகாரியிடம் உரிய ஒப்புதல் பெறாமல், கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி போன்றவற்றத்தில் ஈடுபடக்கூடாது என்று அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
- ராணுவ தடுப்பு இருப்பதால் சொந்த வீட்டிற்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் குற்றச்சாட்டு
- ராணுவ தடுப்புகளை முற்றுகையிட அழைப்பு விடுத்த நிலையில், முழு ஊரடங்கு அமல்
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி பாராளுமன்ற மக்களவையிலும், சுதந்திர தின விழா உரையின்போதும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அங்கு அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். அம்மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு (COCOMI), பெண்கள் பிரிவு ஆகியவை சார்பில் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சாயோ இகாயில் உள்ள ராணுவ தடுப்புகளை அகற்ற வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில்தான் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காலை ஐந்து மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு இருந்து வந்தது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படடுள்ளது.
இன்று முற்றுகையிடும் திட்டத்தை COCOMI திரும்ப பெற வேண்டும் என அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
ஆனால், COCOMI மீடியா ஒருங்கிணைப்பாளர், ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
ராணுவ தடுப்பால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். மே 3-ந்தேதி ஏற்பட்ட வன்முறையின்போது, பலர் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மணிப்பூரில் சகஜமான நிலைதான் இருந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், வன்முறை தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில் (X) "4 மாதங்களுக்கு பிறகும் வன்முறை தொடரத்தான் செய்கிறது. ஆனால், டபுள் என்ஜின் எனக் கூறும் மோடி அரசு, மணிப்பூரில் சூழ்நிலை சகஜமான நிலையில்தான் இருக்கிறது என்று கூறுகிறது. ஜி20 மாநாடு டெல்லியில் நடந்து கொண்டிருக்கும்போது, மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஊரடங்கில் இருக்கப் போகிறது" என்றார்.
- இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது.
- மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இம்பால்:
மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன்பின்னர் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மைதேயி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பல நாட்கள் அமைதிக்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடந்தது. இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். மணிப்பூர் காவல்துறை இதை தெரிவித்து உள்ளது. 7 பேருக்கு குண்டு காயம் அல்லது பிற காயங்கள் ஏற்பட்டுள்ளது.
கொய்ரென்டாக் பகுதியுள்ள கிராமத்தில் 30 வயதான ஜங்மின் லுன் காங்டே என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். அவர் கிராம பாதுகாப்பு தன்னார்வலர் ஆவார். மற்றொரு சம்பவத்தில் தினுங்கே பகுதியை சேர்ந்த 40 வயதான விவசாயி சலாம் ஜோதின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்.
கொய்ரெண்டாக் மற்றும் தினுங்கே பகுதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார், அசாம் ரைபிள்ஸ் படையினர், ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளி காரணமாக மணிப்பூர் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது.
இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியானார்கள். ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே பரபரப்பான சூழ்நிலையில் மணிப்பூர் சட்டசபையின் ஒருநாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சபை கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத் தொடரை 5 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கு ஒருநாள் போதாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளி காரணமாக மணிப்பூர் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
மணிப்பூர் சட்டசபையில் குகி இனத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தனர்.
- ஒருநாள் சட்டசபை கூட்டத்திற்கு குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு எதிர்ப்பு
- நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது
மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மணிப்பூர் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஒருநாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு, கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. இந்த சமூகத்தினரை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் இம்பால் பகுதிக்கு செல்வது பாதுகாப்பனது அல்ல எனத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றம் இம்பாலில்தான் உள்ளது. நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
சட்டசபை கூட்டத்தை நடத்த தடைவிதிக்க குகி-ஜோமி சமூகத்தினர் கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
பிப்ரவரி- மார்ச் மாதத்தில் பட்ஜெட்டிற்கு செசனுக்காக சட்டமன்றம் கூடியது. அதன்பின் தற்போது ஒருநாள் கூட இருக்கிறது.
- பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- துணைநிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த வாரம் 3 குகி இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் மீண்டும் அம்மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் குகி இன அமைப்புகள் இன்று (திங்கட்கிழமை) சாலை முடக்கம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
இதன்படி இன்று திமாபூர்-இம்பால் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குகி இன அமைப்பினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு துணைநிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
- மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.
- மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி, பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள். மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, 20 வழக்குகளை சி.பி.ஐ.யிடம் மணிப்பூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அந்த வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. தொடங்கி உள்ளது.
அவற்றில், ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கும் அடங்கும். மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.
டான்சிங் ஹங்சிங் என்ற 7 வயது சிறுவனின் தாயார் மீனா ஹங்சிங், மெய்தி இனத்தை சேர்ந்தவர். அவனுடைய தந்தை ஜோசுவா ஹங்சிங், குகி பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஒரு நிவாரண முகாமில் டான்சிங் ஹங்சிங் தங்கி இருந்தபோது, மெய்தி இன போராட்டக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், துப்பாக்கி குண்டு ஒரு இரும்பு தூணில் பட்டு தெறித்து, டான்சிங்கை காயப்படுத்தியது. அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண் லிடியாவும் மெய்தி இன கிறிஸ்தவர்கள் என்பதால், அவர்கள் சிறுவனுடன் ஆம்புலன்சில் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது. டிரைவரையும், நர்சையும் விரட்டியடித்தது.
சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண்ணும் தங்களை விட்டுவிடுமாறு எவ்வளவோ கெஞ்சியும் போராட்ட கும்பல் ேகட்கவில்லை. ஆம்புலன்சுக்கு தீவைத்தனர். இதில் சிறுவனுடன் 3 பேரும் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.
போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைக்க முயன்றபோதிலும், பலன் கிட்டவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக லம்பெல் போலீஸ் நிலையத்தில் போலீசார் பதிவு செய்த வழக்கும், கங்போக்பி போலீஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த மே 3-ந் தேதி, குகி பழங்குடியின தலைவர்களால், தான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு மெய்தி இன பெண் அளித்த புகாரும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் அடங்கும்.






