search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் மூன்று பழங்குடியினர் சுட்டுக்கொலை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு அட்டூழியம்
    X

    மணிப்பூரில் மூன்று பழங்குடியினர் சுட்டுக்கொலை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு அட்டூழியம்

    • கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல்
    • குகி-சோ பரிவினர் அதிக அளவில் வசித்து வரும் கிராமம்

    மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குசி-சோ பிரிவினரை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

    இம்பால், கங்போப்கி மாவட்டங்களின் எல்லையான ஐரேங்- கரன் பகுதிகளில் வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற கிராமம், பழங்குடியினர் அதிக அளவில் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

    மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் வன்முறையால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    Next Story
    ×