என் மலர்
பீகார்
- நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
- பிரதமர் மோடிக்கு எதிராக தனது கோஷங்களையும் எழுப்பினர்.
பாட்னா:
மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இதில் வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டுகால பணிக்காலம் முடிவடைந்ததும் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளாக நடைபெறும் இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
போராடும் வீரர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையங்களுக்குள் நுழைந்த அவர்கள் கற்களை எடுத்து ரெயில்கள் மீது எதிர்ந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியை காட்டி போராட்டக்காரர்களை விரட்டினர்.
நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக தனது கோஷங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. காவல்துறையினர் பல்வேறு யுக்திகள் மூலம் போராட்டங்களை ஒடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
- இந்த திருமணங்களை ‘ஜாப்ரிய விவாஹா’ என கூறுகின்றனர்.
- பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவராக பணிபுரியும் சத்யம் குமார் ஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரை மிரட்டி ஒரு பெண்ணின் கழுத்தில் சிலர் கட்டயா தாலி கட்ட வைத்துள்ளனர்.
இதுகுறித்து மணமகனின் தந்தை போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். இதனை 'ஜாப்ரிய விவாஹா' என கூறுகின்றனர்.
பொதுவாக அதிக ஊதியம், சொத்து, சமூக அந்தஸ்து வைத்திருக்கும் மணமாகாத ஆண்கள், மணமகளின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த வீடியோக்களும் சமூக வலைதங்களில் பிரபலமாக பகிரப்படு வருகின்றன.
- இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.
- வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும்.
பாட்னா:
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்ய இது சரியான நேரம் அல்ல. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது எதிர்க்கட்சியோ இதுவரை நாட்டின் உயர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. அப்படி இருக்கும்போது முன்கூட்டியே அதுகுறித்து முடிவு செய்ய முடியாது.
2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். 2017-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்தபோது அதன் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். இதுவரை எங்கள் விருப்பப்படி ஆதரவு அளித்தோம். இந்த முறை இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.
வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும். தற்போதுவரை அதுபோன்ற ஆலோசனையும் நடத்தப்படவில்லை. ஊடகங்களில் நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக வந்த தகவல்களிலும் உண்மையில்லை. எனக்கு போட்டியிடும் விருப்பம் சிறிதும் இல்லை" என்று அவர் கூறினார்.
- கார் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
- சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்தது.
பாட்னா:
பீகாரின் பூர்னியா மாவட்டம் தாராபாடி பகுதியில் திருமண விழாவில் கலந்துகொண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நானியா கிராமத்திற்கு 10 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் பூர்னியா- கிஷன்கஞ்ச் மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். மேலும், உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். காயமடைந்த 2 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பீகாரில் கார் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார். அத்துடன், ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டார்.
- காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதி
- உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் விரைவில் சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
பீகாரின் பூர்னியா மாவட்டம் தாராபாடி பகுதியில் திருமண விழாவில் கலந்துக் கொண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நானியா கிராமத்திற்கு 10 பேர் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது இன்று காலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் பூர்னியா- கிஷன்கஞ்ச் மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர்.
மேலும், உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் விரைவில் சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் வட்ட அதிகாரி ராஜ்சேகர் தெரிவித்தார்.
- மகனின் இறந்த உடலை வாங்க பெற்றோர் பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
- காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இறந்தவரின் உடல், 72 மணி நேரத்திற்கு தரப்படாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் தாக்கூர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனார். பின் அவர் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் அப்பகுதியில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் பெற்றோருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து மகேஷ் தாக்கூர் இறந்த மகனின் உடலை வாங்க தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. வறுமையில் வாடும் பெற்றோர், ரூ.50,000 லஞ்சம் கொடுக்க பணமில்லாமல் தெரு தெருவாக பிச்சை எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் யாரும் லஞ்சம் கேட்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி வினய் குமார் ராய் கூறுகையில்,
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது. இறந்த நபரின் உடல் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 72 மணி நேரம் வரை இறந்தவரின் உடல் தரப்படாது. பெற்றோர் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் ரூ.50,000 லஞ்சம் கொடுத்தாலும் உடலை எடுத்து செல்ல முடியாது என கூறியுள்ளனர். இந்த வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இதனால் மருத்துவமனை மீது தவறு இல்லை.
இவ்வாறு மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
- மகேஷ் தாகூரும், அவரது மனைவியும் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
- லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.
இந்த நிலையில், மகேஷ் தாகூரின் மகன் இறந்து விட்டதாகவும், அவரது உடல் சமஸ்திபூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் தாகூர் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். தனது மகன் உடலை தரும்படி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கேட்டார்.
ஆனால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உடலை தருவோம் என்று ஊழியர்கள் மகேஷ் தாகூரிடம் கூறினார். ஏழையான அவரிடம் பணம் இல்லை. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கேட்ட லஞ்ச பணத்துக்காக ஊர் மக்களிடம் பிச்சை எடுக்க மகேஷ் தாகூர் முடிவு செய்தார்.
அவர் தனது மனைவியுடன் சமஸ்திபூர் நகர் முழுவதும் வீடு வீடாக சென்று தனது நிலைமையை கூறி பிச்சை கேட்டார். அவருக்கு பலர் பணம் கொடுத்தனர். மகேஷ் தாகூரும், அவரது மனைவியும் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக மகேஷ் தாகூர் கூறும்போது, எனது மகன் உடலை கொடுக்க ஆஸ்பத்திரி ஊழியர்கள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. நாங்கள் மிகவும் ஏழைகள். எங்களால் எப்படி ரூ.50 ஆயிரத்தை கொடுக்க முடியுமா? இதனால் பிச்சை எடுத்தோம் என்றார்.
அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் அடிக்கடி கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து பணம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறும்போது, "லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
.






