என் மலர்
ஆந்திர பிரதேசம்
- பிரம்மோற்சவ விழா 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
- திருமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவல்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி சாமி வீதி உலா கோவிலுக்கு உள்ளேயே நடந்தது.
பிரம்மோற்சவ விழாவில் சாமி வீதி உலாவை காண முடியாமல் பக்தர்கள் விரக்தி அடைந்த நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். பிரம்மோற்சவ விழா நடைபெறும் நாட்களில் காலை இரவு என இரண்டு வேளையும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தை யொட்டி ஏழுமலையான் கோவில் மற்றும் வெளிப்பிரகாரம் அங்குள்ள பூங்காக்கள் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் சாமி வீதி உலா நடைபெறும் தங்கத்தேர், மரத்தேர், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் தூய்மைப்படுத்தப் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட விதவிதமான மலர்கள், பழங்கள், காய்கறிகள் கொண்டு கோவில் அலங்காரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவிற்கு 4 நாட்களே உள்ளதால் திருமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பக்தர்களை கட்டுப்படுத்தி தரிசனத்திற்கு அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 74, 817 பேர் தரிசனம் செய்தனர். 33,350 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.97 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- வாலிபர் 2 பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்தார்.
- வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் தனது செல்போனில் டிக் டாக் செய்து வந்தார். இவரது டிக் டாக்கை கண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாலிபருடன் நட்பாக பேசி பழகினார்.
இருவரும் தினந்தோறும் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையெடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதேபோல் கடப்பாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் வாலிபரின் டிக் டாக்கில் மயங்கி அவரை காதலிக்க தொடங்கினார்.
வாலிபரும் 2 பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் கடப்பாவை சேர்ந்த இளம்பெண்ணை வாலிபர் திருமணம் செய்தார்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம் வாலிபர் சிறிது நாட்கள் பேசாததால் சந்தேகம் அடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வாலிபரின் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதால் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாது நான் உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன் அதனால் என்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாலிபரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஏற்கனவே திருமணம் செய்த முதல் மனைவியிடம் நடந்தவற்றை வாலிபர் கூறியிருந்ததால் 2-வது திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து விசாகப்பட்டினம் இளம்பெண்ணை வாலிபர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். டிக் டாக் செயலி மூலம் 2 பெண்களை மயக்கி திருமணம் செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆர்ஜித சேவை, கல்யாணம் உற்சவம் ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
- அக்டோபர் மாதத்திற்கான அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் நவம்பர் மாதத்திற்கான 6 லட்சம் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. இதேபோல் ஆர்ஜித சேவை, கல்யாணம் உற்சவம், சகஸ்ஹர தீப அலங்கார சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
அக்டோபர் மாதத்திற்கான அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுவதால் 1 முதல் 5-ந் தேதி வரை அங்க பிரதட்சன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 73,186 பேர் தரிசனம் செய்தனர். 27,365 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- திருமலையில் அண்மையில் நவீனப்படுத்தப்பட்ட ஸ்ரீபத்மாவதி ஓய்வறைக்கு ரூ.87 லட்சம் வழங்கினர்.
- ஏழுமலையானிடம் மிகுந்த பக்தி கொண்ட இவர்கள் அன்னதான அறக்கட்டளைக்கு இதுபோன்று பலமுறை நன்கொடை வழங்கி உள்ளனர்.
திருப்பதி:
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுபீனா பானு-அப்துல் கனி தம்பதி. இவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.02 கோடி நன்கொடையாக வழங்கினர்.
விஐபி பிரேக் தரிசனம் முடிந்த பிறகு, அவர்கள் குடும்பத்துடன் ரங்கநாயகர் மண்டபத்தில் இதற்கான வரைவோலையை செயல் அதிகாரி தர்மாரெட்டியிடம் வழங்கினர்.
இதில் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சமும் திருமலையில் அண்மையில் நவீனப்படுத்தப்பட்ட ஸ்ரீபத்மாவதி ஓய்வறைக்கு ரூ.87 லட்சத்தில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்களுக்காக வழங்கினர்.
ஏழுமலையானிடம் மிகுந்த பக்தி கொண்ட இவர்கள் அன்னதான அறக்கட்டளைக்கு இதுபோன்று பலமுறை நன்கொடை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- வாலிபர் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.
- வாலிபரை நம்பிய இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலமுறை அவரது வங்கி கணக்கிற்கு ரூ.1.60 கோடி வரை அனுப்பி வைத்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண தகவல் மையத்தில் தனது சுய விவரங்களை பதிவிட்டு தனக்கு ஏற்ற ஜோடி வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இளம்பெண்ணின் விவரங்களை கண்ட வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், நான் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்வதாக இளம்பெண்ணிடம் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலமுறை அவரது வங்கி கணக்கிற்கு ரூ.1.60 கோடி வரை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து கடந்த வாரம் இளம்பெண் வாலிபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் எண் வேலை செய்யவில்லை.
இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டது அறிந்த இளம்பெண் இதுகுறித்து விஜயவாடா சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வாலிபர் போலியான சுய விவரங்களை திருமண தகவல் மையம் பதிவிட்டு தனக்கு ஏற்ற துணையை தேடும் இளம் பெண்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.
மோசடி வாலிபர் இதுவரை எத்தனை பெண்களிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலகம் முழுவதும் தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைகோள்களும் ஏவப்படுகின்றன.
- 36 செயற்கைகோள்களும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.
சென்னை:
இங்கிலாந்தை சேர்ந்த ஒன் வெப் என்ற நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட உள்ளன.
வணிக நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் இந்த செயற்கைகோள்களை அதிக எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி.-எம்.கே3 ராக்கெட் மூலம் செலுத்துகிறது. இதற்காக ஒன் வெப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைகோள்களும் ஏவப்படுகின்றன.
இதற்கிடையே 36 செயற்கைகோள்களும் நேற்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்துக்கு வந்து சேர்ந்தன. வழக்கமான பரிசோதனைகளை முடித்த பிறகு அவற்றை ஏவும் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
36 செயற்கைகோள்களை செலுத்துவது தங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக இருக்கும் என்று நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் கூறியுள்ளது.
- ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
- அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான எலக்ட்ரானிக் குலுக்கல் முறை நாளை நடக்கிறது.
அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஆனால், பிரம்மோற்சவம் நடைபெறும் தேதிகளில், அதாவது அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
- 12 மணி அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் "ஆலய சுத்தி" இன்று நடந்தது. ஆண்டுக்கு 4 முறை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது.
யுகாதி பண்டிகை ஆனிவார ஆஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவம் வைகுண்ட ஏகாதசி விழாக்கள் நடக்கும் முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று கோவிலை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடந்தது.
ஆனந்த நிலையம் முதல், பங்காரு வாகிலி வரை கோவிலில் உள்ள துணைச் சன்னதிகள், கோவில் வளாகம், மண்டபம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பித்தளை, தாமிர பாத்திரங்கள், ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
தூய்மைப்பணி முடிந்ததும் நாம கொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை இலை, பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இந்தப் பணி முடிந்ததும் மூலவர் மீது போர்த்தப்பட்ட தூய வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டது.
இதையடுத்து 12 மணி அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
- 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பலத்த பாதுகாப்புப் போடப்படுவதுடன், எந்தச் சூழலையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் நடந்தது.
கூட்டத்தில் திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கருடசேவையின்போது நான்கு மாடவீதிகளில் சாமி வாகனத்தை நிறுத்துவதற்கு ஏற்ற இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு மின் விளக்கு வசதியோடு கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் வகையில் திருடர்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்கள் திருமலைக்கு வந்தால், அவர்களை பற்றிய அனைத்துத் தகவல்களும், புகைப்படங்களும் தெரியும்படி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்த காவல்துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்.
கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாகக் கோவில் உள்ளேயே பிரம்மோற்சவ விழா நடந்தது. ஆனால், இந்த ஆண்டு கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. அதில், நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து பங்கேற்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக கருடசேவை, தேரோட்டம், சக்கர ஸ்நானம் போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். கேலரிகளுக்கு உள்ளே வரும் பக்தர்கள், கேலரிகளில் இருந்து வெளியே செல்லும் பக்தர்களுக்கு பாதை வசதி ஏற்பாடு செய்யப்படும்.
திருமலையில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, குற்றச் செயல்களை தடுக்க ஏற்பாடு செய்யப்படும். இரவில் வெளிச்சம் தரும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
பிரம்மோற்சவத்தின்போது திருப்பதி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களை சோதனையிட நுழைவு வாயில்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கவும், பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, தேவைப்பட்டால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் வகையிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி ரெயில் நிலையம் முதல் திருமலை வரை முக்கிய சாலைகளில் வி.ஐ.பி.களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்படும்.
கருடசேவை மற்றும் பிற முக்கிய நாட்களில் திருமலையில் மோட்டார் வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, போலீசார் முன்கூட்டியே திட்டமிட்டு மோட்டார் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளுக்கு வாகனங்களை திருப்பி அனுப்பி, திருமலையில் வாகன நெரிசலை குறைப்பார்கள்.
பிரம்மோற்சவத்தையொட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி 27-ந்தேதி திருமலைக்கு வருகிறார். அன்றைய தினம் அனைத்து முக்கிய சாலைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், என முதல்-மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை மலைப்பாதை மற்றும் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்படும்.
திருட்டுச் சம்பவங்களை தடுக்க தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைத்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். திருமலை, திருப்பதியில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் பலகைகள் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் இ.சுப்ரஜா, விமலகுமாரி, குலசேகர், முனிராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நவராத்திரி உற்சவம் 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
- 5-ந்தேதி அம்மன் சிவன்-பார்வதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி காமாட்சியம்மன் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதை முன்னிட்டு 23-ந்தேதி கோவிலில் ஆலய சுத்தி எனப்படும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து 26-ந்தேதி கலச ஸ்தாபனம், அங்குரார்ப்பணம், 27-ந்தேதி காமாட்சிதேவி அலங்காரம், 28-ந்தேதி ஆதிபராசக்தி அலங்காரம், 29-ந்தேதி மாவடி சேவா அலங்காரம், 30-ந்தேதி அன்னப்பூர்ணாதேவி அலங்காரம், அக்டோபர் மாதம் 1-ந்தேதி மஹாலட்சுமி அலங்காரம், 2-ந்தேதி சரஸ்வதிதேவி அலங்காரம், 3-ந்தேதி துர்காதேவி அலங்காரம், 4-ந்தேதி மகிஷாசுர மர்த்தினி அலங்காரம், 5-ந்தேதி விஜயதசமியை முன்னிட்டு அம்மன் சிவன்-பார்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் ெதரிவித்தனர்.
- திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.
- இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர்.
இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களே இன்னும்கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை அந்த அளவிற்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தொடர்ந்து அதிகஅளவிலான பக்தர்கள் வந்துகொண்டே உள்ளனர். பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விரைவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 88,924 பேர் தரிசனம் செய்தனர். 34,282 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






