என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று தங்கத்தேரோட்டம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட காளைகள், குதிரைகள், யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டம், நடனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    வாகனச் சேவையில் பங்கேற்று சோர்வடைந்த உற்சவர் பத்மாவதி தாயாருக்கு நிவாரணம் வழங்க நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. நான்கு மாட வீதிகளில் உற்சவர் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலாவில் பங்கேற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தனநீரை தெளித்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    • இன்று காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 8 சிறிய வகை நானோ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
    • நாளை காலை 11.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக் கோள்களை வடிவமைக்கிறது.

    இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

    இந்த ராக்கெட்டில் ஓசன் சாட்-3 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (இலுஎஸ்-6) மற்றும் 8 சிறிய வகை நானோ செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது.

    பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணி என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாளை காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மல்லாரெட்டியின் உறவினர்கள் சிலர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி உள்ளனர்.
    • பூட்டப்பட்ட வீடுகளில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் மல்லா ரெட்டி மற்றும் அவரது மருமகன் ராஜசேகர ரெட்டி மற்றும் மகள் ஆகியோரின் பெயரில் 300 வங்கி கணக்குகளும், 80 லாக்கர்கள் உள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ராஜசேகர ரெட்டி மற்றும் அவரது மனைவி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளதால் அவர்களின் 2 வங்கி லாக்கர்கள் நேற்று திறக்கப்பட்டு சோதனை செய்தனர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் அவர்கள் இன்று ஐதராபாத் வந்த பின்னர் மீதம் உள்ள 78 லாக்கர்களை திறந்து சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    மேலும் மல்லா ரெட்டியின் உறவினர் வீடுகளில் முதல்முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர்களை வைத்து எந்தெந்த அறையில் நகை, பணம், முக்கிய ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என சோதனை செய்தனர்.

    வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மல்லாரெட்டியின் உறவினர்கள் சிலர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி உள்ளனர். இருப்பினும் பூட்டப்பட்ட வீடுகளில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் பிரவீன் ரெட்டி வீட்டில் ரூ.1.50 கோடி, திருச்சூல் ரெட்டி வீட்டில் ரூ.2 கோடி, ரகுநாத ரெட்டி வீட்டில் ரூ.2 கோடி, சுதிர் ரெட்டி வீட்டில் ரூ.1 கோடி என மொத்தம் ரூ.10.50 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது வீட்டில் வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியதால் மகன் மகேந்தர் ரெட்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக போயன பள்ளி போலீசில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் மல்லா ரெட்டி புகார் செய்தார்.

    அவரது புகாரை ஏற்ற போலீசார் வருமான வரித்துறை அதிகாரி மேரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
    • இன்று பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியில் இருந்து 1.30 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் அனுமன் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    • 6 பேர் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    சதீஷ்கர் மாநிலம், தண்டேவாடி மாவட்டம், பாமினியை சேர்ந்த 10 பேர் ஆந்திராவில் உள்ள கோவில்களை தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர்.

    ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜா மாவட்டம், சிந்தூர் அடுத்த ஒட்டே கூடேம் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    பின்னர் ராமர் சீதை வனவாசம் சென்றதாக கூறப்படும் பர்ணசாலாவில் உள்ள கோவிலில் சீதா, ராமரை தரிசனம் செய்வதற்காக காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சென்ற கார் ஏடுகுர்லால பள்ளி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். இதில் 6 பேர் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விபத்து குறித்து சிந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 4 பேரை மீட்டு ஏடு குர்லால பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர்.

    பின்னர் 2 பேரை மேல் சிகிச்சைக்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
    • இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • மல்லா ரெட்டியின் மகன் சந்தோஷ் ரெட்டிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • தெலுங்கானாவில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி.

    இவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ சீட்டுகளை உறவினர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டியின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு என 50 இடங்களில் நேற்று காலை 5 மணிக்கு சோதனையை தொடங்கினார்.

    இந்த சோதனையில் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் இருந்து வந்த 400க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மல்லா ரெட்டியின் உறவினர் வீடுகளில் இருந்து ரூ.5 கோடி பணம் மற்றும் தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மல்லா ரெட்டியின் மகன் சந்தோஷ் ரெட்டிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் சந்தோஷ் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சந்தோஷ் ரெட்டிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினரிடம் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    மல்லா ரெட்டியின் மகள், மருமகன் துருக்கிக்கு சுற்றுலாவுக்கு சென்று உள்ளனர். அவர்களது வீட்டில் உள்ள 2 டிஜிட்டல் லாக்கர்களின் பாஸ்வேர்டு எண் தெரியாததால் வருமான வரித்துறை அதிகாரிகளால் லாக்கர்களை திறக்க முடியவில்லை.

    அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    அவர்கள் நாடு திரும்ப தாமதம் செய்தால் வங்கி லாக்கர்களை உடைத்து சோதனை செய்யப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் தொலைபேசி அழைப்பு பட்டியலை வைத்து அவர்கள் யார் யாருடன் எப்போதெல்லாம் பேசினார்கள்.

    எதற்காக பேசினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானாவில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் குவிந்து இருப்பதால் அந்தந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
    • ஊஞ்சல்சேவை நடைபெற்றது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை நடந்த இந்த வீதி உலாவின் போது பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். வாகன வீதி உலாவின் முன்பு பெண்கள் நடனம், கோலாட்டம் மற்றும் பஜனை நிகழ்த்தியபடி சென்றனர்.

    சித்தூர் மாவட்டம் நிம்மனப்பள்ளியை சேர்ந்த வெங்கடரமண பஜனை குழுவினர் கிராமிய பாரம்பரிய பில்லனகுரோவி பஜனைகளை நடத்தினர்கள். இதேபோல் ராஜமுந்திரியை சேர்ந்த சிவகேசவ கோலாட்ட பஜனை மண்டலி கலைஞர்களின் பாரம்பரிய நடனம், திருப்பதியை சேர்ந்த சதானந்த நிலையவாச பஜனை கலைஞர்கள், திருப்பதியை சேர்ந்த வைபவ வெங்கடேஸ்வரா கோலாட்ட குழுவினர்களின் கோலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை கிருஷ்ணசுவாமி மண்டபத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல்சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    • கடும் குளிர் மற்றும் மழையால் திருப்பதியில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.
    • தரிசனத்திற்கு வர விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.

    திருப்பதி:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.

    கடும் குளிர் மற்றும் மழையால் திருப்பதியில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்யும் வகையில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. தரிசனத்திற்கு வர விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 69,587 பேர் தரிசனம் செய்தனர். 28,645 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தமிழக முன்னாள் கவர்னராக இருந்தவர் சென்னா ரெட்டி.
    • இவரது மகன் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர உள்ளார்.

    ஐதராபாத்:

    ஆந்திரா மாநிலத்தில் முதல் மந்திரியாகவும், தமிழகத்தில் கவர்னராகவும் பதவி வகித்தவர் மறைந்த சென்னா ரெட்டி. இவரது மகன் மர்ரி சசிதர் ரெட்டி (67), தெலுங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவராக திகழ்ந்தார். மந்திரி பதவியும் வகித்துள்ளார்.

    இந்நிலையில், மர்ரி சசிதர் ரெட்டி திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் கார்கேவுக்கு அனுப்பினார். முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, தான் கட்சியில் இருந்து விலகுவதற்கான பின்னணியை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார்.

    கட்சி விவகாரங்களில் பணம் ஆதிக்கம் செலுத்துகிறது. மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை வலுவாக எதிர்கொள்ளும் நிலையில் கட்சி இல்லை. கட்சியின் மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள் திறம்பட செயல்படுவதில்லை என அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், சசிதர் ரெட்டி விரைவில் பா.ஜ.க.வில் சேர உள்ளார். சசிதர் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகியுள்ளது தெலுங்கானாவில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ×