என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் கார்-லாரி மோதல்: ராமர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் பலி
    X

    ஆந்திராவில் கார்-லாரி மோதல்: ராமர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் பலி

    • 6 பேர் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    சதீஷ்கர் மாநிலம், தண்டேவாடி மாவட்டம், பாமினியை சேர்ந்த 10 பேர் ஆந்திராவில் உள்ள கோவில்களை தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர்.

    ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜா மாவட்டம், சிந்தூர் அடுத்த ஒட்டே கூடேம் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    பின்னர் ராமர் சீதை வனவாசம் சென்றதாக கூறப்படும் பர்ணசாலாவில் உள்ள கோவிலில் சீதா, ராமரை தரிசனம் செய்வதற்காக காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சென்ற கார் ஏடுகுர்லால பள்ளி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். இதில் 6 பேர் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விபத்து குறித்து சிந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 4 பேரை மீட்டு ஏடு குர்லால பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர்.

    பின்னர் 2 பேரை மேல் சிகிச்சைக்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×