என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.
    • காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை சார்பில் தினமும் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.

    தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அன்னதானத்திற்காக நாளொன்றுக்கு சுமார் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 டன் முதல் 7.5 டன் வரை காய்கறிகளும் பயன்படுத்துவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.

    எனவே அன்னதானம் வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் ஒரு நாளைக்கு தேவையான அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலுத்தலாம்.

    மேலும் காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அன்னதான செலவுத் தொகையை வழங்கும் பக்தர்கள் அன்னதானம் செய்யும் நாள் அன்று அவர்களே முன் நின்று அன்னதானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாகேஸ்வரராவ், ஜெகதீஸ்வரியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
    • போலீசார் ஜெகதீஸ்வரியை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த லஷ்மி புரத்தை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் நாகேஸ்வரராவ், ஜெகதீஸ்வரியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

    விவாகரத்து நோட்டீசை கண்ட ஜெகதீஸ்வரி அதிர்ச்சி அடைந்து இது குறித்து தனது கணவரிடம் கேட்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ்வரி அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து நாகேஸ்வரராவ் தலையில் பலமாக தாக்கினார். இதில் நாகேஸ்வரராவ் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    நாகேஸ்வரராவ் வலியால் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விடுவார்களோ என பயந்த ஜெகதீஸ்வரி கணவரை இழுத்துச் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தலையை அழுத்தினார்.

    இதில் மூச்சு திணறி நாகேஸ்வரராவ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஒன்றும் தெரியாதது போல் தனது வீட்டிற்கு வந்துவிட்டார்.

    அக்கம் பக்கத்தினர் நாகேஸ்வரராவ் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாகேஸ்வரராவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நாகேஸ்வரராவ் வீட்டிற்கு அவரது மனைவி ஜெகதீஸ்வரி வந்து சென்றது தெரிய வந்தது. ஜெகதீஸ்வரியை பிடித்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஜெகதீஸ்வரியை கைது செய்தனர்.

    • 2-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
    • பிப்ரவரி மாதத்திற்கு 7 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

    பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களுக்கான 7 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 12 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    நாளை காலை பிப்ரவரி 28-ந்தேதி வரைக்கான தங்கும் அறை வாடகை முன்பதிவு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    பக்தர்கள் அறை வாடகையை முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பதியில் நேற்று 67,169 பேர் தரிசனம் செய்தனர். 21,222 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சந்திரபாபு நாயுடுவை நடிகர் பவன் கல்யாண் சந்தித்துப் பேசினார்.
    • இது அங்கு கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    ஐதராபாத்:

    ஆந்திராவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அங்கு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஐதராபாத்தில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு பவன் கல்யாண் வந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு தலைவர்களும் முறைப்படி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.

    இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    ஆந்திராவில் தற்போதைய சூழ்நிலை நெருக்கடி நிலையை விட மோசமானதாக உள்ளது. இங்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு எல்லா எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்த விவகாரத்தை நாங்கள் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். அத்தகைய சூழ்நிலையில் தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு எல்லா உரிமையும் உள்ளது.

    சமூக பாதுகாப்பு ஓய்வூதிய பயனாளிகளை குறைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய அரசாணை, நெல் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தராதது, எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம் என தெரிவித்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனா கட்சியும் கூட்டணி சேருவதற்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு பதில் அளிக்கையில், ஜனநாயகமும், அரசியல் கட்சிகளும் இயல்பாக செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறபோது, கூட்டணி பற்றி விவாதிக்கப்படும் என்றார்.

    • ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார்.
    • வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் ரோகித் குமார் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனது தந்தை வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வந்தார்.

    ரோகித் குமார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் ரோகித்குமார் ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி கடனை கட்டினார்.

    மேலும் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.

    இதனால் விரத்தி அடைந்த ரோகித் குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். ரோகித் குமாரை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கன்னவரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுமன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருப்பதியில் நேற்று 62,856 பேர் தரிசனம் செய்தனர். 22,115 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
    • ரூ.2.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஜனவரி 12-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் www.tiruptibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 62, 856 பேர் தரிசனம் செய்தனர். 22,115 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு 6 ஆயிரம் அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்தது.

    சேதம் அடைந்த அறைகள் ரூ.110 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டன. மேலும் பக்தர்கள் தங்கும் காட்டேஜ் கெஸ்ட் ஹவுஸ்களில் ஏ.சி, வெந்நீர், மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தங்கும் அறை வாடகை 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அறை வாடகை உயர்த்தப்பட்டதற்கு தெலுங்கு தேசம், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    மேலும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டிட அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் அறை கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் 9-ந்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்க வேண்டும் என்றால் வைப்புத்தொகையுடன் ரூ.3,400 செலுத்தினால் மட்டுமே அறைகள் கிடைக்கும்.
    • தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 6000 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. தரிசனத்திற்கு வரும் ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக ரூ.50, 100, 200 என அறை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதல் கட்டணத்திலும் அறைகள் உள்ளது.

    பக்தர்கள் அவர்களது வசதிக்கு ஏற்ப அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.

    தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படும் அறைகளின் மின்விசிறி, கதவு, ஜன்னல்கள், குளியலறை, கழிவறை ஆகியவை போதிய பராமரிப்பின்றி உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் வாடகை அறைகளை பராமரிக்க ரூ.110 கோடி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே கெஸ்ட் ஹவுஸ்கள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த கெஸ்ட் ஹவுஸ்களில் ஏ.சி., வெண்ணீர் வசதியுடன் அறைகள் சீரமைக்கப்பட்டன. நாராயணகிரி கெஸ்ட் ஹவுஸில் ரூ.500, ரூ.600-க்கு வாடகைக்கு விடப்பட்ட அறைகள் தற்போது சீரமைக்கப்பட்ட பின் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.1,700 ஆக உயர்த்தி உள்ளனர்.

    இதேபோல் நந்தகம், வகுளமாதா, பாஞ்ச ஜன்யம், கவுஸ்துபம் உள்ளிட்ட காட்டேஜ்களின் அறை வாடகை ஜி.எஸ்.டி-யுடன் 2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு காட்டேஜ்களில் ரூ.750 ஆக இருந்த அறை வாடகை ஜி.எஸ்.டி-யுடன் ரூ.2,800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்க வேண்டும் என்றால் வைப்புத்தொகையுடன் ரூ.3,400 செலுத்தினால் மட்டுமே அறைகள் கிடைக்கும்.

    இதனால் தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்:-

    எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தேவஸ்தானம் அறை வாடகையை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அறை வாடகை உயர்த்துவது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. மாநில அரசுக்கும் தெரிவிக்கவில்லை.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சேவையாக வழங்கப்பட்ட அறை வாடகையை தேவஸ்தான அதிகாரிகள் வியாபாரமாக மாற்றிவிட்டனர். எனவே உயர்த்தப்பட்ட அறை வாடகையை குறைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 45,887 பேர் தரிசனம் செய்தனர். 17,702 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஆஸ்பத்திரிக்கு சென்ற சோனி தான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்ததாகவும் டாக்டர்களிடம் தெரிவித்தார்.
    • மெஹபூப் ஜான் குழந்தை பெற்ற வார்டுக்கு சென்ற அவர் குழந்தையை வாங்கி கொஞ்சினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், அக்காயபள்ளியை சேர்ந்தவர் சோனி (வயது 28). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

    இவரது மைத்துனருக்கு திருமணமான ஒரே ஆண்டில் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் சோனியின் உறவினர்கள் அவரை ஏளனமாக பேசி வந்தனர்.

    இந்த நிலையில் எப்படியாவது ஒரு குழந்தையை எடுத்து வந்து தனக்கு பிறந்ததாக கூறி உறவினர்களை ஏமாற்ற வேண்டும் என எண்ணினார்.

    இதற்காக அவர் அமேசானில் ரூ.16 ஆயிரம் கொடுத்து பிளாஸ்டிக் தொப்பையை வாங்கி தனது வயிற்றில் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக உள்ளதாக கூறி வலம் வந்தார்.

    மாதங்கள் செல்ல செல்ல குழந்தை எப்படியாவது வேண்டுமே என்று எண்ணிய அவர் எங்கிருந்தாவது குழந்தையை கடத்தி வரவேண்டும் என்று திட்டமிட்டார்.

    கடப்பா மாவட்டம் சின்ன தெனாலியை சேர்ந்தவர் மகபுஜான் நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். மறுநாள் ஆபரேஷன் மூலம் மெஹபூப் ஜானுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்ற சோனி தான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்ததாகவும் அங்குள்ள டாக்டர்களிடம் தெரிவித்தார்.

    பின்னர் மெஹபூப் ஜான் குழந்தை பெற்ற வார்டுக்கு சென்ற அவர் குழந்தையை வாங்கி கொஞ்சினார். பின்னர் தனது கணவர் ஆஸ்பத்திரிக்கு வெளியே இருப்பதாகவும் குழந்தையை அவரிடம் காண்பித்து விட்டு வருவதாக குழந்தையை வாங்கிச் சென்றார்.

    குழந்தையை வாங்கிச்சென்ற பெண் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மெஹபூப் ஜான் இது குறித்து தனது உறவினர்கள் மற்றும் அங்குள்ள காவலாளிகளிடம் தெரிவித்தார். அவர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர்.

    ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடப்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடப்பா ஐ.டி.ஐ சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் வந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் சோனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 50 ஆயிரம் பேர் என தரிசன டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது.
    • திருப்பதியில் நேற்று 47,781 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரானா தொற்றுக்குப் பிறகு கடந்த ஒரு ஆண்டாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தினமும் 60 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்தனர்.

    இதனால் உண்டியல் வருவாயும் அதிகரித்து மாதத்திற்கு ரூ.120 முதல் ரூ.130 கோடி வரை வசூல் ஆனது.

    ஒரு நாளைக்கு சுமார் 3 கோடிக்கு மேல் உண்டியல் வருவாய் வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதனை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அறிவித்து இருந்தது.

    தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 20 ஆயிரம் பேரும், இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 50 ஆயிரம் பேர் என தரிசன டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது.

    இதனால் வைகுண்ட ஏகாதசி மற்றும்தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பக்தர்கள் கூட்டம் பாதியாக குறைந்தது.

    திருப்பதியில் நேற்று 47,781 பேர் தரிசனம் செய்தனர். 15,695 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    கடந்த ஓராண்டிற்கு பின்னர் திருப்பதியில் ஊண்டியல் வருவாய் ரூ.2 கோடி அளவிற்கு குறைந்துள்ளது.

    • துவார தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
    • வருகிற 11-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடந்து வருகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 11-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடந்து வருகிறது. கோவிலில் வைகுண்ட துவாரத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திருப்பதியில் 9 மையங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனம் முடிந்து, பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்கள் தரிசனம் (துவார தரிசனம்) செய்வது மட்டும் நடந்து வருகிறது. துவார தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

    எனவே இலவச தரிசன டோக்கன்கள் நேற்று (புதன்கிழமை) முதல் திருப்பதி அலிபிரி பூதேவி வளாகம், சீனிவாசம் விடுதி வளாகம், விஷ்ணு நிவாசம் விடுதி வளாகம், கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் கவனிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×