என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக் கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம்.
    உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக் கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் அதுபோன்ற அறிகுறி இருந்தால் கவனம் செலுத்துதல் அவசியம்.

    கர்ப்பப்பை வாய் தொற்று : கர்ப்பப்பையின் வாய் பகுதி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவின் போதோ அல்லது பின்பும் கடுமையான வலியை உண்டாக்கும்.

    பெண்ணுறுப்பு வறட்சி : உடலுறவின் போது மென்மையாக இருக்க பெண்ணுறுப்பின் வாய்ப் பகுதியில் திரவம் வெளியேறவில்லை எனில் வலி ஏற்படும்.

    முடி , காயம் : பிறப்புறுப்பில் முடியின் தொற்றால் பருக்கள் உண்டாகி உராய்வின் போது வலியை உண்டாக்கலாம். உட்புறத்தில் காயங்கள் இருந்தாலும் உராய்வினால் வலி ஏற்படலாம்.

    தவறான நிலை : உடலுறவு நிலைகளை படத்தில் பார்த்துவிட்டு அப்படியே முயற்சி செய்யாதீர்கள். புதிதாக அந்த நிலைகளை மேற்கொண்டாலும், தவறாக செய்தாலும் வலி உண்டாகும்.

    குழந்தை பெற்ற தாய் : சமீபத்தில் தான் குழந்தையை ஈன்றிருக்கிறீகள் என்றாலும் வலி உண்டாகும்

    ஆக்ரோஷமான உடலுறவு : ஆக்ரோஷமாக உடலுறவு மேற்கொண்டாலும் அடி வயிற்றில் , பிறப்புறுப்பில் வலி உண்டாகும்.

    பாலியல் தொற்று : பலருடன் உடலுறவு மேற்கொள்பவர் எனில் அதனால் தொற்று ஏற்பட்டிருந்தால் வலி உண்டாகலாம். ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் சில நேரங்களில் தொற்று ஏற்படலாம்.

    கருத்தடை பயன்பாட்டில் சிக்கல் : ஆணுறையை சரியாக அணியவில்லை என்றாலும் பிறப்புறுப்பிற்குள் சென்று வலியை உண்டாக்கலாம்.

    விருப்பமின்மை : உடலுறவில் விருப்பமில்லை எனில் பெண்களின் பிறப்புறுப்பு ஆண்களுக்கு இணைந்து கொடுக்காது. பிடிப்புடன் இருக்கும். அந்த சமயத்தில் நுழைய முடியாமல் வற்புறுத்தும்போது வலி ஏற்படும்.

    பயம் , பதட்டம் : உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை, பயம், பதட்டம் போன்றவை இருந்தாலும் அந்த உடலுறவை அசௌகரியமாக்கும். அந்த சமயத்தில் உடலுறவு மேற்கொண்டாலும் அது வலி கொண்டதாக இருக்கும்.
    ஒருவர் தனது துணைக்கு சட்டப்படி வழங்க கடமைப்பட்டுள்ள நிதி ஆதரவைத்தான் ஜீவனாம்சம் என்று அழைக்கிறார்கள். பிரிவதற்கு முன்பாகவும் தரப்படலாம் அல்லது பிரிந்த பிறகு பராமரிப்பு செலவுக்காகவும் பெறப்படலாம்.
    விவாகரத்து சுமூகமாக அமைய அது இரு தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் விதிகளை அறிந்திருக்க வேண்டும். சட்டப்படி உங்கள் உரிமைகள் எவை மற்றும் அவற்றை கோருவதற்கான வழிகள் பற்றி அறிந்திருந்தால் விவாகரத்து போன்ற சிக்கலான நேரங்களில் பணம் பற்றி பேசுவது எளிதாக அமையும்.

    ஒருவர் தனது துணைக்கு சட்டப்படி வழங்க கடமைப்பட்டுள்ள நிதி ஆதரவைத்தான் ஜீவனாம்சம் என்று அழைக்கிறார்கள். பிரிவதற்கு முன்பாகவும் தரப்படலாம் அல்லது பிரிந்த பிறகு பராமரிப்பு செலவுக்காகவும் பெறப்படலாம். இதைப் பெறும் உரிமை என்பது திருமண மற்றும் விவகாரத்து சட்டங்களின் முக்கிய அம்சமாகும்.

    வேலைக்கு செல்வதால் ஜீவனாம் சம் பெற முடியாது என சொல்லி யாரேனும் ஏமாற்ற முயன்றால் அவர்கள் முகத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) 125வது பிரிவை தூக்கி வீசவும். “பணிபுரியும் பெண்ணாக இருப்பது ஒரு பெண் ஜீவனாம்சம் பெறுவதில் இருந்து தகுதி இழக்கச் செய்யவில்லை என இந்தப் பிரிவு தெரிவிக்கிறது. ஆனால், வேலை மூலம் மட்டுமே தன்னை பராமரித்துக்கொள்ள முடியாது என்றும் தன் சம்பளத்தைவிட கணவரது சம்பளம் அதிகம் என்றும் அவர் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும்.

    கணவரின் அந்தஸ்திற்கு ஏற்ப மனைவி வாழ வழிசெய்வதே இதன் நோக்கம்” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பர்னாலி பஸக். மதம், சாதி, இனம், படிப்பு ஆகிய பேதங்கள் இல்லாமல் எந்த ஒரு பெண்னும், தன்னை பராமரித்துக்கொள்ள முடியாவிட்டால், அவரது கணவரால் ஆதரவு அளிக்க முடியும் என்றால் அவரிடம் இருந்து பராமரிப்பு கோரலாம். “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூக நீதி வழங்குவதே இந்த பிரிவின் முக்கிய நோக்கம்” என்கிறார் பர்னாலி. விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்யாவிட்டாலும் கூட நீங்கள் பராமரிப்பு கோர தகுதி உடையவர்.

    ஒரு ஆண் அவரது மனைவிக்கு பராமரிப்பு வழங்க முடியுமா என்பதை தீர்மானிக்க, நீதிமன்றம் அவரது சொத்துக்கள், வருமான வழிகள் ஆகியவற்றை பரிசீலிப்ப துடன், ஆதரவு அளிப்பதற்கான அவரது ஆற்றலையும் பார்க்கிறது. “எனது கட்சிக்காரர் ஒருவரது கணவருக்கு டேராடூனில் பல ஏக்கர் நிலம் மற்றும் சொந்த வர்த்தம் இருந்தது.

    ஆனால் ஜீவனாம்சம் என வந்தபோது, அவர் நீதிமன்றத்தில் தன்னை செல்லாக்காசாக அறிவித்துக்கொண்டார். மற்றொரு வழக்கில் எனது கட்சிக்காரரின் கணவர் அதிக வருவாய் அளித்த தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேலைக்கு போகும் தனது மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் கோரினார். ஆண்கள் சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்காமல் பெற்றோர் பெயரில் வாங்கும் வழக்கத்தையும் வைத்துக்கொண்டு, தங்கள் பெயரில் சொத்து இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனர்” என்று சொல்கிறார் பர்னாலி.

    ஜீவனாம்சம் போன்ற சிக்கலான விஷயத்தில் நீதிமன்றங்கள் மிகவும் கவனமாக எல்லா அம்சங்களையும் பரிசீலிக்கின்றன. இரு தரப்பினரும், தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பட்டியலிட வேண்டும்.
    உடலளவிலும், மனதளவிலும், சுற்றுப்புறத்தை அணுகும் விதத்திலும் மாறுபட்டுக் காணப்படுகிற, வெவ்வேறு குணாதிசயங்களைக்கொண்ட ஆணும், பெண்ணும் இல்லறத்தில் ஒன்றாக இணைவது சாதாரண விஷயம் இல்லை.
    திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள்கூட முதலிரவை நினைத்து கொஞ்சம் கலங்கவே செய்கிறார்கள். ‘அது பலருக்கு மோசமான இரவாகி இருக்கிறது’ என்று நண்பர்கள் முன்பு சொன்ன கிளர்ச்சியூட்டும் திகில் கதைகள் எல்லாம், திருமணம் செய்துகொள்ளப்போகும் காலகட்டத்தில் நினைவுக்கு வந்து அவர்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். முதல் இரவில் ஏற்படும் கசப்பு சில தம்பதிகளை விவாகரத்து வரை கொண்டு சென்றிருப்பதாகவும் கேள்விப்பட்டு அவர்கள் பெருங்குழப்பத்திற்கு ஆளாகிவிடுவதும் உண்டு.

    மணவாழ்க்கையில் இணையும் ஆணும், பெண் ணும் முதலில் எதிர்மறையான சம்பவங்களை நினைத்து மனக்குழப்பம் அடைவதை தவிர்க்கவேண்டும். ‘எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்ற நம்பிக்கையை மனதிற்குள் விதைக்கவேண்டும். தன்னம்பிக்கையும், மனஅமைதியுமே வெற்றிகரமான முதல் இரவுக்கு அடிப்படை தேவை.

    திருமணம் என்பது எங்கெங்கோ பிறந்து வளர்ந்த ஆணையும், பெண்ணையும் வாழ்க்கையில் ஒன்றாக இணைக்கிறது. கலாசாரம், பண்பாடு, வளர்ப்பு முறை, பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகள் என எல்லாவற்றிலும் வேறுபட்ட அவர்கள் இருவரும் திருமணத்தின் மூலம் ஒன்று சேர்ந்து இல்லறத்தை ஆரம்பிக்கிறார்கள்.

    உடலளவிலும், மனதளவிலும், சுற்றுப்புறத்தை அணுகும் விதத்திலும் மாறுபட்டுக் காணப்படுகிற, வெவ்வேறு குணாதிசயங்களைக்கொண்ட ஆணும், பெண்ணும் இல்லறத்தில் ஒன்றாக இணைவது சாதாரண விஷயம் இல்லை. அந்த இணைப்பு வெற்றிபெற வேண்டும் என்றால், இரண்டு தரப்பிலுமே அபரிமிதமான புரிதலும், அனுசரித்துப்போகும் தன்மையும், அசாத்தியமான பொறுமையும் வேண்டும்.

    மனம்விட்டுப் பேசுவதுதான் புரிதலுக்கான எளிய வழி. அப்படிப் பேசுவதற்காகத்தான் ‘சாந்தி முகூர்த்தம்’ என்ற நிகழ்வை ஒரு கலாசாரமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் கணவனும், மனைவியும் அப்போது மனம்விட்டுப்பேசி இருவரது மனங்களையும் முதலில் இணைக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான தம்பதிகள் முதலிரவு என்பது கணவனும், மனைவியும் தாம்பத்ய உறவு கொள்வதற்கான இரவு என்று தான் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களது சிந்தனை முழுவதும் பாலுறவைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். திருமணத்தில் ஆணையும் பெண்ணையும் இணைப்பது இனப்பெருக்கம் என்னும் இயற்கையான பாலியல் உணர்ச்சிதான். ஆனால், இந்த உணர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து இணைந்தவர்கள் முழுமையான இன்பத்தை எட்டுவதில்லை என்ற உண்மை புது மணத்தம்பதிகளுக்கு தாமதமாகத்தான் புரியவரும்.

    முதலிரவு அறை என்பது போர்க்களம் இல்லை, அது பூக்களம். புரிந்துகொண்ட தம்பதிகளுக்கு அங்கு தோல்வி ஒருபோதும் இல்லை. எல்லா இரவுகளிலும் வெற்றிதான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருவரை ஒருவர் உடலாலும் மனதாலும் உணர்ந்துகொண்டு, இருவரும் தங்களுக்கான திருப்தியை தேடி அடைவதில்தான் முதலிரவின் வெற்றி அமைந்திருக்கிறது. அதனால் பயம், பதற்றம், தவறான நம்பிக்கை, தெளிவின்மை, அவநம்பிக்கை, முரட்டுத்தனம் போன்றவைகளை அன்று அறைக்கு வெளியே நிறுத்திவிட்டு நீங்கள் அன்பை மட்டும் மனதில் ஏந்திக்கொண்டு புன்னகையோடு முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வையுங்கள.் அங்கு இருவருக்குமே சிறந்த புதிய அனுபவங்கள் கிடைக்கும். 
    நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவது தடுப்பூசிகள். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியமாகும்.
    நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவது தடுப்பூசிகள். சரியான நேரத்தில் அவற்றைப் போடத் தவறுவது எவ்வளவு முக்கியமானதோ, அதை விட முக்கியமானது தவறான நேரத்தில் போடுவதும். குறிப்பாக கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியமாகும்.

    குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்களுக்குள் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

    தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, புட்டாலம்மை உள்ளிட்ட பல அம்மைத் தொற்றுகளுக்கு எதிராகப் போராடக் கூடியது இந்தத் தடுப்பூசி. ஒரு வேளை 10 முதல் 12 மாதங்களில் இந்த ஊசி போடாவிட்டால், 13 வயதுக்குள் போடப்பட வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம். அதைத் தவிர்த்து, திருமண வயதில் போட நினைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் அப்படிப்போட நேர்ந்தால், அந்த ஊசியைப் போட்டதை அடுத்து, 4 மாதங்கள் முதல் 1 வருடம் வரை கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    அந்தக் காலக் கட்டம் வரைக்கும் அந்தத் தடுப்பூசியின் தாக்கம் உடலுக்குள் இருக்கும் என்பதே காரணம். இந்த ஊசி போடாத பட்சத்தில் அந்தப் பெண்ணுக்குக் பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிப்பு, காது கேளாமை, மூளைக் காய்ச்சல், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவை வரலாம்.

    நரம்பில் உருவாகும் செல்கள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பல நோய்களும் வரலாம். கர்ப்பிணிகள் தவிர்க்கக் கூடாத இன்னொரு ஊசி டெட்டனஸ் டாக்சைட். பிரசவ காலத்தில் ஏற்படுகிற டெட்டனஸ் தொற்றானது, நஞ்சுக் கொடியைத் தாக்கி, குழந்தை இறந்து போகும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தாயின் உயிருக்கும் ஆபத்து உண்டு.

    கர்ப்ப காலத்தில் 2 டோஸ் போடக் கூடிய இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது.  டைஃபாய்டு, நிமோனியா காய்ச்சல், ஹெபடை ட்டிஸ் பி போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை கர்ப்ப காலத்தில் போடவே கூடாது.

    கணவருக்கு ஹெபடை ட்டிஸ் பி தொற்று இருப்பது தெரிந்தால், அதன் மூலம் மனைவிக்கும் பாதிப்பு வரலாம். எனவே அதற்கெதிரான தடுப்பூசியை அந்தப் பெண் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஊசியையும் போட்டுக் கொண்டு 2 மாதங்களுக்கு கர்ப்பம் தரிக்காமலிருப்பது பாதுகாப்பானது.

    கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வீட்டில், வேறு யாருக்காவது பறவைக் காய்ச்சல், அம்மை போன்ற தொற்று வந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு தடுப்பூசி போட முடியாது. தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து, கர்ப்பிணிப் பெண்ணைப் பிரித்து வைப்பது தான் தீர்வு.

    கர்ப்பிணிப் பெண்ணை நாய் கடித்தால், அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, ரேபிஸ் ஊசி போடப்பட வேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உயிர்தான் பெரிதாகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர, கருவைக் காப்பாற்றும் எண்ண த்தில் ஊசியைத் தவிர்க்க நினைப்பது ஆபத்தானது...
    இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கும் அளவிற்கு தீர்வுகள் வந்துவிட்டன.
    ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரம் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த கால கட்டத்தில், உலகெங்கிலும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா தாக்கத்தினால், தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தாய்ப்பால் ஊட்டுதலுக்கு தனி விழிப்புணர்வு தேவையா?, எதற்காக இந்த முயற்சி?, ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் விழிப்புணர்வு போதவில்லையா?... போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்தாலும், இவை அனைத்திற்குமான விடை டீனா அபிஷேக்கிடம் கிடைத்தது. சென்னையை சேர்ந்தவரான இவர், பால் ஊட்டுதல் ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இதோ...

    * ‘உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் விழிப்புணர்வு போதவில்லையா?

    இப்படி ஒரு நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. உலக அளவிலும் நடக்கிறது. தாய்மை அடைந்தவர்களுக்காகவே நடக்கிறது. ஆனால் பெரும்பாலான தாய்மார்களுக்கு இப்படியொரு நிகழ்வு நடப்பதும், நடைபெற இருப்பதும் தெரிவதில்லை. அதனால்தான், ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் போதிய விழிப்புணர்வு உருவாகுவதில்லை.

    * இந்த விஷயத்தில் வீட்டில் இருக்கும் பெரியோர்களின் அறிவுரைகள் போதுமானதாக இருக்காதா? பிரத்யேக விழிப்புணர்வு தேவையா?

    சில நல்ல விஷயங்களும், சில நம்பக்கூடாத விஷயங்களும் ஆண்டாண்டு காலமாக அறிவுரைகளாக உலா வருகின்றன. அதில் எது உண்மை? எது பொய்? என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியமாகின்றன.

    * அப்படி என்னென்ன விஷயங்கள் உலா வருகின்றன?

    தாய்ப்பால் சுரப்பிற்கு உடம்பில் இருக்கும் சில ஹார்மோன்களே காரணமாகின்றன. எந்தவித மருந்தும், உணவும் இதற்கு தீர்வாகாது. ஆனால் அம்மா அதிகமாக பால் குடித்தால், அதிக தாய்ப்பால் சுரக்கும் என்ற கருத்தும், சூடாகவோ-குளிர்ச்சியாகவோ சாப்பிட்டால் கர்ப்பப்பை பாதிக்கப்படும் என்ற கருத்தும் நம்பக்கூடாதவை. அதே போல குழந்தை பிறந்த உடனே, அதீத தாய்ப்பால் சுரந்துவிடும் என்ற கருத்திலும் உண்மை இல்லை. பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று நாட்களுக்கு 3 முதல் 5 மி.லி. பாலே உணவாக தேவைப் படுகிறது. ஆரம்பத்தில் இந்த அளவு பால் சுரந்தாலே போது மானது. நாட்களின் எண் ணிக்கை அதிகரிக்கும்போதுதான், தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும். இயல்பான இந்த விஷயத்தை பல குடும்பங்கள் பூதாகரமாக மாற்றிவிடுகின்றன. சிலர் பாக்கெட் பால் கொடுக்கும் அளவிற்கு இந்த விஷயத்தை பெரிதாக்கி விடுகிறார்கள்.

    * தாய்ப்பால் சுரப்பின்மைக்கு தீர்வு உள்ளதா? விளக்குங்கள்?

    இருக்கிறது. இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கும் அளவிற்கு தீர்வுகள் வந்துவிட்டன.

    தாய்ப்பால் இல்லாவிட்டாலும், தாய்ப்பால் சுரப்பது போல் எண்ணி குழந்தையை மார்பின் மீது வைத்து பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த உந்துதல் மூலம் பால் சுரக்க ஆரம்பிக்கும்.

    குறைந்தது ஒரு தினத்திற்கு 10 முதல் 12 முறையாவது இதை பின்பற்ற வேண்டும். அதோடு கங்காரூ கேர் (Ka-n-g-a-r-oo Care) என கூறப்படும் வழிமுறையையும் பின்பற்றவேண்டும். தாயின் ஸ்பரிசத்தில் குழந் தையை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் இருக்கச் செய்வதன் மூலம், ஹார்மோன்கள் தூண்டப்பட்டு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு நிகழும். இதுபோல பல இயற்கை வழிமுறைகளினால் தாய்ப்பால் சுரப்பின்மைக்கு தீர்வு காணலாம்.

    * கொரோனா நோயாளிகள் தாய்ப்பால் கொடுக்கலாமா? ஏதாவது பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா?

    தாராளமாக கொடுக்கலாம். தாய்ப்பால் மூலமாக கொரோனா நோய் தொற்று பரவாது என்ற கருத்திற்கு உலக மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடவே, நோய் தாக்கத்தில் இருந்து குழந்தையை காக்க, விஷேச நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் சுரக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பு நடைமுறைகளுடன், தாய்ப்பால் வழங்கலாம். மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பால் சேகரிப்பானில் தாய்ப்பாலை சேமித்து, உறவினர் மூலமாக தாய்ப்பால் ஊட்டலாம்.

    தாய்ப்பால் ஊட்டுதலில் இழைக்கப்படும் தவறுகள் என்ன?

    பிறந்தது முதல் அடுத்த 6 மாதங்களுக்கு குழந் தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். அதை தவிர்த்து, வேறு எதை ஊட்டினாலும் அது தவறுகள் பட்டியலில்தான் சேரும். குறிப்பாக சர்க்கரை தண்ணீர் ஊட்டுவது, தேன் கொடுப்பது, தண்ணீர் குடிக்க கொடுப்பது, வசம்பு தேய்ப்பது போன்றவை எல்லாம் கட்டாயம் தவிர்க்கவேண்டிய விஷயங்கள். குழந்தைக்கு எது கொடுக்க நினைத்தாலும், அதை தாய்க்கு சாப்பிட கொடுத்து, தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கொடுங்கள். அதுவே சிறந்தது.
    கருவுற்ற காலத்தில் வெளித் தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை. உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது.
    கருவுற்ற காலத்தில் வெளித் தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை.  உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது.

    இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பி விடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும்.

    சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும். குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக் கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..!

    குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா. கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் இதெல்லாம் தேவையில்லாத பயங்கள் தான்! இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும் தான் சாப்பிடக் கொடுப்பார்கள்.

    இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரண மாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பது தான் சிறந்தது.
    அப்படிக் கொடுத்தால் தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும். நார்மலான டெலிவரிக்கே சில சமயங்களில், வஜைனாவின் வாய்ப் பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம்.

    இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள். தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்து விடும் என்பது அவர்களின் விளக்கம்.

    இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள் தான் என்றில்லை... சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம். உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால் தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

    குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலைக்கு வந்து விடும். அந்தச் சமயத்தில் ரத்தப் போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்குமேல் போனால் தவறு. தாயின் கர்ப்பப்பையில் நோய்த் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இப்படி ஆகலாம்.

    சில சமயம் தாயின் கர்ப்பப் பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந்தாலும் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படலாம்.
    அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயோ அல்லது இளவயதிலேயோ சினைப்பை வேலை நிறுத்தம் செய்யலாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் எனப்படுகிற இது ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகள் தீர்வுகள் என எல்லாவற்றையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சினை முட்டைகளை பத்திரப்படுத்தி மாதந்தோறும் வெளியிடும் முக்கியமான வேலையைச் செய்கிற சினைப்பை மெனோபாஸூக்கு பிறகே ஓவ்வெடுக்க ஆரம்பிக்கும். அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயோ அல்லது இளவயதிலேயோ சினைப்பை வேலை நிறுத்தம் செய்யலாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் எனப்படுகிற இது முறையற்ற மாதவிலக்கு, மலட்டுத் தன்மை போன்றவற்றை உண்டாக்குவதோடு மெனோபாஸ் வந்துவிட்ட மாதிரியான அறிகுறிகளையும் காட்டுமாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகள் தீர்வுகள் என எல்லாவற்றையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட வயசுக்கு முன்னாடியே சினைப்பை தன் வேலையைச் செய்யறதை நிறுத்திக்கிற இந்தப் பிரச்சனைக்கு பரம்பரைத் தன்மை காரணமாக இருக்கலாம். எதிர்பு சக்தி இல்லாத சிலருக்கு அவங்களோட உடம்புக்குள்ள இருக்கிற திசுக்களை அவங்க உடம்பே அட்டாக் செய்யறதும் காரணமாகலாம்..

    கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இடுப்பெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபி, ரேடியேஷனோட விளைவுகளாலும்  சினைப்பையோட இயக்கம் நின்று போகலாம்.

    மாதவிலக்கு மாசம் தவறி வருவது அல்லது நின்று போவது உடம்பெல்லாம் சூடாகி வியர்த்துக்கொட்டறது எரிச்சல், மனஉளைச்சல், தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாதது சரியான தூக்கமில்லாதது இந்தப் பிரச்சனையோட அறிகுறிகள்

    அத்தனையும் கிட்டத்தட்ட மொனோபாஸ் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மாதவிலக்கு சுழற்சி மாறினாலோ நின்னுட்டாலோ மருத்துவரை அணுகணும். ரத்தத்துள உள்ள எஃப். எஸ்.ஹெச் அளவு சரிபார்க்கப்படும்.

    எஃப்.எஸ்.ஹெச் தான் மாசந்தோறும் சினைமுட்டைகளை வெளியேத்தச் சொல்லி உடம்புக்கு சிக்னல் தரும். ரத்தத்தில் அதோட அளவு மாறியிருக்கிறதை வச்சு ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் இருக்கானு கண்டு பிடிக்கலாம். தவிர ரத்தத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ரொம்ப குறைஞ்சு, எஃப்.எஸ்.ஹெச் அதிகமாறதும் இந்தப்பிரச்சனைக்கு காரணம்.

    பெரும்பாலும் மலட்டுத் தன்மைன்னான சிகிச்சைகளை ஆரம்பிக்கும் போது தான் பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதே தெரிய வரும். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மூலமா இந்தப் பிரச்சனையோட பாதிப்புகளில் இருந்து மீளலாம்.

    அது எலும்புகளோட ஆரோக்கியத்தையும் காப்பாத்தும். கருத்தரித்தலை பாதிக்கிறதால இள வயது பெண்களுக்குத்தான் இது கவலை தரும் பிரச்சனை. அப்படிப்பட்டவங்க கருமுட்டை தானம் மூலமா குழந்தை பெறலாம். ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் உள்ள பெண்களுக்கு எலும்புகள் மெலியலாம். நீரிழிவும், இதய நோய்களும் பாதிக்கலாம்.

    சரியான நேரத்துக்கு சிகிச்சை, கொழுப்பில்லாத சரிவிகித உணவு, உடற்பயிற்சி டாக்டரோட அறிவுரைப்படி கால்சியம் மற்றும் வைட்டமின் டி எடுத்துக்கிறதெல்லாம் அவங்களோட ஆரோக்கியத்துக்கு உதவும்.
    பெண்கள் முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.
    கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.  அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், ‘பொறுமை’ என்பது தான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது.

    அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்து விடாது. குழந்தைப்பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடுங்கள்.

    நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும்.

    அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உடலின் நீர்ப்பற்றாக் குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும்.

    மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும். உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன்,  மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

    தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது.  அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டி விடும். இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

    இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்து விடும்.

    தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு தான் பெண்களுக்கு எடை கூடுகிறது.  வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம்.

    முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம். 
    நுரையீரல் புற்றுநோய் ஆண்கள் , பெண்கள் இருவரையுமே தீவிரமாகத் தாக்கினாலும் 30 - 49 வயது கொண்ட இளம் பெண்களையே அதிகமாக தாக்குகிறது. இதற்கு எது காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.
    52 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை உலக புற்றுநோய் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2030 ஆண்டுக்குள் 43% ஆக அதிகரிக்கும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. இந்த நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டால் உயிரிழப்புகளே அதிகம் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

    இது ஆண்கள் , பெண்கள் இருவரையுமே தீவிரமாகத் தாக்கினாலும் 30 - 49 வயது கொண்ட இளம் பெண்களையே அதிகமாக தாக்குகிறது. அப்படி உலக அளவில் ஐந்தில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால் ஆண்களைக் காட்டிலும் பெண்களையே அதிகமாகவும், விரைவாகவும் பாதிக்கிறது. விரைவில் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறப்பை சந்திப்பதாகக் கூறுகின்றனர்.

    பெண்களைக் கொல்லும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவைதான் பெரிதாக கவனம் பெறுகிறது. ஆனால் நுரையீரல் புற்றுநோய் சத்தமில்லாமல் பரவி வருவதாக கூறுகின்றனர்.

    அதேபோல் நுரையீரல் புற்றுநோய் என்பதும் ஆண் , பெண் இருவருக்கும் வேறுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் பெண்களுக்கு அறிகுறிகள் தென்பட்டாலும் அதை அலட்சியமாகக் கருதுகின்றனர். 
    குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக்கூடாது பக்கவாட்டில் தான் படுக்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இதோ சில உண்மைகள்..!
    கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. பக்கவாட்டில் தான் தூங்கவேண்டும் என்பது தான் அது. இது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது

    * முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 ஆம் மாதத்தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.

    * மல்லாந்து படுத்தால், கருப்பையில் இருக்கும் நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

    * 4 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் எடை கூடும் நிலையில் மல்லாந்து பார்த்தபடி படுத்தால் தாயின் குடல் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.

    * அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் தாயின் உடலில் ரத்த ஓட்டமும் பாதிக்கும்.

    * தாய் பக்கவாட்டில் படுத்திருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போது, அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும். நின்றுக்கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும். (தண்ணீர் பலூனின் இயல்பை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்).

    அதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேய்க்கும் மிகவும் நல்லது. 
    தம்பதியரிடையே விரிசல் ஏற்பட்டால் அதை சரிசெய்யும் அளவுக்கு வீரியம் நிறைந்த மருந்தாக தாம்பத்திய வாழ்க்கை இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்கான மருந்தை அனுபவித்து, ரசித்து ருசிக்கத்தான் பல தம்பதிகளுக்கு தெரிவதில்லை.
    கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படாத அளவுக்கு, இயற்கை தரும் மருந்தாக அமைந்திருப்பது தாம்பத்தியம். தம்பதியரிடையே விரிசல் ஏற்பட்டால் அதை சரிசெய்யும் அளவுக்கு வீரியம் நிறைந்த மருந்தாகவும் இது இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்கான மருந்தை அனுபவித்து, ரசித்து ருசிக்கத்தான் பல தம்பதிகளுக்கு தெரிவதில்லை. பெரும்பாலான தம்பதிகள், தாம்பத்தியத்தை ஆனந்தத்துடன் அணுகாமல் சம்பிரதாயத்துக்காக, இயந்திரத்தனமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    தம்பதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தாம்பத்திய உண்மைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..

    தம்பதிகள் அவ்வப்போது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க, உடல் அழகு அவசியமா? என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். திருமணமான தொடக்கத்தில்தான் அழகுக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நாட்கள் செல்லச்செல்ல படுக்கை அறையில் கணவனும்-மனைவியும் எவ்வளவு மகிழ்ச்சியாக இணைகிறார்கள், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஈர்த்து எவ்வாறு இணக்கமாக செயல்படுகிறார்கள், ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு எப்படி திருப்திபடுத்துகிறார்கள் என்பதுதான் தாம்பத்தியத்தை வெற்றியாக்கும். அந்த வெற்றித் தருணங்களில் அழகு என்ற பேச்சே அடிபட்டுபோகிறது.

    இதை இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், அழகே இல்லாத பெண்களால் சில ஆண்கள் ஈர்க்கப்பட்டிருப்பதை உங்கள் அனுபவத்திலே கண்டிருப்பீர்கள். அதுபோல் அழகற்ற ஆண்களை அழகான பெண்கள் வளைய வருவதையும் காணலாம். அன்பும், அணுகுமுறையும், ஆனந்தமான செயல்பாடுகளுமே தாம்பத்தியத்தை சிறப்பாக்கும்.

    தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களில் முப்பது சதவீத பெண்களே, ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உச்சகட்ட இன்பத்தை அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே நேரம், வாழ்க்கையில் ஒருமுறை கூட உச்சம் அடையாத பெண்களும் இருப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. இது ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம்.

    திருமணமாகும் பெண்கள் முதல் முறையாக உறவு கொள்ளும்போது, கன்னி சவ்வு எனப்படும் ‘ஹைமன்’ கிழிந்து லேசாக இஇரத்த ம் வரும் என்றும், அதனால் வலி ஏற்படும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது தாங்கமுடியாத வலியாக இருப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ‘ஹைமன்’ கன்னித் தன்மையின் அடையாளம் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சவ்வு முதல் உறவில்தான் கிழிபட வேண்டும் என்பதும் இல்லை. பிறவியிலே அந்த சவ்வு இல்லாத பெண்களும் நிறைய இருக்கிறார்கள். விளையாட்டு, உடலை வளைக்கும் பயிற்சிகளால் கூட அந்த சவ்வு கிழிபடுவது உண்டு.

    மார்பகங்களை பற்றிய சந்தேகங்கள் பெண்களுக்கு நிறைய இருக்கின்றன. அதன் வடிவமும், அமைப்பும் பெண்ணுக்கு பெண் மாறுபடும். பாரம்பரியம், கொழுப்பு திசுக்களின் சேர்க்கை, ஹார்மோன்கள் போன்றவற்றின் அடிப்படையில் மார்பகங்களின் வடிவம் அமையும். சிலருக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்காது. லேசான வித்தியாசம் இருந்துகொண்டிருக்கும்.

    மனைவியை கணவனும், கணவனை மனைவியும் அதிக நேரம் கட்டிப்பிடித்தால், அவர்களது தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக அமையும் என்பதை சில ஆய்வுகள் உண்மைதான் என்கின்றன. 20 நிமிடங்கள் மனைவியை கட்டிப்பிடித்தால், அவளது உடலில் ‘ஆக்சிடோசின்’ என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். அது பெண்ணுக்கு அதிக உற்சாகத்தையும், சக்தியையும் தரும். அது போன்ற மாற்றங்கள் ஆணுக்கும் நிகழும். அவ்வப்போது கட்டிப்பிடித்து மகிழும் தம்பதிகளுக்குள் மனநெருக்கம் அதிகமாகும். அதுவே உடல் நெருக்கத்தையும் சிறப்பாக்கும். அதனால் கட்டிப்பிடிப்பதை கணவனும்-மனைவியும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
    இன்னொருவருக்கான குழந்தையை தனது கருப்பையில் சுமக்கும் வாடகைத் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் உணர்வுரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
    இந்தியாவில் திருமணமான தம்பதிகளில் பத்து சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் கர்ப்பம்தரிப்பதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் வாடகைத் தாய்மார்களை நாடுகிறார்கள். பெரும்பாலும் வறுமையில் வாடும் பெண்களே வாடகைத்தாய் ஆவதற்கு சம்மதிக்கிறார்கள். குழந்தைக்கு ஏங்கும் தம்பதியும் வாடகைத்தாயும் நேரடியாக சந்தித்து பேசி, உடன்பாட்டிற்கு வரும்போது பெருமளவு சிக்கல்கள் தோன்றாமல் கர்ப்பமும், பிரசவமும் நிகழ்ந்து இருதரப்பினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் இதில் இடைத்தரகர்கள் தலையிடும்போது பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கிவிடுகின்றன.

    இன்னொருவருக்கான குழந்தையை தனது கருப்பையில் சுமக்கும் வாடகைத் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் உணர்வுரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். ‘வறுமையால் தாய்மையை விலை பேசிவிட்டேனே!’ என்ற குற்றஉணர்வு அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாக மனநல நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். குற்ற உணர்வு ஏற்படக்கூடாது என்பதற்காக பெரும்பாலான தம்பதிகள் தங்கள் உறவினர்களையோ, தெரிந்தவர்களையோ வாடகைத்தாயாக ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அதே நேரத்தில் ‘தெரிந்தவர்களாக இருந்தால், எதிர்காலத்தில் அந்த வாடகைத் தாய்மார்களால் தங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ’ என்ற பயமும் சில தம்பதிகளுக்கு இருக்கிறது.

    வாடகைத்தாய் கருவை சுமப்பதில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை, குழந்தையை ஏற்றெடுக்கும் தம்பதிகளின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருக்க வேண்டியதிருக்கிறது. அந்த தம்பதிகள் வாடகைத் தாயை தங்கள் கண்காணிப்பிலோ அல்லது மருத்துவமனையிலோ பத்து மாதங்களுக்கு மேல் வைத்திருக்கவேண்டியதிருக்கிறது. அத்தனை மாதமும் அனேகமான வாடகைத் தாய்மார்கள் கவலையோடும், மனஅழுத்தத்தோடும்தான் காணப்படுகிறார்கள். அதனால் வாடகைத் தாய்மார்களுக்கும் தம்பதிகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடுகளும், மோதல் போக்கும் ஏற்படுவதுண்டு.

    வாடகைத் தாய்மார்களுக்கு ஏற்கனவே சொந்த குழந்தைகள் இருக்கும். அந்த குழந்தைகள் பட்டினியோடு சொந்த வீட்டில் இருந்துகொண்டிருக்கலாம். வாடகைத்தாய்க்கோ கர்ப்பகாலத்தில் தனி வீட்டில் விலை உயர்ந்த உணவுகள் கிடைத்துக்கொண்டிருக்கும். அப்போது அவள் ஒவ்வொரு கவளம் உண்ணும்போதும் அவளது சொந்த குழந்தைகள் நினைவுக்கு வந்து அதை உண்ண முடியாமலும், ஒதுக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்படும். அந்த தவிப்பு அவளது ஹார்மோன் சுரப்பில் சீரற்ற நிலையை உருவாக்கும். கர்ப்பக் காலத்தில் தாயின் ரத்தம்தான் கர்ப்பப்பைக்கும் போகிறது. அந்த நேரத்தில் தாயின் மனநிலையை பொருத்தே வயிற்றில் இருக்கும் குழந்தையின் மனநிலையும் அமையும்.

    கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மிகப்பெரிய மருந்து, அவளது கணவனின் அருகாமைதான். கணவனின் அருகாமை அவளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும். ஆனால் வாடகைத்தாய்மார்களின் அருகில் அவளது கணவனை நெருங்க அனுமதிக்கமாட்டார்கள். அதுவும் அவளுக்கு மனஅழுத்தத்தை தோற்றுவிக்கும்.

    தனது சொந்த குழந்தையை வயிற்றில் வளர்க்கும்போது அந்த பெண் தாய்மையின் பூரிப்பில் சந்தோஷமாக இருந்திருப்பாள். ‘எப்போது தனது குழந்தையின் முகத்தை பார்ப்போம்’ என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பாள். ஆனால் வாடகைத்தாயிடம் அந்த எதிர்பார்ப்பு எதுவும் இருக்காது. தனது வயிற்றில் அடுத்தவரின் குழந்தை வளர்ந்துகொண்டிருக்கும்போது பெரும்பாலும் அவள், ‘பிரசவம் எப்போது முடியும்? ஒழுங்காக பேசிய பணத்தை தந்துவிடுவார்களா? கணவர் முன்புபோல் முழுஅன்பு காட்டுவாரா?’ என்ற கேள்விகளோடு மனக்குழப்பத்தில் இருந்து கொண்டிருப்பாள்.

    வாடகைத்தாய்க்கு முழு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வழங்குவதுதான் அவளது வயிற்றில் வளரும் தமது எதிர்கால சந்ததிக்கு நல்லது என்பது, அந்த தம்பதிகளுக்கு தெரியும். அதனால் அவர்கள் அவளுக்கு உணவு, பொழுதுபோக்கு, ஓய்வு போன்றவைகளை எல்லாம் வழங்குவார்கள். ஆனால் அவள் மனதோ அந்த பத்து மாத சொகுசை ஏற்றுக்கொள்ள முடியாமல், நாளை என்ன நடக்கும் என்ற ஏக்கத்துடனே இருந்துகொண்டிருக்கும்.

    வாடகைத்தாய் பிரசவித்ததும் அவளிடம் குழந்தையை காட்டுவதில்லை. குழந்தை ஆணா, பெண்ணா என்றும் சொல்வதில்லை. அதை ஏமாற்றமாக எடுத்துக்கொண்டு நிராசையாகிவிடும் பெண்களில் சிலரின் சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் கணவரின் குடும்பத்தினரே அவளது தியாகத்தை மறந்து ‘பணத்திற்காக குழந்தை பெற்றுக்கொடுத்தவள்தானே!’ என்று ஏளனமாக பேசுவதும் உண்டு.

    அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைய பணம் செலவாகும். அதில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் செலவாகிறது. அதனால் இங்கு வாடகைத் தாய்மார்களின் தேவை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இதனை கவனத்தில் கொண்டு இந்தியாவில் வாடகைத்தாய்மார்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் மருத்துவ மையங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் வாடகைத்தாய்மார்களைத் தேடி வரும் வெளிநாட்டு தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குஜராத்தை சேர்ந்த டாக்டர் நைனா பட்டேல் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைத்தாய்மார்களை கருத்தரிக்க வைக்கும் மையத்தை நடத்தி வருகிறார். இது குழந்தை பாக்கியம் இல்லாத வெளிநாட்டினர் அதிகம் பேர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று செல்லும் மையமாக விளங்குகிறது. 
    ×