என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
மாரடைப்பு சமீப காலங்களில் பெண்களுக்கு அதிகம் தாக்குகின்றது என்பது சற்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான். சில வருடங்களுக்கு முன்னர் ஆண்களே இதய நோய் மற்றும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், சமீப காலங்களில் வந்த ஆய்வுகளில் மாரடைப்பினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரனம் பெண்கள் தங்கள் உடல் நிலையை சரியாக பாதுகாக்காமல் விட்டுவிடுவதால்தான் மாரடைப்பில் வந்து முடிகிறது.
மாரடைப்பிற்கும் சாதாரண வாய்வு பிடிப்பு அல்லது வேறு ஏதாவது பாதிப்பிற்கும் வித்தியாசம் தெரியாததால் இது உடல் நிலையை மோசமாகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
திடீரென நெஞ்சு அடைப்பது போல் இருந்தால் இதய நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். உடனே பதட்டப்படாதீர்கள். வாய்வு பிடிப்பு இருந்தாலும் சிலசமயம் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். இதனையும் மாரடைப்பையும் நிறைய பேர் குழப்பிக் கொள்வதுண்டு. நெஞ்சை அடைப்பதுடன் கூடவே மூச்சுத் திணறலும் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.
பெண்களுக்கு சோர்வு உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிக வேலை, மன அழுத்தம், மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது, என சொல்லிக் கொண்டே போகலாம். சரியாக ரத்தம் இதயத்தில் பம்ப் செய்ய முடியாமல் போகும்போது சோர்வு உண்டாகிறது. எனவே அதிக சோர்வும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும்.
தங்க முடியாத தசை மற்றும் தோள்பிடிப்பு இருந்தால் அது இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதனை அஜாக்கிரதையாக விட்டுவிட்டால் மாரடைப்பில் கொண்டு போய்விடும்.

பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது தூக்கமின்மை உண்டாகும். மன அழுத்தம், இதய பாதிப்புகள் இருக்கும்போது தூக்கமின்மை ஏற்படும். நெடு நாட்கள் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களாக இருந்தால் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இடது பக்கம் முழுவதும், தோள்ப்பட்டையிலிருந்து கால் வரை ஒருபக்கமாகவே வலித்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். மாரடைப்பு வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் இடது பக்கம், பின்பக்கம் நடுமுதுகில், என வலி மெதுவாய் படர ஆரம்பிக்கும்.
திடீரென படபடப்பு ஏற்படும். மனப்பதட்டம் கை கால் நடுக்கம் ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறிகளில் ஒன்று. படபடப்பு சில இக்கட்டான சூழ் நிலைகளில் வருவதுண்டு. ஆனால் அதனையும் இந்த படபடப்பையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இதயத் துடிப்பு தாறுமாறாக இருந்தால் அது மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.
மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன் திடீரென நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டவாறு இருக்கும். அடிவயிற்றிலிருந்து நெஞ்சு வரை எரிச்சல் இருக்கும். இத்தகைய சமயத்தில் நீங்கள் உடனே சுதாரித்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நீரிழிவு என்ற வார்த்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் அதுவரை எந்தச் சம்பந்தமும் இருக்காதுதான். தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்சனை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.
குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்rனையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.
ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்… இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.
கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார்? 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்சனைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம். இதற்கு முக்கியமான காரணிகள்…
* குடும்பப் பின்னணியில் நீரிழிவு
* 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்
* திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை
* சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்
* பருமன், அதிக எடை

* முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்
* நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை
* அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு
* பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
* முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்
இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்…கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம். பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.
இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து வலிகளும் பெண்களுக்கும் ஏற்படும் என்றாலும், பருவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வலியால் அதிக அவஸ்தை ஏற்படவும் செய்யலாம்.
இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் :
இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து வலிகளும் பெண்களுக்கும் ஏற்படும் என்றாலும், பருவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வலியால் அதிக அவஸ்தை ஏற்படவும் செய்யலாம். பெண்கள் வீட்டு வேலைகளை செய்கிறார்கள். மாத விலக்கு, கர்ப்பம், பிரசவம், மோனோபாஸ் போன்றவைகளையும் எதிர்கொள்கிறார்கள்.
கர்ப்பத்தின் போது 12 கிலோ வரை பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது. அந்த எடை முதுகுப்பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டு, பிரசவத்திற்கு பிறகு இயல்புக்கு வருகிறது. இந்த மாற்றங்களால், அதிக நேரம் பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் வலி தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஐம்பது வயதை தொடும் மோனோபாஸ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடுவதால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து ‘ஆஸ்டியோபொராசிஸ்’ தோன்றும். அதுவும் வலியை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். அதனால் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெண்கள், அது தொடர்பான வலிகள் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்திவிடக்கூடாது. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வலி நீக்கும் தீர்வுகள் :
எலும்புகளை பலப்படுத்த தினமும் 15 நிமிடங்கள் உடலில் வெயில்படும்படி நடக்க வேண்டும். வெயில் கொண்டால்தான் வைட்டமின்-டி மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் ‘டெபாசிட்’ ஆகும். கால்சியம் உடல்பலத்திற்கு மிக அவசியம்.
வலிக்கான அறிகுறிகள் தென்படும்போது சுயமாக மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எலும்பு சிகிச்சை அளிக்கும் டாக்டரின் நேரடி ஆலோசனையை பெற வேண்டும். ஏன் என்றால் சில பாதிப்புகளை தொடக்கத்திலே உங்கள் டாக்டரால் மாத்திரைகள் மூலமாகவே சரிசெய்திட முடியும். சிலருக்கு பிசியோதெரபி தேவைப்படும். எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்து மேற்சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

மாதவிடாய் மாதந்தோறும் 28 நாள்கள் அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை வந்தால் அது ஒழுங்கானதா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மாதந்தோறும் 28 நாள்கள் அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை வந்தால்தான் அது ஒழுங்கான மாதவிடாய் என்கிற கருத்து, பல காலமாக நம் எண்ணங்களில் இருக்கிறது. மருத்துவரீதியாக அது உண்மைதானா? இன்றைய வாழ்க்கைமுறையால் மாதவிடாய் ஒழுங்கில் மாற்றங்கள் நிகழ்வது பயப்படும் விஷயமா என்பது குறித்து பார்க்கலாம்.
"மாதந்தோறும் 28 அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை வருவதை ஒழுங்கான மாதவிடாய் எனச் சொல்வது சரிதான். ஆனால். அது மட்டுமே ஒழுங்கான பீரியட்ஸ் கிடையாது. 30 நாள்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வருபவர்களுக்கு மாதந்தோறும் ஒரே தேதியில் ஏற்படலாம். இதுவே 28 நாள்களுக்கு ஒருமுறை வருபவர்களுக்கு எப்படி ஒரே தேதியில் வரும்? ஆனால், அதுவும் ஒழுங்கான மாதவிடாய் என்பது காலங்காலமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணுக்கு ஜனவரி 28-ம் தேதியில் பிரீயட்ஸ் வருகிறது என்றால், பிப்ரவரியில் 26-ம் தேதியே வந்துவிடும். அடுத்த மாதம் இன்னும் இரண்டு நாள்கள் முன்னதாக வரும். இதுவும் ஒழுங்கான மாதவிடாய்தான்.
21 நாளிலிருந்து 35 நாள்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வருவது என்பதே நார்மலான விஷயம்தான்.
அப்படியானால் மாதவிடாய் பிரச்னை என்பதுதான் எது? 21 நாள்களுக்கோ, 35 நாள்களுக்கோ ஒருமுறை வந்துகொண்டிருந்த மாதவிடாய், திடீரென்று 40 நாள்கள் தள்ளியோ அல்லது இஷ்டத்துக்கு மாறி வந்தால், உடம்பில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உங்கள் உடம்புக்கு என ஒரு சைக்கிள் இருக்கும். அது மாறாமல் தொடர வேண்டும், அவ்வளவுதான். இது தவறுகிறபட்சத்தில், தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை, பாலிசிஸ்டிக் ஓவரிக்கான ஸ்கேன், கொலாஸ்டின் ஹார்மோன் டெஸ்ட் போன்ற மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
இன்றைய பரபரப்பான காலத்தில், ஸ்ட்ரெஸ் காரணமாகவே பெரும்பாலும் ஒழுங்கற்ற பீரியட்ஸ் உண்டாகிறது. அடுத்து, நைட்ஷிப்ட் வேலை. பகல் வெளிச்சத்தில் வேலை செய்வதும், இரவின் இருளில் ஓய்வும் உறக்கமும் எடுப்பதுமே இயற்கை உருவாக்கியிருக்கும் ரிதம். இது, இன்றைய நவீன யுகத்தில் மனிதர்கள் மாற்றியமைக்கும்போது ஹார்மோன்களில் சுருதி தப்புகிறது. இதுவே இர்ரெகுலர் பீரியட்ஸாக மாறுகிறது.
ஒரு பெண்ணுக்கு வருடத்துக்கு 11 முதல் 13 மாதவிலக்குகள் வந்தால், 'ஷீ இஸ் ஃபைன்' என்று அர்த்தம். சிலருக்கு 10 நாள்கள், 12 நாள்களிலேயே பீரிய்ட்ஸ் ஆகும். இதுவே அப்நார்மல். ஆனால், பெரிய மனுஷியான முதல் வருடத்திலிருந்தே 7 நாள்களில் பீரியட்ஸ் வரும். இது நார்மல்தான். அப்போது, 2 முதல் 7 நாள்கள் வரை பீரியட்ஸ் ஆவது என்பது அவரவர் குடும்ப மரபணுவைப் பொறுத்தது. இதில் பயப்பட ஒன்றுமில்லை.

பெண்களை மிரட்டும் புற்றுநோய்களில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களை மிரட்டும் புற்றுநோய்களில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது. உலகெங்கிலும் ஆண்டுதோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் உயிரை இந்நோய் பறிக்கிறது.
99 சதவீதம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற நுண்கிருமியால் உண்டாகிறது.
இந்நிலையில், உலகில் கர்ப்பப்பைவாய் புற்று நோயில்லாத முதல் நாடு என்ற பெயரை ஆஸ்திரேலியா பெறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய்க்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 2007-ம் ஆண்டு ஆண், பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டது. அதனால் ஆஸ்திரேலியாவில் இந்நோய் பாதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் 18 முதல் 24 வயது வரையிலான ஆஸ்திரேலிய இளம்பெண்கள் மத்தியில் இந்நோயின் விகிதம் 22.7 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த தடுப்பூசித் திட்டத்துக்கு முன் ஆஸ்திரேலிய இளவயதினரில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்நோய் பாதிப்புக்கு ஆளானது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
தற்போது, குறிப்பிட்ட தடுப்பூசியினால் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியால், உலகிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோயில்லாத முதல் நாடாகும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆண்டுதோறும் செய்யும் மருத்துவப் பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெண்களின் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள் மாதவிடாய் காலங்களில் அடிவயிறு வலி, வீக்கம் ஆகியவை ஏற்படுவதோடு கருத்தரித்தலுக்கும் தடையாக அமைகின்றன.
பெண்களின் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள் பற்றி அப்பல்லோ மருத்துவமனையின் பெண்மை பிணியியல் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்ததாவது:
பொதுவாக, பூப்பெய்திய பெண்களில் நான்கில் ஒருவருக்கு கருப்பை கட்டி பிரச்சினைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அவை புற்று நோய் அல்லாத சாதாரண கட்டிகளாக கருப்பை, அதன் உட்புற சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்களிலும் உருவாகின்றன. அதனால், மாதவிடாய் காலங்களில் அடிவயிறு வலி, வீக்கம் ஆகியவை ஏற்படுவதோடு கருத்தரித்தலுக்கும் தடையாக அமைகின்றன. மேலும், அவை உருவாகியுள்ள இடம் மற்றும் அளவு ஆகியவற்றை பொறுத்து பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படலாம்.
கருப்பை நீர்க்கட்டிகளை தக்க மருத்துவ பரிசோதனை மற்றும் ‘அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ மூலமாக கண்டறியலாம். அளவில் பெரியதாகவும், ரத்தப்போக்கை உண்டாக்குவதாகவும் உள்ள நீர்க்கட்டிகளுக்கு மட்டும் அறுவை சிகிச்சை தேவைப்படும். மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றால் ஏற்படும் வலியை குறைக்க இயலுமே தவிர அவை மறையாது.
அதற்கான சிகிச்சை முறைகளில் அதிநவீன ’லேப்ராஸ்கோபிக்’ மற்றும் கணினி மூலம் செய்யப்படும் ‘ரோபோடிக் சர்ஜரி’ ஆகியவை இன்று முக்கியமாக இருக்கின்றன. அவற்றின் மூலம் சுலபமாகவும், துல்லியமாகவும் அறுவை சிகிச்சையை செய்து கொண்டு விரைவில் வீடு திரும்பி, வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட முறைகள் மூலம் மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் அவற்றை தக்க முறையில் கவனித்து சரி செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

பல்வேறு காரணங்களால் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் மேல் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை என்பவர்களுக்கு இந்த டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறை பொருந்தும்.
திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை என்றாலோ, ஐ.யூ.ஐ. என்ற சிகிச்சையை 6 முறை எடுத்து தோல்வி கண்டவர்களுக்கோ, விந்தணு எண்ணிக்கையில் முன்னேற்றம் கிட்டாதவர்களுக்கோதான் இவ்வித சிகிச்சை பொருந்தும்.
அதே போல் பெண்களிடத்தில் ஒரு பிரிவு பெண்களுக்கு கருமுட்டை வெடிப்பதில் பிரச்சினை இருந்தாலோ, சினைக் குழாயில் அடைப்பு இருந்தாலோ, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டாலும், மீண்டும், மீண்டும் கருக்குழாயில் கட்டிகள் தோன்றினாலோ இவ்வித சிகிச்சையில்தான் பலன் பெற இயலும்.
ஹார்மோன் ஊசி மூலம் கரு முட்டையை உற்பத்தி செய்து, குறிப்பிட்ட நாளில் அதை ஸ்கேன் மூலம் பரிசோதித்து எடுத்து வைத்துக் கொண்டு, அதனுடன் கணவனிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவை சுத்திகரித்து சேமித்து வைத்திருப்பதை இணைப்போம். இதன் மூலம் ஆரோக்கியமான விந்தணுவும், கரு முட்டையும் ஒன்றிணையும் வாய்ப்பை உருவாக்குகிறோம். ஒரு சிலருக்கு ஆரோக்கியமான விந்தணுவின் நீந்தும் திறன் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் போது, அதனை கரு முட்டையில் நேராக ஊசி மூலம் செலுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பையும் உருவாக்கப்படும்.
கருத்தரிப்பு நடந்த பின் அந்த கரு முட்டையை இன்குபெட்டரில் வைத்து கண்காணிக்கப்படும்.. அதன் பிறகு கருவை பெண்ணின் வயிற்றில் பொருத்தி கருவுற வைத்து பிரசவிக்கிப்படும்.
20 முதல் 50 வயது வரை வரை உள்ள பெண்களின் ஏகோபித்த ஆசை தாய்மை அடைவது. அதே சமயத்தில் குழந்தையின்மைக்கான காரணத்தை கண்டறிந்து அது ஆண்களிடத்தில் இருந்தாலும் சரி, பெண்களிடத்தில் இருந்தாலும் சரி. அதனை முதலில் கண்டறிவது தான் முதல் கட்ட சிகிச்சை.
டாக்டர் எஸ்.சந்திரலேகா

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது.
இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். உற்சாகத்தை அதிகரிக்கும்: இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்.
இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்.

கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் உற்சாகம் இழந்தும் காணப்படுவார்கள்.
மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குடும்ப சுகாதார மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 49 வயதுவரை உள்ள இந்திய தாய்மார்களில் 50 சதவீதம் பேர் ரத்தச்சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. உடலில் உள்ள ரத்த நாளத்தின் வேலை என்பது ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதாகும். உடலுக்கு போதிய இரும்புச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதபோது ரத்தச் சோகை ஏற்படுகிறது.
இதன்காரணமாக ரத்த நாளங்கள் உடல் முழுவதும் போதிய அளவு ஆக்சிஜனை எடுத்து செல்ல முடியாமல் போகும். இதனால் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படும். கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் உற்சாகம் இழந்தும் காணப்படுவார்கள். இதனால் கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த தாயின் நலனை சார்ந்தே உள்ளது.
பெண்களுக்கு சராசரியாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவைவிட 22 சதவீத பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் 11 வயதுக்கு உட்பட்ட 58 சதவீத இந்திய குழந்தைகள் ரத்தச் சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட இந்தியப் பெண்கள் 53 சதவீதம் பேர் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தலைமுறை குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதே குறைந்துவிட்டது. வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடினால்தான் அவர்களால் எந்த அளவுக்கு, எவ்வளவு மணி நேரம் விளையாட முடிகிறது என்பதைக் கண்காணிக்க முடியும். அல்லது விளையாடி கொண்டிருக்கும்போதே குழந்தைகள் சோர்வாகி விடுகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும். ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வீடியோ கேம், கைபேசிகளுடன் பொழுதை கழிக்கிறார்கள். இதனால் இன்றைய குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் கண்டு பிடிப்பதே கஷ்டமாக உள்ளது.
ரத்தச்சோகை குறைபாடுடைய குழந்தைகளுக்கு கவனச் சிதறல், ஞாபக ஆற்றல் குறைவாக இருக்கும். வீட்டுப்பாடம், ஓவியம் வரைதல் போன்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கவனம் செலுத்தி செய்யும் விஷயங்களை, அவர்களால் செய்ய முடியாது. குறிப்பாக 8 முதல் 12 வயதுள்ள பெண் குழந்தைகளுக்குத்தான் அதிக அளவு ரத்தச் சோகை பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுவாக பெண் குழந்தை பருவம் அடையும்போது இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக இரும்புச் சத்துள்ள கீரை, பழங்கள், பேரீச்சை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். சரியான மருத்துவ வழிமுறைகளைப்பின்பற்றி, ரத்தச்சோகையின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்வதை உறுதி செய்யவேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். அவை கர்ப்பிணி பெண்களுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் நலம் சேர்க்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். அவை கர்ப்பிணி பெண்களுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் நலம் சேர்க்கும். முக்கியமாக ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு கர்ப்பிணி பெண்களின் உடலுக்கு கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். பிரசவத்திலும் சிக்கல் ஏற்படும். கர்ப்பகாலத்தில் பெண்கள் தவிர்க்காமல் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுவகைகள் குறித்து பார்ப்போம்.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கு புரதம் மிக அவசியமானதாகும். அது குழந்தைக்கு மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களுக்கும் இன்றியமையாதவை. கொழுப்பு குறைந்த இறைச்சியில் நல்ல தரமான புரதம் கலந்திருக்கும். முட்டை, பால், கொட்டை வகைகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.
மீன் வகைகளில் புரதமும், கால்சியமும் அதிகம் கலந்திருக்கும். அதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை மற்றும் கண்களுக்கு நலம் சேர்க்கும். குழந்தைக்கு தேவையான புரதத்தையும் வழங்கும்.

துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு போன்றவை புரத சத்து அதிகம் கொண்டவை. அவற்றுள் போலிக் அமிலமும் உள்ளடங்கி இருக்கிறது. சோயா பீன்ஸ், ராஜ்மா போன்றவற்றிலும் புரதம் நிரம்பியிருக்கிறது.
கீரைவகைகள், பச்சை காய்கறிகள், ப்ராக்கோலி போன்றவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் கே, சி, ஏ, கால்சியம், பொட்டாசியம் போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அவை கொண்டிருக்கின்றன. இரும்பு சத்தும் மிகுந்தவை. தாய், சேய் இருவருக்கும் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்திற்கு மேற்கண்ட உணவுகள் துணைபுரியும்.
முழு தானியங்களில் போலிக் அமிலம், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். மைதா மற்றும் மற்ற மாவு வகைகளுக்கு பதிலாக ராகி, சோளமாவை பயன்படுத்துவது நல்லது.
கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமானது. குறிப்பாக கர்ப்பிணியின் எலும்புகள் மற்றும் குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் பங்களிப்பு இன்றியமையாதது. பால் மற்றும் பால் பொருட்கள், குறைந்த கொழுப்புள்ள தானியங்கள், பன்னீர் போன்றவற்றில் கால்சியம், புரதம் அதிகம் சேர்ந்திருக்கும். அவைகளை தவிர்க்கக்கூடாது.

கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பும் முன்னர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது. முக்கியமாக, மருத்துவமனை பணி நேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.
‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.
கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.
மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.
மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

கருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு அபார்ஷன் உடல் அளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சில காம்ப்ளிகேஷன்களை ஏற்படுத்தக்கூடிய அபார்ஷன் ஒன்றும் சாதாரண விஷயமில்லை. எனவே, அபார்ஷன் என்ற முடிவை எடுக்கும் முன்பு நூறு தடவை யோசிப்பது நல்லது. இதைத் தடுப்பது அதைவிட நல்லது. அபார்ஷனால் ஏற்படும் காம்ப்ளிகேஷன்களைத் தெரிந்துகொண்டால், இதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு தானாகவே வரும்.
கர்ப்பத்தை கணவனும், மனைவியும் சரியான நேரத்தில் பிளான் செய்யாததுதான் அபார்ஷனுக்கு முதல் காரணம். கருத்தரித்த பிறகு குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்ற சிந்தனையில் சில தம்பதிகள் இருப்பதுண்டு. இதனால் கடைசி நிமிஷத்தில் முடிவு எடுத்து அபார்ஷனில் கொண்டு நிறுத்தி விடுகிறார்கள். கருத்தரிக்கும் முன்பே குழந்தை அவசியமா? இல்லை தள்ளிப்போடலாமா என்று யோசித்து அதற்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.
கருத்தடை சாதனம் பயன்படுத்தாமல் கருத்தரித்து கணவனும், மனைவியும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அதை கலைக்க முடிவெடுத்தால், இரண்டரை மாதத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வதே பாதுகாப்பானது. கருக்கலைப்பு செய்து கொள்ளலாமா என்ற டயலமாவில், இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை தவறவிட்டு, மூன்று மாதத்தில் கருக்கலைப்பு மருத்துவரை அணுகினால், காம்ப்ளி கேஷன்கள் அதிகமாகிவிடுகிறது.
சரி… கருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய சில பின் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
* கருப்பையில் இரத்த கட்டிகள் (blood clots) ஏற்படக்கூடும்.
* கருப்பையிலும் அதைச் சுற்றியுள்ள இழைகளிலும் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்..
* ஒரே கலைப்பில் கரு கலையாமல் மறுபடியும் கருக்கலைப்பு செய்ய வேண்டிவரும்.
* கருப்பை வாயில் (cervix) கிழிந்து போகலாம். ஆனால், இதை தையல்கள் மூலம் சரிசெய்து விடலாம்.
* கருப்பை சுருங்காமல் அதீத இரத்தப்போக்கு ஏற்படும். அதிகப்படியான இரத்தப்போக்கினால் உடல் பலவீனமாகிப் போகும்.
* கருக்கலைப்பு முழுமையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை பதினான்கு நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்க்கத் தவறினால், கர்ப்பம் தொடரும் வாய்ப்பு உண்டு.

கருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். அவை…
* அதிகப் படியான வயிற்றுவலி.
* காய்ச்சல்.
* பீரியட்ஸ் சமயத்தில் அதீத இரத்தப்போக்கு, ரொம்பவும் தாங்கமுடியாத அதிகப்படியான பிளீடிங் இருந்தால்,
* கருக்கலைப்பு செய்துகொண்டப் பிறகும் கர்ப்பத்தின் அறிகுறிகள் தொடர்வது.
இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.
கருக்கலைப்பில் நீங்கள் யோசிக்க வேண்டிய மற்றுமொரு விஷயமும் உண்டு. கல்யாணமாகி உண்டான முதல் கருவைக் கலைத்தால், அடுத்து குழந்தைப் பேறு அடைவதில் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதைச் சரிப்படுத்துவதில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிவரும். அடுத்து, அடிக்கடி செய்யப்படும் கருக்கலைப்பினால் கருக்குழாயில் அடைப்புகள் ஏற்படலாம்.
ஒருமுறை கருக்கலைப்பு செய்துகொண்ட பின்பு அடுத்து ஆறு மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது. சில நேரங்களில் கருக்கலைப்பு அவசியம் தேவைப்படும். தாய்க்கு இருதய நோய், டயாபடீஸ், ஹைபர்டென்ஷன், பிறப்பு உறுப்பில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எபிலெப்ஸி, கருத்தரித்த நாளிலிருந்து கண்ட்ரோல் பண்ணமுடியாத வாமிட்டிங், இதுபோன்ற கேஸ்களில், தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவர்களே கருக்கலைப்புக்குப் பரிந்துரைப்பார்கள்.
இந்தச் சூழ்நிலையில் கருக்கலைப்புக்குச் சம்மதிக்காமல் போனால், தாயின் உயிருக்குப் பாதகமாகிவிடும். இதுபோன்ற கேஸ்களில் கர்ப்பத்தைத் தொடரவிட்டால், குழந்தை மனவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் குன்றியே பிறக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்!