என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘ஆப்பிள் போன்ற கன்னங்களை கொண்டவர்’ என்றும், ‘பப்பாளி போன்ற பள பளப்புக்கு சொந்தக்காரர்’ என்றும், ‘தக்காளி போன்ற சிவந்த உதடுகளை பெற்றவர்’ என்றும் வர்ணிப்பார்கள்.
    அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘ஆப்பிள் போன்ற கன்னங்களை கொண்டவர்’ என்றும், ‘பப்பாளி போன்ற பள பளப்புக்கு சொந்தக்காரர்’ என்றும், ‘தக்காளி போன்ற சிவந்த உதடுகளை பெற்றவர்’ என்றும் வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு ஆப்பிள், பப்பாளி, தக்காளி போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.

    வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’

    நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.

    பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கறுப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.

    மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.

    இளமைக்கு தர்பூசணி கலவை

    தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது.

    ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும்.

    தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.

    சுருக்கத்தைபோக்கும் தக்காளி

    தக்காளி சாறும், சம அளவில் எலுமிச்சை சாறும் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தேய்க்கவேண்டும். பத்து நிமிடங்கள் கடந்ததும் கழுவி அப்புறப்படுத்தவேண்டும். இரவில் தூங்கு வதற்கு முன்னால் இதை செய்வது நல்லது. தக்காளி சாறு, தயிர், மஞ்சள் தூள் ஆகியவைகளை கலந்து சருமத்தில் பூசினால் நிறம் மேம்படும். சரும சுருக்கங்களை போக்க தக்காளிபழத்துடன் சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து அரைத்து சருமத்தில் தேய்க்கவேண்டும். ஒரு தக்காளி பழம், ஒரு கேரட் இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி தினமும் பருகிவரவேண்டும். பருகினால் சருமத்திற்கு நிறமும், ஜொலிப்பும் கிடைக்கும்.

    அழகுதரும் ‘ஆப்பிள் பேக்’

    ஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி, சிறிதளவு தேனில் கலந்து குழைத்து சருமத்தில் பூசி இருபது நிமிடம் வைத்திருந்து கழுவுங்கள். சருமத்தில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை இதுபோக்கும். ஆப்பிளையும், நேந்திரம் பழத்தையும் சம அளவில் எடுத்து சிறிதளவு பால் ஆடை கலந்து ‘பேக்’ ஆக முகத்தில் பூசவேண்டும். அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் சருமம் பொலிவுபெறும்.
    கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
    1. கிரீன் டீ தூளை சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள்.

    2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள்.

    3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள்.

    4. அதனையும் நன்கு கலந்து முகம் முழுவதும் பூசுங்கள்.

    5. 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.

    6. முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.

    7. பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

    கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். எனினும் இந்த பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதால் பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
    தர்பூசணி அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது. இன்று தர்பூசணி பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது.

    ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும்.

    தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.
    சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்துபோகும் பிரச்சினை ஏற்படும். அவர்கள் வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தியே இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
    நகங்களை சுற்றி இருக்கும் தோல் பகுதி சிலருக்கு உறிந்துகொண்டே இருக்கும். சிலருக்கு நகம் உடைந்துபோகும் பிரச்சினை உண்டு. வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தியே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

    நகங்களின் பக்கவாட்டில் ஏற்படும் சரும உதிர்தலுக்கு பப்பாளி, அன்னாசி பழங்களை பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் அன்னாசி பழ ஜூஸுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பப்பாளி சாறை கலந்து கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை ஒரு டேபிள்ஸ்பூன் வினிகரில் கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த கலவையுடன் பழ கூழை கலந்து நகங்களின் சுற்றுப்புற பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நகங்களின் சுற்றுப்புற பகுதி மென்மையாக மாறிவிடும். நகமும் பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும். சரும உதிர்வு பிரச்சினையும் ஏற்படாது.

    நகங்கள் உடைந்துபோவதை தடுக்கவும் முட்டையின் மஞ்சள் கருவை உபயோகப்படுத்தலாம். அரை கப் தேனுடன், அரை கப் விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள்கரு, ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு ஆகியவற்றை கலந்து பாட்டிலில் ஊற்றிவைக்க வேண்டும். அதனை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு நகங்களில் தடவி வந்தால் நகம் உடைதல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தியும் நகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம். எலுமிச்சை பழத்தின் தோல் பகுதியையும் நகங்களில் தடவி வரலாம். அதற்கு நகம் உடைதல், நகவெடிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
    விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.
    ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை. ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.

    ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர்.

    பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம். வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன.

    கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது. உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை.

    பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.
    நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும்.
    அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘பப்பாளி போன்ற பளபளப்புக்கு சொந்தக்காரர்’ என்று வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு பப்பாளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’

    நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.

    பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கருப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.

    மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.
    அதிகபட்ச கலைநயத்துடன் கண்கவர் வடிவமைப்பு, மேம்பட்ட நேர்த்தியான நகைகள் என்றவாறு பிளாட்டின நகைகள் அன்பின் வெளிப்பாட்டை பரிமாறும் வகையில் கலை வல்லுனர்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
    பிளாட்டினம் அதி உன்னதமான இயற்கையான வெள்ளை உலோகம் ஏனென்றால் 95 சதவீதம் தூய்மையான உலோகம். இது காலத்தால் மங்காத தன்மை கொண்டது. உலகின் மிகச்சிறந்த நகை வடிவமைப்பாளர்கள் பிளாட்டினத்தைகொண்டு விதவிதமான மாடல்களில் நகைகள் உருவாக்குகின்றனர். விலையுர்ந்த உயோகமான பிளாட்டினம் மிக சிறிய அளவில் மட்டுமே கிடைக்கின்றன. அதாவது தங்கம் வெட்டி எடுக்கப்படும் அளவுகளை விட 30 மடங்கு குறைவான அளவே பிளாட்டினம் கிடைக்கின்றன.

    கிடைப்பதற்குரிய உலோகமான பிளாட்டினத்தை அன்பின் பரிசாக, அன்பின் அடையாளமாக கொண்டு நகைகள் வடிவமைக்கப்படுகின்றது. மிக உறுதியான வெள்ளை உலோகமான பிளாட்டின நகைகள் எந்த வகையிலும் அதன்வடிவத்தில் மாற்றம் பெறாத தன்மை கொண்டது. இதன் திடத்தன்மை அதிகமாக காட்சி தருவதால் சிறிய எடை கொண்ட நகை கூட பெரிய அளவிலானதாக தெரியும். நாம் எவ்வளவு நாள் அணிந்திருந்தாலும் உடல் சருமத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. இதன் காரணமாக பிளாட்டினம் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்கும் நகையாகவே விளங்குகிறது.

    பிளாட்டின நகைகளின் அணிவகுப்பு

    பிளாட்டின நகைகள் என்பது ஆண்,பெண் இருபாலருக்கும் ஏற்றவாறு அழகிய நகைகளாக உருவாக்கப்படுகின்றன. அதாவது மோதிரம், நெக்லஸ், காதணி, செயின், பிரேஸ்லெட் என்றவாறு அனைத்து நகைகளும் பிளாட்டினத்தில் ஜொலிக்கின்றன. இவையனைத்தும் நமது பாரம்பரிய தங்க நகைகள் போல் வடிவமைக்கப்படாது தனிப்பட்ட நேர்த்தியுடன் கூடுதல் வடிவமைப்பு உத்தியுடன் அதிக கவனத்துடன் இதன் நகை உருவாக்கம் உள்ளது. பார்த்தவுடன் மனதை மயக்கும் வகையிலும் பிரம்மிப்பூட்டும் வகையிலும் நகைகள் உள்ளன.

    நேர்த்தி மிகு நெக்லஸ் ஜோடி நகைகள்

    நெக்லஸ் செட் நகைகள் என்பது அதே வடிவமைப்புடன் கூடிய அழகிய காதணியும் இணைந்தவாறு கிடைப்பது. இதில் ஒவ்வொரு நெக்லஸ்-ம் ஒரு ஓவியம் போல் அழகுடன் உள்ளன. மெல்லிய அளவில் இரட்டை அடுக்கு கொண்ட நெக்லஸ் அமைப்பில் சிறு மொட்டுகள் மற்றும் இதழ்கள் உள்ளது போன்று இருபுறமும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சிறு மொட்டுகளின் நடுவே சிறு வொர்க் கற்கள் பதியப்பட்டுள்ளன. அதாவது சிறு கொடி ஒன்று இரு வளைவுகளில் படர விட்டபடி தனித்துவ சிற்பம் போல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இது போல் இதழ்களுடன் தொங்கும் படியான காதணியும் இணைப்பாக கிடைக்கின்றன. இதுபோன்று சில நெக்லஸ்கள் ஒற்றை வரிசையின் சிறு சிறு மொட்டுகள் இணைப்புடன் நடுவில் வட்ட வடிவ ஹை கற்கள் பதியப்பட்டவாறு அழகுடன் உலா வருகின்றன. இதன் நடுப்பகுதியில் புதிய வடிவமைப்பிலான பதக்கங்கள், பெனன்ட் இணைந்தவாறு உருவாக்கப்படுகின்றன. இந்த பெனன்ட் என்பதில் நிறைய வைரங்கள் பதியப்பட்ட பூக்களும், உருவங்களும் பிரதான இடம் பிடிக்கின்றன. கம்பிகள் இணைந்த மூன்றடுக்கு மணிகள், சுருள் சுருளான நெக்லஸ்கள் போன்றவை ரோஸ் பந்துகள் ஆங்காங்கே பதிய விட்டப்படி அழகிய நேர்த்தியுடன் காட்சி தருகிறது.

    வலைப்பின்னல் பிரேஸ்லெட்கள்

    பிரேஸ்லெட்டுகள் என்பது செயின் அமைப்பின் படர விடப்படாது வளையல் அமைப்பில் மாட்டும்படி அழகான வித்தியாசத்தில் வடிவங்குளுடன் உலாவருகின்றன. அதாவது பாதி பகுதி மெல்லிய கம்பி அமைப்பு, மீதி பாதியில் அகல வடிவில் பல கம்பிகள் இணைந்தவாறு உருவாக்கம் செய்யப்பட்டு அதன் நடுவே வைரக்கற்கள் வைத்து அதன் உருவத்தை மேம்படுத்தியுள்ளனர். மெல்லிய செயின் அமைப்பில் நடுவே பூக்கள் மற்றும் நாற்கோண அமைப்புகள் ஹை கற்கள் பதித்தபடியான பிரேஸ்லெட்கள் அழகுற உள்ளன. மேலும் நடுப்பகுதியில் அழகிய பந்துகள், வண்ணப்பந்துகள், அகலமான பட்டை பதக்கங்கள் கொண்ட பிரேஸ்லெட்டுகளாக வருகின்றன. ஒரே மாதிரியான வளையங்கள் பின்னப்பட்டவாறு உள்ள பிரேஸ்லெட்டுகளில் ஒவ்வொரு வளையத்தில் இருபகுதிகளிலும் வைரகற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

    ஆண்களுக்கான பிளாட்டின நகைகள்

    ஆண்கள் பயன்படுத்த ஏற்ற வகையில் விதவிதமான செயின்கள், பிரேஸ்லெட்கள், மோதிரம் மற்றும் சூட் பட்டன்கள், பதக்கங்கள் பிளாட்டினத்தில் உருவாக்கித்தரப்படுகிறது. ஆண்கள் அணிய ஏற்றவாறு மெல்லிய வடிவமைப்பு செயின்கள் வித்தியாசமான டிசைன்களில் கிடைக்கின்றன. ஆண்களின் ஆளுமையை பிரதி பலிக்கும் வகையிலான இதன் தோற்ற அமைப்பு மாறுபட்ட வகையில் உள்ளன. சிறு சிறு வேறுபட்ட அளவுடைய கம்பி வளைவுகள், பந்துகள், கூம்பு வடிவங்கள் இணைக்கப்பட்ட செயின்கள் நடுநடுவே ரோஸ் கோல்டு வண்ண பூச்சு செய்யப்பட்டவாறு வருகின்றன.

    ஆண்களுக்கான பிரேஸ்லெட்கள் என்பது பட்டையான செயின்கள் கொண்டவாறு அதில் விதவிதமான புதிய விடிவமைப்புகள் செய்யப்பட்டவாறு உள்ளன. அதுபோல் திரட் அமைப்பிலான சுருள் பிரேஸ்லெட்கள் கயிறு போன்று கனமான உருளை அமைப்புடன் அதிக பின்னல்கள் மற்றும் நெகிழ்வு தன்மை கொண்டவாறு உள்ளன. அதிகபட்ச கலைநயத்துடன் கண்கவர் வடிவமைப்பு, மேம்பட்ட நேர்த்தியான நகைகள் என்றவாறு பிளாட்டின நகைகள் அன்பின் வெளிப்பாட்டை பரிமாறும் வகையில் கலை வல்லுனர்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
    உங்களுக்கு வைட்டமின் சத்து குறைவாக இருக்கின்றதா என்பதனை அறிந்து தேவையான வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
    முடியின் வேர்கால் பலவீனப்படுவதாலும் ராசயனம் பொருட்கள் படுவதாலும் முடி கொட்டுகின்றது. வேர் கால்களை பலப்படுத்தவும். முடியினை ரிப்பேர் செய்யவும், முடி வேர்க்காலுக்கு நல்ல டானிக் அளிக்கக் கூடியதுமான ஒன்றுதான் கறிவேப்பிலை. முடியின் வேர் வலுப்பட்டாலே முடி வளர்ச்சி கூடும். முடி கொட்டுவது நிற்கும். இதிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கறிவேப்பிலை பொடுகுத் தொல்லையினையும் அடியோடு நீக்கும்.

    கைப்பிடி அளவு கறிவேப்பிலையினை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எண்ணெய் கருத்தவுடன் ஆற விட்டு தலையில்தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் சென்று தரமான ஷாம்பு கொண்டு தலையினை அலசி விடவும். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு நீங்கும். நரை தவிர்க்கப்படும். முடி நன்கு வளரும்.

    கறிவேப்பிலையினை நன்கு அரைத்து அதில் சிறிது தயிரினைக் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து தலையினை நன்கு அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய முடி செழித்து வளரும்.

    டீ ஷர்ட் போன்ற மென்மையான துணியினால் ஈரத்தலையினை துடைக்க வேண்டும். இயற்கையான காற்றில் தலை ஈரம் காய்வதே சிறந்தது. மரசீப்பினை உபயோகிப்பதே சிறந்தது.

    இழுத்து இறுக்கமாக போடும் போனிடெயில் முடிக்கு நல்லது.

    வைட்டமின் ஈ எண்ணெயினை சில துளிகள் தலையில் தடவவும்.

    எப்போதும் கவலை கவலை என்று கவலையில் மூழ்காதீர்கள். முடி கொட்டித் தள்ளி விடும்.

    உங்களுக்கு வைட்டமின் சத்து குறைவாக இருக்கின்றதா என்பதனை அறிந்து தேவையான வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
    ஒரு கடைக்குள் நுழைந்து சேலைகளை பார்க்கும் பொழுது சேலைகளில் இத்தனை வகைகளா என்று மலைக்கத் தோன்றுகின்றதல்லவா? இன்று காட்டன் சேலைகளில் இருக்கும் வகைகளை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...
    ஒரு கடைக்குள் நுழைந்து சேலைகளை பார்க்கும் பொழுது சேலைகளில் இத்தனை வகைகளா என்று மலைக்கத் தோன்றுகின்றதல்லவா? ஆமாம் காட்டன் சேலைகளில் பல வகைகள். பட்டுச்சேலைகளில் இருக்கும் வகைகளோ இன்னும் ஏராளம்.

    காட்டன் சேலைகளில் இருக்கும் வகைகளை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

    கோவை காட்டன்:- கொங்கு நாடான கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய கோவை காட்டன் சேலைகள் மென்மையாகவும், அழகான நூல் மற்றும் ஜரி வேலைப்பாடுகளுடனும் கிடைக்கின்றன. இவ்வகை காட்டன் சேலைகளின் வண்ணமும் மிகவும் கான்ட்ராஸ்டாக பார்ப்பவரை கவரும் வகையில் உள்ளது. இவ்வகை சேலைகள் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.

    காட்டன் சில்க்:- காட்டனும் பட்டும் சேர்ந்து தயாரிக்கப்படும் காட்டன் சில்க் சேலைகள் அணிந்தவருக்கு அட்டகாசமான தோற்றத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அருமையான வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தை தருபவையாக காட்டன் சில்க் சேலைகள் இருக்கின்றன. இவை திருமணம், பார்ட்டி விழாக்கள் என அனைத்து விசேஷங்களுக்கும் அணிவதற்கு ஏற்றாற் போல் தயாரிக்கப்படுகின்றன.

    கேரளா காட்டன்:- எல்லோராலும் விரும்பி அணியப்படும் கேரளா காட்டன் சேலைகள் பெரும்பாலும் சந்தனம் அல்லது ப்யூர் வொய்ட் நிறத்தில் அகலமான ஜரி பார்டர்களுடன் முந்தி மற்றும் பார்டலில் மயில் கதக்களி கலைஞர்களின் முகம் மற்றும் பூக்கள் போன்ற டிசைன்களுடன் மிகவும் அற்புதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வகை சேலைகள் குறந்த விலையிலிருந்து பல ஆயிரம் வரையிலும் கிடைக்கின்றன.

    ப்யூர் காட்டன்: தினசரி அணிவதற்கு ஏற்ற சேலைகள் இவை. தமிழ்நாட்டில் கோடைக்கு ஏற்ற அற்புதமான சேலைகள் இவை என்று சொல்லாம். முழுவதும் நூல் மற்றும் பிரிண்டட் வேலைப்பாட்டுடன் கண்ணை கவரும் வகையில் இவ்வகை சேலைகள் கோடைக்காலத்தில் விற்பனையில் சாதனை படைக்குகின்றன என்றே சொல்லலாம்.

    ஜூட் காட்டன்:- காட்டன் மற்றும் ஜூட் இணைந்து தயாரிக்கப்படும் சேலைகள் பெரும்பாலும் மென்மையான நிறம் மற்றும் டிசைன்களுடன் அணிபவருக்கு மனதிருப்தியை தருகின்றன.

    ப்ளெயின் காட்டன்:- சேலைகளில் டிசைன்களை விரும்பாதவர்களின் தேர்வு இதுவாகத்தான் இருக்கும். மென்மையான மஞ்சள் நிறத்திற்கு பச்சை பார்டர், பீச் நிறத்திற்கு ஆரஞ்சு பார்டர், வெந்தய நிறத்திற்கு அடர்த்தியான நீல பார்டர், வான நீலத்திற்கு டார்க் ப்ளு பார்டர் என்று வண்ணங்களின் வர்ணஜாலத்தை இவ்வகை சேலைகளில் பார்க்க முடியும்.

    செட்டிநாடு காட்டன்:- பழமையும், புதுமையும் இணைந்து தயாரிக்கப்படுபவை இவை என்று சொல்லலாம். செட்டிநாடு காட்டன் சேலைகளுடன் கலம்காரி டிசைன்களுடன் கூடிய ப்ளவுஸ்கள் விற்பனைக்கு வந்து பெண்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்று சொல்லலாம். அடர்த்தியான நிறமுள்ள சேலைகளுக்கு மென்மையான நிறப் ப்ளவுஸ்களும், மென்னையான நிறமுள்ள சேலைகளுக்கு அடர்த்தியான நிறத்தில் கலம்காரி டிசைன்களுடன் பிளவுஸ்களும் பார்ப்பவரை விரும்பி வாங்கத்தூண்டுகின்றன.

    சில்க் காட்டன்:- இவற்றில் சிம்பிள் பார்டர்கள் வைத்த சேலைகள், பாலும், பழமும் கட்டங்களில் புட்டா மற்றும் சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், கையால் பிரிண்டட் செய்யப்பட்ட சேலைகள், உடல் முழுவதும் கலம்காரி வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், வைர ஊசி கோர்வை புட்டாக்களுடன் கூடிய சேலைகள், ஜக்கார்ட் செல்ஃப் டிசைன் சேலைகள் என்று பலவகைகளில் நம்மை மயக்குகின்றன.

    இவை மட்டுமல்லாமல் கல்யாணி காட்டன் சேலைகள், மதுரை சுங்கடி சேலைகள், ஃபேன்ஸி காட்டன் சேலைகள், கோட்டா காட்டன் சேலைகள், டிரெடிஷனல் காட்டன் சேலைகள், பாலி காட்டன் சேலைகள், பெங்காலி காட்டன் சேலைகள், ஒடிஸா காட்டன் சேலைகள், மங்களகிரி காட்டன் சேலைகள், பள்ளிபாளையம் காட்டன் சேலைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
    இன்றைய இளம் பெண்களுக்கு தங்கத்தால் செய்த அணிகலன்களை விட பேன்சி அணிகலன்கள் மீது ஆர்வம் அதிகம்.ஆசைபட்டு வாங்கிய அவற்றை பத்திரமாக பாதுகாத்து வைப்பது தான் சவாலான வேலை.
    இன்றைய இளம் பெண்களுக்கு தங்கத்தால் செய்த அணிகலன்களை விட பேன்சி அணிகலன்கள் மீது ஆர்வம் அதிகம். உடைகளுக்கு பொருத்தமான நிறத்திலும், வடிவங்களிலும் கிடைப்பதால் விதவிதமான பேன்சி அணிகலன்களை வாங்கி குவித்திருப்பார்கள். ஆசைபட்டு வாங்கிய அவற்றை பத்திரமாக பாதுகாத்து வைப்பது தான் சவாலான வேலை. அதிலும் அவசரமாக வெளியில் கிளம்பும் போது கம்மல்களை ஒன்றாக குவித்துப்போட்டிருக்கும் பெட்டியில் இருந்து சரியான ஜோடியை எடுத்து காதில் மாட்டுவதற்குள் பல நிமிடங்கள் கடந்து போயிருக்கும்.

    உங்களுக்கும் இந்த அனுபவம் அடிக்கடி ஏற்படுகிறதா?அப்படியானால் இந்த கைவினை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சதுர வடிவ அட்டை (25 செ.மீ x 25 செ.மீ) - 2
    அளவுகோல் - 1
    கத்திரிக்கோல் - 1
    கத்தி - 1
    பசை - 1
    நெட் (பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வலை) 25 செ.மீ x 25 செ.மீ - 1
    துணி 25 செ.மீ x 25 செ.மீ - 1

    செய்முறை

    * முதலில் ஒரு அட்டையை எடுத்து அதன் நான்கு புறமும் இரண்டு அங்குலம் அளவு குறித்து கொண்டு கத்தியால் போட்டோ ஃபிரேம் போல் வெட்டி எடுத்துக்கொள்ளவும். இதே போல் மற்றொரு அட்டையையும் வெட்டி வைத்து கொள்ளவும்.

    * இப்போது அட்டையின் நான்கு ஓரங்களிலும் பசை தடவி பிளாஸ்டிக் வலையை ஓட்டிக்கொள்ளவும்.

    * பிறகு வலையின் மீது பசையை தடவி மற்றொரு அட்டையை அதன் மேல் ஒட்டவும்.

    * ஒட்டிய அட்டையை துணியின் மீது வைத்து அளவை குறித்து படத்தில் உள்ளபடி துணியின் நடுப்பகுதியை மட்டும் கத்திரிக்கோலால் வெட்டி எடுக்கவும்.

    * பின்பு துணியை அட்டையின் இரண்டு பக்கங்களையும் சரியாக மூடுமாறு பசையை தடவி ஒட்ட வேண்டும்.

    * இப்போது டிரைநெட் கம்மல் ஹோல்டர் தயார்.

    * சாய்த்து வைக்க *ஸ்டாண்ட் வேண்டும் என்றால் முக்கோண வடிவில் ஸ்டாண்ட் தயாரித்து ஒட்டி கொள்ளலாம் அல்லது கம்மல் ஹோல்டரை அப்படியே சுவற்றில்சாய்த்து வைத்தும் பயன்படுத்தலாம்.
    நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    நெல்லிக்காயை பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.

    நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்து காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

    நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும்.

    உலகில் இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.

    மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.
    உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.
    உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் பி-6, சரும அழகை மெருகேற்றும். புதிய செல்கள் உருவாகுவதற்கும் வழிவகைசெய்யும். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.

    இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.

    முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

    கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.

    முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்தவும் உருளைக்கிழங்கு சாறுவை பயன்படுத்தலாம். 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
    ×