என் மலர்
சமையல்
- இந்த ரெசிபி 10 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள் :
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கப்,
பொடி செய்த வெல்லம்- ¾ கப்,
தண்ணீர்- ¼ கப்,
ஏலம், சுக்குப் பொடி தேவைப்பட்டால்- தலா ½ ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒரு தட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.
உருட்டுப்பதம் வந்ததும் கடலையில் ஊற்றி கரண்டியால் கிளறி நெய் அல்லது அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும்.
அவ்வளவு தான் சூப்பரான வேர்க்கடலை உருண்டை ரெடி.
- இது வட இந்தியாவில் அதிகமாக சுவைக்கப்படும் இனிப்பு ஆகும்.
- இதில் வைட்டமின் ஈ, புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாதாம் - 100 கிராம்
காய்ச்சிய பால் - ½ லிட்டர்
சர்க்கரை - 6 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 கிராம்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் பாதாம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாகக் கிளறவும்.
பின்னர் அதில் குங்குமப்பூ போட்டு காய்ச்சியப் பாலை சேர்க்கவும்.
பின்பு சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
இப்போது பாதாம் ஷிரோ தயார்.
அதன் மேல் சிறிது பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூத் தூவி பரிமாறவும்.
- சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
தினை அரிசி - ஒரு கப்
தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தண்ணீர் - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - அரை கப்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 2
சோம்பு - கால் டீஸ்பூன்
பிரியாணி இலை - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
செய்முறை:
தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும்.
பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.
இப்போது சூப்பரான தினை - தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.
- ஆலு புஜியாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
- குழந்தைகளுக்கு பிடித்தான அருமையான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - அரை கிலோ
புதினா - ஒரு கைப்பிடி
ப.மிளகாய் - 1
கடலை மாவு - 1 கப்
மிளகாய்தூள் - சுவைக்கேற்ப,
சாட் மசாலா - சுவைக்கேற்ப,
சீரக தூள் - சுவைக்கேற்ப
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
• உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து வைத்து கொள்ளவும்
• மிக்சியில் புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசிய அரைத்து கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரைத்த புதினா விழுது, மற்றும் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய்தூள், சாட் மசாலா, சீரக தூள் மற்றும் சிறிது பெருங்காயம் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் .
• கலந்த உருளைக்கிழங்கு கலவையை சேவை அச்சில் போட்டு வைக்கவும்.
• கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சேவை அச்சில் உள்ள கலவையை பிழிந்து மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
• பொரித்த சேவையை ஒரு தட்டில் போட்டு சிறிது சிறிதாக உடைத்து, சிறிது அளவு சாட் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
• இப்போது ஆலு புஜியா ரெடி.
- இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
- கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி
ப. மிளகாய் - 3
பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.
* இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.
- பாயாசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன.
- இன்று நட்ஸ் பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 20 கிராம்
திராட்சை மற்றும் பேரீச்சை - 20 கிராம்
பால் - 1/2 லிட்டர்
சேமியா - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1/4 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை :
பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நட்ஸ் அனைத்தையும் தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் பால் வைத்து நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து வேக விட வேண்டும்.
சேமியாக வெந்ததும் சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்த்து கலக்க வேண்டும்.
பின் அதில் வறுத்த பருப்பு வகைகள், திராட்சை, பேரீச்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.
அவ்வளவுதான் நட்ஸ் பாயாசம் தயார்.
- பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது.
- தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இது அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சை மிளகாய் - 20
சின்ன வெங்காயம் - 50 கிராம்
உளுந்து - 2 டீஸ்பூன்
பூண்டு - 10
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை
செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நன்றாக கழுவி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த சட்னியில் கொட்டவும்.
அவ்வளவுதான் சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயார்.
- இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
- மட்டன் குழம்பிற்கு மாற்றாக இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பு - 200 கிராம்,
துவரம்பருப்பு - 50 கிராம்,
கடலை பருப்பு - 50 கிராம்,
கத்தரிக்காய் - 2,
வாழைக்காய் - 1/2 காய்,
புளி - 10 கிராம்,
மாங்காய் - 1/2,
இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பட்டை - 5 கிராம்,
பிரிஞ்சி இலை - 2,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும்.
வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு குக்கரில் இரண்டு பருப்புகள், மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.
- இதை தயாரிப்பதும் மிகவும் எளிது.
- இதை செய்ய 5 நிமிடங்களே போதுமானது.
இத்தாலிய உணவில் மிக எளிமையானதும், ரொம்ப சுவையானதுமான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் பற்றிதான் குட்டீஸ் ரெசிபியில் பார்க்க இருக்கிறோம். இத்தாலி நாட்டின் காலை உணவுகளில் இந்த 'ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்' முக்கிய இடம் பிடிப்பதுண்டு. இதை தயாரிப்பதும் எளிது என்பதால், இதை இத்தாலியர்கள் விரும்பி சுவைக்கிறார்கள். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
1. ஸ்ட்ராபெர்ரி
2. பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒருவகை பிஸ்கட்தான்)
3. பிரெஷ் கிரீம்
செய்முறை :
ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கி கொள்ளலாம்.
பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். 'ஜாம்' மாதிரியில் தயாராகி இருக்கும் கிரீமை, பிஸ்கட்டில் தடவி, அதன் மீது மற்றொரு பிஸ்கெட்டை ஒட்டினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் ரெடி.
கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சுலபமாக தெரிந்தாலும், இது குட்டி குழந்தைகளுக்கான 'டாஸ்க்' என்பதை மறந்துவிடாதீர்கள்.
- சிறுதானியங்களில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று தினை அரிசியில் அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி மாவு - 200 கிராம்,
வெல்லம் - 200 கிராம்,
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,
சுக்குத்தூள் - 2 சிட்டிகை,
முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,
நெய் - 100 கிராம்.
செய்முறை
தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.
சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.
கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.
இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான சத்தான தினை அல்வா ரெடி.
- சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- சிறுதானியங்களில் பல்வேறு ருசியான உணவுகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
சாமை அரிசி - 500 கிராம்,
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்,
பச்சைப்பட்டாணி - 50 கிராம்,
தயிர் -அரை கோப்பை,
இஞ்சி, பூண்டு விழுது, புதினா -தேவையான அளவு,
சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
நெய் -100 மி.கி,
ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,
பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை
சாமை அரிசி நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடானதும், தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினாவை சேர்க்கவும்.
புதினா நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.
சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.
- எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம்.
- இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 10
நல்லெண்ணெய் - 150 மில்லி
சீரகம் - சிறிது
வறுக்க
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
தனியா - 1/4 கப்
வேர்கடலை - 4 ஸ்பூன்
எள் - 2 ஸ்பூன்
வறுத்ததுடன் சேர்த்து அரைக்க :
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தோலுடன் பூண்டு - 1
கருவேப்பிலை - 1 கைப்பிடி
புளி - நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்)
செய்முறை
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு தனி தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
பின்னர் அதனுடன் வறுத்ததுடன் சேர்த்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும்.
கத்திரிக்காயை நான்காக கீறி அதில் இந்த மசாலாவை ஸ்டஃப் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் மீதி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.






