என் மலர்
சமையல்
- விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆறியதும் குக்கரை திறக்கவும்.
- நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
உடைத்த கோதுமை - 1 கப்
பாதாம் பருப்பு, முந்திரி திராட்சை - தேவைக்கு ஏற்ப
வெல்லம் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
பால் - 1/2 கப்
தண்ணீர் - 3 கப்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
• ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி விடவும்.
• பிறகு குக்கரில் வடிகட்டி வைத்துள்ள கோதுமை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருப்பு வேகவைப்பது போல் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
• விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆறியதும் குக்கரை திறக்கவும்.
• கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
• அதே கடாயில், வெல்லத்தை சேர்த்து. அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.
• வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.
• அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
• பின்பு அவற்றை மூடியை கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
• அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு, பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.
• தித்திக்கும் சுவையான கோதுமை பாயாசம் ரெடி பாயாசத்தை வேறு பாத்திரத்தில் மாற்றி பின் பரிமாறலாம்.
- அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.
- கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கிலோ
நேந்திரம் பழம் - 5
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
• பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
• மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.
• பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்து, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள்.
• சுவையான பழம்பொரி தயார்.
- கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுவையான கிரிஸ்பியான போண்டா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 துண்டு
வேர்கடலை - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 1 கப்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• ஒரு மிக்ஸியில் சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போடவும்.
• இதனுடன் அரைத்து வைத்திருந்த பொருட்களை போட்டு கைகளால் நன்கு பிசையவும்.
• பின்னர் வெங்காயம், தயிர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு போண்டா பதத்திற்கு பிசைந்து எடுத்து வைக்கவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
• எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் தயாரித்து வைத்திருந்த போண்டாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக கில்லி போடவும்.
• அடுப்பை மீடியம் தீயில் வைத்து சமைக்கவும்.
• போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.
• இதோ கிரிஸ்பியான அரிசி மாவு போண்டா ரெடி.
• இதனுடன் நீங்கள் விருப்பப்பட்ட சட்னி, அல்லது சாஸ் வைத்து சாப்பிடலாம்.
- வாழைப்பூ குழந்தைகளுக்கு எப்படி எளிமையான முறையில் செய்து கொடுக்கலாம்.
- வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும்.
வாழைப்பூவில் பெருமளவில் மருத்துவ குணம் உள்ளது. ஆனால் இந்த வாழைப்பூவை குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரும் சிக்கலாகவே உள்ளது. வாழைப்பூ குழந்தைகளுக்கு எப்படி எளிமையான முறையில் செய்து கொடுக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்....
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - தேவையான அளவு
வாழைப்பூ - 1
கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 3 ஸ்பூன்
பூண்டு - 7 பல்
வரமிளகாய் - 5
கறிவேப்பிலை - தாளிக்க
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பொடி அரைக்க...
• ஒரு வாணலியில் கடலைப்பருப்பு 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன், பூண்டு 7 பல், வரமிளகாய் 3 போன்வற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
• பின்னர் வறுத்த பொருட்களை நன்கு ஆறிய பின் ஒரு மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
• வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
• எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொறியவிடவும்.
• கடுகு பொறிந்ததும் கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், வரமிளகாய் 2 ஆகியவற்றை சிறிது வதக்கவும்.
• பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
• வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்திருந்த வாழைப்பூவை போட்டு நன்கு வதக்கவும்.
• இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூ, உப்பு சேர்க்கவும்.
• வாழைப்பூவில் உள்ள நீர் நன்கு வடிந்தவுடன் தயாரித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்கு கிளறவும்.
• அதன் பின்னர் வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும்.
• இதோ சுவையான வாழைப்பூ சாதம் ரெடி.
- நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
பயற்றம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
கோதுமைமாவு - 1/4 கப்
நெய் - 2 கப்
முந்திரி கொஞ்சம்
கேசரி பவுடர் கொஞ்சம்
செய்முறை:
• பயற்றம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
• பிறகு சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.
• கோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கேசரி பவுடர் சிறிதளவு, சேர்த்து கிளரவும்.
• நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.
- வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும்.
தேவையான அளவு:
பச்சரிசி சாதம் - 2 கப்
துவரம்பருப்பு - வேக வைத்தது 1 கப்
மிளகு - 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 10
பரங்கிகாய் - 100 கி
கத்திரிக்காய் - 100 கி
அவரைக்காய் - 100 கி
சௌவ்சௌவ் - 100 கி
காராமணி - 100 கி
கொண்டைகடலை - 100 கி
பச்சை மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
புளி - ஒரு எலும்மிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தாளிக்க
நெய் - தேவையான அளவு
மசாலா தயாரிக்கும் முறை:
• ஒரு வாணலியில் மிளகு, வெந்தயம், தனியா மூன்றையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும், பின்னர் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த அனைத்தையும் நன்று ஆறியவுன் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். அடுத்து கடுகு சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தவுடன், வரமிளகாய் 3, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
• பின்னர் நறுக்கி வைத்துள்ள பரங்கிகாய், கத்திரிக்காய், அவரைக்காய், சௌவ்சௌவ் ஆகிய காய்கறிகளை போட்டு 5 நிமிடம் நன்கு சமைக்கவும்.
• பின்னர் வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும்.
• அதன் பின் வேகவைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்.
• காய்கறி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து 5 முதல் 8 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
• இந்த நிலையில் புளி தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
• இவையனைத்து நன்கு வெந்தவுடன் தயாரித்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்க்கவும்.
• இதனுடன் பெருங்காயம், வேகவைத்த பச்சரிசி சாதத்தை சேர்க்கவும்.
• பின்னர் ஒரு 1/2 கப் தண்ணீர், மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
• இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும்.
• இதோ சுவையான பெருமாள் கோவில் கதம்ப சாதம் ரெடி.
- 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.
- பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடுங்கள்.
தேவையான பொருட்கள்:
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 2 கப்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
* முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உளுந்து மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
* பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு மாவாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/4 டீஸ்பூன் ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
* அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு சிறிது சிறிதாக ஊற்றி பொறித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
* இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.
* அது நன்கு கொதித்தவுடன் அதனை அடுப்பில் இருந்து இறக்கி அதில் பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் அதன் மீது சிறிதளவு சர்க்கரையை தூவி கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது சுவையான தேன் மிட்டாய் ரெடி.
- குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து தந்து பாருங்கள் அவர்கள் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.
- 10 பாதாம் மற்றும் 10 பிஸ்தா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பால் – 2 1/2 கப்
பால் பவுடர் – 1/4 கப்
பிரட் – 4
சர்க்கரை – 1/4 கப்
குங்குமப் பூ – 1 சிட்டிகை
சோள மாவு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 10
பிஸ்தா – 10
செய்முறை:
* முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 1/2 கப் பாலினை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
* அதனுடன் 1/4 கப் பால் பவுடர், 1/4 கப் சர்க்கரை, 1 சிட்டிகை குங்கும பூ மற்றும் 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூளினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
* அது நன்கு கொதித்த பிறகு அதனுடனே 1 டீஸ்பூன் சோள மாவினை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அது ஓரளவு கெட்டியாகி விடும். அதனை அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளுங்கள்.
* அடுத்து 4 பிரெட்டுகளின் ஓரங்களை நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய்யினை ஊற்றி அதில் நாம் ஓரங்களை நறுக்கி வைத்துள்ள பிரெட்டுகளை சேர்த்து நன்கு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.
* பின்னர் அதனை நாம் முன்னரே தயாரித்து வைத்துள்ள கலவையில் பொரித்த பிரட்டை சேர்த்து அதன் மீது 10 பாதாம் மற்றும் 10 பிஸ்தா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
* இப்பொழுது சுவையான ஷாஹி துக்டா தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ஷாஹி துக்டா ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து தந்து பாருங்கள் அவர்கள் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.
- அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.
- ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
கடல் நண்டு - 5
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு
பிரிஞ்சி இலை - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி - 2
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி- தேவையான அளவு

செய்முறை:
* முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
* இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.
* அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.
* பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.
* பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.
* இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்ந்து நன்கு வதக்கவும்.
- இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
ஆடு போட்டி - 1
சின்ன வெங்காயம் - 100கி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
சோம்பு - தேவையான அளவு
மிளகு, சீரகம் - 2 ஸ்பூன்
தேங்காய் - துருவியது சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
• ஆடு போட்டியை இரண்டு முதல் மூன்று முறை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
• ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும் அதில் லவங்கம், கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
• பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து அதையும் நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
• இதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி விடவும்.
• இதை ஆறவிட்டு பின்னர் ஒரு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
• இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
• பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்ந்து நன்கு வதக்கவும்.
• அதன்பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள ஆடு போட்டி சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் நன்கு பிரட்டவும்.
• பிரட்டிய ஆடு போட்டியில் உள்ள நீர் வெளியே வந்தவுடன், அதனுடன் அரைத்து வைத்திருந்த சின்னவெங்காயம் விழுதை சேர்க்கவும்.
• இதனுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியா தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
• பின்னர் குக்கரை மூடி வைத்து 7 முதல் 8 விசில் வரும் வரை சமைக்கவும்.
• இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
• இதோ சுவையான இட்லி, தோசை, சாப்பாடு, சப்பாத்தி என்று அனைத்திற்கும் சாப்பிட உகந்த ஆடு போட்டி கிரெவி ரெடி.
- ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு எடுத்துக் கொள்ளவும்.
- இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 400 கிராம்
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 400 கிராம்
எலக்காய் - 1/2 ஸ்பூன்
நெய் - 4 ஸ்பூன்

செய்முறை:
• ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காய் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
• நெல்லிக்காய் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்கவும். நெல்லிக்காயை லேசாக அழுத்தினால் வெந்துவிட்டதா என்று தெரியும்.
• இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
• வேகவைத்த நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு எடுத்துக் கொள்ளவும்.
• பாகு எடுத்த வெல்லத்தில் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் இஞ்சி விழுதை சேர்த்து நல்ல கெட்டியான பதத்திற்கு கிளறவும்
• கிளறும் போது இடை இடையே நெய் சேர்க்கவும்.

• நெல்லிக்காய் இஞ்சி மரப்பா பதத்திற்கு வந்து விட்டதா என்று சரிப்பார்க்க உங்கள் கையில் லேசாக நெய் தொட்டு மிதமான சூடு இருக்கும் போது எடுத்து உருட்டி பார்க்கவும் நல்ல உருண்டை பதம் வந்துவிட்டால் நீங்கள் செய்த நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடி என்று அர்த்தம்
• அப்படி இல்லையென்றால் மறுபடியும் ஒரு 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.
• பின்னர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் உள்ள பாத்திரத்தில் மாற்றி உங்களுக்கு தேவையான வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
• இதோ சுவையான உடலுக்கு நல்ல ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடி.
குறிப்பு: குழந்தைகளுக்கு இஞ்சியின் சுவை பிடிக்கவில்லை என்றால் இஞ்சிக்கு பதிலாக பாதாம் பருப்பு பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.
- ஊற வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
தேங்காய் பால் - 50 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுதூள் - நுனுக்கியது 1/2 ஸ்பூன்
வரமிளகாய் பொடித்தது - 1/2 ஸ்பூன்
இஞ்சி - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
பூண்டு - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4 கீறியது
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
• இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் இறால், மஞ்சள் தூள், பொடித்த மிளகு, வரமிகாய் பொடித்தது, பூண்டு, தேங்காய் எண்ணெய் இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
• மிக்ஸ் செய்த இறால் கலவையை ஃபிரிட்ஜில் வைத்து 30 முதல் 45 நிமிடம் ஊற வைக்கவும்.
• ஒரு பௌவுலில் 50 கிராம் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலையை பொடியாக கட் செய்து அதனுடன் சேர்த்து, தயாரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
• பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றில், அதில் ஊற வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்க்கவும்.
• 3 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பிவிடவும். மொத்தம் 5 நிமிடம் சமைக்கலாம். பின்னர் பச்சை மிளாய் சேர்க்கவும்
• தயாரித்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை இறாலுடன் சேர்த்து 3 நிமிடங்கள் கிளறவும்.
• இதோ சுவையான தேங்காய் பால் ஃபிரான் ரோஸ்ட் ரெடி.






