என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    அர்த்த நாவாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    தொப்பையைக் குறைக்க எத்தனையே வழிகள் இருந்தாலும், உடற்பயிற்சிக்கு இணை எதுவும் வர முடியாது. அதிலும் யோகாவை ஒருவர் தினமும் செய்து வந்தால், அதனால் தொப்பை குறைவதோடு, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

    இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.

    செய்முறை

    இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். பின்னர் படத்தில் உள்ளபடி கால்களை மடக்க வேண்டும். பின்னர் கைகளை கால் முட்டியின் அருகே கொண்டு வர வேண்டும். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.

    இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். 
    வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாக்களும் உதவும். இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்களை பார்க்கலாம்.
    உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாக்களும் உதவும். இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும்.

    புஜங்காசனம்

    இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும்.

    முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு படத்தில் காட்டியவாறு முகத்தையும், உடலையும் உயர்த்த வேண்டும். இந்நிலையில் 15-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும். இப்படி ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும்.

    தனுராசனம்

    தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைத்து செய்வதால், இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம் என்று வந்தது. இந்த ஆசனத்தின் மூலம் அடிவயிற்று தசைகள் நல்ல நிலையைப் பெறும். மேலும் இந்த ஆசனத்தினால் வயிற்றுக் கொழுப்புக்களும், தொடையில் உள்ள கொழுப்புக்களும் கரையும் மற்றும் செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை அகலும்.

    இந்த ஆசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, படத்தில் காட்டியவாறு உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

    நாகாசனம்

    இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.

    இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

    கும்பகாசனம்

    இந்த எளிய ஆசனத்தினால் வயிற்று கொழுப்புக்கள் கரைந்து தொப்பை குறையும். மேலும் இந்த ஆசனத்தினால் கைகள், தோள்பட்டை, முதுகு, பிட்டம் மற்றும் தொடைகள் போன்ற இடங்களும் வலிமையடையும்.

    இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் குப்புறப்படுத்து, பின் புஷ்-அப் நிலையில் 15-30 நிமிடம் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே சாதாரண நிலைக்கு திரும்பவும். இப்படி 5 முறை செய்ய வேண்டும். ஒருவேளை உங்களுக்கு முதுகு அல்லது தோள்பட்டையில் காயங்கள் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.

    பவனமுக்தாசனம்

    இந்த யோகாசனத்தினால் குடலுக்கு மசாஜ் செய்தது போன்று இருப்பதோடு, வயிற்று அமிலத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், முதுகு வலியைக் குறைக்கவும், அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து அழகாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

    பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் படத்தில் காட்டியவாறு தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும்.
    கந்தராசனம் இடுப்பு, முதுகு, வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை தரக்கூடியவை. இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    விரிப்பில் நேராக படுத்துக்கொண்டு, கை, கால்களை உடம்பை விட்டு தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். 5-15 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். இரு கால்களையும் சேர்த்து வைத்து, மடக்கி குதிகால்கள் தொடைப் பகுதியை தொடுவதுபோல் வைக்க வேண்டும்.

    இரு கைகளாலும் கால்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்துக்கொண்டு இடுப்பு, முதுகு பகுதியை மட்டும் மேலே தூக்க வேண்டும். கழுத்து, தலை, தோள்பட்டை, புஜம், உள்ளங்கால் ஆகியவை தரையில் இருக்கும். இதுதான் கந்தராசனம்.

    பின்னர், மூச்சை மெதுவாக வெளியே விட்டபடியே முதுகு, இடுப்பு பகுதியை கீழே இறக்க வேண்டும். பிறகு, கால்களையும் கீழே இறக்க வேண்டும். உடலைத் தளர்த்தி சாந்தி ஆசனத்துக்கு வரவேண்டும். தலா 10 எண்ணிக்கையில் 3-5 முறை இந்த ஆசனம் செய்யலாம்.

    இந்த ஆசனம் இடுப்பு, முதுகு, வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை தரக்கூடியவை. இடுப்பு, முதுகு பகுதிகள் வளைந்துகொடுப்பதோடு, நன்கு வலுப்பெறும்.

    வெர்டிகோ, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, இதய நோய் உள்ளவர்கள் இவற்றை செய்யக்கூடாது. 
    பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது.
    உடற்பயிற்சி செய்பவர்களின் நோக்கமே கட்டுக்கோப்பான உடல். ஜிம்மிற்கு சென்றுதான் கட்டுக்கோப்பான உடம்பை பெற வேண்டும் என்றில்லை. வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகள் மூலமாகவே அழகிய உடலமைப்பை பெறலாம். வீட்டில் செய்யும் உடற்பயிற்சி என்றால் அதில் முதலில் நம் நினைவிற்கு வருவது புஷ் அப்ஸ் (அ) தண்டால் தான். தண்டால் எடுப்பது உடலின் அனைத்து பாகங்களையும் வலுப்படுத்த கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். அதேசமயம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். ஆனால் இதனை சரியான முறையில் மட்டுமே செய்யவேண்டும். ஏனெனில் இதனை தவறாக செய்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும்.

    உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்படவும், வலுப்படவும் உதவுகிறது. பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது. இந்த தசைநார்கள்தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.

    வயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்றமடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடுகிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற்பயிற்சியின் முக்கிய பணியாக கருதப்படுகிறது. சில புஷ்அப்ஸ் செய்வதாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்துவிடாது.தொடர்ந்து முறையான புஷ்அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும்.

    மேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற்பயிற்சியென அனைவராலும் நம்பப்படுகிறது. முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது. புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள்பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடுமையான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற்பகுதியை மாற்றக்கூடும்.
    விளையாட்டை விஞ்சிய உடற்பயிற்சி, மனப்பயிற்சி இல்லவே இல்லை. நடை, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், விளையாட்டு ஆகியன உடற்பயிற்சியில் அடங்கும். இவை எல்லாம் எளிதில் எவராலும் செய்ய முடியும். மனம் வேண்டும். அவ்வளவுதான்.
    இந்திய இளைஞர்கள், தேவையான அளவுக்கு உடல் உழைப்பை மேற்கொள்வது இல்லை என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.

    ஆமா... இதுக்கு தனியா ஒரு அறிக்கை வேணுமாக்கும்...? கண்ணு முன்னாலயே பார்த்துக்கிட்டுதானே இருக்கோம்...? நாலு எட்டு நடந்து கடைக்கு போக முடியலை... எதுக்கு எடுத்தாலும் வண்டி வேணுங்கறாங்க... எப்பப் பார்த்தாலும் போனு ஒண்ணு கையில வச்சிக்கிட்டு எதையோ பார்த்துக்கிட்டு கிடக்கறானுங்க...

    இப்படி இருந்தா, ஒடம்பு எப்படி தெம்பா இருக்கும்...?

    உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது பள்ளிச் சிறுவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் குறைவாக உடலுக்கு பணி தருகின்றனர். 2001-2016 கால கட்டத்தில் 146 நாடுகளில் 16 லட்சம் பேரை கண்டு ஆய்வு செய்ததில் ஆண் சிறுவர்கள் 78 சதவீதம்; பெண்கள் 85 சதவீதம் தேவையான அளவு தம் உடலுக்கு பணி தருவதில்லை.

    ஆச்சரியமான தகவல் தோங்கா, சமோவா, ஆப்கானிஸ்தான், ஜாம்பியா ஆகிய 4 நாடுகளில் மட்டும் பெண் சிறுமியர் ஆண்களை விடவும் அதிகமாக உடற்பயிற்சி பெறுகின்றனர். இந்த நான்கு நாடுகளுமே சமூக, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவை!

    உலக அளவில் 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் போதிய உடற்பணிகள் செய்வதில்லை. 2025-க்குள்ளாக இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாவது குறைக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சாத்தியம்தான். ஆனால் இதிலே, அரசுகளை விடவும், தனி மனிதர்களின் ஆர்வம், பங்களிப்புதான் மிக முக்கியம். ஓடிக்கிட்டே இருக்கணும்... உடம்பு வளைஞ்சு வேலை செய்யணும்...

    கல்லை தின்னாக் கூட ஜீரணம் ஆயிடும்... அந்த கால பெருசுங்க சொல்கிற இந்த வழிமுறைக்கு மாற்று உலகத்திலேயே இல்லை.

    உடலும், உள்ளமும் சுறுசுறுப்பாக இருந்தால் போதும்; ஆரோக்கியமான வாழ்க்கை தானாய் வாய்க்கும். ஒரு காலத்தில் நம் ஊரில் மரம் ஏறாத சிறுவர்களே இல்லை; ஏரியில் குளத்தில் குதித்து குளிக்காத மனிதனே இல்லை. பல மைல் தூரம் நடக்காமல் ஒரு நாளும் போனதே இல்லை.

    வீடு மாற்றுவது அல்ல; வீடு கட்டுவதற்கு கூட இயன்றவரை வெளியாட்களை அழைப்பது இல்லை.

    இப்போது...? இது எதுவுமே நடைமுறையில் இல்லை. தொலைபேசியில் சொன்னால் சாப்பாடு கூட வீடு தேடி வந்து விடுகிறது.

    ‘தின்பது’ மட்டும் நாம் தான் செய்ய வேண்டி இருக்கிறது. உழைக்காமல் வாழ்வதுதான் வசதியின் அடையாளம் என்று தவறாக புரிந்து கொண்டு விட்டோம். அதன் விளைவுதான் இன்றைய அவல நிலை.

    ‘ஓடி விளையாடு பாப்பா’ மட்டும்தானா...?

    உடலினை உறுதி செய், ‘ஊண் மிக விரும்பு’,

    குன்றென நிமிர்ந்து நில் ‘கெடுப்பது சோர்வு’ என்று

    அடுக்கடுக்காய் அள்ளி வீசுகிறார் பாரதியார். (புதிய ஆத்தி சூடி)

    இளைஞர்களின் ஆகப் பெரிய சாதகம் அவர்களின் உடல் வலிமை; அவர்தம் மன உறுதி. எவ்வளவு உழைத்தாலும் களைப்பு வராது; எத்தனை தோற்றாலும் சலிப்பு தோன்றாது. இளைய பருவத்தில் எல்லாருக்கும் இது இயல்பானது. இதனை இழக்கலாமா...?

    சிறுவரை, இளைஞர்களை மீண்டும் உடற்பயிற்சி, உடற்பணிகளின் பக்கம் திருப்ப வேண்டிய சமூகக்கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது.

    நடத்தல், ஓடுதல், குதித்தல், தாவுதல், நீந்துதல், பாய்தல், மூச்சுப்பிடித்தல், மல்லுக்கட்டுதல், மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், சுமை தூக்குதல், மிருகங்களை எதிர்த்தல், இயற்கைச் சீற்றங்களை எதிர் கொள்ளல்... இளைய பருவத்தினருக்கு இவை எல்லாம் இனிப்பு சாப்பிடுவது போல. உவந்து, உல்லாசமாய்ச் செய்வார்கள்.

    இவற்றுக்கான வாய்ப்புகளை வழங்குகிறோமா...? இளைஞர்கள் செயல் புரிய அனுமதிக்கிறோமா...? ஆறு வயதிலேயே இரு சக்கர வாகனத்துக்கு பழக்குகிறோமே... பத்து வயதிலேயே பணியாளர்களை விரட்டுவதற்கு ஊக்குவிக்கிறோமே... பள்ளி பருவத்திலேயே பணத்தை அள்ளிக்கொடுக்கிறோமே... கல்லூரி காலத்தில் மட்டும், இளமைத்திறன் எங்கிருந்து வரும்...? தத்தம் வேலையை அவரவர் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்த வேண்டும். நடந்து செல்கிற தூரத்தை வாகனத்தில் செல்ல அனுமதிக்கவே கூடாது.

    இத்துடன்.... நல்ல உணவு, நல்ல பழக்க வழக்கம் மிக முக்கியம்.

    ‘மாலை முழுவதும் விளையாட்டு’. இந்த நேரத்தில், நம் பிள்ளைகளை வேறு எதிலும் ஈடுபடுத்தவே கூடாது.

    விளையாட்டை விஞ்சிய உடற்பயிற்சி, மனப்பயிற்சி இல்லவே இல்லை. இப்பொழுதும் கூட சிறுமியர், இளம் பெண்கள் விளையாடுவதற்கு மைதானங்கள் இல்லை. இது மிகப்பெரிய குறை; மாபெரும் தடை.

    பெரிய நகரங்களில் கூட ஓடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் மகளிர் தயங்குவதை காண முடிகிறது. புரிந்து கொள்ளக்கூடியதுதான். குறைந்தபட்சம், மகளிருக்கு என்று ‘சிறப்பு நேரம்’ குறிப்பிட்டால் கூடப் போதுமானது.

    நம்முடைய சமுதாயம், நம் மக்களின் பார்வை இன்னமும் மாற வேண்டி இருக்கிறது. உடல் உழைப்பை மதிக்காத, உடற்பயிற்சியை வலியுறுத்தாத சமூகமாக நாம் இருத்தல் தகாது.

    உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் உடற்பயிற்சிகள் எவ்வளவு...?

    5-17 வயது: நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேர தீவிர உடற்பயிற்சி.

    18-64 வயது: வாரத்துக்கு 150, 300 நிமிட உடற்பயிற்சி. 65 அல்லது அதற்கு மேல்: வாரம் 75, 150 நிமிட உடற்பயிற்சி.

    நடை, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், விளையாட்டு ஆகியன உடற்பயிற்சியில் அடங்கும். இவை எல்லாம் எளிதில் எவராலும் செய்ய முடியும். மனம் வேண்டும். அவ்வளவுதான். இனி ஒரு விதி செய்வோம் சிறுவர்களை, இளைஞர்களை ‘ஓட விடுவோம்’!

    அவர்களின் ஆரோக்கியத்தை விடவும் சிறந்த முதலீடு என்ன இருக்க முடியும்...?

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரித்துறை அதிகாரி.
    குடும்பத்தையே பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்காக குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுதல் நல்லது.
    வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோடு இந்த டயட் சார்ட்டையும் பின்பற்றும்போது உடனடியாக நல்ல பலன் கிடைக்கும். எண்ணெய் பொருட்களை தவிர்த்து பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதனால் வயிறு தொடர்பான பிரச்னைகளும் சரியாகும். ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்யும்போது கலோரியைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, வயிற்றுத்தசை, கைகளின் தசை, கால்களின் தசை என ஒவ்வொரு தசைக்குமான உடற்பயிற்சி கிடைக்கும். அதற்கேற்ற கருவிகளும் ஜிம்மில் தனித்தனியே இருக்கும். இத்துடன் வாரத்தில் ஒருநாள் ஜிம்மிலேயே யோகா கற்றுக் கொள்ளலாம். அதனால் மனமும் ரிலாக்ஸ் ஆகும். மசாஜ் வசதிகளும் உள்ள ஜிம்மாக இருந்தால் உடல்வலியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இன்றைய தினசரி வாழ்வில் பெண்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெண்களுக்கு இளவயதில் உடல் மேல் இருக்கும் அக்கறை பெரும்பாலும் திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை. குழந்தைகள், கணவர் என குடும்பத்தின் மேல் காட்டும் அக்கறையில் சிறுபகுதியையும் தன் உடலின் மேல் காண்பிப்பதில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதும் இன்றைய தேதியில் அத்தியாவசியமாகிவிட்டது. வீடு, அலுவலகம் என எந்நேரமும் பிஸியாக இருப்பதால் உடலின் மீதான கவனம் குறைந்துவிடுகிறது.

    தற்போது பெரும்பாலும் அலுவலக வேலைகளும் கணினி முன் உட்கார்ந்து செய்வதாகவே இருக்கிறது. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற நவீன சாதனங்கள் வந்த பிறகு உடலுக்கான பயிற்சி பெண்களுக்குக் குறைந்துவிட்டது. வாகன வசதியும் பெண்களின் நடையைப் பெருமளவு குறைத்துவிட்டது. நிலைமை இப்படி இருப்பதால் பெண்களின் உடல் எடை கூடுவதில் அதிசயம் இல்லை. அதனால்தான் இன்றைய பெண்கள் உடல்ரீதியான பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். குடும்பத்தையே பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்காக குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுதல் நல்லது. கார்டியோ உடற்பயிற்சிகள் கலோரியைக் குறைக்க உதவும். 
    ஊரடங்கு காலத்தில் ஜிம்கள் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சியை நிபுணர்கள் வழங்கி வருகிறார்கள். அதேவேளை யோகா மற்றும் தியான வகுப்புகளும் நடக்கின்றன.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் பல்வேறு கடைகள் தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டன. சலூன் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவை திறந்து செயல்படும் நேரத்திலும் உடற்பயிற்சி கூடங்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடிய நிலையிலேயே இருக்கின்றன.

    பொதுவாகவே எடைக்குறைப்பு, உடல்நல பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்கள், இதய நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் அதிகமானோர் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்துகிறார்கள். தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப் பட்டிருப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வீட்டின் மொட்டை மாடிகளிலும் வளாகங்களிலும் எளிய உடற்பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சியும் செய்துகொள்கிறார்கள்.

    உபகரணங்கள் இல்லாமலேயே...

    தற்போது உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சிகளை தருவதற்காக பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்றும் நிபுணர்கள் களமிறங்கியுள்ளனர். பயிற்சிக் கூடங்களிலோ அல்லது வீடுகளிலோ இருந்து ஆன்லைன் மூலமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிபுணர்கள் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.எந்தவித உபகரணங்களும் இல்லாமல் எளிய உடற்பயிற்சிகள் மூலமாகவே வாடிக்கையாளர்களின் உடல் நலத்தைப் பேண தொடங்கி இருக்கிறார்கள். நிபுணர்கள் செய்வதை ஆன்லைன் வழியாக பார்த்து அப்படியே வாடிக்கையாளர்கள் செய்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதேவேளை யோகா மற்றும் தியான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கும் குறிப்பிட்ட கட்டணத்தை உடற்பயிற்சிக் கூடங்கள் வசூலிக்கின்றன. உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லாவிட்டாலும் பயிற்சியாளர்கள் அறிவுரைகள் நேரடியாக கிடைப்பது ஓரளவு பரவாயில்லை என்றே வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஆன்லைன் வழியாகவே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    யோகா, தியான வகுப்புகள்

    இதுகுறித்து சென்னை சாந்தோமை சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் பி.எஸ்தர் கூறியதாவது:-

    தற்போது ஜிம்கள் மூடப்பட்டிருப்பதால், உடற்பயிற்சி செய்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், பயிற்சி முறைகளில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஆன்லைன் வழியாக உடற் பயிற்சி வழங்க தீர்மானித்து அதன்படி பயிற்சி அளித்து வருகிறோம். இதற்காக 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்கிறோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அதன்படி தொப்பை குறைப்பு, உடல் எடை குறைப்பு, உடல் நல மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளித்து வருகிறோம். அதேபோல மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வகையிலான யோகா மற்றும் தியான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே முன்னெடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    பெண்கள் வேண்டுகோள்

    சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த அனுஜா பெர்னாண்டோ கூறுகையில், “தற்போது எங்களுக்கு ஜிம் பயிற்சியாளர்கள் ஆன்லைன் வழியாகவே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இது ஒரு தற்காலிக நடவடிக்கை தான். விரைவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டால் எங்களுக்கு மகிழ்ச்சியாக அது அமையும். உடல் எடையை குறைக்க பெண்கள் மிகவும் மெனக்கெடுகிறார்கள். தற்போது இந்த 3 மாத காலத்தில் பெண்கள் மீண்டும் எடை கூடியிருப்பார்கள். எனவே விரைவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட வேண்டும்”, என்றார். 
    ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம் என்றே கூறலாம். யோகா என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்ல. அது, நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலை என்று கூட கூறலாம். மேலும் யோகா பயிற்சி செய்வதால் மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி கல்வி கற்கலாம். இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

    இதன்படி உலகம் முழுவதும் வாழும் மக்கள் பழமை வாய்ந்த யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதற்கு ஒரு நாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும், 2019-ம் ஆண்டு ராஞ்சியிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து, அறிவுறுத்தி வருகிறார்.

    மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும். ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத்தேடினாலும்... உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும்... உள்நிலை மாற்றம்தான் நோக்கம் என்றாலும் யோகா பயிற்சிகள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிக சுலபமாய் கையாள வழி ஏற்படுத்தி கொடுக்கும்.

    யோகா பயிற்சி மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது. ஞாபக சக்தி, மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை மேம்படுகிறது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன. முதுகு வலி, மன அழுத்தம், பயம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது. நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது. அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்க செய்கிறது.
    ஆசனங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
    இன்றைய கணினி உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டார்கள். "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட  ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.  
     
    மருத்துவரிடம் சென்று அவர் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு  சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும். ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக  வல்லுனர்கள் கூறுகின்றனர்.
     
    ஆசனங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை  அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
     
    நாம் அன்றாட வாழ்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்படி எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு  முக்கியம்.
     
    உலகில் எண்ணிலடங்கா ஆசனங்கள் உள்ளன. இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள்  முழுவதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
     
    முதுகு தண்டுவடத்திற்கும் (Spinal Chord) யோகாவிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. தண்டுவடத்தின் மூலமாகவே எல்லா நரம்புகளும் பிண்ணப்பட்டுள்ளன, செய்திகளை உடலின் ஏனைய பாகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இயங்குவதற்கும்  இத் தண்டுவடம் உதவுகிறது.
     
    இச் சூழ்நிலையில் தண்டுவட பகுதியை தினமும் முறுக்கி, அப்பகுதியிலும் மற்ற பகுதியிலும் இரத்த ஓட்டத்தையும், ஆக்ஸிஜனேற்றமும் செய்யும் பொழுது உடலும், மனமும் புத்துணர்வு பெற்று வார்த்தைகளில் அடங்கா பேரின்பத்தை உணர வழிவகை செய்கிறது.
     
    எப்பொழுது ஒருவருக்கு வியாதி வருகிறது என்றால் ஒரு உடலுறுப்பில் உள்ள பகுதிகளில் போதுமான அளவிற்கு இரத்த  ஓட்டமும், ஆக்ஸிஜனேற்றமும் தடையிறும் பொழுதுதான். அதனை இந்த யோக ஆசனங்களை கொண்டு, உள் உறுப்புகளை  மசாஜ் செய்வது போல இழுத்தும், சுருக்கியும், அழுத்தியும் ஏன் அந்த உறுப்புகளின் மீது நமது எண்ணத்தை குவிப்பதின் மூலமாகவும் அதன் செயல்பாடுகளை துரிதப் படுத்துகிறொம். வியாதியும் பக்கத்தில் வராமல் இருக்கிறது.
    கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் சைக்கிளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ‘சைக்கிளிங்கை’ உடற்பயிற்சியாக கருதி தொடர்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
    கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், நிறைய பேர் குறுகிய தூர பயணங்களுக்கு சைக்கிளை பயன்படுத்தினார்கள். அதை தொடர்ந்து சைக்கிளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. பணநெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில், எரிபொருளுக்கான செலவு தேவைப்படாததால் சைக்கிள் பயணம் கைமேல் பலன் அளித்திருக்கிறது. கூடவே அது உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமைந்துவிட்டது. அதனால் பலரும் சைக்கிள் பயணத்தை பின்பற்றுகிறார்கள். ‘சைக்கிளிங்கை’ உடற்பயிற்சியாக கருதி தொடர்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

    ஒரு மணி நேரம் நீங்கள் மிதமான வேகத்தில் சைக்கிளை ஓட்டிச்சென்றால், உங்கள் உடலில் இருந்து 300 முதல் 350 கலோரி செலவாகும். 50 கிலோ எடைகொண்டவரைவிட 80 கிலோ எடை கொண்டவருக்கு சைக்கிள் பயிற்சி அதிக பலன் தரும். ஒரு மணி நேரம் 10 மைல் வேகத்தில் 50 வயது கொண்டவர் சைக்கிள் ஓட்டும்போது அவரது உடலில் இருந்து 200 கலோரி செலவாகும். அதே நேரத்தில் 80 கிலோ எடைகொண்டவர் உடலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கலோரி செலவாகும்.

    தற்போது நிறைய பேர் மனஅழுத்தத்துடன் காணப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி பெற்றால் மனஅழுத்தம் குறையும். சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது உச்சி முதல் பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதனால் உடலோடு சேர்ந்து உள்ளமும் இலகுவாகி, அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறது.

    அழகு மீது அக்கறை கொண்ட பெண்கள் அதிக அளவில் சைக்கிளிங் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி பெற்றால் சரும சுருக்கம் மறைந்து, இளமையான தோற்றத்தை பெறுவார்கள்.

    பொதுவாக நடுத்தர வயதை கடக்கும்போது பலரும் நினைவாற்றல் குறைபாட் டால் அவதிப்படுகிறார்கள். அந்த குறை பாட்டில் இருந்து விடுதலை பெற சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ளலாம். இதனை தினமும் செய்துவந்தால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி சுறுசுறுப்பாக செயல்பட்டு புதிய செல்களை உருவாக்கி, நினைவாற்றலை மேம்படச் செய்யும். அதுபோல் பள்ளிக்குழந்தைகளும் தங்கள் வீட்டுப் பகுதியிலே சைக்கிள் ஓட்டும் பயிற்சி மேற்கொண்டால், அவர்களது நினைவுத்திறனும் மேம்படும்.

    இந்த பயிற்சியால் கால், முதுகெலும்பு, அடிவயிறு, கைகள், கழுத்து என அதிக இயக்கம்கொண்ட உறுப்புகள் அனைத்தும் வலுப்பெறுகின்றன. ஆனால் சைக்கிளின் இருக்கை அமைப்பு சரியாக அமைவது மிக அவசியம். சரியாக அமையாவிட்டால் உடலில் வலி ஏற்படும்.

    இந்த பயிற்சி மூலம் உடலில் உடனடி மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாது. அதனால் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் பயிற்சியை தொய்வின்றி மேற் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் பலனை அனுபவிக்க முடியும்.

    சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இந்த பயிற்சியை தொடங்கவேண்டும். வெறும் வயிற்றில் ஒருபோதும் சைக்கிளிங் பயிற்சியை செய்யக்கூடாது.

    சாலைகளில் சைக்கிள் ஓட்டி பயிற்சி பெறும்போது பாதுகாப்பில் மிகுந்த விழிப்போடு இருங்கள். பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் கவனமாக ஓட்டவேண்டும். பிரத்யேக ஹெல்மெட் அணிந்துகொள்வதும் அவசியம். சக்கரத்தின் ஸ்போக், பெடல் மற்றும் சைக்கிளின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பிரதிபலிக்கக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு இரவு நேர பயிற்சியை பெறுங்கள்.
    உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
    நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. யோகா மூலமாகவும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

    யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. ஆனால் இவை இரண்டையும் நிலையாக ஒப்பிடும்போது, நடைபயிற்சியை விட சிறந்ததாக யோகா கருதப்படுகிறது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் 242 கலோரிகள் எரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ஒரு மணி நேரம் யோகா செய்வதால் 340 கலோரிகள் எரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன. ஆகவே, எடை மேலாண்மை மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டில், நடைபயிற்சியை விட யோகா சிறந்தது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    யோகா, உடல் மற்றும் மனநலத்திற்கு சிறந்தது. நடைபயிற்சி என்பது ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே. ஆனால் இது உடல் மற்றும் மனநலத்திற்கு நன்மை புரிகிறது. ஆனால் யோகா செய்வதன் மூலம், ஆன்மீக ரீதியாகவும் நன்மை கிடைக்கிறது. நல்ல வழியில் நடக்க வேண்டும் என்ற உணர்வைத் தருவது யோகா. பதட்டம் மற்றும் கோபத்தை குறைக்க உதவுவது யோகா. ஆன்மீக யோகாசனம் , உங்கள் சுவாசத்தை மேம்படுத்துகிறது. யோகாவை பயிற்சி செய்வதால் உங்கள் ஐம்புலன்கள் (நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்தல்) போன்றவற்றின் மீது ஒரு சிறந்த கட்டுப்பாடு தோன்றுகிறது.

    பலர் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இது மிகவும் உண்மை. மற்றும் நடைபயிற்சியால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி அதன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இந்த செயல்பாடு நடைபயிற்சியை விட யோகாவில் அதிகம் உண்டு. இரத்த சர்க்கரை அளவை வளர்சிதை மாற்றத்தின் மூலம் குறைப்பது யோகாவில் இன்னும் சிறப்பாக செயலாற்றல் பெரும். நீரிழிவு நோயாளிகளுக்காகவே சில சிறப்பு யோகா பயிற்சிகள் உண்டு. இதனை இவர்கள் மேற்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு எளிதில் குறைகிறது.

    மன அழுத்தத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பது நடைபயிற்சி அல்லது யோகா, இந்த இரண்டில் எது என்பதை இப்போது பார்க்கலாம். மன நிலையை உயர்த்தி, அழுத்தத்தைக் குறைக்க நடைபயிற்சி உதவுகிறது. ஆனால் யோகா பயிற்சி செய்வதால், உங்கள் மன நிலையில் உயர்வு ஏற்பட்டு, கவனமும் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் நன்னடத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் உண்டான தசைகள், திசுக்கள் மற்றும் மூளைக்கு நெகிழ்வைத் தரும் தன்மை யோகாவிற்கு உண்டு. யோகாவை தினமும் பயிற்சி செய்வதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். இதனால் தூக்க கோளாறுகள் நீக்கப்பட்டு தூக்கம் மேம்படும். ஆகவே, யோகாவின் மூலம் ஒட்டுமொத்த மனித நல் வாழ்க்கை மேம்படும்.

    யோகா, உங்கள் அழகை நிர்வகிக்கவும் உதவுகிறது. அழகாகவும் இளமையாகவும் இருக்க விரும்பினால் தினமும் தொடர்ந்து யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் சருமத்தை மினுமினுப்பாகவும் துடிப்பாகவும் வைக்க யோகா உதவுகிறது. மூளையில் இயல்பான இரசாயன சமநிலையை நிலைநிறுத்த யோகாசனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக இரத்தத்தில் ஆக்சிஜன் வழங்குதல் அதிகரிக்கப்படும். ஆக்சிஜன் அதிகம் உள்ள இரத்தம், அணுக்களையும் திசுக்களையும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். யோகா பயிற்சி தொடர்ந்து செய்து வருவதால், சருமத்தின் மேல்புறம் உள்ள கொலோஜென் நார்கள் வலிமையாகும். இதனால் உங்கள் சருமம் களங்கமில்லாமல் பொலிவாக இருக்கும். ஆகவே யோகா பயிற்சியால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

    இப்போது யோகா மற்றும் நடைபயிற்சியில் எது சிறந்தது என்பது பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும். நடைபயிற்சி, உங்கள் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தை அதிகரித்தாலும், யோகவே சிறந்த விளைவுகளைத் தருகிறது. இதனால் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. நடைபயிற்சியுடன் யோகாவையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டின் நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா வயதினருக்கும் இந்த இரண்டு பயிற்சிகளும் ஏற்புடையது. ஜிம் சென்று பயிற்சிகள் செய்வது மிகவும் விலை உயர்ந்த பயிற்சியாகும் . இதனை விட இவை இரண்டும் அதிக பலன் தருபவையாகும். ஆனால், இந்த இரண்டில் எது சிறப்பானது என்று தேர்ந்தெடுத்தால் அது யோகா தான். யோகாவின் மூலம் சிறப்பான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.

    சைக்கிளிங் செய்வதன் மூலமும் கால்கள் வலுப்பெறுகின்றன. தினமும் சைக்கிள் பயிற்சி செய்வதால் இந்த நோய்கள் வராமல் நம்மை காத்துக்கொள்ள முடியும்.
    சைக்கிளிங் செய்வதன் மூலமும் கால்கள் வலுப்பெறுகின்றன. துடுப்பு படகு பயிற்சியானது உடல் முழுவதையும் சீர்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், உடல் வளையும் தன்மை, வலிமை, எதையும் தாங்கும் உடல் திறன் பெறலாம். கால்களால் பெடல் செய்வது போன்ற பயிற்சிகள் கால்களை வலுவானதாக ஆக்குகிறது. ‘லாட் புல் டவுன்‘ கருவியில் பயிற்சி செய்வதால் மார்பு பகுதிகள் நன்கு விரிவடையும். ஸ்மித், ஆப்ஸ் கருவிகள் உடலின் பல பகுதிகளுக்கும் பயிற்சி செய்ய பயன்படுகிறது.

    1. சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்.

    2. டைப் -1,  டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

    3. தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.  

    4. சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.

    5. ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வராது.

    6. உடல் எடையைக் குறைக்க உதவும்.

    7. சைக்கிள் ஓட்டுபவர்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

    8. மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    9. மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

    9. அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

    10. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. 
    ×