search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிராணாயாமம்
    X
    பிராணாயாமம்

    சுவாசத்தை சீராக்கும் பிராணாயாமம்

    உடம்பிற்குள் இருக்கும் கழிவுகளை அகற்றுவதைப் போல நாடிகளையும் யோகா மூலம் சுத்தம் செய்ய முடியும். பிராணாயாமத்தின் மூலம் மூச்சைப் பயன்படுத்தி பல பலன்களை அடையலாம்.
    நோய் நாடி… நோய் முதல் நாடி.. என்பதன் அர்த்தம் நோயின் தன்மையை அறிந்து குணப்படுத்துவது மட்டும் கிடையாது. நம் உடம்பில் இருக்கும் நாடியை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளைத் தருவது தான். உடம்பிற்குள் இருக்கும் கழிவுகளை அகற்றுவதைப் போல நாடிகளையும் யோகா மூலம் சுத்தம் செய்ய  முடியும்.

    நம் உடம்பில் இருக்கும் நாடியை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளைத் தருவது தான். உடம்பிற்குள் இருக்கும் கழிவுகளை அகற்றுவதைப் போல நாடிகளையும் யோகா மூலம் சுத்தம் செய்ய  முடியும். நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றிலும், வெளிவிடும் மூச்சுக்காற்றிலுமே உயிரின் ஜீவசக்தி ரகசியங்கள் அடங்கியிருக்கிறது. மூச்சுப்பயிற்சி தான் யோகக்கலையின் அடிப்படை.

    பிராணாயாமத்தின் மூலம் மூச்சைப் பயன்படுத்தி பல பலன்களை அடையலாம். மூக்கின் ஒரு பக்கத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு, மூக்கின் மற்றொரு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடவோ செய்ய வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு  வெளிமூச்சின் அளவு நன்கு நீளும். மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ, வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சுகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.

    செய்முறை

    நல்ல காற்றோட்டமான இடமாகத் தேர்வு செய்து அமர்ந்து கொள்ளவும். பிறகு, வலது கை விரல்களின் துணையோடு, வலதுபுற மூக்குத் துவாரத்தை முழுதாக அடைத்துக் கொள்ளவும். இடது மூக்குத் துவாரம் பாதியளவு திறந்திருக்கட்டும். இடது மூக்கு வழியே மூச்சை வெளியேற்றி, அதே மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். மூச்சை உள்ளே எடுத்து முடித்ததும் ஓரிரு வினாடிகளுக்குப் பின் இடதுபக்க மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, வலதுபுற மூக்கைப் பாதியளவு திறந்து அதன் வழியே மூச்சை வெளியே விடவும். ஓரிரு வினாடிகளுக்குப் பின், வலது மூக்கு வழியே மூச்சை உள்ளே இழுக்கவும். மீண்டும் இடது பக்க மூக்குத் துவாரம் வழியே மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று ஆகும்.

    ஆரம்ப நிலையில் யோகா பயில்பவர்கள் இதுபோல மூன்று சுற்று, ஆறு சுற்று, பத்து சுற்று என்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு போகலாம். எப்போது கை வலித்தாலும் கையைக் கீழிறக்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். பின்பு தொடரலாம்.பிராணாயாமத்தை சரியான முறையில் செய்வது முக்கியம். ஆகவே, சரியாகச் செய்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதல் பலன்களை நிறைவாகப் பெறுங்கள்.
    Next Story
    ×