என் மலர்
உடற்பயிற்சி
நீச்சல் கற்றுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. நீச்சல் உடல் பருமனை விரட்டும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும்.
தேவை இருக்கும் இடத்தில் அது சார்ந்த உற்பத்தியும் அதிகரிக்கும். இது இயற்கை நியதி. ஆனால் பெண் நீச்சல் பயிற்சியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையில்தான் பெண் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளனர். அதிலும் முறையாக அரசு வழங்கும் நீச்சல் பயிற்சியாளருக்கான தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் இன்னும் குறைவு.
நீச்சல் போட்டிகளில் மாநில, தேசிய அளவுகளில் பதக்கங்கள் பெறுபவர்கள்கூட, விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு பணிகளில் பணிபுரிவதற்கு ஆர்வமாக இருக்கிறார்களே தவிர, பயிற்சியாளர்களாக ஆவதற்கு விரும்புவதில்லை. காந்தி நகர் (அகமதாபாத்), பாட்டியாலா (டெல்லி) ஆகிய இடங்களுக்கு சென்றுதான் தேசிய நீச்சல் பயிற்சி சான்றிதழ் பெற வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாச பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதில் உள்ளவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. எனவே 30-ல் இருந்து 60 வயது வரையுள்ள பெண்கள் அதிகம் பேர் நீச்சல் பயிற்சி பெற வருகின்றனர். இளம் பெண்களிடம் தற்போது நீச்சல் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
நீச்சல் கற்றுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. நீச்சல் உடல் பருமனை விரட்டும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது. நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும் தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
நீச்சல் போட்டிகளில் மாநில, தேசிய அளவுகளில் பதக்கங்கள் பெறுபவர்கள்கூட, விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு பணிகளில் பணிபுரிவதற்கு ஆர்வமாக இருக்கிறார்களே தவிர, பயிற்சியாளர்களாக ஆவதற்கு விரும்புவதில்லை. காந்தி நகர் (அகமதாபாத்), பாட்டியாலா (டெல்லி) ஆகிய இடங்களுக்கு சென்றுதான் தேசிய நீச்சல் பயிற்சி சான்றிதழ் பெற வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாச பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதில் உள்ளவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. எனவே 30-ல் இருந்து 60 வயது வரையுள்ள பெண்கள் அதிகம் பேர் நீச்சல் பயிற்சி பெற வருகின்றனர். இளம் பெண்களிடம் தற்போது நீச்சல் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
நீச்சல் கற்றுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. நீச்சல் உடல் பருமனை விரட்டும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது. நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும் தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
பெண்கள் தொய்கின்ற மார்பகத்தை சரி செய்ய சில யோகா நிலைகள் கை கொடுக்கின்றன. உங்க மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்ய இந்த யோகாசனங்கள் கைக்கொடுக்கும்.
பெண்கள் தங்கள் மார்பகத்தை அழகாக வைத்துக் கொள்ள மிகவும் முயலுகின்றனர். பெண்கள் தொய்கின்ற மார்பகத்தை சரி செய்ய சில யோகா நிலைகள் கை கொடுக்கின்றன. கடுமையான எடை இழப்பு, ஆதரவான ப்ராக்கள் அணியாமல் உடற்பயிற்சி செய்தல், புகைபிடித்தல் மற்றும் பல கர்ப்பம் போன்ற சில காரணிகள் உங்க மார்பகத்தில் மாற்றங்களை உண்டாக்குகிறது. உங்க மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்ய இந்த சக்தி வாய்ந்த யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
புஜங்ஹாசனா அல்லது கோப்ரா நிலை
இது மிகவும் எளிமையான யோகா நிலையாகும். தரையில் குப்புற படுத்துக் கொண்டு கைகளை முன்புறம் தரையில் ஊன்றி உங்க தலையை மட்டும் பாம்பு படம் எடுப்பது போல் மேலே உயர்த்துங்கள். ஆழமான சுவாசத்தை மேற்கொள்ளுங்கள். மெதுவாக 5-10 நிமிடங்கள் என அதிகரியுங்கள்.
விருச்சாசனம் அல்லது மரம் போன்ற நிலை
இது மரம் போன்று நிற்கும் நிலையாகும். இது மார்பகங்களின் தளர்வான தசைகளை உறுதிப்படுத்த உதவுகிறது. முதலில் நேராக நின்று கொள்ள வேண்டும். இப்பொழுது உங்க வலது முழங்காலை மடக்கி இடது தொடையின் உள்புறத்தில் இருக்குமாறு வைத்து கைகளை சூரிய நமஸ்காரம் செய்வது போன்று வைத்து மூச்சை இழுத்து விடுங்கள். இந்த ஆசனத்தை 30 விநாடிகள் செய்யுங்கள். இதே மா மற்றொரு காலை மாற்றி செய்யுங்கள்.
தனுராசனம் அல்லது வில் போன்ற நிலை
இது உங்க மார்பகத்தை பழைய வடிவத்திற்கு கொண்டு வர உதவுகிறது. முதலில் தரையில் குப்புற படுத்து கொள்ளுங்கள். தலையை மேலே தூக்கி உங்க இரு முழங்காலையும் மடக்கி வலது கை விரல்களால் வலது கணுக்காலையும் இடது விரல்களால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு வில் போன்று வளைந்து இருக்க வேண்டும். வயிற்றை கொண்டு சமநிலையை கையாளுங்கள். இது 30 விநாடிகள் செய்யவும்.
வீரபத்ராசனம்
இது உங்கள் மார்பகத்தை அதை மீள் செய்ய உதவுகிறது. உங்க கால்களை நகர்த்தி இணையாக நில்லுங்கள். உங்கள் இடது பாதத்தை இடது பக்கமாகவும் வலது கால் உள்ளே திருப்பவும். உங்கள் இடது முழங்காலை மூச்சை உள்ளே இழுத்து வளைக்கவும். உங்கள் இரு கைகளையும் உயர்த்தி, தரைக்கு இணையாக உங்கள் தலையை இடது பக்கமாக திருப்பி உங்கள் மணிக்கட்டைப் பாருங்கள். இதை 7-10 தடவை திரும்பவும் செய்யவும். இதே மாதிரி வலது பக்கம் செய்து பழகுங்கள்.
உஷ்த்ரானம் அல்லது ஒட்டக நிலை
இது மார்பு திறக்கும் நிலை ஆகும். இது நுரையீரல் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பலப்படுத்துகிறது. முழங்காலில் நின்று கொண்டு பிறகு அதை பின்புறமாக மடக்கி அதில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உடல், கழுத்து, முதுகு வளைத்து அவை நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உங்க உள்ளங்கைகளை முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பதற்கு ஒட்டகம் நிற்பது போன்ற நிலை தோன்றும். 30 விநாடிகள் இந்த நிலையில் நில்லுங்கள்.
புஜங்ஹாசனா அல்லது கோப்ரா நிலை
இது மிகவும் எளிமையான யோகா நிலையாகும். தரையில் குப்புற படுத்துக் கொண்டு கைகளை முன்புறம் தரையில் ஊன்றி உங்க தலையை மட்டும் பாம்பு படம் எடுப்பது போல் மேலே உயர்த்துங்கள். ஆழமான சுவாசத்தை மேற்கொள்ளுங்கள். மெதுவாக 5-10 நிமிடங்கள் என அதிகரியுங்கள்.
விருச்சாசனம் அல்லது மரம் போன்ற நிலை
இது மரம் போன்று நிற்கும் நிலையாகும். இது மார்பகங்களின் தளர்வான தசைகளை உறுதிப்படுத்த உதவுகிறது. முதலில் நேராக நின்று கொள்ள வேண்டும். இப்பொழுது உங்க வலது முழங்காலை மடக்கி இடது தொடையின் உள்புறத்தில் இருக்குமாறு வைத்து கைகளை சூரிய நமஸ்காரம் செய்வது போன்று வைத்து மூச்சை இழுத்து விடுங்கள். இந்த ஆசனத்தை 30 விநாடிகள் செய்யுங்கள். இதே மா மற்றொரு காலை மாற்றி செய்யுங்கள்.
தனுராசனம் அல்லது வில் போன்ற நிலை
இது உங்க மார்பகத்தை பழைய வடிவத்திற்கு கொண்டு வர உதவுகிறது. முதலில் தரையில் குப்புற படுத்து கொள்ளுங்கள். தலையை மேலே தூக்கி உங்க இரு முழங்காலையும் மடக்கி வலது கை விரல்களால் வலது கணுக்காலையும் இடது விரல்களால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு வில் போன்று வளைந்து இருக்க வேண்டும். வயிற்றை கொண்டு சமநிலையை கையாளுங்கள். இது 30 விநாடிகள் செய்யவும்.
வீரபத்ராசனம்
இது உங்கள் மார்பகத்தை அதை மீள் செய்ய உதவுகிறது. உங்க கால்களை நகர்த்தி இணையாக நில்லுங்கள். உங்கள் இடது பாதத்தை இடது பக்கமாகவும் வலது கால் உள்ளே திருப்பவும். உங்கள் இடது முழங்காலை மூச்சை உள்ளே இழுத்து வளைக்கவும். உங்கள் இரு கைகளையும் உயர்த்தி, தரைக்கு இணையாக உங்கள் தலையை இடது பக்கமாக திருப்பி உங்கள் மணிக்கட்டைப் பாருங்கள். இதை 7-10 தடவை திரும்பவும் செய்யவும். இதே மாதிரி வலது பக்கம் செய்து பழகுங்கள்.
உஷ்த்ரானம் அல்லது ஒட்டக நிலை
இது மார்பு திறக்கும் நிலை ஆகும். இது நுரையீரல் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பலப்படுத்துகிறது. முழங்காலில் நின்று கொண்டு பிறகு அதை பின்புறமாக மடக்கி அதில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உடல், கழுத்து, முதுகு வளைத்து அவை நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உங்க உள்ளங்கைகளை முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பதற்கு ஒட்டகம் நிற்பது போன்ற நிலை தோன்றும். 30 விநாடிகள் இந்த நிலையில் நில்லுங்கள்.
ஆழ்ந்த சுவாசம் என்பது பல நன்மைகளை உள்ளடக்கியது. உங்க உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க ஆழ்ந்த சுவாச தியான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
தியானம் என்பது மத ரீதியான பயிற்சி மட்டும் கிடையாது அது நம் உடல் ரீதியான ஆரோக்கியமான பயிற்சியும் கூட. ஆழ்ந்த சுவாசம் என்பது பல நன்மைகளை உள்ளடக்கியது. இந்த ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் நீங்கள் அமைதியாகவும் நேர்மறையாகவும் உணர முடியும். ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும் போது உங்க உடலானது புத்துணர்ச்சி அடைகிறது. எனவே தான் உங்க உடலை ஆரோக்கியமாக வைக்க ஆழ்ந்த சுவாச பயிற்சி அவசியம்.
முதலில் காற்றை உள்ளிழுத்து ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்
எதிர்மறை எண்ணங்களை உங்க மனதில் இருந்து வெளியேற்றி நேர்மறை எண்ணங்களை மனதில் வையுங்கள்.
நீங்கள் எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் போது நேர்மறை எண்ணங்களின் மீது உங்களால் கவனம் செலுத்த முடியும். இது உங்களை மகிழ்ச்சியாகவும் நேர்மையாகவும் உணர வைக்கும். நம்பிக்கையுடன் உங்க நாளை தொடங்குங்கள்.
ஆழ்ந்த சுவாசம் தியானம் செய்ய எளிதான வழியாகும். நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது இதைச் செய்து வரலாம். இத்தகைய சூழ்நிலையில் ஆழ்ந்த சுவாசம் உங்க மனதையும் உடலையும் அமைதிப்படுத்தவும் ஓய்வெடுக்கவும் உதவி செய்யும்.
உடலில் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. ஏனெனில் அதிகப்படியான ஹார்மோன் அளவு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உடலின் மையத்தை வலுப்படுத்துகிறது, சுவாசத்தை உள்ளிழுக்கவும், வெளியே விடவும்.
உதரவிதானத்தை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உங்க நுரையீரலை பலப்படுத்த முடியும்.
எனவே உங்க உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க ஆழ்ந்த சுவாச தியான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
முதலில் காற்றை உள்ளிழுத்து ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்
எதிர்மறை எண்ணங்களை உங்க மனதில் இருந்து வெளியேற்றி நேர்மறை எண்ணங்களை மனதில் வையுங்கள்.
நீங்கள் எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் போது நேர்மறை எண்ணங்களின் மீது உங்களால் கவனம் செலுத்த முடியும். இது உங்களை மகிழ்ச்சியாகவும் நேர்மையாகவும் உணர வைக்கும். நம்பிக்கையுடன் உங்க நாளை தொடங்குங்கள்.
ஆழ்ந்த சுவாசம் தியானம் செய்ய எளிதான வழியாகும். நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது இதைச் செய்து வரலாம். இத்தகைய சூழ்நிலையில் ஆழ்ந்த சுவாசம் உங்க மனதையும் உடலையும் அமைதிப்படுத்தவும் ஓய்வெடுக்கவும் உதவி செய்யும்.
உடலில் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. ஏனெனில் அதிகப்படியான ஹார்மோன் அளவு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உடலின் மையத்தை வலுப்படுத்துகிறது, சுவாசத்தை உள்ளிழுக்கவும், வெளியே விடவும்.
உதரவிதானத்தை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உங்க நுரையீரலை பலப்படுத்த முடியும்.
எனவே உங்க உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க ஆழ்ந்த சுவாச தியான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் சில தவறுகளை செய்வதற்கு வாய்ப்புகளுண்டு. அந்த வகையில் ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்பவர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளை பற்றி பார்ப்போம்.
ஜாக்கிங்பயிற்சியின் மூலம் உடல் எடை குறைப்பது தான் உங்கள் நோக்கம் என்றால், நீங்கள் ஜாக்கிங்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லை எனில் நீங்கள் ஓடும் போது தவறு செய்கிறீர்கள் என்று பொருள். இந்த மாதிரி தவறுகள் சாதாரணம் தான். அதுவும் ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் தவறுகள் செய்வதற்கு அதிக வாய்ப்புகளுண்டு.
நீங்கள் இப்போது தான் ஜாக்கிங்பயிற்சியை தொடங்கி இருக்கிறீர்கள் என்றால் வீட்டிலுள்ள பழைய காலணிகளை தான் உபயோகிக்க ஆரம்பித்திருப்பீர்கள். பெரும்பான்மையான சமயங்களில் அது உங்கள் பாதங்களுக்கு தர வேண்டிய சவுகரியத்தை தராது. மாறாக அசவுகரியத்தையே ஏற்படுத்தும். எனவே ஜாக்கிங்பயிற்சிக்கு உகந்த, பொருத்தமான காலணிகளை அணிந்து கொண்டு ஓடுவது அவசியம். அப்போது தான் கால்கள் மற்றும் பாதங்களில் காயங்கள் ஏற்படாது.
ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் உற்சாக மிகுதியால் மற்றும் வேகமாக ஓடினால் நல்லது என்று நினைத்து கொண்டு வேகமாக ஓடுவார்கள். ஆனால் அப்படி செய்ய கூடாது. இப்படி ஓடுவதால் முழங்காலுக்கு கீழும் கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் முன்பகுதியில் வலி ஏற்படும். இதனை shin splints என்று கூறுவர். அல்லது தொடை எழும்பின் கீழ்பகுதியும் முழங்காலும் சந்திக்கும் இடத்தில் முன்புறம் அல்லது பின்புறம் வலி ஏற்படும். இதனை runner's knee என்று கூறுவர். அல்லது முழங்காலின் பக்கவாட்டில் வலி ஏற்படும். இதனை ITB syndrome என்று கூறுவர். இவ்வாறு இவற்றில் ஏதோ ஒரு வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மெதுவாக தான் உங்கள் வேகத்தையும் , தூரத்தையும் அதிகரிக்க வேண்டும் .
ஜாக்கிங் பயிற்சியின் போது சரியான முறையில் சுவாசிக்க வேண்டும். இல்லையெனில் மூச்சு திணறல் மற்றும் நிறைய ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே ஜாக்கிங்பயிற்சியின் போது வாய் மற்றும் மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுங்கள் . இப்படி சுவாசிக்கும் போது தேவையான அளவு பிராணவாயு நமக்கு கிடைக்கும். இல்லையெனில் ஓடும் போது அடிவயிறு மேல்நோக்கி தரும் அழுத்தத்தாலும் நுரையீரல் கீழ் நோக்கி தரும் அழுத்தத்தாலும் உதரவிதானத்திற்கு (diaphragm) குறைவான அளவே ரத்தம் பாயும். இதனால் தசை பிடிப்பு ஏற்படும். இதனை ஆங்கிலத்தில் side stitches என்று கூறுவர்.
ஓடும் போது எந்த துணி அணிகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் சிலர் அதிக துணி அணிவார்கள் . வேறு சிலர் குறைவான துணிகளையே அணிவார்கள். இது பருவநிலை சார்ந்த நோய்களுக்கு நம்மை ஆட்படுத்தக்கூடும். எனவே ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளும் போது பருவநிலைக்கு தகுந்தாற்போல உடை அணியுங்கள்.
ஓடும் போது மேலுடம்பு சரியாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் சிறிது தூரம் சென்றதும் முதுகு கூன் போட்டு விடும். அப்படி இல்லாமல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு ஓட வேண்டும். அதே போல கையை முழங்கை ஆரம்பிக்கும் இடத்தில் மடக்கி 90 டிகிரி கோணத்தில் இடுப்புக்கு பக்கவாட்டில் வைத்து கொள்ளுங்கள். ஓடும் போது கை முன்னும் பின்னும் செல்லுமாறு பார்த்து கொள்ளுங்கள்.
தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள் . இல்லையெனில் உடல் ஆரோக்கியம் குன்றும் . அதாவது நம் உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையெனில் மயக்கம் அல்லது தலைவலி ஏற்படும். மேலும் உற்சாகமாக வேலை செய்ய முடியாது. எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். அதேபோல ஜாக்கிங்பயிற்சி முடித்த பின்னரும் கூட தவறாமல் தண்ணீர் அருந்துங்கள்.
வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.
காலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை. வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.
பெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் (Pelvic lifting with single leg): தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும்.
இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரித்து கொண்டே வர வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்துவந்தால் நல்ல முன்னேற்றம் தெரிவதை காணலாம்.
பலன்கள்
வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.
சில விளையாட்டுத்தனமானதாகவும், வித்தியாசமாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று, ‘தவளை ஜம்ப்’. தவளை போல் தாவி குதித்து செய்யும் இந்த வகை எளிய உடற்பயிற்சி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் நடைமுறையில் இருக்கின்றன. அதில் தங்களுக்கு பிடித்த பயிற்சிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரும் மேற்கொள்கிறார்கள். அதில் சில விளையாட்டுத்தனமானதாகவும், வித்தியாசமாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று, ‘தவளை ஜம்ப்’. தவளை போல் தாவி குதித்து செய்யும் இந்த வகை எளிய உடற்பயிற்சி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
30 நிமிடங்கள் தவளை ஜம்பிங் பயிற்சி செய்தால் உடலில் இருந்து 800 கலோரிகள் செலவாகும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்தால் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். தவளை போல் துள்ளிக் குதிப்பது இதயத்திற்கும் நன்மை பயக்கும். இடுப்புக்கு கீழ் உள்ள தசைகளையும் வலுப்படுத்தும். இடுப்பு வலி மற்றும் கால் வலியில் இருந்தும் விடுபடலாம். ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் இந்த பயிற்சி ஏற்றது. இடுப்பு மற்றும் தொடைப்பகுதி எலும்புகளையும் வலுவாக்கும். ரத்த ஓட்டமும் கட்டுக்குள் இருக்கும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 30 விநாடிகள் தாவி குதித்து பயிற்சி செய்ய வேண்டும். பின்பு சிறிது இடைவெளிவிட்டு பயிற்சியை தொடரவேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு விரும்பாதவர்கள்கூட மகிழ்ச்சியாக இதனை மேற்கொள்ளலாம்.
இந்த பயிற்சி எளிதானது. முதலில் சமதளம் கொண்ட தரையில் நேராக நிமிர்ந்து நின்று இரு கைகளையும் மேலே உயர்த்தி குதிக்க வேண்டும். பின்பு தரையில் தவளை போல் கால்களை மடக்கி அமர்ந்து கொண்டு இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நேராக நிமிர்ந்து துள்ளி குதித்தபடி அமர்ந்து கால்களை நகர்த்தி தாவி செல்லவேண்டும். முதலில் இந்த பயிற்சியை செய்யும்போது உடல் சமநிலையை இழக்கக்கூடும். சரியாக கால்களை நகர்த்தி முறையாக பயிற்சி செய்தால் எளிதாகிவிடும்.
பல விதமான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சி முறைகளானது பெண்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பல விதமான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சி முறைகளானது பெண்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் எடை பயிற்சியும் அடங்கும். இருப்பினும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டால் பொதுவாக ஆண்களை போல தோற்றமளிப்போம் என பெண்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இது குறித்து உடற்தகுதி வல்லுநர்கள் கூறும்போது அதிக எடை பயிற்சியை செய்வதால் மொத்தமாக பெண்கள் ஆண்கள் போல தோற்றமளிப்பதில்லை.
நமது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிப்பது மிக முக்கியமாகும். உடலில் எரிசக்தி அளவை உயர்த்தவும், கொழுப்பை எரிக்கவும் எடை பயிற்சி உதவுகிறது. மேலும் உடல் வலிமை மற்றும் இதய வலிமை இரண்டிற்கும் இது உதவுகிறது. மேலும் எடை பயிற்சி எலும்புகளை பலப்படுத்துகிறது.
நீண்ட காலத்திற்கு எடை பயிற்சி செய்வதை பழக்கமாக கொண்டிருப்பதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
இழுக்கும் பயிற்சி
நன்கு வரையறுக்கப்பட்ட உடற்பயிற்சியை பெறுவதற்கும் முன் கைகளை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு தீவிரமான பயிற்சியாக இழுக்கும் பயிற்சி உள்ளது. இந்த பயிற்சியின் போது உடல் இயக்கமானது உடலை நோக்கி செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ எடையை இழுக்கிறது. நமது உடல் எடையை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ செய்யும் பயிற்சியாக இது உள்ளது. இழுக்கும் பயிற்சியை பொறுத்தவரை அதில் பல வகையான பயிற்சிகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏதுவான ஒரு பயிற்சியை மேற்கொள்ளலாம்.
தள்ளுதல் பயிற்சி
மற்ற பயிற்சிகளை விடவும் எளிதான அதே சமயம் உடலுக்கு நன்மை பயக்க கூடிய பயிற்சியாக தள்ளுதல் பயிற்சி உள்ளது. இந்த பயிற்சிக்கு நாம் தரையில் படுத்தல் நிலைக்கு செல்ல வேண்டும். பிறகு பாதங்களை மட்டும் தரையில் ஊன்றி நமது இரு கைகளையும் தரையில் ஊன்றி கொள்ள வேண்டும். பிறகு உடலை புவியீர்ப்பு விசையை நோக்கி தள்ள வேண்டும். பிறகு கைகளை பயன்படுத்தி மீண்டும் உடலை ஈர்ப்பு விசைக்கு எதிராக தூக்க வேண்டும். இந்த பயிற்சியில் முதுகு, மார்பு, தோள் பட்டை மற்றும் கைகளுக்கு பயிற்சி கிடைக்கிறது.
ஸ்குவாட்ஸ்
ஸ்குவாட்ஸ் ஒரு சுலபமான அதே சமயம் சவாலான பயிற்சியாகும். இவை உங்கள் உடல் மையத்தையும் உங்கள் இடுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள ஒவ்வொரு தசைகளுக்கும் பயிற்சி அளிக்கின்றன. இந்த பயிற்சியை செய்வது மிகவும் எளிது ஆகும். முதலில் கையில் டம்பிள்ஸ் அல்லது ஏதேனும் ஒரு எடை பொருளை கொண்டிருக்க வேண்டும். அவற்றை இரண்டு கைகளிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு கால்களை சிறிது விரித்து வைத்துக்கொள்ளவும். கையில் உள்ள டம்பிள்ஸ் இடுப்பிற்கு நேராக வருமாறு கைகளை தொங்க போட்டு கொள்ளவும். இந்த நிலையில் அப்படியே அமர்ந்து பிறகு எழ வேண்டும். இப்படியாக தொடர்ந்து பத்து முறை செய்யலாம். இந்த ஸ்குவாட்ஸில் பல வகைகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏதுவான வகைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
சுழற்சி மற்றும் எதிர் சுழற்சி
இது ஒரு சரியான கட்டுப்பாட்டு இயக்கமாகும். இது மெல்லிய மற்றும் மிருதுவான இடுப்பை அடைய உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்கள் மையத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் முதுகெலும்பையும் நேர் செய்கிறது. இதில் பல்லோஃப் ப்ரஸ், வூட் சாப்ஸ், ரஷ்ய ட்விட்ஸ் என பல வேறுப்பட்ட முறைகள் உள்ளன.
ஹிங் பயிற்சி
இந்த ஹிங் பயிற்சியை தவறான முறையில் செய்யும் போது அதனால் உடலில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் இது ஒற்றை காலை கொண்டு உடலை நடுநிலைப்படுத்தும் பயிற்சியாகும். இது நமது உடலில் உள்ள முக்கிய மற்றும் உறுதியான தசை குழுவான குளுட்டிகள் மீது செயல்ப்படுகிறது. உடலில் உள்ள குளுட்டிகளே ஒரு பெண்ணின் உடலுக்கு சரியான வடிவத்தை வழங்க முடியும்.
ஹிங் பயிற்சியில் ருமேனிய டெட்லிஃப்ட்ஸ், சுமோ டெட்லிஃப்ட்ஸ், டம்பல் பார்பெல் டெட்லிஃப்ட்ஸ் என பல வகை இயக்கங்கள் உள்ளன.
உங்களுக்கு தேவையான மற்றும் முற்றிலும் புதிதான நான்கு வகை உடற்பயிற்சிகள் இதோ... இதனை முயற்சி செய்து பாருங்கள் அழகான, கட்டான உடலை பெறுங்கள்..
இக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற கொடிய நோய்களில் இருந்து போராடி வெற்றியை காணலாம். தினமும் உடற்பயிற்சி செய்வதால் இரத்த கொதிப்பின் அளவை சீராக வைக்கலாம். இந்தியாவில் 50 சதவித மக்கள் நீரிழிவு நோய்க்கு தள்ளப்படுகின்றனர்.
இதனால் உலக சுகாதாரத் துறை, உடற்பயிற்சி செய்வதால் நம் உடலை ஆரோக்கியமாகவும் மற்றும் நீரிழிவு நோய்க்கு முற்றுபுள்ளி வைக்கலாம் எனவும் கூறுகின்றனர். தினமும் 30 நிமிடத்திற்கு உடல்ரீதியாக பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமான உடலுக்கு நாமே சொந்தக்காரர்கள்!! “உடலின்றி உயிர் இல்லை” என்ற வரிகளுக்கு இணங்க உடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவ்வுடலில் உயிர் நிலைக்காது என்பது தான் உலக நீதி..இதனை மாற்ற யாராலும் இயலாது. உங்களுக்கு தேவையான மற்றும் முற்றிலும் புதிதான நான்கு வகை உடற்பயிற்சிகள் இதோ... இதனை முயற்சி செய்து பாருங்கள் அழகான, கட்டான உடல் வளைவை பெறுங்கள்..
நடனமாடுவது,எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.தினமும் 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் உங்களுக்கு பிடித்தமான பாடலிற்கு நடனமாடுவது என்பது ஒரு வித உடற்பயிற்சி ஆகும்.அவ்வாறு நடனமாடுவது மூலம் நமது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக்க உதவுகிறது.சிலர்,நடனமாடுவதால் மனதில் ஏற்படுகின்ற தேவையற்ற குழப்பங்கள் தீர்ந்து மன நிம்மதி அடைவார்கள்.இதனை ஒரு பொழுது போக்கும் விதமாகவும் செயல் படுத்தி வருகின்றனர்.வாரத்தில் ஐந்து நாட்கள் இவ் உடற்பயிற்சியை செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்..
நடைபயிற்சி மிக எளிய வகையான உடற்பயிற்சி ஆகும்.இதற்காக நீங்கள் தனி நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அல்லது மாலை நேர வெயிலில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.2014,ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி நடைபயிற்சி செய்வதால் நீரிழிவு நோயின் இரண்டாவது பிரிவையும் மற்றும் உடல் எடையும் குறைக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுயுள்ளனர்..
பளு தூக்குதல் மூலம் தசைகள் யாவும் வலிமைபெருகின்றது.வீட்டில் கிடைக்கின்ற கனமான பொருட்கள் அல்லது (dumbbells)பிரடையை உடற்பயிற்சிக்காக பயன்படுத்தலாம்.தினமும் பளு தூக்குதல் செய்து வந்தால் உடலில் ஆரோக்கியம் வலிமை பெரும்..
யோகா உடற்பயிற்சி, சுமார் 500 வருட பாரம்பரிய உடற்பயிற்சி ஆகும்.யோகா என்பது மனரீதியான உடற்பயிற்சி எனவும் கூறலாம்.ஏனென்றால் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடிவு பெறலாம்.அது மட்டும் இல்லாமல் தசைகளும் வலிமை பெறுகிறது..
நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த யோகா பயிற்சி செய்வது உங்கள் தசைகளிலிருந்து வரும் பதற்றத்தை நீக்கி உங்களை உற்சாகப்படுத்தும்.
உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைப்பதில் யோகா எந்த அளவுக்கு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பதிவில் வாரியர் போஸ் 2 என்றும் அழைக்கப்படும் வீரபத்ராசனம் எப்படி செய்வது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கேட்டுக்கொண்டார்.
செய்முறை
உங்கள் கால்களுக்கு இடையில் 4 முதல் 5 அடி இடைவெளியில் எழுந்து நிற்கவும். உங்கள் வலது பாதத்தை 90 டிகிரி கோணத்தில் வைத்திருங்கள் மற்றும் உங்கள் வலது காலைப் பொறுத்து, உங்கள் இடது பாதத்தை 45 டிகிரியில் வைக்கவும். தரைக்கு ஒத்தாக உங்கள் கைகளை தோள்பட்டை மட்டத்திற்கு கொண்டு வாருங்கள். உங்கள் வலது முழங்காலை வளைத்து, உங்கள் வலது பக்கம் பாருங்கள்.
உங்கள் இடுப்பை சதுர வடிவிலும், வலது தொடையை தரைக்கு இணையாகவும் வைக்கவும். 10 முதல் 15 விநாடிகள் இப்படியே இருந்து பிறகு தோரணையை விடுங்கள்.
இந்த ஆசனத்தை சரியாக செய்யாவிட்டால், இது முழங்கால் வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
நன்மைகள்:
இந்த போஸ் சமநிலை, நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இது உங்கள் கால்கள் உட்பட கீழ் உடலை வலுப்படுத்த உதவுகிறது.
உங்கள் மார்பு மற்றும் நுரையீரலைத் திறப்பதன் மூலம், இந்த போஸ் உங்களுக்கு நன்மை பயக்கும்.
இது முதுகுவலியைப் போக்க உதவுகிறது. பலவீனமான இடுப்பு தசைகள் மற்றும் இடுப்பில் வலி ஆகியவை இந்த போஸ் சமாளிக்கக்கூடிய பொதுவான பிரச்சினைகள். இது சிறந்த சமநிலையையும் நிலைத்தன்மையையும் வளர்க்க உதவுகிறது. இது உங்கள் இடுப்பு மற்றும் இடுப்பு தசைகளை நீட்ட உதவுகிறது.
நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த யோகா போஸைப் பயிற்சி செய்வது உங்கள் தசைகளிலிருந்து வரும் பதற்றத்தை நீக்கி உங்களை உற்சாகப்படுத்தும்.
உங்கள் நுரையீரல், இதயம் மற்றும் தசைகள் ஒழுங்காகவும் திறமையாகவும் செயல்பட அனுமதிப்பது உடல் முழுவதும் ஆரோக்கியமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை பராமரிக்க உதவும்.
‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் நடன அசைவுச் சிகிச்சையில் நடன அசைவுகளுடன், தியானம், யோகாசனம், தாய்சி எனப்படும் தற்காப்புக் கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை நுட்ப செயல்பாடுகள் போன்றவைகள் அடங்கும்.
மனிதர்களுக்கு புதிது புதிதாக நோய்கள் ஏற்படும் இன்றைய சூழலில், புதிய சிகிச்சை முறைகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவைகளில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது, ‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் நடன அசைவுச் சிகிச்சை. இது இந்தியாவில் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. மனநலம், உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்தப் புதிய சிகிச்சை நல்ல பலனைத்தருவதாக சொல்கிறார்கள்.
“நடன அசைவு சிகிச்சையை என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கிக்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சில எளிமையான அசைவுகளின் மூலம், என் உடல், மனம், ஆத்மா மூன்றையும் இந்த தெரபி இணைக்கிறது. நடன அசைவுக்காக உடலை வளைத்து நெளித்து கஷ்டப்பட்டு ஆடவேண்டியதில்லை. எனக்கு தெரிந்த விதத்தில், பிடித்த முறையில் சுயமாக ஆடுகிறேன். இப்படித்தான் உடம்பை அசைக்கவேண்டும் என்ற எந்த வரைமுறையும் இல்லை. நடன அசைவுகளுடன், மூச்சுப் பயிற்சியும், வேறு சில பயிற்சிகளும் தருகிறார்கள். அவை அனைத்தும் சேர்ந்து வித்தியாசமான அனுபவத்தை தருகின்றன. அதனால் உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறுகிறது” என்கிறார், ஷீலா. இவரது வயது 48.
உடல், மனநலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், அவற்றை ஒரு ஜாலியான, எளிதான வழியில் எதிர்கொள்வதற்கு இந்தச் சிகிச்சை முறை உதவுகிறது என்கிறார்கள். இந்த பயிற்சியில் நடன அசைவுகளுடன், தியானம், யோகாசனம், தாய்சி எனப்படும் தற்காப்புக் கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை நுட்ப செயல்பாடுகள் போன்றவைகள் அடங்கும். நாட கமும் இடம்பெறுகிறது.
யோகா, பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள், தற்காப்புக் கலைகள், நாடகம், பேச்சில்லா நடிப்பு, மனதை இலகுவாக்கும் ‘ரிலாக்ஸ்’ நுட்பங்கள் போன்ற பலவற்றையும் கலந்து இதனை வடிவமைத்திருக்கிறார்கள். சிகிச்சைக்கு வருபவர்களின் உடல்நிலையையும், மனநிலையையும் ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி சிகிச்சையினை வழங்குகிறார்கள்.
மனநெருக்கடி, மனஅழுத்தம், தன்னம்பிக்கைக் குறைவு, கவனக் குறைபாடு போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு நடன அசைவுச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறதாம். ஆட்டிசம், சீசோபிரெனியா, நீடித்த வலி, மூட்டு வலி, ஞாபகமறதி, உணவு உண்ணுதலில் உள்ள குறைபாடுகள் தொடர்பான பிரச்சினை கொண்டவர்களுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும் என்கிறார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச் சினைகள், மனநிலை, உடல்நிலையை கருத்தில்கொண்டு அதற்கேற்ப தெரபிஸ்டுகள் சிகிச்சை முறையை வடிவமைக்கிறார்கள்.
“இந்த சிகிச்சை முறையில் பேச்சு என்பது குறைவுதான். அசைவுகள்தான் அதிகம். நாங்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் வார்த்தைகளைவிட செயலில் அதிக கவனம் செலுத்துகிறோம். காரணம், வார்த்தைகளை விட, வார்த்தைகளற்ற தொடர்பு முறையில்தான் நம்மால் சிறப்பாக செயலாற்ற முடியும்” என்கிறார், நடன அசைவுச் சிகிச்சையாளர், தாமினி. பாலியல்ரீதியான பாதிப்புகளுடன் வரும் பெண்களுக்கு ‘பெல்லி’ நடன அசைவுகளை அதிகம் பயன்படுத்துவதாகக் கூறுகிறார், இவர்.
நடன அசைவுச் சிகிச்சை என்பது முழுக்க முழுக்க நடனம் ஆடுவது போன்றதா? சிகிச்சை பெற வருபவர்களுக்கும் நடனம் தெரிந்திருக்கவேண்டுமா?
“நடனம் மனிதர்களை உற்சாகப்படுத்தக்கூடியது. நடனத்தில் சில நுட்பங்களும், அழகியல் உணர்வுகளும் வெளிப்படும். ஆனால் நடன அசைவுச் சிகிச்சை பெறுபவர், அப்படி எந்த நுட்பங்களையும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் நாங்களே கற்றுக்கொடுத்துவிடுகிறோம்” என்கிறார்கள், தெரபிஸ்டுகள்.
வாழ்வில் பிரச்சினைகளால் அவதிப்படும்போது நடனம், ஓவியம் போன்றவற்றில் கவனத்தைத் திசைதிருப்பும்படி கூறப்படுவதுண்டு. ஆனால் நடன அசைவுச் சிகிச்சையோ, பிரச்சினையை நேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள் என்கிறது.
“பிரச்சினையில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், அதை எப்படிக் கையாளவேண்டும் என்று நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம். நடனம் சிந்தனைத் திறனையும், செயல்திறனையும் அதி கரிக்கக்கூடியது. அதனை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறோம்” என்கிறார்கள். இந்த தெரபியில் இசைக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சிகிச்சை பெறுபவரின் மனநிலையை மேம்படுத்தும் விதத்தில் இசையையும் வடிவமைத்து இசைக்கச் செய்கிறார்கள்.
நடன அசைவுச் சிகிச்சையில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. அவை பலன் கொடுப்பதற்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் தேவைப்படுகிறது. பயிற்சியாளர், சிகிச்சைக்கு வருபவரின் உடல் அசைவுகளை முதலில் ஆழ்ந்து கவனிக்கிறார். சிகிச்சைக்கு வந்தவரை பலவித வேடிக்கையான அசைவுகளைச் செய்யும்படியும் கூறுகிறார். அவர் விரும்பியபடி எல்லாம் உடல் அசைவுகளை வெளிப்படுத்தும்படியும் கூறுகிறார். அப்போது அவருக்குள் இருக்கும் உணர்வுரீதியான பிரச்சினைகளை எல்லாம் புரிந்துகொள்கிறார். அந்த பிரச்சினைகளுக்கு நடன அசைவுகள் மூலம் தீர்வும் அளிக்கிறார்கள்.
பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
பிராணயாமா அல்லது பிராணாயாமம் என்பது ஒரு வடமொழி சொல், அதற்கு “பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்” என்பது பொருள். யோகாவில் ஒரு தொழில்நுட்ப வார்த்தையாகப் இதை பயன்படுத்தும்போது அது பெரும்பாலும் குறிப்பாக “மூச்சுக் கட்டுப்பாடு” மூச்சு பயிற்சி என்றே அழைக்கப்படுகிறது.
· முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதை பூரகம் என்று பெயர்.
· இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.
· இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.
· வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல்.இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்றும் கூறுவர்கள். பிராணாயாமம் பயிற்சியை பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தான் செய்ய வேண்டும்.
பத்மாசனம் செய்வதற்கு உட்காருவதற்கு முன் முகம் கைகால்களுடன் மூக்குத் துவாரங்களைத் தண்ணீர் விட்டு விரலால் கழுவி சளி, தூசு போன்றவை இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தூய்மையான துணியை எடுத்து கைகால்களுடன் மூக்குத் துவாரத்தையும் சேர்த்து நன்றாக துடைத்துவிட வேண்டும். இவ்விதம் சுத்தம் செய்வதால் மூக்குத் துவாரத்தின் வழியே தங்கு தடையின்றி காற்று செல்லவும் திரும்பவும் வெளியே வரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பிராணாயாமா என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணாயாமா என்பது ஒரு உன்னத உடற்பயிற்சியாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.
வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல நல்ல உடல்நல பயன்களை பிராணாயாமா உங்களுக்கு தருவதால் இந்த சுவாசப்பயிற்சி வழிமுறை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல அதிசயங்களை நிகழ்த்தும். பிராணாயாமாவால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே கிடைக்கும்.
பிராணாயாமா என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பிராணாயாமா உதவுகிறது என்ற சந்தோஷமான விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிராணாயாமாவை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே நல்ல வித்தியாசத்தை உஙக்ளில் உணர்வீர்கள். உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் இருக்கிறது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்று தான் பிராணாயாமா.
பிராணாயாமாவால் உடலுக்கு கிடைக்கும் பல நல்ல பயன்கள், அதோடு இது மனதை திடமாக வைப்பதற்கும் உதவுகிறது. தினமும் பிராணாயாமா பயிற்சியை செய்து வாருங்கள். உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் தணியும். ஒரு நல்ல யோகா ஆசிரியிடம் இந்த பயிற்சியை கற்ற பிறகு, தானாக இதனை தினசரி செய்து வாருங்கள். சில நிமிட பயிற்சி சீரிய மாற்றம் கொடுக்கும்.
நம் உடல் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் அளவை மாற்றக்கூடிய உடற்பயிற்சிகளை (aerobic) செய்வது ஆழ்ந்து உறங்க உதவுகின்றன என்று கூறப்படுகிறது.
நம் தூக்கத்தில் உடற்பயிற்சிகள் குறிப்பாக இன்ன விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை வல்லுநர்கள் இன்னும் இறுதியாக கூற இயலவில்லை. ஆனால், தூக்கத்திற்கும் உடற்பயிற்சிக்கும் தொடர்பு இருக்கக்கூடிய விதங்களை ஓரளவுக்கு அவர்களால் வரையறுக்க முடிகிறது. நம் உடல் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் அளவை மாற்றக்கூடிய உடற்பயிற்சிகளை (aerobic) செய்வது ஆழ்ந்து உறங்க உதவுகின்றன என்று கூறப்படுகிறது. ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்யும்போது உடல் புத்துணர்வு பெறுகிறது. உடற்பயிற்சி செய்வதால் மனம் அமைதியடைகிறது. மனம் சாந்தமடைந்தால் நன்றாக உறங்க முடியும். உடற்பயிற்சி செய்வதால் உடலிலிருந்து வியர்வை வெளியேறுகிறது; அதுவும் நம் உறக்க நேரத்தைச் சீராகப் பராமரிக்க உதவுவதாக சில வல்லுநர்கள் கருதுகிறார்கள்..
நாம் உடற்பயிற்சி செய்யும் நேரமும் உறக்கத்தை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகாலையில் உடற்பயிற்சி செய்வோமானால், அதன் காரணமாக எழும் உடல் வெப்பம் இரவில் தூக்கத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. அதேவேளையில் படுக்கைக்குச் செல்வதற்குச் சற்று நேரம் முன்னதாக உடற்பயிற்சி செய்வதும் உறக்கத்தைத் தூண்டாது. அப்போது அட்ரீனலின் சுரப்பி வேலை செய்து உறக்கத்தைக் கெடுத்துவிடும். ஆகவே, இரவில் ஆழ்ந்து உறங்க விரும்புகிறவர்கள் உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் பிற்பகல் வேளையாகக் கருதப்படுகிறது..
பிற்பகலில் உடற்பயிற்சி செய்தால், உடல் வெப்பம் சிறிது சிறிதாக அதிகரித்து, நீங்கள் உறங்கக்கூடிய நேரத்தில் குறைய ஆரம்பிக்கும். பின் மாலைப்பொழுதில் உடற்பயிற்சி செய்வது உறக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும். உறங்கச் செல்வதற்கு சில மணி நேரம் முன்னதாக இலகுவான உடற்பயிற்சிகளைச் செய்வது ஆழ்ந்து உறங்க உதவும். எடை பயிற்சிகளை எப்போது செய்தாலும் உறக்கம் நன்றாக வரும். இதயத்திற்கான உடற்பயிற்சிகளைக் காட்டிலும் எடை பயிற்சிகள் நல்ல உறக்கத்தை அளிக்கின்றன.
உறங்கச் செல்வதற்கு முன்னதாக செய்யக்கூடியது எடை பயிற்சிகளே! ஒவ்வொருவருடைய உடல் கடிகாரமும் (body clock) ஒவ்வொருவிதத்தில் செயல்படக்கூடியதாக இருக்கக்கூடும். உடற்பயிற்சி செய்யும் நேரத்தை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளுதல் பயன்தரும். அதிகாலையில் எழும்பக்கூடியவர்கள், காலை வேளையிலும் சற்று தாமதமாக எழும்பக்கூடியவர்கள் மாலை வேளையிலும் உடற்பயிற்சி செய்யலாம். நீங்கள் எப்போது உடற்பயிற்சி செய்தால் உறக்கம் நன்றாக வருகிறது என்பதை நடைமுறையில் பரிசோதித்து உடற்பயிற்சி செய்யும் நேரத்தை உங்கள் உடல் கடிகாரத்திற்கேற்ப ஒழுங்குபடுத்திக்கொள்வது நல்ல பயன் தரும். .






