search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நுரையீரலை பாதுகாக்கும் எளிமையான யோகாசனங்கள்...
    X
    நுரையீரலை பாதுகாக்கும் எளிமையான யோகாசனங்கள்...

    நுரையீரலை பாதுகாக்கும் எளிமையான யோகாசனங்கள்...

    இந்த யோகா முறைகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் எவ்வாறு நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதனை பார்க்கலாம்.
    யோகாவினை விட நுரையீரலை பாதுகாக்க கூடிய வேறு பயிற்சி என்னவாக இருக்க முடியும்? கீழே குறிப்பிடப்படும் யோக முறைகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு நம்மால் உதவ முடியும்.

    ​ஹஸ்த உத்தாசனம்

    மிகவும் எளிய முறையில் இந்த யோகாவினை செய்யலாம். ஒரு நல்ல விரிப்பில் நேராக நின்று கொள்ள வேண்டும். உங்களது இரண்டு கைகளையும் மேலே தூக்கி உங்களது காதை ஒட்டியவாறு நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அவ்வாறு பின்நோக்கி சாய வேண்டும். உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு சாய வேண்டும். மிகவும் கடினமாக செய்ய வேண்டிய அவசியமில்லை உங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அதுவரை செய்தால் போதுமானதாகும். அப்பொழுது உங்களது தொடைகள் நேராக இருப்பது அவசியமான ஒன்றாகும். உங்களது கண்ணை திறந்து ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். பின்னர், மீண்டும் அவ்வாறு நேராக எழுந்து உங்களது இரண்டு கைகளையும் கீழே போட்டுக் கொள்ள வேண்டியதுதான். காற்று, அலர்ஜியால அடிக்கடி சளி, இருமல் பிடிக்குதா? அதை உடனடியாய் போக்கும் உணவுகள் இதோ...

    ​தனுராசனம்

    பெயருக்கு ஏற்றவாறு வில்லை போன்ற நமது உடலை வளைப்பது தான் தனுராசனம் ஆகும். நமது உடலை எவ்வாறு வில் போன்று வளைப்பது என்று கவலைப்பட தேவையில்லை. மிகவும் எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானதாகும். ஒரு நல்ல விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் உங்களது வயிறு தரையில் தொட்டு இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். உங்களது இரண்டு கால்களையும் பின்னோக்கி மடக்க வேண்டும். அப்பொழுது உங்களது இரண்டு கைகளையும் கொண்டு இரண்டு கால்களையும் கட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். அப்பொழுது உங்கள் தலையானது மேல் நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொண்டு சீரான சுவாசத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது உங்களது நுரையீரல் சரியாக வேலை செய்ய துவங்கும், பின் சிறிது நேரத்தில் நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட வேண்டியதுதான்.

    ​அர்த்த சந்திராசனம்

    சந்திராசனம் என்ற வார்த்தையை கேட்கும் பொழுதே இதற்கும் நிலாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று உங்களுக்கு புரிந்திருக்கும், அந்த நினைப்பில் தவறில்லை. அதாவது, இந்த ஆசனம் அரை வட்ட நிலா போன்ற அமைப்பில் உங்கள் உடலை வளைக்க காத்திருக்கிறது. கொஞ்சம் கடினமான இந்த ஆசனத்தை மேற்கொள்வது உங்களது நுரையீரலுக்கு நல்லது ஆகும். நேராக நின்று கொண்டு உங்களுடைய இடது காலை அப்படியே பின்னோக்கி போக வேண்டும். உங்கள் உடலை முன்னோக்கி நகர்த்தி தேவையான அளவிற்கு உங்களால் நகர்த்த முடிந்த அளவிற்கு உங்கள் பின்னாலேயே மடக்கி உங்களுடைய இடது கையினை கொண்டு அதனை நன்கு பிடித்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது வினாடிகளுக்கு முன் வந்து விட்டு பின் உடனடியாக மீண்டும் பழைய நிலைக்கு வந்து இப்பொழுது வலதுகாலை அவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறாக, மாறி மாறி கால்களை மடக்கி உங்கள் உடலை அரை வட்ட நிலா டிவத்தில் நீங்கள் இந்த யோகாசனத்தை செய்வது உங்கள் இதயத்திற்கு நுரையீரலுக்கு நல்லது ஆகும். அசிடிட்டி பிரச்னையே வராம இருக்கணும்னா இந்த 7 உணவுகளை தினமும் கொஞ்சமாவது சாப்பிடுங்க...

    ​உஷ்ட்ராசனம்

    இந்த யோகாவினை செய்வதற்காக நீங்கள் நல்ல விரிப்பில் உங்கள் கால் முட்டி தரையில் இருக்குமாறு நிற்க வேண்டும். பின்பு, உங்கள் உடலை பின்புறமாக நன்றாக வளைத்து உங்களது இரண்டு கைகளும் கணுக்கால்களை பிடித்துக் கொள்ளும் அளவிற்கு நன்றாக உங்கள் உடலை மடிக்க வேண்டும். கொஞ்சம் கடினமாக இந்த யோகாசனம் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் மிக எளிதான ஒன்றாகும். இப்பொழுது உங்கள் தலையை கொஞ்சம் தூக்கி நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்வதால் உங்கள் உடலானது நன்றாக விரிந்து கொள்கிறது. இந்த பயிற்சி கொஞ்சம் கடினமானது என்றாலும் நீங்கள் தொடர்ந்து செய்தால் நன்றாக இந்த யோகாசனத்தை செய்ய முடியும் இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் நுரையீரல் நன்றாக வேலை செய்யத் துவங்கும்.

    சக்கராசனம்

    இதற்கு முன்பாக சந்திராசனம் என்று சொன்னதற்கு நிலா போன்று உடலை மடக்க வைத்து விட்டார்கள், இப்பொழுது சக்கராசனம் என்று சொல்கிறார்கள், உடலை சக்கரம் போன்று வளைக்க சொல்லி விடுவாரோ என்று நீங்கள் யோசித்தீர்கள் என்றால் நீங்கள் சரியாகத்தான் யோசிக்கிறீர்கள் என்று பொருள்படுகிறது. இதுவரை நீங்கள் செய்த அத்தனை யோகாசனங்களையும் விட மிகக் கடினமான ஒன்று இந்த யோகாசனம் ஆகும். இதனை நீங்கள் அதிக ஆர்வத்துடன் செய்தால் எளிது தான். ஒரு நல்ல விரிப்பில் நின்றுக் கொண்டு நீங்கள் நேராக நின்று கொண்டு உங்களது உடலை அப்படியே பின்னோக்கி தள்ள வேண்டும். அதாவது உங்களது இரண்டு கைகளும் பின்னோக்கி வந்து தரையில் பட்டு நிற்குமாறு நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது முழுமையான வட்டமாக உங்களுடைய உடல் வந்துவிடும். இந்த நேரத்தில் நன்றாக விரிந்து நிற்கும்.
    Next Story
    ×