search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி
    X
    உடற்பயிற்சி

    வயிறு, பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி

    வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.
    காலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை. வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.

    பெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் (Pelvic lifting with single leg): தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும்.

    இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரித்து கொண்டே வர வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்துவந்தால் நல்ல முன்னேற்றம் தெரிவதை காணலாம்.

    பலன்கள்

    வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.
    Next Story
    ×