என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இந்த முத்திரையே நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது. உடல், மனசுத்தம் வந்தால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்மையான எண்ணங்களே எப்பொழுதும் உதயமாகும்.
    பலவகையான முத்திரைகளில் சுத்தப்படுத்தும் முத்திரை என்று ஒன்று உள்ளது. நமது உடலில் உள்ள குறிப்பாக வயிறு, குடல் பகுதிகள்தான் நம் உடலுக்கு குப்பைத் தொட்டியாகும். கிடைத்ததையெல்லாம் உண்கிறோம், அவை அனைத்தும் நமது சிறுகுடல், பெருங்குடலில் அசுத்தத்தை உண்டு பண்ணுகிறது. அதனை முதலில் சுத்தம் செய்யும் வழியைத் தெரிந்தால் உடல், மனம் சுத்தமாகும். பின் நம் நாட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

    சுத்தப்படுத்தும் முத்திரை செய்வது எப்படி?

    தரையில் விரிப்பு விரித்து கிழக்கு முகமாக பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமரவும். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும்.
    பின் கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது அங்குலாஸ்தியை: அதாவது மூன்றாவது கீழ்ப்பகுதியை மெதுவாத் தொட வேண்டும். அதில் சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். ஒரே சமயத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். (படத்தைப் பார்க்க)

    எவ்வளவு நேரம் செய்யலாம்: முதலில் 5 நிமிடங்கள் செய்லாம். காலை, மாலை இரு வேளையும் செய்யலாம். ஒரு நாளில் காலை, மதியம், மாலை, மூன்று வேளையும் 15 நிமிடங்கள் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும். விரிப்பில் அமர்ந்தும் செய்யலாம். நாற்காலியில் உட்கார்ந்தும் (நிமிர்ந்து அமரலும்) செய்யலாம். நீங்கள் நின்ற நிலையிலும் இதனைச் செய்யலாம். கிடைக்கின்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறி விடும்

    நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் உடலின் உட்புற உறுப்புக்களில் தங்கி விடுகின்றது. இவைகள் அப்புறப்படுத்தாததால் மனிதனுக்கு பல வகையான வியாதிகள் வருகின்றது.
     
    இந்த சுத்தப்படுத்தப்டும் முத்திரை செய்யும் பொழுது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், மலம் மூலமாகவும், வியர்வையாகவும் வெளியேறுகின்றது.

    மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு (நிலமும்+நெருப்பும்) இரண்டும் சேரும் பொழுது நமது உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேறுகின்றது.

    வயிற்றுக் பகுதி சுத்தமடையும்: வயிற்று உள் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சுத்தமடைவதால் குடலும் சுத்தமடைகின்றன. பொதுவாக தனூராசனம், பாதஹஸ்த ஆசனம், சலபாசனம் போன்ற கடினமான ஆசனங்களையெல்லாம் செய்ய முடியாது. எனவே இந்த எளிய முத்திரையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த முத்திரையே நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது. உடல், மனசுத்தம் வந்தால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்மையான எண்ணங்களே எப்பொழுதும் உதயமாகும்.
    தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகள் நடப்பது, உடல் எடையில் குறிப்பிட்ட அளவு எடையை குறைக்கும், கொழுப்பை கரைக்கும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
    நடைப்பயிற்சி பல்வேறு நன்மைகளை வழங்குவதாக பலரும் நம்புகிறோம். மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகள் நடப்பது, உடல் எடையில் குறிப்பிட்ட அளவு எடையை குறைக்கும், கொழுப்பை கரைக்கும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்லூரி இளைஞர்கள் 120 பேரை 6 மாத காலத்திற்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். தினமும் எத்தனை அடிகள் நடக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. சிலர் 10 ஆயிரம் அடிகளும், சிலர் 12 ஆயிரத்து 500 அடிகளும், சிலர் 15 ஆயிரம் அடிகளும் நடந்தனர். இன்னும் சிலர் குறைவான அடிகள் நடந்தனர்.

    அவர்களின் உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆற்றல் மதிப்பிடப்பட்டது. குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகளுக்கு குறையாமல் நடந்தவர்களுக்கு எடையும், கொழுப்பின் அளவும் குறைந்தது உறுதி செய்யப்பட்டது. குறைவான பயிற்சி நல்ல பலனை தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பிரிகாம் யங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டனர்.
    விரல்களின் நுனியில் நான்கு வடிவங்களுடன் கூடிய மேடுபள்ளம் நிறைந்த ரேகைகள் உள்ளன. தனித்தனியாக உள்ள பத்து விரல்களையும் முறைப்படி தொடுவது முத்திரை ஆகும்.
    விரல்களின் நுனியில் நான்கு வடிவங்களுடன் கூடிய மேடுபள்ளம் நிறைந்த ரேகைகள் உள்ளன. தனித்தனியாக உள்ள பத்து விரல்களையும் முறைப்படி தொடுவது முத்திரை ஆகும்.

    இந்த முத்திரைகளை சரிவர ஒன்று சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் உடல் வியாதிகள் அனைத்தையும் குணமாக்கலாம். நீடூழி வாழலாம். விரல் ரேகைகள் தெய்வத்தன்மை கொண்டது. இந்த முத்திரை மனிதகுலம் தோன்றிய நாள் முதல் செயல்பாட்டில் உள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளில் ‘அபயஹஸ்தம்’ ரகசியம் உள்ளது. அவ்வாறே விரல்களை நம் உடலின் முன் பக்கம் ஏந்தி இறைவன் அருளை வேண்டும் போது உடலில் மின்சாரம் மற்றும் காந்த சக்தி பாயும். இவ்வாறாக மனஅமைதி, சமாதானம் ஏற்படும்.

    இந்த விரல்ரேகை முத்திரை பயிற்சியையும், பயன்பாட்டையும் சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் மூலமாக மனிதகுலம் இறக்குமதி செய்து கொண்டது. தியானம், பிராணாயாமம் அதிகரிக்க முத்திரைகள் அவசியம். மேலும், சிறந்த ஆசனங்களை அமைத்துக் கொண்டு செய்யும் போது மன அமைதி ஏற்படுகிறது. மனம் தீயவழியில் செல்லாமல் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம். வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபங்களை கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள விரல் ரேகையின் முத்திரை பயிற்சி பயன்படுகிறது.

    அசம்யுக்தா, சம்யுக்தா என்னும் நாட்டிய முத்திரையில் முறையே 24 மற்றும் 13 முத்திரைகள் உள்ளன. இந்த முறையில் விரல் ரேகைகளை ஒவ்வொரு விதத்திலும் கைவிரல்களின் அழியாத் தன்மைகொண்ட ‘ரிட்ஜஸ்’ என்னும் மேட்டுப்பகுதி ஒன்றை ஒன்று தொடும்போது உடலில் மின்சாரம் பாய்ந்து காந்த சக்தி ஏற்படுகிறது. இதன் காரணமாக வெகுநேரம் நாட்டியமாடினாலும், தியானம் செய்தாலும் உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

    மின் இணைப்பில், பாசிடிவ், நெகடிவ் இரண்டும் தொட்டாலே மின்சாரம் ஏற்படுவது போல் மேட்டுப் பகுதியான ரிட்ஜஸை மெதுவாக தொட்டால் போதும் அழுத்தம் தர வேண்டியதில்லை. இந்த முத்திரைகளை முறையாக பயன்படுத்தினால் உடலிலுள்ள நோய்கள் குணமாகும். சக்தி அதிகரிக்கும். மருந்துகள் உபயோகிக்கவேண்டிய அவசியம் இல்லை. நாமே எளிதாக கற்றுக்கொண்டு செயல்படுத்தி பூரணகுணமடையலாம். தற்காலத்தில் குழந்தைகள் பெரிய அளவில் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றிற்கு இந்த விரல்ரேகைகளை தொட்டு முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பூரண குணம் கிடைக்கும்.

    இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் செய்யலாம். நீண்ட கால நோயுள்ளவர்கள் ஒன்று அல்லது இரண்டு முத்திரையை நிரந்தரமாக செய்யும் போது, மூளையின் சம்பந்தப்பட்ட பகுதியில் தூண்டுதல் ஏற்படுகிறது. இது விஞ்ஞான பூர்வமான உண்மை. இத்துடன் மெல்லிய இசையை கேட்டுக்கொண்டு மூச்சுப்பயிற்சியும் மேற்கொண்டால் பூரண குணம் உண்டாகும். பிராணாயாமம் செய்யும்போது கைவிரல் ரேகைகள் காந்த சக்தி பெறுகிறது. அத்துடன் முத்திரை பயிற்சி செய்தால் பூரண பலன் கிடைக்கும்.

    இந்தவிரல் நுனியில் நான்கு பிரதான வடிவங்கள் உள்ளன. இவைதான் மகா விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கர, லாட, வில், மற்ற வடிவங்கள். விரல்ரேகை மேல் உள்ள ரிட்ஜஸ் எனப்படும் மேடு போன்ற பகுதிக்கும் பிராணிக்ஹீலிங்ஸ் மற்றும் ’ரெய்கி’ என்ற சிகிச்சை முறைக்கும் தொடர்பு உள்ளது. கைவிரல் ரேகைகளை கண் முன்னால், முகத்தின் முன்னே வைத்துக்கொண்டு பிராணாயாமம் செய்யும்போது விரல்களில் இருந்து ஒருவித காந்தசக்தி உண்டாகும். இந்த காந்த சக்தி மற்றும் மெல்லிய மின்சார அதிர்வுகள் நம் உடலில் உணரப்படும்போது நாம் பிறருக்கு நன்மைக்காகவும், குணமடையவும் பிரார்த்தனை செய்யும் போது அது பலனளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மூளையில் இருந்து புறப்படும் இந்த தூய எண்ணங்கள் தண்டுவடம் வழியே நரம்புகளில் பரவி விரல் நுனிகளில் முடிவடைகிறது. அப்பொழுது ஏற்படும் நம் தூய்மையான எண்ணங்களுக்கு பலன் கிடைக்கிறது.

    நமது கட்டைவிரல் தெய்வ சக்தியையும், ஆள்காட்டி விரல் மனித சக்தியையும் குறிக்கிறது. இதைத்தான் கண்ணதாசன் பாடலில் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்று பாடினார் சின் முத்திரையில் இவை ஒன்று சேர்த்து காண்பிக்கப்படுகின்றன. ஐந்து விரல்களும் பஞ்சபூதத்தின் அடையாளங்கள். கட்டைவிரல் நெருப்பு சக்தி கொண்டது. மற்ற விரல்களை பாதுகாக்கிறது. உடலில் குறிப்பிட்ட வெப்பத்தை தக்கவைக்க இந்த விரல் பயன்படுகிறது.

    அதேபோன்று நமது ஆள்காட்டி விரல் பஞ்சபூதத்தில் காற்று தன்மைகொண்டது. காற்றுபோன்று எண்ணங்களை பிரதிபலிக்கிறது. ஆள்காட்டி விரலில் நுனி அசைவுக்கேற்ப சில விபரீதங்களுக்கும் காரணமாகிறது. மன அமைதிக்கும் அதே சமயம் பிறர் மன அமைதியின்மைக்கும் காரணமாகிறது. ஆகவேதான் ஆள்காட்டி விரலை காட்டி பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள். நடுவிரல் ஆகாயதத்துவம் கொண்டது. அளவில் பெரிய நீளமான வடிவம் கொண்டது. மோதிர விரல் பஞ்சபூதத்தில் மண் சக்தி கொண்டது. இது புனிதமான விரலாகவும் இரு மனங்களை ஒன்று சேர்க்கும் திருமணத்திற்கு மோதிரம் அணிய இந்த விரல் காரணமாகிறது. சுண்டுவிரல் நீர் தத்துவம் கொண்டது. உடலில் இருக்கும் நீர் சக்தியை பாதுகாக்க பயன்படுகிறது.

    பிறருக்கு வணக்கம் சொல்லும்போது இந்த விரல்தான் முன்னால் நின்று நீர் போன்று இதயத்தில் குளிர்ச்சியை இரு மனங்களிலும் ஒற்றுமை ஏற்படுத்துகிறது. விரல் நுனிகளில் உள்ள வடிவங்களை தாங்கிய ரேகைகள் புனிதத்தன்மை கொண்டது. மேலும் சரியான முத்திரைகளை விரல்களில் பயன்படுத்தினால் சைனஸ் குறைபாடுகள் முகத்திலுள்ள குறைபாடுகள் நீங்கும். இதன் அடிப்படையில் தான் ஒருவர் கைவிரல்களை நம் கைவிரல்களுடன் சேர்த்து கெஞ்சுவது, கைகுலுக்குவது போன்றவை இருவருக்கும் மனரீதியான அமைதியை தருகிறது. இந்த தொடு உணர்ச்சி, அழுத்தம் போன்றவை பெரிய நபர்களுக்கிடையே நன்மையை செய்கிறது.

    மேற்கண்ட விரல் மேல் தோலில் உள்ள மேடான ரிட்ஜஸ் என்னும் கோடுகளை முறைப்படி தொட்டு பயிற்சி செய்வது முத்திரை ஆகும். சின் முத்திரை, தியானமுத்திரை, ஞான முத்திரை, வாயு முத்திரை, ஆகாய முத்திரை, நில முத்திரை, சூர்யமுத்திரை, வருண் முத்திரை, நீர் முத்திரை, அபான முத்திரை, பிராண முத்திரை, லிங்க முத்திரை, சங்கு முத்திரை, குபேர முத்திரை, கருட முத்திரை முஷ்டிமுத்திரை, மீன் முத்திரை, புத்த முத்திரை, யோனி முத்திரை போன்ற குறிப்பான சிலமுத்திரைகள் மூலமாக முறைப்படி தொட்டு பிராணாயாமம் செய்து கொண்டு தியானம் செய்யும் போது உடலின் சகல வியாதிகளுக்கும் நிவாரணம் பெற்று நீடூழிவாழலாம். மன அமைதி, உடல் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. மரணமிலா வாழலாம் பெருவாழ்வை அடையலாம்.
    எண்ணற்ற யோகாசனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு பெயருண்டு. அந்த பெயருக்கு ஏற்ற பலனும் உண்டு. அந்த வகையில் ஆனந்தாசனம் என்ற ஒரு ஆசனத்தையும், அதன் மகிமையை பற்றியும் காண்போம்.
    உடலில் உள்ள இரு நாசித்துவாரமும் அடைப்பு இல்லாமல் சுவாசம் சீராக அதன் வழி இயங்கினால் நமது உடல் உள்உறுப்புகள் அனைத்தும் நல்ல பிராண சக்தி பெற்று சிறப்பாக இயங்கும். அந்த வகையில் நம் உடல் உள் உறுப்புக்களுக்கும், குறிப்பாக மூளைக்கும் நல்ல பிராண சக்தி கிடைத்தால் உடலும், மனமும் ஆனந்தமாக இருக்கும். அதனால் தான் இது ஆனந்தாசனம் என்று அழைக்கப்படுகின்றது.

    செய்முறை

    * தரையில் விரிப்பு விரித்து முதலில் நேராகப்படுக்கவும்.
    * இடது பக்கம் திரும்பவும்.
    * இடது கையை இடது கன்னத்தில் வைத்து முட்டியை தரையில் வைத்து தலை யை உயர்த்தவும்.
    * வலது காலை நன்றாக மேலே உயர்த் தவும்.
    * வலது கையினால் வலது கால் பெரு விரலைப்பிடிக்கவும்.
    * தலையும், கண்களும் இடது பக்கம் பார்த்தாற்போல் இருக்கவும்.
    * பின் மெதுவாக காலை கீழே வைத்து கையை எடுத்து நேராகப் படுக்கவும்.
    * இதேபோல் கால் மாற்றி வலது பக்கம் திரும்பி இடது காலை உயர்த்தி இடது கையினால் இடது கால் பிடித்து ஒரு முறை செய்யவும்.

    நாசி அடைப்பை விரைவில் சரி செய்யும்


    உங்களுக்கு வலது நாசி அடைப்பு இருந்தால் இடது பக்கம் திரும்பி ஒரு நிமிடம் இந்த ஆசனத்தை செய்து பாருங்கள். உடன் வலது நாசி அடைப்பு சரியாகிவிடும். இடது நாசியில் அடைப்பு இருந்தால் வலது பக்கம் திரும்பி ஒரு நிமிடம் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யுங்கள், உடன் இடது நாசி அடைப்பு நீங்குவதைக் கண்டு மகிழலாம்.

    ஆனந்தாசனம்

    இரண்டு நாசிகளும் அடைப்பிருந்தால் வலப்பக்கம், இடப்பக்கம் இரு புறமும் ஒரு நிமிடம் செய்யுங்கள். உடனே நாசி அடைப்பு நீங்கிவிடும். மூக்கடைப்பினால் தான் எல்லா வியாதியும் வருகின்றது. இதை நிறைய பேர்ர் அலட்சியம் செய்கின்றனர். இதன் விளைவு நுரையீரல் பாதிப்பு, இருதயம் பாதிப்பு வரை செல்கிறது. உடலில் வலப்பகுதி உறுப்புக்களை இடது நாசி மூச்சுதான் ஆளுமை புரிகின்றது. மனிதனுக்கு இரு நாசிகளும் சரியாக இயங்கினால் உடலியக்கம் முழுவதும் நன்றாக இருக்கும். மனதின் இயக்கமும் நன்றாகயிருக்கும். உடலும், மனமும் நலமானால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் தானே!

    சாப்பிடாமல் பலநாள் இருக்கலாம். தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்கலாம். ஆனால் உடலில் மூச்சு இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது. அப்படிப்பட்ட மூச்சை சிறப்பாக இரு நாசித் துவாரத்தின் வழியே சரியாக அடைப்பு இல்லாமல் இயங்கச் செய்வது தான் சிறந்த வாழ்க்கை. அது இந்த ஆனந்தாசனம் பயில்வதினால் சாத்தியமாகும். எனவே வாழ்வில் ஆனந்தத்தை தேடுபவர்கள் அனைவரும் இந்த ஆசனத்தை அவசியம் பழகுங்கள்.

    இவ்வாசனத்தின் இதர பலன்கள்

    * மனித உடலின் இயக்கத்திற்கு முழு ஆதாரமான மூச்சோட்டத்தை வலது, இடது நாசியில் அடைப்பு இல்லாமல் சரியாக இயங்கச் செய்கிறது.
    * உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் பிராண சக்தி கிடைக்கின்றது.
    * இடுப்பு சதைகள் இறுக்கமாகின்றது. அதிக தசை குறைந்து கட்டுக்கோப்பாக அழகாக இருக்கச் செய்ய உதவுகின்றது.
    * மூலத்திற்கு குணமளிக்கும். மலச்சிக்கல் நீங்கும்.
    * நுரையீரல், இருதயம் பலம் பெறுகின்றது.
    * நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
    * ஆண், பெண் பிறப்புறுப்புக்களில் ரத்த ஓட்டம் நன்கு பாய்கின்றது.அரிப்புகள் நீங்கும்.
    * பெண்கள் இளமைப் பருவத்திலேயே பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும். என்றும் இளமையுடன் இருக்கலாம்.
    * கழுத்து வலி நீங்கும்.
    இந்த ஆசனம் செய்யும் போது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், மலம் மூலமாகவும், வியர்வையாகவும் வெளியேறுகின்றது. நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது.
    செய்முறை

    * விரிப்பில் படுத்துக் கொள்ளுங்கள்
    * இரு கைகளையும் தலைக்கு பின்னால் போடுங்கள்
    * மூச்சை இழுத்துக்கொண்டு கைகளையும், கால்களையும் உயர்த்துங்கள்.
    * இரு கைவிரல்களும் இரு கால் விரல்களை நோக்கி இருக்கட்டும். இந்நிலையில் மூச்சை அடக்கி பத்து விநாடிகள் இருக்கவும்.
    * பின் மூச்சை வெளிவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். இதுபோல் மூன்று முறைகள் காலை, மாலை செய்யுங்கள்.

    பயன்கள் :

    இந்த ஆசனம் செய்யும் போது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், மலம் மூலமாகவும், வியர்வையாகவும் வெளியேறுகின்றது. நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது.

    இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. டென்ஷனை குறைத்து ஓய்வளிக்கிறது. காலை எழுந்தவுடன் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும். வயிற்றுத் தசைகளை இறுக்கம் அடையச் செய்வதனால் எடை குறைய உதவுகிறது

    இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதால் உடலளவில் மட்டுமல்ல... மன அளவிலும் பல நன்மைகள் உண்டு. ஆழ்மன அச்சத்தை உடைத்து நமது ஆளுமைத்திறனை மேம்படுத்துகிறது. வயிற்றுப்பகுதியில் ஆரோக்கியமான அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஜீரண மற்றும் இனப்பெருக்க மண்டல உறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்கச் செய்கிறது.
    ஜீரண சக்தி சரியாக இயங்காமல் நிறைய மனிதர்கள் அவதிப்படுகின்றனர். சிறுகுடல், பெருங்குடல், வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரையைக் காணவுள்ளோம்.
    செய்முறை

    முதலில் விரிப்பு விரித்து கிழக்குத் திசை அல்லது மேற்குத் திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கீழே உட்கார முடியாதவர்கள் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம்.

    முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். பின்பு உங்கள் மனதில் இப்பொழுது செய்யப் போகும் சூரிய முத்திரையின் மூலம் எனது சிறுகுடல் பெருங்குடல் வயிற்றுப்பகுதி சுத்தடையப் போகின்றது. அங்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சிறப்பாக இயங்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்பொழுது மோதிர விரலை மடக்கி அதன்மேல் கட்டைவிரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இரு கைகளையும் இதே போல் வைத்து செய்ய வேண்டும். இந்நிலையில் பத்து நிமிடங்கள் முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.

    முதலில் பயிற்சி செய்கின்றவர்கள் ஐந்து நிமிடங்கள் செய்யவும். படிப்படியாக பயிற்சி செய்யும் நேரத்தை பத்து நிமிடங்கள், பதினைந்து நிமிடங்களாக உயர்த்தவும். செய்து முடித்தவுடன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு பின் எழவும்.

    உடலில் குடல் சூடு ஏற்பட்டால், குடலில் புண் ஏற்படும். பின்பு வாய் துர்நாற்றம் ஏற்படும். பிறரிடம் பேசினால் எதிரில் நிற்பவர் முகம் சுழிப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் உடலில் சூடு அதிகமானதுதான். அதனை கட்டைவிரல் நெருப்பு தத்துவம் கட்டுப்படுத்துகின்றது. மோதிர விரல் நில தத்துவம். நமது வயிற்றுக்கு கீழ்ப்பகுதி -நிலம். கட்டைவிரலினால் மோதிர விரலில் அழுத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் குறிப்பாக குடலில் உள்ள அதிக சூட்டை சமப்படுத்துகின்றது. மேலும் சிறு,பெருங்குடல் சுத்தமாவதால் பசி இல்லாமல் அவதிப்படுவோரும் இம்முத்திரையைச் செய்தால் நல்ல பலன் உண்டு.

    சூரிய முத்திரையின் இதர பலன்கள்


    - தொப்பை குறையும்
    - உடலில் கொழுப்பு குறையும்
    - மன அமைதி உண்டாகும்
    - உடல் அதிக எடை குறையும்
    - உடல் களைப்பு நீங்கும்
    - உடலில் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்
    - உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்

    யோகக் கலைமாமணி
    P.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    6369940440
    இந்த ஆசனம் செய்து வந்தால் பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும். உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும்.
    செய்முறை : விரிப்பின் மீது இருகால்களையும் ஒன்று சேர்த்து நிற்கவும். உங்கள் வலது கையை பக்கவாட்டில் உயர்த்தி, வலது காதுக்கு பக்கத்தில் ஒட்டியது போன்று நிறுத்தவும். இந்நிலையில் இடது பக்கவாட்டில் வளைந்து படத்தில் உள்ளபடி 15 முதல் இருபது எண்ணிக்கை செய்யவும். மூச்சை இழுத்துக் கொண்டே வளையவும். மூச்சை அடக்கி 15 முதல் 20 விநாடிகள் இருந்துவிட்டு பின்னர் மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.

    பின்பு மாற்று ஆசனமாக இடது கையை உயர்த்தி செய்யவும். இப்படியாக வலப்பக்கம், இடப்பக்கம் மூன்று முறைகள் செய்யவும். பார்ப்பதற்கு எளிய ஆசனமாகத் தோன்றலாம். ஆனால் பலன்கள் ஏராளம்.

    பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும். கல்லீரல், உணவுப்பை நன்றாக இயங்கும். இடுப்பு வலி நீங்கும். உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும். இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வேளை சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். பசித்தால் மட்டும், உடல்மொழி அறிந்து உண்ணும் உணவில் முழுக்கவனம் வைத்து சாப்பிடுங்கள். பகலில் தூக்கம், இடைத்தீனி, எண்ணெய் பதார்த்தம் உண்பதை விடுங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.
    முதுகெலும்பின் ஆரோக்கியத்தை பலரும் தாமதமாகவே கவனிக்கின்றனர். தாமதமான பிறகு முதுகு தண்டுவடத்தை வலுவாக்க முடியாது என்றாலும், அதைச்சுற்றியுள்ள தசைகளை வலுவாக்கலாம்.
    முதுகெலும்பின் ஆரோக்கியத்தை பலரும் தாமதமாகவே கவனிக்கின்றனர். நம்முடைய முதுகெலும்பு பல முக்கிய பணிகளை நிறைவேற்றுகிறது. தாமதமான பிறகு முதுகு தண்டுவடத்தை வலுவாக்க முடியாது என்றாலும், அதைச்சுற்றியுள்ள தசைகளை வலுவாக்கலாம். “அடர்த்தியான இந்த தசைகள் குழு எரெக்டர் ஸ்பைனியா”என அழைக்கப்படுகின்றன. “இவை தலையின் அடிப்பகுதியில் இருந்து முதுகின் அடிப்பகுதி வரை நீள்கின்றன. தினசரி செய்யும் சிறு வேலைகளுக்கு கூட இவை முக்கியமானவை” என்கிறார் அவர். இந்த முக்கியமான தசைகளை வலுவாக்க பல பயிற்சிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை.

    பிரிட்ஜ் பயிற்சி

    முழங்காலை மடித்தபடி, கால்களை லேசாக விலக்கி படுத்துக்கொள்ளவும். தோள்பட்டை தரையிலேயே இருக்க, முதுகு மற்றும் பின் பகுதியை உயர்த்தவும். ஐந்து நொடிகளுக்குப்பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இது போல 10 முறை செய்யவும்.

    மாற்று பஸ்கி


    நாற்காலி அல்லது படுக்கை நுனியில் அமர்ந்து கொள்ளவும். கைகளை குறுக்கே வைத்துக்கொண்டு, தோள்பட்டையை தொடவும். கால்களால் தரையில் சமன் நிலைப்பெற்றபடி நுனிப்பகுதியில் இருந்து முன்னே சென்று தரையை நோக்கி அழுத்தவும். ஆனால் முதுகு மற்றும் கழுத்துப்பகுதி நேராக இருக்க வேண்டும். பின்னர் மெல்ல பழைய நிலைக்கு வந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவும். இதே போல 10 முறை செய்யவும்.  

    வயிற்றுக்குப்பயிற்சி

    பாதம் தரையில் படும்படி முழங்காலை மடித்துக்கொண்டு படுத்துக்கொள்ளவும். வயிற்று தசைப்பகுதியை இறுக்கி கொண்டு, முகவாயை மார்பு பகுதி நோக்கி கொண்டு வந்து பக்கவாட்டில் உருளவும். உட்காரும் அளவுக்கு உருளாமல் இருக்க வேண்டும். ஐந்து நொடிகளுக்கு பிறகு பழைய நிலைக்கு வரவும். இதே போல 10 முறை செய்யவும்.

    ஹிப் கிராஸோவர்

    முழங்காலை மடித்துக்கொண்டு, கால்கள் லேசாக விலகிய நிலையில் மேலே பார்த்தபடி படுத்துக்கொள்ளவும். வலது கணுக்காலை இடது முழங்கால் மேலே போட்டுக்கொள்ளவும். உங்கள் கைகளால் வலது முழங்காலை கைகளால் இடது தோள்பட்டை அருகே கொண்டு வர முயற்சிக்கவும்.  இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும். இந்த நிலையில் இருந்து விடுபடும் முன் பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் நீட்சியை உணர வேண்டும். இதே போல ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று முறை செய்யவும்.

    அப்டாமினல் பிரேசிங்

    முழங்காலை படித்த படி படுத்துக்கொள்ளவும். வலது கையை நோக்கி இடது முழங்காலை கொண்டு வரவும். கைகளால் அழுத்தம் கொடுக்கவும். இந்த நிலையில் ஐந்து நொடிகள் இருக்கவும். வலது கை மற்றும் வலது முழங்காலில் இதே போல செய்யவும். ஒவ்வொரு பக்கமும் 10 முறை செய்யவும்.   
    நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கும் நிறைய ஆசனங்கள் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கும் தலை முதல் கால் வரை உள்ள உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்ய ஏற்ற ஆசனம் நலம் தரும் நடராஜ ஆசனம்.
    கால் பாதத்தில் ஆரம்பித்து தலைவரை பிரச்சனைகள் உள்ள மனிதர்கள் இன்று ஏராளம். காரணம் வாழும் கலை எப்படி என்பது தெரியவில்லை.
    ஒவ்வொரு எண்ணமும் நமது உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. மன அமைதியிருந்தால் தான் உடல் அமைதி பெறும். இதையே மாற்றி யோசித்தால் முதலில் உடல் அமைதி. பிறகு மன அமைதி கிடைக்கும். உடலில் தலை முதல் கால் வரையில் உள்ள உறுப்புகள் நன்றாக இயங்கினால் தான் நம் மனமும் அமைதியாயிருக்கும்.

    உடல் அமைதிக்கு யோகாசனங்களை நம் சித்தர்கள் அளித்துள்ளார்கள். உள் அமைதிக்கு தியானத்தை யோகத் தந்தை பதஞ்சலி மகரிஷி அருளியுள்ளார்.
    நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கும் நிறைய ஆசனங்கள் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கும் தலை முதல் கால் வரை உள்ள உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்ய ஏற்ற ஆசனம் நலம் தரும் நடராஜ ஆசனம். இந்த ஒரு ஆசனத்தை காலை எழுந்தவுடன் பல் விளக்கிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று மூன்று முறைசெய்யுங்கள்.

    நடராஜ ஆசனம் செய்முறை:

    விரிப்பில் நேராக நிற்கவும்.
    இரு கால்களையும் நன்றாக அகற்றவும்.
    வலது கால் பாதத்தையும் இடது கால் பாதத்தையும் வலப்பக்கம் இடப்பக்கம் பார்க்கும்படி படத்திலுள்ளது போல் வைக்கவும்.
    கால்களை தொடையை நேராக பக்கவாட்டில் படத்திலுள்ளது போல் வைக்கவும்.
    இரு கைகளையும் பக்கவாட்டில் மடக்கி கை விரல்கள் வானத்தைப் பார்ப்பது போல் வைக்கவும்.
    சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கால்களை கைககளை நன்றாக சேர்க்கவும். இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்

    பலன்கள்

    * தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சீராக இயங்குகின்றது.
    * தலை வலி வராது.
    * தோள்பட்டை வலி நீங்கும்.
    * கைகள் வலுப்பெறும்.
    * அஜீரணம், பசியின்மை நீங்கும்.
    * மூலம் நீங்கும்.
    * மலச்சிக்கல் நீங்கும்.
    * தொடை தசைகள் வலுப்பெறும்.
    * அழகான தோற்றம் உண்டாகும்.
    * கால் பாதவலி நீங்கும்.
    * நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
    * மூட்டுக்கள் பலம் பெறும்.
    * மூட்டு வலி மூட்டு தேய்மானம் வராது.
    * நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
    * கழிவுகள் வெளியேறும்.
    * சுறுசுறுப்பாக திகழலாம்.
    * முதுகு கூன் நிமிரும், முதுகெலும்பு வலுப்பெறும்.
    * உடல் வசியம் ஏற்படும்.

    இவ்வளவு நலன்கள் இந்த ஒரு ஆசனத்தில் இருப்பதால் தான் இதனை நலம் தரும் நடராஜ ஆசனம் என்று அழைக்கிறோம். நமது சித்தர்கள் இந்த ஆசனத்தின் மூலம் மனித உடலில் உள்ள 72000- நாடி நரம்புகளுக்கும் ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும் என்கிறார்கள்.
    அஞ்சலி முத்திரை மன அழுத்தத்தினால் வலது, இடது மூளையில் ஏற்பட்ட அதிர்வுகளை சரி செய்வதோடு மட்டுமல்ல, மன அமைதியையும் தரவல்லது.
    விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு 5 நிமிடங்கள் அமைதியாக மூச்சை கவனிக்கவும்.

    இப்பொழுது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றையன்று தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். நமது இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியில் தொடுமாறு வைக்கவும். இரண்டு கைகளும் இடைவெளியின்றி இணைந்திருக்க வேண்டும். நமது வலது கைவிரல்கள் இடது கை விரல்களைத் தொட்டுத் கொண்டிருக்கவும். தலையைச் சிறிது தாழ்த்தவும். கண்களை மூடியபடி இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். இதுபோல் காலை மாலை மூன்று முறைகள் செய்யலாம்.

    மனித உடலில் நேர்சக்தி எதிர்சக்தி இரண்டும் உள்ளது. நமது வலது கை நேர் சக்தி, இடது கை எதிர்சக்தி. நம் இரு கைகளும் அஞ்சலி முத்திரையில் இணையும் பொழுது சக்தி ஓட்டம் சிறப்பாக ஏற்பட்டு நிறைவு பெறுகின்றது. இதன் காரணமாக உடலில் பிராண சக்தி சரியாக, நிலையாக இருக்கும்.

    மூளைக்கு எப்பொழுதும் ஓய்வு கொடுக்காமல் சிந்தனை செய்து கொண்டே இருந்தால் மூளை சூடேறும். அஞ்சலி முத்திரையில் மூளைக்கு ஓய்வு கிடைக்கின்றது. மூளை அமைதியாகின்றது. மீண்டும் சக்தி பெற்று சிறப்பாக இயங்கும்.

    மன அழுத்தத்தினால் இன்று பல வகையான வியாதிகள் வருகின்றது. குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு முதலிய நோய்களுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமே. இந்த அஞ்சலி முத்திரை மன அழுத்தத்தினால் வலது, இடது மூளையில் ஏற்பட்ட அதிர்வுகளை சரி செய்வதோடு மட்டுமல்ல, மன அமைதியையும் தரவல்லது.

    யோகக் கலைமாமணி
    P.கிருஷ்ணன் பாலாஜி
    M.A.(Yoga)
    6369940440
    அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனம். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை : விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களை சேர்க்கவும். கைகளை விரல்கள் குப்புறப்படுமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைக்கவும்.மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்தவும். மூச்சை அடக்கி பத்துவிநாடிகள் இருக்கவும் பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும். ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யவும்.

    இதன் பலன்கள் ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையிலுள்ள அத்தனை நாடி நரம்புகளும் நன்றாகத் தூண்டப்பெற்று சிறப்பாக இயங்கும். வாயு தொந்தரவு நீங்கும். அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனம்.
    சண்முகி முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும். இன்று இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    காலை எழுந்தவுடன் பல் விளக்கி காலை கடன்களை முடித்துவிட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும். முது கெலும்பு நேராக இருக்கவும். உங்களது இரு கை பெருவிரலினால் காதின் துவாரத்தை மூடவும். இரு கைகளின் ஆள்காட்டி விரலைகொண்டு கண்களை மூடி, மோதிரவிரல் சுண்டுவிரல்களை உதட்டிற்கு கீழ் வைத்து படத்திலுள்ளபடி இருக்கவும். காதுகளை பெருவிரலால் நன்கு மூடிக்கொள்ள வேண்டும்.

    சாதாரண சுவாசத்தில் ஒரு நிமிடம் அமைதியாக இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை எடுத்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் இரு முறை இவ்வாறு செய்யவும். இவ்வாறு செய்யும் பொழுது கபாலப்பகுதி, மண்டை உட்பகுதியில் நன்கு பிராணன் இயங்கும். அந்தப் பகுதியிலுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக பிராணசக்தி பெற்று, சுறுசுறுப்பாகத் திகழும்.

    இரண்டாவது பயிற்சி

    வஜ்ராசனத்தில் அமரவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். (ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியைத் தொட்டு இலேசாக அழுத்தம் கொடுக்கவும் மற்ற மூன்று விரல்கள் சேர்ந்திருக்கவும்). கண்களை மூடவும் இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளிவிடும் பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், கவலை, கோபம் வெளியேறுவதாக எண்ணவும். இதேபோல் 15 முதல் 20 தடவை மூச்சை மெதுவாக இழுத்து வெளிவிடவும்.

    இப்பொழுது இரு நாசிவழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். முடிந்த அளவு மூச்சை அடக்கவும். கஷ்டப்பட்டு மூச்சை அடக்க வேண்டாம். எப்பொழுது மூச்சு வெளிவிட வேண்டும் என்ற உணர்வு வருகின்றதோ உடன் இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதே போல் ஐந்து முறைகள் செய்யவும்.
    ×