என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    மாணவ-மாணவிகளே, வருகிற 15-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற கடைப்பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை இங்கே காண்போம்...
    மாணவ-மாணவிகளே, வருகிற 15-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற கடைப்பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை இங்கே காண்போம்...

    1.நம்பிக்கை

    முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அதை உங்களால் அடைய முடியும். கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக் கூடாது.

    2.ஆர்வம்

    படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது கடினமான பாடம் என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது. விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

    3.மறதி

    மறதியை போக்க கவனமாக படியுங்கள். படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு கேட்காதீர்கள். டி.வி. பார்க்காதீர்கள். அதிகாலையில் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.

    4.அதிக நேரம்

    அதிக நேரம் படிப்பிற்காக செலவு செய்ய வேண்டும். படிப்பில் இலக்கை நிர்ணயித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதை விட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம்.

    5.படிக்கும் முறை

    படிக்கும்போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது. படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக்கொண்டு, படிக்கும் ஒவ்வொரு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

    6.திட்டமிடுதல்

    தேர்வுக்கு படிப்பதற்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் இரவு தூங்கப்போகும் முன் இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என பரிசோதனை செய்ய வேண்டும்.

    7.ஓய்வு, உணவு, உடற்பயிற்சி

    எந்த நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் உடல் நலம் கெடும். உடலுக்கும் மூளைக்கும் நிறைய வேலை கொடுப்பதால் அதிக சக்தி செலவாகும். அதிகம் உண்டாலும், உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே சமயம் சத்துள்ள உணவாகவும் உண்ண வேண்டும். 
    குழந்தையின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் இந்த பழக்கத்தை தடுக்க முடியும். தொடர்ந்து குழந்தையை கண்காணிப்பதன் மூலம் இந்த பழக்கத்தை ஒரு மாதத்தில் தடுத்துநிறுத்திவிடமுடியும்.
    குழந்தைகள் வாயில் விரலை வைப்பது இயல்பானது. சில குழந்தைகள் அசதியாக இருக்கும் போது, பய உணர்ச்சி இருக்கும் போதும் வாயில் விரல் வைப்பதை வழக்கமாக கொள்கிறது. பிறந்த குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு வாயில் விரல்களை வைத்து சூப்புவார்கள். சில குழந்தைகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று விரல்களை கூட வாயில் வைத்து கொள்ளும். பிறந்து ஆறுமாதங்கள் வரை சரி அதன் பிறகும் இதை தொடர்ந்தால் பல் முளைக்கும் போது அது முன்னோக்கி முளைத்துவிடும் என்று சொல்வார்கள். இந்த பழக்கத்தை எப்படி தவிர்ப்பது.

    சிலர் குழந்தை விரல் சூப்புவதை நிறுத்த குழந்தையின் வாயில் எப்போதும் தேன் நிரப்பிய நிப்பிளை வாயில் வைத்துவிடுவார்கள். இவை குழந்தைக்கு கெடுதலையே உண்டாக்கும். அதனால் இயன்ற வரை குழந்தையின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் இதை தடுக்க முடியும். தொடர்ந்து குழந்தையை கண்காணிப்பதன் மூலம் இந்த பழக்கத்தை ஒரு மாதத்தில் தடுத்துநிறுத்திவிடமுடியும்.

    சில குழந்தைகள் சற்று விபரம் தெரிந்த பிறகு வாயில் இருக்கும் விரல்களை எடுத்துவிட்டால் அழத்தொடங்கும். இதனால் அம்மாக்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். நீங்கள் எளிதாக ஒன்றை செய்யலாம். குழந்தை எந்த விரலை வாயில் வைக்கிறதோ அந்த விரலை வேப்பிலை சாறால் நனைக்க வேண்டும்.

    வேப்பிலையை அரைத்து அப்படியே குழந்தையின் விரலில் தடவினால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். மாறாக வேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து சிறிது நீர் சேர்த்து அரைத்து அந்த சாறை குழந்தையின் விரலில் பூச வேண்டும். கவனம் வேப்பிலையும், பயன்படுத்தும் நீரும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை விரலை வாயில் வைக்கும் போது அவை உள்ளுக்குள் போக வாய்ப்புண்டு.இதை குழந்தை வாயில் விரல்வைக்கும் போதெல்லாம் தடவினால் போதும். 3 மணி நேரமாவது கசப்பு இருக்கும்.

    எலுமிச்சையின் சாறை எடுத்து வைத்துகொள்ளலாம். இதை குழந்தையின் விரலில் தடவினால் குழந்தை எலுமிச்சையின் புளிப்பு சுவையை விரும்பாமல் விரல் வைப்பதை தவிர்க்கும். எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்தது என்பதால் குழந்தையின் பட்டுப்போன்ற மென்மையான சருமத்தை பதம் பார்க்கும் என்பதால் சம அளவு நீர் சேர்த்து விரலை தேய்த்துவிடுங்கள். அவை உள்ளே சென்றாலும் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி தான். ஆனால் இரவு நேரங்களில் எலுமிச்சை சாறு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    குழந்தைகளின் விரல்களை சுற்றி சுத்தமான துணியை கொண்டு இறுக்கமில்லாமல் மென்மையாக கட்ட வேண்டும். 5 முதல் சுற்று வரை சுற்றி கட்டுவதன் மூலம் குழந்தை விரலை வாயில் வைத்ததும் எடுத்துவிடும்.

    சுத்தமான துணியாக பயன்படுத்த வேண்டும். அதே போன்று நாள் முழுக்க துணியை விரல்களில் சுற்றியும் வைக்க கூடாது. அப்ப்டி செய்தால் குழந்தையின் விரலில் ரத்தகட்டுகள் உண்டாகும், சருமம் தடித்துவிடும். அவ்வபோது துணியை எடுத்து விட வேண்டும். இரவு நேரங்களில் சுற்றி விடவேண்டும். தற்போது குழந்தையின் கைகளில் மாட்டி விட கிளவுஸ் கிடைக்கிறது. அதையும் பயன்படுத்தலாம். எனினும் சுத்தமான துணியை பயன்படுத்துவது நல்லது.

    வசம்பை குழைத்து அதை விரல்களில் தடவுவதுண்டு ஆனால் வசம்பு அதிகமாக உள்ளே சென்றால் குழந்தைக்கு பேச்சுத்திறன் சற்று குறைபடும். அதனால் வசம்பை அதிகம் பயன்படுத்த வேண்டாம். வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதுமானது.கிராம்பு எண்ணெய் தரமான எண்ணெய் வாங்கி அதை விரல் முழுக்க தடவலாம். இந்த எண்ணெய் குழந்தையின் வயிற்றுக்குள் போனாலும் அவை குழந்தையின் செரிமான சக்தியை அதிகரிக்க செய்யும்.

    முன்பு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய் தயாரித்தார்கள். தரமான எண்ணெயாக இருந்தாலும் விளக்கெண்ணெய் வயிற்றுப்போக்கை தரக்கூடியது. ஆனால் இதை ஒருமுறைஇலேசாக தடவினாலே அந்த வாடை மீண்டும் குழந்தையை குளிப்பாட்டும் வரை இருக்கும் என்பதால் பலன் நன்றாகவே கிடைக்கும்.

    அதே நேரம் குழந்தையின் விரல்களையும், நகங்களையும் சுத்தமாக வைத்திருப்பதையும் மறக்க வேண்டாம். பெரும்பாலும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வருவதற்கு காரணம் விரல்கள் வழியாக உள்ளே செல்லும் கிருமிகள் தான். குழந்தை வாயில் விரல் வைப்பதை தவிர்க்க இந்த வழிகளில் ஒவ்வொன்றையும் மாறி மாறி கடைபிடிக்கலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.

    விடுமுறை காரணமாக சுட்டி குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை அனைவரும் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டு பாடங்களை செய்ய மாணவமாணவிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
    கொரோனா பீதியால் உலக நாடுகள் உறைந்து கிடக்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பஸ், ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி மழலையர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்ற வகையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கையாண்டு வருகின்றன.

    வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும், தனி செயலிகள் (ஆப்) மூலமாக வீடியோ கால் செய்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். மாணவர்களுக்கு தினமும் வீட்டு பாடங்களும் வழங்கப்படுகின்றன. இந்த வீட்டு பாடங்களை மாணவர்கள் சரியாக செய்கிறார்களா? என்று கண்காணிக்கும் பொறுப்பை பெற்றோரிடமே ஆசிரியர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

    ஊரடங்கு சூழலில் எத்தனையோ சவால்களுக்கு மத்தியில் குழந்தைகளை வீட்டு பாடம் செய்ய வைக்கவேண்டிய பெரும் சவாலுக்கு பெற்றோர் ஆளாகி விடுகிறார்கள். ஆனால் இதில் பெற்றோர் தேர்ச்சி அடைவதில்லை. ஏனென்றால் தொடர் விடுமுறை காரணமாக சுட்டி குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை அனைவரும் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி விட்டனர். அடுக்கடுக்கான நகைச்சுவை தொடர்கள், பொழுதுபோக்கு சினிமாக்கள், கார்ட்டூன் நிகழ்ச்சிகள் என டி.வி. சேனல்களில் வகைவகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் டி.வி.க்களிலேயே எந்நேரமும் மூழ்கி கிடக்கிறார்கள்.

    இதனால் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டு பாடங்களை செய்ய மாணவமாணவிகள் ஆர்வம் காட்டுவதில்லை. டி.வி.க்கள் முன்பு சரணாகதி அடைந்திருக்கும் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்ய பெற்றோர் அழைத்தால் போதும், உடனே அவர்களின் முகம் மாற தொடங்கிவிடுகிறது. தொடர்ந்து அவர்களை அழைத்து கொண்டிருந்தாலோ அல்லது ஒரு கட்டத்தில் டி.வி.யை ‘ஆப்‘ செய்தாலோ ரிமோட்டை உடைத்தும் குழந்தைகள் ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்கள். பெற்றோர் கெஞ்சி கேட்டாலும், மிரட்டி பார்த்தாலும் வீட்டுப்பாடம் செய்ய குழந்தைகள் அடம் பிடித்து வருகிறார்கள். இதனால் என்னாதான் செய்வது? என்ற குழப்பத்தில் பெற்றோர் உள்ளனர்.

    எப்படியும் வீட்டு பாடம் செய்த பக்கங்களை ஆசிரியர்களுக்கு கவனத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால் பெற்றோர் வேறு வழியின்றி குழந்தைகளை இழுத்து பிடித்துக்கொண்டு வீட்டு பாடங்களை செய்ய வைக்கிறார்கள். ‘வீட்டு பாடம் செய்தால் தான் டி.வி. போடுவேன், சாக்லெட் வாங்கி தருவேன்‘, என்றெல்லாம் பேசி குழந்தைகளை சரிகட்ட முயற்சிக்கிறார்கள். குழந்தைகள் அரைகுறையாக விட்டுச்சென்ற வீட்டு பாடங்களை கூட முழுமையாக்கி அந்த பக்கங்களை படம் பிடித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியாக அனுப்புகிறார்கள், பெற்றோர்.

    எந்நேரமும் அனைத்து வீடுகளிலும் அணையாத விளக்காக டி.வி.க்கள் ஓடிக்கொண்டே இருப்பதையே பார்க்க முடிகிறது. இதனால் டி.வி. நிகழ்ச்சிகளை கண்கள் பார்த்து கொண்டிருந்தாலும், ‘எப்படி இவர்களை வழிக்கு கொண்டு வருவது?‘, என்ற சிந்தனையே பெற்றோர் மனதில் ஓடுகிறது.
    காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக குழந்தைகளை தங்கள் தீவிர கண்காணிப்பில் பெற்றோர் வைத்துள்ளனர். வீடுதோறும் ‘டிஜிட்டல் தெர்மாமீட்டர்‘ வைத்தும் பரிசோதனை மேற்கொண்டும் வருகிறார்கள்.
    கண்ணுக்கு தெரியாத கிருமியான கொரோனா வைரஸ் ஒவ்வொருவரின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டி பார்த்து வருகிறது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் என்னதான் நடவடிக்கைகளை முன்னிறுத்தினாலும், மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாததால் அவை விழலுக்கு இறைத்த நீராகவே இருக்கிறது.

    குறிப்பாக சென்னையில் கொரோனாவின் கோர தாண்டவம் தலைவிரித்து ஆடுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. கால்பட்ட இடமெல்லாம் கண்ணிவெடி என்பது போல, திரும்பும் திசையெங்கும் கொரோனாவின் பீதியால் மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள்.

    காய்ச்சல் என்றாலே கொரோனா என்பது போல கொரோனாவின் பீதி அனைத்து இடங்களிலும் மேலோங்கி இருக்கிறது, ஆஸ்பத்திரிகள் உள்பட கடந்த 2 மாத காலமாகவே பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல், இருமல், தும்மல், சளி பிரச்சினை உள்ளவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அது குழந்தைகளாக இருந்தாலும் கூட... பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் என்ன நோயாக இருந்தாலும் சரி, முதலில் காய்ச்சல், இருமல் பரிசோதனை முடிந்தபிறகே உள்ளே நுழைய அனுமதிக்கிறார்கள்.

    பல ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் என்றாலே வரவேண்டாம், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுங்கள் என்று ஒரேயடியாக கூறிவிடுகிறார்கள். மருந்துகடைகளில் சாதாரண காய்ச்சலுக்கு கூடமருந்து வாங்க முடியவில்லை.

    இதனால் குழந்தைகளின் உடல்நலனில் முன்பைவிட பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. காய்ச்சி வடிகட்டிய நீரையேபருக தருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை உண்பதற்கு தருகிறார்கள். கொரோனா பீதியால் அனைத்து வீடுகளிலின் வாசலில் கிருமிநாசினி டப்பாக்கள் இருப்பது போல, ஒவ்வொரு வீடுகளிலும் டிஜிட்டல் தெர்மாமீட்டர் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதால் பெற்றோரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் குழந்தைகள் வந்துள்ளனர்.

    விடுமுறை இருந்தும் விளையாட முடியாத நிலையில் குழந்தைகளும், 24 மணிநேரமும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் பெற்றோர்களும் இருக்க வேண்டிய நிலையை கொரோனா உருவாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகி உள்ளது.
    பசும்பால் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு பசும்பால் கொடுப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி இது. பசும்பால் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது. அதைத் தானே எங்கள் பாட்டி காலத்தில் இருந்து கொடுத்து வருகிறார்கள். பசும்பால் சிறிய குழந்தைக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

    ஒரு வயது முடியாத குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. புரோட்டீனும் தாதுக்களும் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு பசும்பாலை செரிக்கும் தன்மை இருக்காது. இதனால் சிறுநீரக பாதிப்புகள் வரலாம். சில குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுபோக்கு பிரச்சனையும் வரக்கூடும். பசும்பாலில் உள்ள அதிக அளவு புரோட்டீன் மற்றும் தாதுக்கள் குழந்தைகளின் சிறுநீரகத்துக்கு ஓவர் லோட் வேலையாக மாறும்.

    பசும்பாலில் சரியான அளவு இரும்புச்சத்து விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருக்காது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். மேலும் விட்டமின் சி இ காப்பர் சத்து குறைபாடு ஏற்படலாம். பசும்பாலில் உள்ள புரோட்டீன் குழந்தையின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். சில குழந்தைகளுக்கு மலத்தில் இரத்தம் வெளியேறும் அபாயம்கூட நேரலாம்.

    வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேராமல் போகலாம். பசும்பாலில் உள்ள விலங்கின புரோட்டீன் சிறிய குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்றது அல்ல. 6-12 மாத குழந்தைகளுக்கு அதிக அளவில் இரும்புச்சத்து தேவை. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இச்சத்து உடலில் சேராமல் தடை ஏற்படும்.

    குழந்தைக்கு நீங்கள் அன்றாடம் தரும் காய்கறி மற்றும் பழ ப்யூரி அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துகள் கீரைகள் மூலம் கிடைக்கும் சத்துகள் போன்றவை உடலில் சேராமல் பசும்பால் தடுத்துவிடும். குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடு இரத்தசோகை ஆகியவை வரலாம்.

    ஒரு வயதுக்கு மேல் பசும்பால் கொடுக்கலாம். கால்சியம் புரதம் விட்டமின் டி ஆகியவை இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். ஒரு நாளைக்கு 1- 1 ½ கப் அளவுக்கு பசும்பால் கொடுக்கலாம். யோகர்ட் தயிர் மோர் போன்றவையும் கொடுக்கலாம். பசும்பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மோர் யோகர்ட் தயிர் சீஸ் கொடுத்துப் பாருங்கள். ஒரு குழந்தைக்கு 3-4 கப் அளவுக்கு பசும்பால் தரக்கூடாது. பசும்பால் கொடுக்க தொடங்கிய பின் குழந்தையின் மலம் கழிக்கும் பழக்கத்தில் சிறிய மாற்றங்கள் வரலாம்.

    குழந்தையின் மலம் சற்று திக்காக இருக்கலாம். மலம் கழிக்க கொஞ்சம் சிரமப்படலாம். பாலாக ஒரு டம்ளர் அளவுக்குக் கொடுத்து விட்டு யோகர்ட் தயிர் மில்க் ஷேக் சீஸாக கொடுப்பது நல்லது.
    அம்மா அப்பாவுக்கு இடைஞ்சல் தராமலும் வெயில் உங்களை பாதிக்காமலும் இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு விருப்பமான வழியில் பொழுதுபோக்க மகிழ்ச்சி கொள்ள சில வழிகளை நாங்க சொல்லட்டுமா?
    கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை வெளியில் வர முடியாத நிலை உள்ளது. அடிக்கிற வெயிலுக்கு வெளியில் விளையாடப் போனால் அம்மா திட்டுறாங்களா? வீட்டிற்குள் விளையாடினாலும் சேட்டை பண்றதா கண்டிக்கிறாங்களா? அம்மாஅப்பாவுக்கு இடைஞ்சல் தராமலும் வெயில் உங்களை பாதிக்காமலும் இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு விருப்பமான வழியில் பொழுதுபோக்க மகிழ்ச்சி கொள்ள சில வழிகளை நாங்க சொல்லட்டுமா?

    குட்டீஸ் உங்களுக்கு என்னென்ன பழங்கள் பிடிக்கும். ஆப்பிள் மாதுளை கொய்யான்னு அடுக்கிக்கிட்டே போறீங்களா? உங்களுக்குப் பிடிச்ச எல்லா பழத்தையும் சேர்த்து செய்த சாலட் எங்காவது கிடைத்தால் நிறைய ரசித்து சாப்பிடுவீர்கள்தானே? வழக்கமாக வெளியில் செல்லும்போது அம்மா அப்பாதான் உங்களுக்கு சாலட்டும் தின்பண்டங்களும் வாங்கித் தந்திருப்பார்கள் இந்த கோடையில் உங்களுக்குப் பிடித்தமான சாலட்டை நீங்களே செய்யுங்கள். அதை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கொடுத்து ருசியுங்கள்.

    சாலட் செய்வது கடினமான வேலையல்ல. அம்மா காய்கறி வெட்டும்போது நீங்கள் கவனித்திருப்பீர்கள் அல்லது உதவி செய்திருப்பீர்கள் இல்லையா? அதேபோல கத்தி கத்திரிகளை கண்டால் எதையாவது வெட்ட வேண்டும் என்று உங்களுக்கு இயல்பாகவே தோன்றுமில்லையா? இந்த இரண்டு ஆர்வமும் இருந்தால் எளிமையாக சாலட் செய்துவிடலாம். அம்மாவிடம் சாலட் செய்யப்போகிறேன் என்று சொல்லி விட்டு சில பழங்களையும் கத்தியையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டுங்கள் அவற்றை பெரிய பாத்திஇரத்தில் மொத்தமாக சேர்த்து கிளறுங்கள். ருசியான சாலட் தயார். பெற்றோருக்கும் ருசிக்கக் கொடுத்து பாராட்டை பெறுங்கள்.

    சாலட்டில் தேவையான சில பச்சைக் காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடை நேர உடல் உஷ்ணத்தையும் தணிக்கும். எங்கே சாலட் செய்ய கிளம்பிவிட்டீர்களா? அதை செய்யும்போது கத்தியை மட்டும் கவனமாக கையாள வேண்டும் என்பதை ஞாபகத்தில் வச்சுக்கோங்க.

    ஐஸ்கிரீம் உங்களுக்குப் பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு ஐஸ்கிரீம் செய்யத் தெரியுமா? வீட்டிற்குவீடு குளிர்சாதன பெட்டி வந்துவிட்ட பிறகு ஐஸ்கிரீம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஐஸ் கிரீம் செய்வது கோடைக்கு நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் அதை சுவைத்து மகிழ்ந்தும் ஆனந்தப்படலாம்.

    ஐஸ்கிரீம் மூலப்பொருட்களை பிசைந்து கொள்ளுங்கள் தேவையான அளவுக்கு இனிப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். சாக்லெட் வனிலா அல்லது உங்களுக்குப் பிடித்த சுவை எதுவோ அந்தப் பொருட்களையும் சேர்த்து கலக்குங்கள். கெட்டியாகவும் அல்லாமல் திரவமாகவும் அல்லாமல் குளுகுளு தன்மை பதத்திற்கு கலக்கிய பின்பு பிரிஜ்ஜின் பிரீஸரில் சிறிது நேரம் வைத்திருங்கள். இப்போது நீங்களே தயாரித்த ஜில்ஜில் ஐஸ்கிரீம் சாப்பிடத் தயார். பெற்றோர் மற்றும் தோழன் தோழிகளுடன் ரசித்து சாப்பிடுங்கள்.

    உங்களுக்கு ஒரிகாமி பற்றி பள்ளியில் சொல்லித் தந்திருக்கிறார்களா? காகிதத்தை மடித்து குறிப்பிட்ட இடங்களில் கத்தரிக்கோல் மூலம் நறுக்குவதால் புதிய வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்குவது ஒரிகாமி கலையாகும். இது உங்கள் கற்பனை திறனை வளர்க்கும். பூக்கள் பழங்கள் எழுத்துகள் பறவைகள் விலங்குகள் உருவங்களை ஒரிகாமி காகிதத்தில் செய்து அசத்துங்கள். அழகிய வடிவங்களை நண்பர்களிடமும் தோழிகளிடமும் காட்டி மகிழுங்கள்.அட்டையில் ஒட்டி அலமாரியில் வைத்து அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். நினைவுப் பெட்டகத்தில் சேமித்து வைத்து மலரும் நினைவுகளாக பின்னாளில் அசைபோடலாம்.

    கோடையை பயனுள்ள வகையில் கழிக்க மிக முக்கியமான கலையாக ஓவியத்திறமையை பயன்படுத்தலாம். வண்ணம் தீட்டுவது புதிய ஓவியங்களை வரைந்து பழகுவது ஓவியங்களை சிற்பமாக உருவாக்க முயற்சிப்பது என உங்கள் நேஇரத்தை கலை வண்ணத்திற்காக செலவு செய்யலாம். அது உங்கள் புத்திக்கூர்மையை வளர்க்கும். பொறுமையை உயர்த்தும். அழகியல் ஆர்வத்தை மெருகேற்றும். வடிவமைப்புத் திறமையை வளர்க்கும். சிறந்த ஓவியங்களை வரவேற்பறையில் வைத்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.

    புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளும் வார்த்தை விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? இப்போது இதற்கென தனியே புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்கி குறுக்கு எழுத்துப் போட்டிகள் வார்த்தைகள் கண்டுபிடித்தலில் ஈடுபடுங்கள். உங்கள் புத்திக்கூர்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    அதேபோல புத்தகவாசிப்பும் பயனுள்ள பொழுதுபோக்காகும். உங்களுக்கு விருப்பமான கதைகள் கார்ட்டூன் நாயகர்கள் பற்றிய புத்தகங்கள் வரலாற்று குறிப்புகள் சமையல் கலை கதைகள் தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான தலைப்பிலான சில புத்தகங்களை இந்த கோடை விடுமுறையில் படித்து முடிப்பது என சபதம் எடுங்கள். அது உங்கள் அறிவை வளர்க்கும்.

    உங்கள் விருப்பமான சைக்கிள் அப்பாவுடன் ஆசையாக பயணிக்கும் கார் பைக் ஆகியவற்றை சுத்தமாக்குங்கள். ஈஇரத்துணியால் துடைத்து அழுக்கு மற்றும் கறைகளை நீக்குங்கள் எண்ணெய் மற்றும் கிரீஸ் இட வேண்டிய இடங்களில் அவற்றை இட்டு வண்டியை பராமரியுங்கள்.

    கண்ணாடி மாற்றுவது ஸ்போக்ஸ் மற்றும் நட்டுகள் மாற்றும் வேலைகளையும் செய்து பாருங்கள். அல்லது மெக்கானிக் செட் எடுத்துச் சென்று சீர்படுத்துங்கள். ஜாலியாக காலையிலும் மாலையிலும் ரவுண்டு செல்லுங்கள். உடலை வலுப்படுத்துங்கள்.

    சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று தோட்ட பராமரிப்பு. இது மனதை பக்குவப்படுத்தும். செடிகளை நடுவது விதைகளை பராமரிப்பது நீர் தெளிப்பது களை எடுப்பது என அடுக்கடுக்கான வேலைகள் உங்கள் ஆர்வத்தை தூண்டும். செடிகள் வளர்ந்து பூ பூப்பதும் காய் காய்ப்பதும் நிழல் தருவதும் உங்களுக்கு மனதளவில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வளர்க்கும்.

    மனதுக்கு உற்சாகம் தரக்கூடியவை இசை. உங்களுக்கு விருப்பமான இசைக்கருவி ஏதாவது ஒன்றை இந்த கோடையில் இசைக்கப் பழகலாம். உடலுக்கு ஊக்கம் தரக்கூடியது நடனம். விரும்பிய நடனம் ஒன்றை கற்றுக் கொள்ளலாம். இதனால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். கல்வித்திறனும் மேம்படும்.

    வீட்டில் இருக்கும் பொருட்கள் தூக்கி எறியும் நிலையிலுள்ள கழிவுப் பொருட்களைக் கொண்டு உங்கள் சிந்தனையில் புதிய பொருட்களை உருவாக்குங்கள். உங்கள் கல்வி மேஜைக்கான பென் ஸ்டாண்டு உள்ளிட்ட அலங்கார பொருட்களை உருவாக்குங்கள். காகிதங்களில் முகமூடி செய்து வண்ணம் தீட்டி பயன்படுத்தலாம். பூக்கள் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கலாம். ஐஸ்கிரீம் குச்சிகள் கார்டுபோர்டு அட்டைகள் வண்ணக்காகிதம் பென்சில் ஸ்கெட்ச் மூலம் உங்கள் விருப்பம்போல கலைப்பொருட்களை உருவாக்கி வீட்டையே அலங்கரித்துவிடலாம்.

    கைத்தையல் மூலம் உங்கள் உடைகளில் எம்ப்ராய்டரிங் செய்யலாம். அழகிய பட்டங்கள் செய்து நண்பர்களுடன் சேர்ந்து பறக்கவிட்டு மகிழலாம். வேடிக்கையான சில விளையாட்டுகளை நீங்களாக உருவாக்கி நண்பர்களுடன் விளையாடலாம். இப்படி வெயிலில் திரியாமல் உங்கள் எண்ணம்போல பனுள்ள வழிகளில் பொழுதை கழித்தால் அம்மா திட்டமாட்டாங்க. அப்பா நீங்க கேட்டதெல்லாம் வாங்கித்தருவார்.

    பெற்றோருக்கு சில வார்த்தைகள்: உண்மையில் செயல்படாத குழந்தைகள் சேட்டை செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்களை பயனுள்ள வகையில் செயல்பட தூண்டுவது பெற்றோரின் கடமை. அப்படி தூண்டிவிட்டால் அவர்களின் திறமையும் வளரும். கோடையின் கொடுமையும் குழந்தைகளை பாதிக்காது.
    ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும்.
    ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும். அத்தகைய விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. தற்போதுள்ள தலைமுறையினர் இந்த பெயர்களை கேட்டிருக்கக் கூட வாய்ப்பு இல்லை. பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா? பழமா?, உப்பு விளையாட்டு என 65 விளையாட்டுகள் இருந்தன. இதே போல சிறுமிகளுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என பல விளையாட்டுகள் இருந்தன. சிறுவர்-சிறுமிகள் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டு விளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற விளையாட்டுகளும் உண்டு.

    ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிக்கட்டு, சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளும், குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என விளையாட்டுகள் இருந்தன. இந்த விளையாட்டுகள் அனைத்தும் உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதிற்கும், உடலிற்கும் நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.

    ஆனால் நாளடைவில் நாம் பண்டைய விளையாட்டுகளை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

    பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டு கொள்ள வேண்டும். அந்த வட்டத்தை சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காகத் தயாராக வைத்து கொள்ள வேண்டும். பிறகு 1, 2, 3 என சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தைச் சாட்டையால் சுற்றிக்கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும். பின்பு சாட்டையைப் பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும்.

    அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது அது சுழலவில்லை எனில் அந்த பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். ஆடுபுலி ஆட்டம் என்பது திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப் படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்த கட்டங்களை சுண்ணாம்புக்கட்டி பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்களை அதில் வைத்து நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும் புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. மேலும் கள்ளன் வாரான் கண்டுபுடி, பூப்பறிக்க வருகிறோம் உள்பட பல விளையாட்டுகள் உள்ளன.

    சுப்புலட்சுமி, 5-ம் வகுப்பு,

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

    மண்குண்டாம்பட்டி, தாயில்பட்டி.

    இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.
    பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. இதனால் அதற்கு உயிருள்ளது என்று அறிந்து கொள்கிறோம். அதன்பிறகு வரும் அழுகையினால் பசி, வலி போன்ற உணர்வுகளை தாய் புரிந்து கொள்கிறார்.  சிலர் குழந்தைகளை கிள்ளி, அடித்து அதன் உடலுறுப்புகளை இம்சித்து அழ விட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை குழந்தையின் அருகில் விடவ கூடாது.

    இன்னும் சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடுதல் என்று விபரீதமாக கொஞ்சுவார்கள்.  இவைகளை குழந்தைகள் ரசிப்பதாக நினைத்துக் கொண்டு பலமுறை விளையாடும் போது குழந்தைகள் மனதில் இனம் புரியாத பய உணர்வு ஏற்பட்டு திடீரென அழத் துவங்கி விடும்.

    சாப்பிட மறுக்கும் குழந்தைகளை நாய் கடிக்கும், பூனை கடிக்கும், மாடு முட்டும் எனச் சொல்லி பயம் காட்டி சாப்பிட வைக்கும் தாய்மார்கள் இப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைப்பருவ மன பயங்கள், ஒருவரது ஆளுமையையே முடக்கி விடுகிறது என்பது உளவியல் உண்மையாகும்.

    இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.  பயங்காட்டி உணவு உண்ண வைக்கப்படும் குழந்தைகள் உணவையே வெறுத்து வளர்கின்றன. அடிபட்டு, துன்புறுத்தப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர், உறவினர்களை வெறுத்து வளர்கின்றனர்.

    குற்ற உணர்வுடனேயே வளர்ந்து, பெரியவர்களானதும், மனித உறவுகளை வெறுத்து, பிளவுபட்ட மனங்களுடன் மனநோயாளிகளாகி விடுகின்றனர். குழந்தைகளை இயல்பாக வளரவிட வேண்டும். அதிகமான பயம் காட்டி வளர்த்தால் தன்னம்பிக்கை இழப்பு, வெறுப்பு உணர்வு, பிளவுபட்ட ஆளுமைக் கூறுகள், குறைபட்ட பழகும் பாங்கு என பல்வேறு அவலங்களுக்கு ஆளாகின்றனர்.

    அன்புடன், பாசத்துடன், அரவணைப்புடன், தன்னம்பிக்கை வளரும் விதமாக குழந்தைகளை வளர்த்துங்கள். மன பயத்துடனே வளரும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இயல்பாக நண்பர்கள் குழுவில் கலந்து கொள்ளாமல் தனித்து அல்லது விலகியே இருப்பார்கள். விளையாட்டு, வீர தீரச்செயல்களில் ஈடுபட தயங்குவார்கள். வாலிபப் பருவத்தில் ஊக்கப்படுத்தினாலும் பய உணர்வு காரணமாக பின்தங்கியே இருப்பார்கள்.

    கல்வியில் முன்னிலை வகித்த மாணவர்கள்கூட பய உணர்வால் தன்னம்பிக்கை இழந்து பின் தங்கி விடுகின்றனர். இவர்களுடைய ஆளுமையும் சிதைந்து விடுகிறது. ஆகவே, பிள்ளைப் பருவத்திலேயே பயமின்றி வாழ குழந்தைகளைப் பழக்க வேண்டும். அச்சம்தவிர் என்ற சொல்லுக்கேற்ப, தைரியமாக வளர குழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவளிக்க வேண்டும். "செய்யாதே" என தடை செய்வதே பயத்தின் முதல்படி.

    ஆனால் "ஜாக்கிரதையாக இதைச் செய்" என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும். ஆகவே குழந்தைகளை பய உணர்வு காட்டி வளர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு நல்ல நடத்தைப் பண்புகளை பக்குவமாக கற்றுத் தந்து, நல்ல சந்ததியை உருவாக்குங்கள்.

    பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தையின் உடல் எடையை குறைப்பதிலும் இருக்க வேண்டும்.
    குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும்இருக்க வேண்டும்.

    உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன் பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.

    அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறு வயதிலே இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா, வயிறு பிரச்சனைகள், எலும்பு பிரச்சனைகள், சரும பிரச்சனைகளான பூஞ்சை தொற்று, சூட்டால் வரும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

    மருத்துவரிடம் அழைத்து சென்று உயரம், எடை, வயது ஆகியவற்றை சொல்லி பி.எம்.ஐ (BMI) செக் செய்து கொள்ளலாம்.  எடை குறைவு – பி.எம்.ஐ <18.5 ஆரோக்கியமான எடை – பி.எம்.ஐ 18.5 – 24.9 க்குள் இருக்க வேண்டும்.  அதிக எடை – பி.எம்.ஐ 25 – 29.9 உடல்பருமன் – பி.எம்.ஐ 30 அல்லது அதை விட அதிகமாக இருந்தால் உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகும்.

    குழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம். குழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கம்.

    குழந்தையின் உடல் எடை குறைய புதினா டீ, இஞ்சி டீ குடிப்பது, பால் சேர்க்காத பழச்சாறுகள் மயோனைஸ் சேர்க்காத சாலட் ஆகியவை குழந்தையின் உடல் பருமனை குறைக்க மிகவும் பயன்படுகிறது.

    தினமும் காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.
    குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் தர வேண்டிய அவசியம் இல்லை, மிகவும் பொறுமையாக சில நேரங்களில் ஒரே பகுதியில் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.
    உங்களுக்கு விருப்பமான எந்த எண்ணெய் வேண்டும் என்றாலும் தேர்வு செய்து, மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளவும்.

    உங்கள் உள்ளங்கையில் சில துளி எண்ணெய் விட்டு உங்கள் இரு கைகளையும் தேயுங்கள், இதனால் குழந்தையின் உடலுக்கு வெப்பம் மிதமாக பரவும்.

    இப்போது குழந்தையின் உடலில் பொறுமையாக ஆயில் மசாஜ் செய்ய தொடங்கவும்.

    குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் தர வேண்டிய அவசியம் இல்லை, மிகவும் பொறுமையாக சில நேரங்களில் ஒரே பகுதியில் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.

    எண்ணெய் தடவிய சில நேரங்கள் கழித்து குழந்தையின் உடல் சில எண்ணெய்கள் இழுத்து கொள்ளும், சில எண்ணெய்கள் அப்படியே இருக்கும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் எண்ணெய்யை சரியாக தேர்ந்தெடுக்கவும்.

    உங்கள் குழந்தைக்கு எங்காவது தோல் தடிப்பு அல்லது புண் இருந்தால் அங்கு ஆயில் மசாஜ் செய்ய வேண்டாம். குறிப்பாக நீங்கள் தேர்வு செய்த எண்ணெய்யால் உங்கள் குழந்தைக்கு அலர்ஜி வராமல் இருக்க வேண்டும்.

    குழந்தை தூங்கும் போது குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்ய கூடாது. குழந்தையுடன் பேசி. சிரித்து. விளையாடிக் கொண்டு ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.
    குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
    குழந்தைகளுக்கு உணவு சாப்பிட வைப்பது என்பது ஒரு சிறந்த  கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமத்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.சரியாகச் சாப்பிடாத குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா…?

    சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

    குழந்தை நல்லா சாப்பிட வைக்க அருமையான வழி..!

    * பொதுவாக எல்லா வகையான உணவுகளையும் குழந்தைகளுக்கு தினிப்பதை இன்றுடன் விட்டு விடுங்கள்.

    * குழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைக்கு உண்ணும் உணவு திகட்டாமல் இருக்க வேண்டும்.

    * மீறி குழந்தைகளுக்கு அதிக உணவை கொடுத்தால் சாப்பிடும் போதே குழந்தைகள் வாந்தி எடுத்து விடுவார்கள் எனவே குழந்தை சாப்பிடும்  அளவிற்கு மட்டும் உணவு கொடுப்பது மிக சிறந்த முறையாகும்.

    * குழந்தைக்கு பிடித்த உணவுகளை அதிகமாக செய்து கொடுக்க வேண்டும்.

    * குழந்தை இரண்டு வயது வந்த பிறகு உணவு ஊட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும். மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்துவதை பழக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை அதிக உணவை சாப்பிட பழகுவார்கள்.

    * குழந்தைகளுக்கு அதிகம் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள் அதிகம் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் இது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.

    * குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை எனவே தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * தண்ணீர் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மோர், மில்க் ஷேக், பழச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம்.

    * காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சாண்ட்விச்சுகளாகவும், வெஜ் நூடுல்ஸாகவும், ஃப்ரைட் ரைஸாகவும் செய்து கொடுக்கலாம்.

    * காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.

    * தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக செய்து கொடுக்கலாம்.

    நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும்.
    இத்தனை நாட்கள் வீட்டில் அடைபட்டு இருப்பதால் பலருக்கு படிப்பின் மீது கவனம் இருக்காது. எனவே மாணவர்கள் தேர்வு நாட்களில் இருந்து பின்னோக்கி அட்டவணைப்படுத்தி பாடம் வாரியாக திரும்பப் படிக்க வேண்டும்.
    ஓட முடியவில்லை என்றால் நடக்க முயற்சி செய், நடக்க முடியவில்லை என்றால் தவழவாவது முயற்சி செய். ஏனென்றால் வாழ்க்கையில் நகர்தல் அவசியம் என்பது பெரியோர்கள் சொல். 55 நாட்களுக்கு பிறகும் கொரோனாவின் தாக்கம் இருப்பதால் உலக சுகாதார அமைப்பு முதல் உள்நாட்டு சுகாதார அமைப்பு வரை கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள அறிவுறுத்தி கொண்டிருக்கிறது. அதனால் தான் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நோய்நாடி நோய் முதல் நாடி என்ற வள்ளுவன் வாக்கு போல் இந்த தேர்வு நடத்துவதால் ஏற்படக்கூடிய அடிப்படையான அச்சங்களை போக்கி விட்டால் தேர்வை எதிர் கொள்வது கடினமாக இருக்காது.

    இத்தனை நாட்கள் வீட்டில் அடைபட்டு இருப்பதால் பலருக்கு படிப்பின் மீது கவனம் இருக்காது. எனவே மாணவர்கள் தேர்வு நாட்களில் இருந்து பின்னோக்கி அட்டவணைப்படுத்தி பாடம் வாரியாக திரும்பப் படிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வுக்கு தயாரானதால் இது மாணவர்களுக்கு எளிதாகவே இருக்கும். முதன்முறையாக மாணவர்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுதப் போகிறார்கள், இதுவே மிகப்பெரிய மனோபலத்தை மாணவர்களுக்கு தரும். இனிவரும் நாட்களில் உடலைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை உண்பது, உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது உடல் நலனைப் பேண காய்ச்சல், சளி, இருமல் வராமல் பாதுகாக்கும். இதுவே மாணவர்களின் பலம். தெருவிளக்கில் படித்து மேதையான பலர் உள்ள இந்த நாட்டில் இதையும் கடந்து போக முடியும் என்று மாணவர்களுக்கு மனோதைரியம் தர வேண்டியது நம் கடமை.

    பெற்றோர்களைப் பொறுத்தவரை பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு, பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு இதுவே மிகப்பெரிய அச்சம். அவர்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது. 21-ந் தேதி பள்ளிக்கு ஆசிரியர்கள் வர அறிவுறுத்தப் படுகிறார்கள். அதன் பிறகு பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அறைக்கு 10 பேர் என அமரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை அறியப்பட்டு உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார்போல் எங்கு அமர்ந்து தேர்வு எழுத வைப்பது என்பதையும் பள்ளிகள் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

    ஊருக்குச் சென்ற மாணவர்கள், ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது, மாணவர்களை அழைத்து வருவது, மலையகப் பகுதிகள், பேருந்து வசதிகள் இல்லாத கிராமப்பகுதியில் உள்ள மாணவர்களை தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் அழைத்து வந்து விடுதிகளில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வு நடத்தும் அதிகாரிகள் என அனைவரும் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கிணங்க தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் இவை அனைத்தும் அரசு தரப்பில் செய்யப்பட்டு விட்டதா? என ஆராய்ந்து தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியில் உள்ள பெற்றோர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் கேட்கலாம். அரசியல்வாதிகளும் மற்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் தன் பிள்ளைகள் எழுத இருக்கும் பள்ளிகளை பெற்றோர்கள் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவர்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்கினால் அவர்களே பிள்ளைகளை தைரியமாக தேர்வுக்கு தயார் படுத்துவார்கள்.

    அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் எதிர்த்து அரசியல் செய்ய ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் தன் பிள்ளைகள் வாழ்வென வரும்பொழுது தன்னலமற்ற அக்கறை மட்டுமே இருக்கும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் கேட்டு உடனடியாக சரி செய்ய அரசு இயந்திரம் தயாராக இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்வு மாணவர்களை நேர்மறையான எண்ணங் களுடன் எழுத வைக்கலாம்.

    மாணவர்களும் நீண்ட நாள் கழித்து பார்க்கும் நண்பர்கள் என உணர்ச்சி வசப்படாமல் சமூக இடைவெளி கடைப் பிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்துதல், குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்லுதல், வெளியில் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடாமல் இருத்தல் போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம், சுத்திகரிப்பு திரவம் மாணவர்களால் வாங்க இயலாத பட்சத்தில் அரசு அதனை மாணவர்களுக்கு தரவேண்டும். பள்ளிக்கு முன்னாலேயே மாணவர்களின் தேர்வு அறை பற்றிய தகவல் பலகையை வைத்து தகவல்களை அளித்தல், உள் நுழையும் போதே உடல் வெப்பம் சரிபார்த்தல், நேரடியாக மாணவர்களை தேர்வு அறைக்கு அனுப்புதல், தேர்வு முடிந்த பின்னர் ஒவ்வொரு அறையாக மாணவர்களை வெளியே அனுப்புதல் போன்ற முறைகளை கடைபிடித்தால் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக தேர்வை நடத்த முடியும்.

    எந்த ஒரு விஷயத்தையும் வேண்டாம் என எதிர்ப்பதை விட ஒத்திப் போடுவதைவிட எப்படி அதனை செய்ய சாத்தியம் என நினைத்தவர்கள்தான் வாழ்வில் சாதித்துள்ளார். பெற்றோர்கள் திருப்தியுடன், ஆசிரியர்களின் நம்பிக்கை யுடன், அரசின் நேர்மறையான வழிகாட்டுதலுடன் பொதுத்தேர்வில் வெற்றி கொள்வோம்.

    காயத்ரி, கல்வியாளர்
    ×