என் மலர்
குழந்தை பராமரிப்பு
இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பில் தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது, தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள். குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதிலும் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள்.
எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் நிறைந்துள்ள பால், முட்டை போன்ற உணவுகளைக் கொடுக்கிறார்கள். பாலின் நிறம், சுவை பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மாதிரியும் கொடுத்து சமாளித்துவிடுகிறார்கள். சிலர் பாலில் சாக்லெட் கலந்து கொடுப்பதையும் கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களை அதீத கவனம் எடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட விடுவதில்லை. இதை சரிசெய்தால் போதும்.

குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது, நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும், சிறுகாயம்கூட ஏற்படாமல் வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை விளையாட அனுமதிக்காதது தவறு. குழந்தைகள் தவழும் நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக நடக்க ஆரம்பிக்கிறார்களோ, எந்த அளவுக்கு ஓடி ஆடி விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய எலும்புகள் வலிமை உள்ளதாக இருக்கும். பெரும்பாலான பெற்றோர் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் எலும்புகளின் அமைப்பு மாறிக்கொண்டே இருக்கும். குழந்தைகள் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப, ஏற்கெனவே உள்ள எலும்புகள் மாறி புதிய எலும்புகள் உருவாகும். குறிப்பாக, எலும்புகளில் உள்ள திசுக்களின் அமைப்பு மாறிக்கொண்டு இருக்கும். இந்த மாற்றத்தை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.
எத்தனை சீக்கிரம் நடக்கிறார்களோ அதைப் போல அவர்களின் உடல் சார்ந்த விளையாட்டிலும் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சின்ன வயதில் அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதே உடற்பயிற்சிக்கு இணையானது. வெயிலில் விளையாடும்போது அவர்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து போதுமான வைட்டமின் டியும் கிடைக்கும். இதன்மூலமும் எலும்பு பலமாகும்.‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாரதியார் சொன்னதைப் போல, குழந்தைகள் விளையாட்டை நாம் ஊக்கப்படுத்தும்போது எலும்புக்கூட்டில் இருக்கும் திசுவின் அடர்த்தி அதிகரிக்கும்.

குழந்தைகளை எதற்காக பயப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டால் தான் குழந்தைகளை அந்த பயத்தில் இருந்து மீட்கமுடியும்.
குழந்தைகள் அனைவருமே பயத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களால் வெளிப்படுத்தத் தெரியாது. வளரும் பருவத்தில் ஏற்படும் பயம் மனநிலையை வெகுவாக பாதிக்கக்கூடியது. அதனை தெளிவுபடுத்தி நீக்காவிட்டால் அது அப்படியே மனதில் தங்கி, பலவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். பயத்தால் ஜீரண கோளாறு ஏற்படும். பதற்றம் உருவாகும். படிப்பில் மந்தநிலை தோன்றும். ஞாபக மறதி, உடல் எடை குறைதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
பயப்படும் குழந்தைகளை முதலில் அடையாளங்காண வேண்டும். பின்பு அவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்பதை அறியவேண்டும். இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டால்தான் குழந்தைகளை அந்த பயத்தில் இருந்து மீட்கமுடியும்.
உடல் மற்றும் மன நலத்தை பாதிக்கக்கூடிய இந்த பயம் பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் ஏதாவதொரு விஷயத்தை பார்த்து அதிகம் பயந்தால் அந்த பயம் கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். அதை தவிர்க்க முடியாது. அதனால்தான் குழந்தை நலன் கருதி கர்ப்பிணிகள் திகிலான படங்களை பார்ப்பதோ, மனதை கலங்கவைக்கும் விஷயங்களை காது கொடுத்து கேட்பதோ கூடாது.
குழந்தைகள் எதற்காகவெல்லாம் பயப்படுவார்கள்? அதற்கான காரணம் என்ன?
இருட்டு: பொதுவாக இருட்டைப் பார்த்தால் எல்லோருக்கும் பயம் ஏற்படத்தான் செய்யும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். அதேபோன்று குழந்தைகளும் இருட்டைப் பார்த்து பயப்படும். இருட்டில் அவர்கள் மனதில் பயங்கரமான கற்பனைகள் தோன்றும். அதை தவிர்க்க அவர்களிடத்தில் மன தைரியத்தை உருவாக்க வேண்டும். ‘இருட்டைப் பார்த்து பயப்பட எதுவு மில்லை. எப்போதும் நாம் பார்க்கும் பொருட்கள் தான் இருட்டிலும் இருக்கும். இருட்டிலும் மனிதர்கள் தான் இருப்பார்கள்’ என்பதை புரியவைக்கவேண்டும். விளக்கை அணைத்துக்காட்டி இருட்டைக் கொஞ்சம் பழக்கப்படுத்தவேண்டும். திடீரென்று விளக்கு அணைந்தாலும் பயப்படாமல் இருந்த இடத்திலேயே அமைதியாக இருக்கவேண்டும் என்று சொல்லித் தர வேண்டும்.

பள்ளிக்கூடம்: புதிதாக பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகளுக்கு புதிய இடம் பயத்தை வரவழைக்கும். சுற்றி இருக்கும் ஒரு சிலரை பார்த்தும் பயம் தொற்றிக்கொள்ளும். ‘அவர்கள் தம்மை ஏதாவது செய்து விடுவார்களோ?’ என்ற உள்ளுணர்வு, பயமாக வெளிப்படும். ‘அம்மா, அப்பாவை காணவில்லையே.. அவர்கள் திரும்பி வருவார்களோ? மாட்டார்களோ?’ என்ற பதற்றம், பயத்தை அதிகப்படுத்திவிடும். இப்படி பலவிதமான பயங்கள் புது இடத்தில் அவர்களை சூழ்ந்து கொள்ளும். பெற்றோர்கள்தான் சுற்றி இருப்பவர்களை குழந்தைகளிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
புதிய மனிதர்கள்: புதிய மனிதர்களைப் பார்த்தும் குழந்தைகள் பயப்படும். வீட்டிற்கு வருகை தரும் உறவினர்களை பார்த்தும் குழந்தைகளிடத்தில் பயமும், வெட்கமும் தலைகாட்டும். அவர்கள் அன்போடு குழந்தையின் பெயரை கேட்டால் பதில் சொல்லாமல் அம்மாவின் பின்னால் போய் ஒளிந்துகொள்வார்கள். அத்தகைய பயத்தையும், கூச்ச சுபாவத்தையும் போக்கி புதியவர் களுக்கு குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும்.
உயரமான இடம்: உயரமான இடத்தில் இருந்து கீழே இருக்கும் நிலப்பரப்பை பார்த்தால் பலருக்கும் பயம் ஏற்படுவது இயல்புதான். குழந்தை களிடம் இந்த பயம் அதிகமாக வெளிப்படும். அதனை போக்க ‘உயரத்தில் இருந்தாலும் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்ற உணர்வை குழந்தைகள் மனதில் பெற்றோர் உருவாக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு மேலிருந்து கீழே பார்க்கும்போது பயத்துடன் மயக்கம் கூட ஏற்படலாம். அதனால் உயரமான இடங்களிலும் பயமின்றி உலாவருவதற்கு பழகும் வரை பெற்றோர் உடனிருந்து தைரியப்படுத்த வேண்டும். குழந்தை பயப்படுகிறது என்பதற்காக உயரமான பகுதிகளுக்கு அழைத்துப் போகாமல் இருக்கக்கூடாது. சிறுவயதிலேயே அத்தகைய பயத்தை போக்கி விடுவது நல்லது.
நண்பர்கள்: சில குழந்தைகளுக்கு தன் வயதுக் குழந்தைகளைப் பார்த்தாலும் பயம் ஏற்படும். சில குழந்தைகள் முரட்டுத்தனமாக விளையாடும். சட்டென்று அடித்து விடும். கீழே தள்ளிவிடும். அதையெல்லாம் நினைத்து குழந்தைகள் பயம்கொள்வார்கள். அத்தகைய சுபாவம் கொண்ட குழந்தைகளுடன் விளையாடும்போது பெற்றோர் உடன் இருப்பது நல்லது. தனக்காக ஒருவர் உடன் இருக்கிறார் என்ற பாதுகாப்பு உணர்வு பயத்தை போக்கிவிடும். முரட்டுக் குழந்தை களிடமும் மற்ற குழந்தைகளோடு சண்டைபோடக்கூடாது என்று சொல்லிவைக்கவேண்டும்.
சாப்பிட பயம்: ஒரு சில குழந்தைகள் புதிய உணவு பொருட்களை சாப்பிட பயப்படும். அதை சாப்பிட்டால் எப்படி இருக்குமோ, என்னவாகுமோ என்ற பயம் உருவாகிவிடும். அதனால் புதிதாக பார்க்கும் பொருட்களை சாப்பிட மறுக்கும். அதுபோன்ற நேரத்தில் பெற்றோர்கள் அவர்கள் முன்பு சாப்பிட்டுக் காண்பிக்க வேண்டும். அதன் சுவையை விளக்கிச் சொல்லவேண்டும். அதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை சொல்லி புரிய வைக்க வேண்டும். அவர்கள் முன்பு மற்றவர்களையும் சாப்பிட வைத்து பழக்கவேண்டும்.

தனிமை: தனிமை பயம் குழந்தைகளை அதிகமாக ஆக்கிரமிக்கும். அப்போது அவைகளுக்கு ஏதேதோ கற்பனைகள் தோன்றும். அடிக்கடி குழந்தைகளை தனிமையில் தவிக்கவிடும்போது ஏற்படும் பயம் அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குழந்தைகளை தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள். அறிமுகமில்லாதவர்கள் மத்தியில் விட்டுச் சென்றாலும் குழந்தைகளுக்கு தனிமை உணர்வுதான் தோன்றும். தனக்கு பழக்கமானவர்கள் உடன் இல்லாதபோது பலவித எண்ணங்கள் தோன்றும். ‘ஏன் இன்னும் வரவில்லை. வருவார்களா மாட்டார்களா?, அவர்கள் என்னை விட்டு எங்காவது போய்விட்டார்களா?, இன்னும் வரவில்லையே?, ஏதாவது அவர்களுக்கு ஆகிவிட்டதா?’ என்றெல்லாம் குழந்தைகள் குழம்புவார்கள். அப்படி குழம்பும் நிலைக்கு குழந்தைகளை தனிமையில் தவிக்கவிட்டுவிடக் கூடாது.
திகில்: உடன் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும் திகிலான விஷயங்களைக் கேட்டு குழந்தைகள் மனதில் பல்வேறுவிதமான பயம் தோன்றும். தனக்கும் அதுபோன்ற சம்பவம் ஏற்பட்டு விடுமோ என்று யோசிக்கும். திகிலான விஷயங்களின் உண்மைத்தன்மை குழந்தைகளுக்கு புரியாது. அதனால் அதைப் பற்றிய அதீத கற்பனைகள் மனதில் தோன்றும். அது அவர்கள் பயத்தை தூண்டி நிம்மதியை குலைத்துவிடும். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு திகிலான விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது.
திடீர் சத்தங்கள்: எதிர்பாராத திடீர் சத்தங்கள் குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தும். உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று இடி, மின்னல் தோன்றினால் அவர்களுக்குள் இனம் புரியாத பயம் உண்டாகிவிடும். அதுபோன்ற நேரங்களில் அவர்களை தனிமையில் விடாதீர்கள். ‘ஏன் இடி, மின்னல் வெளிப்படுகிறது?’ என்பதை விஞ்ஞானரீதியாக விளக்கி கூறுங்கள்.
பேய் பிசாசு: பேய், பிசாசு போன்றவை கிடையவே கிடையாது என்பதை முதலில் பெற்றோர் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொண்டு சிறுவயதில் இருந்தே குழந்தை களிடம் ‘பேய் பிசாசு என்பது மாயை’ என்பதை உணர்த்தவேண்டும். பேய் காட்சிகள் தோன்றும் சினிமாக்களை குழந்தைகள் பார்க்கவும் அனுமதிக்காதீர்கள். பேய் சினிமாக்களை பெரியவர்கள் பார்ப்பது வேறு, குழந்தைகள் பார்ப்பது வேறு. உண்மை நிலை அறியாத குழந்தைகளின் கற்பனை உலகம் வேறு மாதிரி இருக்கும். காரணங்கள் பல இருந்தாலும் பயமும், அதன் பாதிப்பும் ஒன்றுதான். குழந்தைகளின் பயம் என்பது அவர்கள் உடல் நலனை பாதிக்கச் செய்யும். அதனால் அவர்களை கண்காணித்து அவ்வப்போது ஏற்படும் பயங்களை விளக்கம் கொடுத்து விரட்டியடிக்கவேண்டும்.

பெற்றோர் குழந்தைகளை கட்டாயப்படுத்தி உண்ண வைக்கிறார்கள். அதனால் குழந்தைகளின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகள் மிகச் சுலபமாக ஆரம்பித்து விடுகின்றன.
குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய அதிக அக்கறை காரணமாக தாய்மார்களும், பாட்டிகளும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி, அதிகம் உண்ண வைக்கின்றனர்.
பொதுவாக குழந்தைகள் இயற்கையோடு அதிகம் இயைந்து இருக்கிறார்கள். அன்புடன் கொடுக்கும் உணவைக்கூட அவர்கள் மறுத்தால், உண்மையில் அவர்களுக்குப் பசியில்லை என்பதே பொருள்.
அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கட்டாயப்படுத்தி உண்ண வைக்கிறார்கள். அதனால் குழந்தைகளின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகள் மிகச் சுலபமாக ஆரம்பித்து விடுகின்றன. இன்னொரு உளவியல் சார்ந்த பிரச்சினை சிறிய குடும்பங்களில் வருகிறது. இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவிடமுடியாமல் போகிறது.
இந்த உறுத்தலை தவிர்க்க, தயார்நிலையிலுள்ள உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளின் உடல்நலமே கெடுகிறது. “சொந்த செலவில் சூன்யம் வைப்பது” என்பார்களே, அதைப்போல, தாங்களே தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு, அவர்களைக் கவனிக்க நேரம் ஒதுக்கவேண்டும்.

ஒவ்வொரு படித்த இளைஞனும், படிக்கும் மாணவனும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை மேலான நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும்.
மாணவர்களின் பொறுப்பு உண்மையில் மிகவும் கூடுதல் என்றால் மிகையாகாது. படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோருக்கு உதவுதல் அதாவது வீட்டு வேலைகளை செய்தல், கிராமங்கள் என்றால் ஓய்வு வேளையில் வயல்களுக்கு சென்று தந்தைக்கு உதவுதல் போன்றவைகளில் இன்றைய மாணவர்கள் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரியதே. இவை அனைத்தையும் விட சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும். ஒவ்வொரு படித்த இளைஞனும், படிக்கும் மாணவனும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை மேலான நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். பின்னர் சமுதாய முன்னேற்றத்தில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.
மனித நேயம் வளர மாணவர்கள்தான் சீரிய முறையில் பாடுபட வேண்டும். சமூக தொண்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். சமூக பணிகளில், ஏழை- எளியவர்களுக்கு உதவுவதில் முடிந்த வரை மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிட வேண்டும். சமூக தொண்டுகளில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும்.
துன்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு இளமையிலேயே சிறந்து விளங்க வேண்டும்.
மதுவின் தீமைகள் பற்றியும் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். இளைஞர்களிடையே புகையிலை மற்றும் போதை பாக்குகள் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் சிலர் அதை இன்னும் பயன்படுத்திதான் வருகிறார்கள். இதன்மூலம் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு மாணவர்கள் எடுத்து கூற வேண்டும்.
ஆபத்து காலங்களில் மட்டும் முன்நின்று உதவி செய்ய வேண்டும் என்றில்லாமல் ஆபத்து எந்த நிலையில் வந்தாலும் உதவி செய்ய முன்வர வேண்டும். சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும். மூட நம்பிக்கைகளை போக்கிட வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதனை போக்கிட முடியாத நிலைதான் இருந்து வருகிறது. மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க மாணவர் மற்றும் இளைஞர் சமுதாய தொண்டாற்றினால் வெற்றி பெறுவது உறுதி.
சுத்தமான குடிநீர், நல்ல உணவு போன்றவை ஏழை, எளியவர்களுக்கு கிடைக்கும் வகையில் செயல்படும் எண்ணம் மாணவர்களிடையே வளர வேண்டும்.
தற்போது கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர். கொசு மூலம் ஏற்படும் இந்த நோய் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கி கூற வேண்டும். கிராமங்களில் உள்ள முட்புதர்களை வெட்டி அழிக்க வேண்டும். குளம், குட்டைகளை தூர்வாரியும் ஆழப்படுத்தலாம். இதன்மூலம் மழை பெய்யும் போது மழைநீரை சேமிக்க முடியும்.
வயதானவர்கள், கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க முற்படும்போது நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்கள் தினமும் கிடைக்கும் வருமானத்தை அன்றே செலவு செய்து விட்டு மறுநாள் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். அவர்களுக்கு சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்து கூற வேண்டும்.
இவ்வாறு பல்வேறு சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.

குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு பல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிக அவசியம்.
குழந்தை பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை நோயிலிருந்து பாதுகாத்து எடுப்பதே பெற்றோர்களுக்கு சிரமம் ஆகிவிடுகிறது. சற்று அசாதாரணமாக கவனிக்காமல் இருந்துவிட்டால் சில சமயங்களில் விளைவுகள் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது.
குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு பல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிக அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.
காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும். குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.
குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்க, குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைப்பதோடு அவற்றை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

பொதுவாக ஊசி என்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி தான். ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி என்பது ஆரோக்கிய வாழ்விற்கு மிக அவசியமாகும்.
பொதுவாக ஊசி என்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி தான். ஆனால், தடுப்பூசி என்பது நம் ஆரோக்கிய வாழ்விற்கு மிக அவசியமாகும். தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி செந்திலாண்டவர் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் தெய்வேந்திரன் கூறும்போது,
முன்பெல்லாம் அம்மை நோய், கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் இருமல், காலரா, நிம்மோனியா போன்ற நோய்களினால் இறப்பு சதவிகிதம் அதிகம். தடுப்பூசி என்பது கண்டறியப்பட்ட பின்பு இந்த நோய்களில் சிலவற்றை முற்றிலும் அழிக்க முடிந்தது.
தடுப்பூசியினால் மற்ற நோய்களும் வராமல் தடுக்க முடியும். உதாரணமாக, மூளைக்காய்ச்சல் நோய், மஞ்சள் காமாலை நோய், ஏ வகை மற்றும் பி வகை, காலரா, நிம்மோனியா, தட்டம்மை, பெரியம்மை, டைபாய்டு மிக முக்கியமாக ஸ்வைன்புளு பெண்களுக்கு பெருங்கொடுமை விளைவிக்கும்.
கர்ப்பப்பை கேன்சர் நோய் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி உள்ளது. இப்போது உலகளவில் ஆராய்ச்சியில் எச்.ஐ.வி. நோய்க்கும் டெங்கு வைரஸ் நோய்க்கும் தடுப்பூசி கண்டறியப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5 வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும்.
சரியான முறையில் தடுப்பூசி எடுக்கவில்லை என்றால் நாம் இந்த மாதிரியான நோய்களுக்கு ஆளாக வேண்டியதிருக்கும். ஆகவே தடுப்பூசி எடுத்து கொள்வோம். நோய்களில் இருந்து விடுபடுவோம். நோயற்ற வாழ்வை குழந்தைகளுக்கு அளிப்பது பெற்றோர்களின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் விரல் சூப்புவதன் பின்னணி, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் வழிகள் போன்றவற்றை விளக்குகிறார்கள் குழந்தைகள் நல நிபுணர்கள்.
குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை மறக்க, விரலில் விளக்கெண்ணெய் தடவுவது முதல் பிளாஸ்திரி ஒட்டுவது வரை என்னென்னவோ செய்கிறார்கள். குழந்தைகள் விரல் சூப்புவதன் பின்னணி, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் வழிகள் போன்றவற்றை விளக்குகிறார்கள் குழந்தைகள் நல நிபுணர்கள்.
ஒருவித பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தினால் தான் குழந்தைகளுக்கு கை சூப்புதல், நகம் கடிக்கும் பழக்கங்கள் ஏற்படுகின்றன. தாயின் கருவில் இருக்கும் போதே சில குழந்தைகள் கைவிரல்களை வாயில் வைக்கத் தொடங்கி விடுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு எந்த ஒரு பொருளும் நிழலாகத்தான் தெரியும்.
அதன் அருகில் எந்தப் பொருள் சென்றாலும் அதனை வாயிலோ அல்லது கைவிரல்களிலோ பற்றிக் கொள்வதை பார்க்கலாம். இந்த உணர்வினால் நாளடைவில் கைகளையோ, மற்ற பொருட்களையோ தங்கள் வாய்க்குள் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். அதுவே போகப்போக விரல் சூப்பும் பழக்கமாக மாறி விடுகிறது. இந்தப் பழக்கத்தை ஒரு வயதுக்கு உள்ளாக நிறுத்தி விடுவது நல்லது.

ஏனெனில், குழந்தைகளின் முன் வரிசைப்பற்கள் வரிசையிலிருந்து விலகி தூக்கலாகிவிடும். வளரும் நிலையில் பற்கள் முன்னே துருத்திக்கொண்டு முகத்தின் அழகை கெடுத்துவிடும். பின்னாளில் அதற்கென்று பிரத்யேகமாக ‘கிளிப்’ போடவேண்டி இருக்கும். மேலும் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் விரல் சூப்பும் குழந்தைகளை மற்ற குழந்தைகள் கேலி செய்வார்கள். இதனால் அக்குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மை தோன்றி விடும்.
செல்லப் பிராணி வளர்க்கும் வீடுகளாக இருந்தால் அவற்றை தொட்ட கைகளை குழந்தைகள் வாய்க்குள் வைக்கும் போது மற்ற வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமி களால் வாந்தி, பேதி, காய்ச்சல் தவிர மேலும் பல நோய்கள் வரக்கூடும். எப்படி இருந்தாலும் விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியதே. இந்த பழக்கத்தை மாற்றவும் வழி இருக்கிறது.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வாய்க்குள் விரலை கொண்டு போகும் நேரத்தில் அவர்களின் கவனத்தை திசை திருப்பி விளையாட்டு காண்பிக்கலாம். இரண்டு, மூன்று வயது குழந்தைகள் போரடிக்கும் போதும், பயப்படும் போதும், மன அழுத்தத்தில் இருக்கும் போதும் விரல் சூப்பத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் வாய் அருகில் விரலை கொண்டு போகும் போதே, விரல் சூப்புவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கற்பனைக் கதையாக சொல்லி மாற்றலாம். தற்போது இதற்கென்று லோஷன் வந்து விட்டது. அதுவும் உதவாத போது, பல் டாக்டர் ஆலோசனையின் பேரில், இதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு சாதனத்தை விரல்களில் பொருத்திவிடலாம்.

அந்தந்த வயதிற்கான வளர்ச்சி குழந்தையிடம் சீராக இருக்கிறதா என்பதை, பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
'குழந்தை பிறந்தது முதல், அவர்களை வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். இன்னொரு பக்கம், குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் இயல்பாகவே பல்வேறு திறன்களையும் கற்றுக்கொள்கிறார்கள். இத்திறன்பாடுகள் 'வளர் மைல்கற்கள் (Developmental Milestones)' என குறிப்பிடப்படுகிறது.
அந்தந்த வயதிற்கான வளர்ச்சி குழந்தையிடம் சீராக இருக்கிறதா என்பதை, பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். 4 மற்றும் 5 வயது குழந்தைகளிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய மனரீதியான வளர்ச்சித் திறன்களை இங்கு பட்டியலிடுகிறார்.
''நான்கு வயதுக் குழந்தையிடம் எதிர்பார்க்கக்கூடிய திறன்கள்...
* பேசும்போது சில நேரங்களில் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு வாக்கியங்களை உபயோகிக்கும்.
* கைகளை உயர்த்தி பந்தை மேலே வீசும்.
* எண்ணிக்கை பற்றி புரிந்துகொள்ளும். அதாவது, 'உனக்கு ரெண்டு சாக்லெட்தான்'என்றால், அதைப் புரிந்துகொள்ளும். சில எண்களும் தெரிந்திருக்கும்.
* ஒருவரை வரைய முயற்சி செய்கையில் குறைந்தது இரண்டு உடல் பாகங்களையாவது வரையத்தெரிந்திருக்கும்.
* நேரத்தைப் பற்றி தெளிவாகப் புரியத்துவங்கி இருக்கும்.
* கற்பனைத் திறன் இருக்கும். விளையாட்டில் கற்பனைக்கு வடிவம் கொடுக்கத்தெரியும்.
* நீளமான வாக்கியங்கள் ஆனாலும் புரிந்துகொள்ளும். உதாரணமாக, 'குளிச்சுட்டுசொக்கா போட்டுட்டு வந்தா, வெளியே போய் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரலாம்' என்றால் குஷியாக குளிக்கச் செல்லும்.

ஐந்து வயதில்...
* பாலினம் பற்றி தெரிந்துகொள்ளும். தான் ஆண்/பெண் என்பது புரியும்.
* பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை எண்ணத் தெரியும்.
* பெயரையும், முகவரியையும் கற்றுக்கொடுத்தால், அதைச் சொல்லத் தெரியும்.
* உதவியின்றி உடையணிய மற்றும் களையத் தெரியும்.
* ஃபோர்க், ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தத் தெரியும்
* குதித்து விளையாட, குட்டிக்கரணம் போட, ஊஞ்சலாட தெரியும்.
* கதை சொல்லத் தெரியும்.
இந்த இயல்பான நடவடிக்கைகளில் இரண்டு, நான்கு மாத தாமதம் நேரலாம். ஆனால், இயல்புக்கு மீறிய தாமதம் அல்லது முடக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம்!"

குழந்தைகள் விளையாடும் பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் பொம்மைகளோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே அவர்களின் உலகமும் இயங்கும். குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
‘‘குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கீச்சொலிஎழுப்புகிற அல்லது கண்ணாடியில் பிரதிபலிக்கிற பொம்மைகள் அவர்களை அதிகம் வசீகரிக்கிறது. 3-லிருந்து 6 மாத குழந்தைகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்தையும் கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள் குழந்தைகள் பிடிக்க, கைகளில் அழுத்த சுலபமாக இருக்கும். குழந்தைகளின் தொட்டில் (அ)படுக்கைக்கு மேலே அவர்கள் கண்களில் படும் வகையில் சுழலும் வண்ணமயமான பொம்மைகளை தொங்கவிடுவதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.

6-லிருந்து 9 மாதங்களில் குழந்தைகள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். தொடுவது, பிடிப்பது, எறிவது, தள்ளுவது என எல்லா விளையாட்டையும் இந்த வயதில் செய்வார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் இந்தப் பருவத்தில் இருக்கும் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 9-லிருந்து 12 மாதங்களில் குழந்தை எழுந்து சிறிது தூரம் நடக்கவும், நகரவும் செய்யும். பற்கள் முளைக்கும் இந்த வயதுகளில் எல்லாவற்றையும் கடித்து இழுத்து முயற்சிப்பார்கள். அதனால் மரத்தால் ஆன நடை வண்டி போன்றவை பழகவிட வேண்டும்.
பொதுவாக, குழந்தைகளுக்குபாதுகாப்பான பொம்மைகளை கொடுக்க வேண்டும். சிறியபேட்டரிகள் கொண்ட எலெக்ட்ரானிக் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் ஆபத்தானவை. வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.

தேர்வு சமயத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் சில உண்டு. தேர்வு நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்...
பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 10-ம் வகுப்பு மாணவர்கள் பரபரப்பாக பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இந்த சமயத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் சில உண்டு. தேர்வு நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்...
* ‘தேர்வு’ என்கிற அச்சமின்றி நிதானமாக, தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். நீங்கள் ஆண்டு முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன என்பதால் பயம் தேவையில்லை.
* அடுத்த நாளுக்கான, அடுத்த தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
* இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
* படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால், தேர்வு முடியும் வரை பெற்றோரை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.
* வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். இரவு 11 மணிக்குப் பிறகும் விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.
* நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், ஸ்கேல், ரப்பர், ஸ்கெட்ச், ஜியாமெட்ரிக் பாக்ஸ், பேனா, கூடுதல் பேனா அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் தவறிவிடாமல் இருக்க கண்ணாடி ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
* அதுபோலவே பள்ளி அடையாள அட்டை, பஸ் பயண பாஸ், தேர்வு அடையாள அட்டை அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். வீட்டைவிட்டு கிளம்பும் முன் அனைத்தையும் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது சுறுசுறுப்பாக படிக்க உதவியாக இருக்கும்.

செய்யக்கூடாதவை
* உடலை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. கிரிக்கெட் ஆடுவது, பைக் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. அவசியம் ஏற்பட்டால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
* குறைந்த நேரமே படிப்பதற்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கையைவிட்டு எழுந்திருக்காமல் படிக்கக்கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 5 நிமிடங்களாவது உலாவ வேண்டும்.
* இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. ‘தூங்காமல் படிக்கிறேன் பார்’ என்று கடும் சவாலுடன் முழித்திருந்து படித்துவிட்டு, தேர்வறையில் அசதியாக இருந்தால் பரீட்சையை திருப்தியாக எழுத முடியாது.
* படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி, தெரிந்ததை தெளிவாக எழுதி தேர்ச்சி பெறுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
* அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரம் செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, நண்பருக்காக காத்திருத்தல், சின்ன வேலையாக வெளியே சென்றுவிட்டு வருவதாக எண்ணி, நீண்ட நேரமாக படிப்பிற்கு இடைவெளி விடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* தேர்வு எழுதி முடித்தபின், எழுதிய தேர்வு பற்றி நண்பர்களுடன் கலந்து ஆலோசிப்பது வேண்டாம். தேர்வை நன்றாக எழுதவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கவும் வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள், செயலில் இறங்குங்கள்.
* புதிய வகை உணவுகளை ருசிப்பதை தவிருங்கள். மசாலா- எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை குறைத்துவிடுங்கள்.

குழந்தைகளைத் தாக்கும் வலிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு, புற்றுநோய் உள்பட 193 நோய்களை டி.என்.ஏ. சோதனையால் கண்டுபிடிக்க முடியும்.
மனிதர்களாகிய நம்மைத் தாக்கும் நோய்களைக் கண்டுபிடிக்க பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் நோய்கள் கண்டறியப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் டி.என்.ஏ. தொடர்பான ஆய்வை நடத்தியது. அதன் மூலம், குழந்தைகளைத் தாக்கும் வலிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு, புற்றுநோய் உள்பட 193 நோய்களை டி.என்.ஏ. சோதனையால் கண்டுபிடிக்க முடியும் என அறிவித்துள்ளது.
இந்தப் பரிசோதனைக்கு சீமா4 நடாலிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் எடுக்கப்படும் டி.என்.ஏ.வில் 5 தடவை பரிசோதனை நடத்துவதன் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டன.
இந்தப் பரிசோதனைக்கு அமெரிக்க டாக்டர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகளைத் தாக்கும் நோய்களைத் தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும், மேலும் எதிர்கால சந்ததியினருக்கு இத்தகைய நோய் வராமல் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பல காரணங்களால் வாந்தி வரும். குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணத்தையும் அதற்கான சிகிச்சையையும் விரிவாக பார்க்கலாம்.
பல காரணங்களால் வாந்தி வரும். அவற்றில் சில உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. வாந்தி எடுப்பதற்கு காரணம் குடல் பாகம் இல்லாதிருத்தல், குடல் இடம் மாற்றம், வால்வுகள், ரத்தத்தில் நோய்க் கிருமிகள், மூளைக்காய்ச்சல், மூச்சுத் திணறல், மூளையின் நீர் அதிகமாதல், தவறான முறையில் பால் புகட்டுதல் போன்ற காரணத்தால் சிறு குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படுகிறது
ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கு காரணம் தவறான முறையில் பால் புகட்டுதல், அதிகப்பால் கொடுத்தல், பிறப்பிலேயே குடல் வீங்கி அடைத்துக் கொள்ளுதல், பேதி, மூளையில் கிருமிகள் தாக்கம், மூளையில் ரத்தக்கட்டு, மூளையில் நீர் அதிகமாதல், மாட்டுப்பால் அலர்ஜி
மனநிலை பாதிப்பு, சிறுநீரில் கிருமி, மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், நிமோனியா காய்ச்சல், குடல் அடைப்பு போன்ற காரணத்தால் சிறுவர்கள் வாந்தி எடுப்பதுண்டு.
நிறைய குழந்தைகள் சாதாரணமாகவே சிறு சிறு காரணங்களுக்காக வாந்தி எடுப்பார்கள். அதனால் பயப்பட வேண்டாம். சர்க்கரை - உப்புக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் போதும். சில குழந்தைகள் வாந்தி எடுத்தாலும், அவற்றின் உடல் எடை மற்றும் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவையில்லை.
அடிக்கடி வாந்தியோ, தொடர் வாந்தியோ இருந்தால், அவற்றுடன் வேறு நோய்கள் ஏதாவது இருந்தாலும், குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து சாயான சிகிச்சை அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் தாமாகவே சிகிச்சை அளிக்கவோ, வீட்டில் இருக்கும் மருந்துகளைக் கொடுக்கவே கூடாது. அதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.